பாட்களிடமிருந்து உங்கள் ஸ்டோரைப் பாதுகாத்தல்
பாட்கள் மற்றும் தானியங்கு டிராஃபிக்கிலிருந்து உங்கள் ஸ்டோரைப் பாதுகாக்கப் பல கருவிகளை Shopify பயன்படுத்துகிறது. இணையம் முழுவதும் பாட்கள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன, சில பாட்கள் பயனுள்ளவையாகவும் மற்றவை தீங்கு விளைவிப்பவையாகவும் இருக்கலாம். பாட் வகைகள் பற்றிய கூடுதல் தகவலுக்கு, பாட் வகைகள் மற்றும் நோக்கங்கள் என்பதைப் பார்க்கவும்.
தானியங்கு டிராஃபிக் மற்றும் பாட்களை Shopify கையாளும் விதம் மற்றும் உங்கள் ஸ்டோரில் பாட்டின் தாக்கத்தை எப்படிக் குறைப்பது ஆகியவை குறித்து இந்தக் கட்டுரையில் நீங்கள் மேலும் அறிந்துகொள்ளலாம்.
இந்தப் பக்கத்தில்
பாட்களிடமிருந்து உங்கள் ஸ்டோரை Shopify பாதுகாக்கும் விதம்
பாட்களில் இருந்து உங்கள் ஸ்டோரைப் பாதுகாப்பதற்கு Cloudflare சேவைகளை Shopify பயன்படுத்துகிறது. Shopify இல் உங்கள் ஆன்லைன் ஸ்டோருக்கு வரும் அனைத்துக் கோரிக்கைகளும் முதலில் Cloudflare வழியே செல்ல வேண்டும். பெரும்பாலான தானியங்கு டிராஃபிக் மற்றும் பாட்களில் இருந்து உங்கள் ஸ்டோரைப் பாதுகாப்பதற்கு, Web Application Firewall (WAF) மற்றும் Distributed Denial of Service (DDoS) பாதுகாப்பு போன்ற அம்சங்களை Shopify பயன்படுத்துகிறது. Cloudflare உங்கள் ஸ்டோரில் எப்போதும் செயலில் இருக்கும், இதற்கு நீங்கள் எந்தச் செயலும் செய்யத் தேவையில்லை.
சில நேரங்களில், ஒரு செயல்பாடு தானியங்கியாகத் தோன்றும்போது அல்லது பயனர் விர்ச்சுவல் பிரைவேட் நெட்வொர்க் (VPN) மூலம் இணைக்கப்பட்டிருக்கும் சூழ்நிலைகளில், உங்கள் Shopify ஸ்டோருக்குச் செல்லும் பார்வையாளர்கள் Cloudflare சரிபார்ப்புச் சவாலைப் பெறலாம். சரிபார்ப்புச் சவாலில் "நீங்கள் தொடரும் முன்பு, உங்கள் இணைப்பைச் சரிபார்க்க வேண்டும்" என்று காட்டப்படும், இதனால் அவர்களின் இணைப்பைச் சரிபார்க்கக் கோரப்படும். தாங்கள் மனிதர்கள்தான் என்பதைச் சரிபார்க்க சில வினாடிகள் ஆகும், அதன் பிறகு பார்வையாளர்கள் வழக்கம்போலத் தொடரலாம்.
உங்கள் ஆன்லைன் ஸ்டோரின் பார்வையாளர்களின் நடத்தையைப் பகுப்பாய்வு செய்ய உதவும் hCaptcha என்பதையும் Shopify பயன்படுத்துகிறது. hCaptcha என்பது பாட்களில் இருந்து வரும் ஸ்பேமைத் தடுக்கும் பாதுகாப்புக்கருவியாகும், மேலும் நம்பகமான பயனர்கள் தேவையற்ற இடையூறுகள் இன்றி உங்கள் உள்ளடக்கத்தையோ சேவைகளையோ அணுக இது அனுமதிக்கிறது. hCaptcha மூலம் உங்கள் ஸ்டோரைப் பாதுகாப்பது குறித்து மேலும் அறிக.
சந்தேகத்திற்குரிய சில கார்டு சோதனை முயற்சிகளும் பாட் செக்அவுட் முயற்சிகளும் உங்கள் கைவிடப்பட்ட செக்அவுட் பட்டியலிலிருந்து வடிகட்டி விலக்கப்படுகின்றன. இந்த முயற்சிகள் அனைத்தும் வடிகட்டி விலக்கப்படுவதில்லை. உங்கள் கைவிடப்பட்ட செக்அவுட்களை மதிப்பாய்வு செய்வது பற்றி மேலும் அறிக.
உங்கள் ஸ்டோரில் பாட்டின் தாக்கத்தைக் குறைத்தல்
உங்கள் Shopify ஸ்டோரில் பாட்களின் தாக்கத்தைப் புரிந்துகொள்ளவும் அதைக் குறைக்கவும் பின்வரும் உத்திகளை நீங்கள் பயன்படுத்தலாம்:
- உங்கள் ஸ்டோரில் hCaptcha செயலில் உள்ளதை உறுதிப்படுத்தவும்: இயல்பாகவே அனைத்து Shopify ஸ்டோர்களிலும் hCaptcha செயல்படுத்தப்பட்டிருக்கும். தொடர்புகொள்வதற்கான படிவங்கள் மற்றும் கருத்துப் படிவங்கள், வாடிக்கையாளர் கணக்குப் பக்கங்கள் போன்றவற்றில் ஸ்பேம் பாட்டின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்த, hCaptcha செயலில் உள்ளதை உறுதிப்படுத்தவும்.
- உங்களுடைய தீம் மற்றும் செயலிகளைத் தவறாமல் புதுப்பிக்கவும்: புதிய பேட்ச்களும் மேம்பாடுகளும் இருப்பதை உறுதிப்படுத்த, உங்கள் Shopify தீம் மற்றும் செயலிகளைத் தவறாமல் புதுப்பிக்கவும்.
- டிராஃபிக் பகுப்பாய்வைக் கண்காணிக்கவும்: பாட் செயல்பாடு இருப்பதைக் குறிக்கக்கூடிய டிராஃபிக் அதிகரிப்பு அல்லது பேட்டர்ன்களைக் கண்காணிக்க, Shopify பகுப்பாய்வு அல்லது Google Analytics என்பதைப் பயன்படுத்தவும்.
- ஆர்டர் ஆபத்து மதிப்பீட்டைச் செயல்படுத்தவும்: மோசடியான ஆர்டர் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்த மோசடிப் பாதுகாப்பு உத்தியைச் செயல்படுத்தவும். நீங்கள் Shopify Payments பயன்படுத்தினால், Fraud Control செயலியில் நீங்கள் வரையறுக்கும் செக்அவுட் விதிகள் செக்அவுட்கள் ஆர்டர்களாக மாறுவதைத் தடுக்கலாம்.
- உங்கள் பணியாளர்களுக்குப் பயிற்சி அளிக்கவும்: உங்கள் ஸ்டோரை நிர்வகிக்கும் பணியாளர்கள் பாட்கள் குறித்தும் அவற்றை எப்படிக் கண்டறிவது என்பது குறித்தும் புரிந்துகொள்வதை உறுதிப்படுத்தவும்.
- (Plus திட்டத்திற்கு மட்டும்) பாட் பாதுகாப்பைச் செயல்படுத்தவும்: உங்கள் ஸ்டோர் Shopify Plus திட்டத்தில் இருந்தால், உங்கள் செக்அவுட்டிற்குப் பாட் பாதுகாப்பை நீங்கள் செயல்படுத்தலாம்.
பாட்கள் உருவாக்கிய கைவிடப்பட்ட செக்அவுட்களையும் வாடிக்கையாளர் சுயவிவரங்களையும் நிர்வகித்தல்
உங்கள் ஸ்டோரில் பாட் செயல்பாடு இருப்பதால் மட்டுமே உங்கள் ஆன்லைன் ஸ்டோர் பாதுகாப்பற்றதாகவோ சரியாகச் செயல்படாததாகவோ உள்ளது என்றோ, உங்கள் ஸ்டோரின் சான்றுகளின் பாதுகாப்பு பாதிக்கப்பட்டுள்ளது என்றோ அர்த்தமில்லை. உங்கள் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாகவோ அதன் பாதுகாப்பு பாதிக்கப்பட்டதாகவோ கருதினால், உடனடியாக Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளவும். ஆதரவைத் தொடர்புகொண்ட பிறகு, முடிந்தால் பாதுகாப்பு பாதிக்கப்பட்ட கணக்கைப் பாதுகாப்பதற்கான படிகளைச் செய்து முடிக்கவும். உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் பாட் செயல்பாட்டைக் கண்டறிவது பற்றி மேலும் அறிக.
குறிப்பிட்ட ஒரு கைவிடப்பட்ட செக்அவுட்டை நீங்கள் கைமுறையாக நீக்க முடியாது. கைவிடப்பட்ட செக்அவுட்கள் தானாக நீக்கப்படுவது பற்றி மேலும் அறிக.
நீங்கள் வாடிக்கையாளர் சுயவிவரங்களை மொத்தமாக நீக்க முடியும். வாடிக்கையாளர் சுயவிவரங்களை நீக்குவதற்கான கட்டுப்பாடுகளில் ஏதேனும் ஒன்றுக்கு உட்பட்ட சுயவிவரங்கள் நீக்கப்படாது. வாடிக்கையாளர் சுயவிவரத்தை நீக்கினால் அதை மீட்டெடுக்க முடியாது.