பாட் வகைகள் மற்றும் நோக்கங்கள்
பாட்கள் வெவ்வேறு வகைகளையும் நோக்கங்களையும் கொண்டிருக்கலாம். பாட்டின் செயல்பாடு அதன் நோக்கத்தைப் பொறுத்தது. பயனுள்ளவை, விரும்பத்தகாதவை மற்றும் தீங்கிழைப்பவை என பாட்களை அவற்றின் நோக்கத்தின் அடிப்படையில் வகைப்படுத்தலாம்.
இந்தத் தொகுப்பில், வெவ்வேறு பாட் வகைகள் குறித்தும் அவை உங்கள் Shopify ஸ்டோரில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்பதற்கான எடுத்துக்காட்டுகள் குறித்தும் நீங்கள் மேலும் அறிந்துகொள்ளலாம்.
இந்தப் பக்கத்தில்
பாட்டின் நோக்கங்களைப் புரிந்துகொள்ளுதல்
ஒவ்வொரு தானியங்கு செயலுக்குப் பின்னாலும் உள்ள நோக்கத்தைப் புரிந்துகொள்வது, பல்வேறு செயல்பாடுகளின் தாக்கத்தை வகைப்படுத்தவும் மதிப்பிடவும், அத்துடன் Shopify-ஐப் பாதுகாத்து மேம்படுத்த அவற்றைச் சிறப்பாக நிர்வகிக்கவும் Shopify-க்கு உதவுகிறது.
நோக்கம் என்பது தானியங்கு டிராஃபிக்கை இயக்கும் அடிப்படைத் தேவை அல்லது குறிக்கோள் ஆகும். நோக்கத்தின் அடிப்படையில், ஒரு தானியங்கு செயல்பாடு பயனுள்ளதா, விரும்பத்தகாததா அல்லது தீங்கிழைப்பதா என்பதை நீங்கள் தீர்மானிக்கலாம். தானியங்கு செயல்பாடுகளுக்குப் பின்னால் உள்ள நோக்கத்தைப் புரிந்துகொள்வது பின்வரும் பலன்களை அளிக்கலாம்:
- உத்தியை மேம்படுத்துதல்: பல்வேறு நோக்கங்களை அடையாளம் கண்டு புரிந்துகொள்வதன் மூலம், பாதுகாக்கக்கூடிய உத்திசார் நடவடிக்கைகளை நீங்கள் உருவாக்கலாம், இதனால் உங்கள் வணிக இலக்குகள் மற்றும் மதிப்புகளுக்கு ஏற்ப செயல்பட முடியும்.
- செயல்திறனை மேம்படுத்துதல்: பயனுள்ள நோக்கங்களை அறிந்துகொள்வது நேர்மறையான தானியக்கமாக்கலை ஆதரிக்கவும் மேம்படுத்தவும் உதவுகிறது, அத்துடன் ஒட்டுமொத்தத் திறனையும் மேம்படுத்துகிறது.
- தொடர்புகொள்வதை எளிதாக்குதல்: நோக்கங்கள் குறித்த பொதுவான மொழி மற்றும் தெளிவான வரையறைகளை உருவாக்குவது, நீங்களும் உங்கள் வாடிக்கையாளர்களும் சிறப்பாகத் தொடர்புகொள்ள அனுமதிக்கிறது.
பாட் நோக்கங்களின் பிரிவுகள்
பாட் நோக்கங்களின் வெவ்வேறு பிரிவுகள் குறித்து மேலும் அறிந்துகொள்ள, பின்வரும் அட்டவணையை மதிப்பாய்வு செய்யவும்.
| பாட்டின் நோக்கம் | விளக்கம் |
|---|---|
| பயனுள்ளவை | மதிப்பை வழங்கும் தானியங்கு செயல்பாடுகள். இந்தப் பாட்கள் செயல்பாட்டை மேம்படுத்துகின்றன, பயனர் அனுபவத்தை மேம்படுத்துகின்றன, அத்துடன் ஸ்டோர் செயல்பாடுகளுக்கு நேர்மறையாகப் பங்களிக்கின்றன. |
| விரும்பத்தகாதவை | இந்தப் பாட்கள் பிளாட்ஃபார்முக்குக் கணிசமான நன்மையையோ தீமையையோ ஏற்படுத்துவதில்லை; சில உங்கள் வணிக இலக்குகளுக்கு நேரடியாகப் பங்களிப்பதில்லை என்றாலும், அவை உடனடி அச்சுறுத்தலை ஏற்படுத்தாது. |
| தீங்கிழைப்பவை | இந்தப் பாட்கள் பாதுகாப்பு, செயல்திறன் அல்லது நற்பெயருக்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றன. இந்தச் செயல்பாடுகளுக்கு உடனடி கவனமும் தணிப்பு நடவடிக்கைகளும் தேவை. |
பயனுள்ள பாட்கள்
பயனுள்ள பாட்கள் முறையான வணிகச் செயல்பாடுகளைக் கொண்டுள்ளன, அதாவது தேடுபொறிகளில் உங்கள் ஸ்டோரின் தெரிவுநிலையைப் பராமரிக்க உதவும் SEO இண்டெக்ஸர்கள் அல்லது குறைபாடுடைய வாடிக்கையாளர்கள் ஸ்டோர்ஃபிரண்டிற்குச் செல்லப் பயன்படுத்தும் அணுகல்தன்மை கருவிகள் போன்றவையாகும். பயனுள்ள பாட் வகைகள் மற்றும் அவற்றின் தாக்கம் குறித்து மேலும் அறிந்துகொள்ள, பின்வரும் அட்டவணையை மதிப்பாய்வு செய்யவும்.
| பயனுள்ள பாட்டிற்கான எடுத்துக்காட்டு | விளக்கம் |
|---|---|
| SEO இண்டெக்ஸர் பாட் | தேடுபொறிகளில் தரவரிசையும் பட்டியலும் புதுப்பித்த நிலையில் இருப்பதை உறுதிசெய்ய, இணையதளத்தைக் க்ரால் செய்கிறது. |
| வாடிக்கையாளர்கள் மற்றும் அணுகல்தன்மை பாட் | வாடிக்கையாளர் கணக்கிற்குப் பதிவுசெய்கிறது, உங்கள் ஸ்டோரை உலாவுகிறது, கார்ட்டில் தயாரிப்பைச் சேர்க்கிறது, ஒரு தயாரிப்பைச் செக்அவுட் செய்கிறது, அணுகல்தன்மை கருவிகளைப் பயன்படுத்தி இணையப்பக்கத்தை உலாவுகிறது அல்லது அணுகல்தன்மை கருவியைப் பயன்படுத்தி ஒரு தயாரிப்பை வாங்குகிறது. |
| தானியங்கு அங்கீகரிக்கப்பட்ட ஒருங்கிணைப்புகளின் பாட் | வணிகர் ஸ்டோரை நிர்வகிக்கச் செயலிகளை அமைக்கிறது. |
விரும்பத்தகாத பாட்கள்
விரும்பத்தகாத பாட்கள் நடுத்தரமான அல்லது கலவையான நோக்கங்களைக் கொண்டுள்ளன, அதாவது Shopify-இன் உள்கட்டமைப்புக்கு அழுத்தம் கொடுக்கும் அங்கீகரிக்கப்படாத சுமைப் பரிசோதனைகள் (load tests) அல்லது அனுமதியின்றித் தரவைச் சேகரிக்கும் அறியப்படாத ஸ்கிராப்பர்கள் போன்றவையாகும். விரும்பத்தகாத பாட் வகைகள் மற்றும் அவற்றின் தாக்கம் குறித்து மேலும் அறிந்துகொள்ள, பின்வரும் அட்டவணையை மதிப்பாய்வு செய்யவும்.
| விரும்பத்தகாத பாட்டிற்கான எடுத்துக்காட்டு | விளக்கம் |
|---|---|
| அங்கீகரிக்கப்படாத சுமைப் பரிசோதனை (load test) பாட் | முன்னறிவிப்பு ஏதுமின்றி ஸ்டோரின் டிராஃபிக்கை Shopify கையாள முடியுமா என்பதை உறுதிசெய்கிறது. |
| தானியங்கு வணிகர் பதிவு உருவாக்கும் பாட் | உள்கட்டமைப்புக்கு அழுத்தம் கொடுக்கிறது, நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கிறது அல்லது Shopify மின்னஞ்சல்கள் மூலம் பயனர்களுக்கு ஸ்பேம் அனுப்புகிறது |
| அறியப்படாத ஸ்கிராப்பர் பாட் | தரவைச் சேகரிக்கிறது, பணிகளைத் தானியங்குபடுத்துகிறது, கட்டுப்படுத்தப்பட்ட உள்ளடக்கத்தை அணுகுகிறது, நகல் உள்ளடக்கச் சிக்கல்களை ஏற்படுத்துகிறது, தேடுபொறிகளைக் குழப்புகிறது அல்லது கிளிக் மோசடியைச் செய்கிறது. |
| படிவம் மற்றும் வலைப்பதிவு ஸ்பேம் பாட் | சிறந்த தரவரிசைக்காக SEO பேக்லிங்கிங்கைச் செய்கிறது, நன்கு நிலைபெற்றுள்ள இணையதளத் தரவரிசைக்குத் தீங்கு விளைவிக்க SEO-வை எதிர்மறையாகப் பாதிக்கிறது, வணிகரின் Google நம்பகத்தன்மை மதிப்பீட்டைக் குறைக்கிறது அல்லது வணிகர்களைத் துன்புறுத்துகிறது. |
| மீளிருப்பு பாட் | சரக்கு இருப்புத் தகவலை ஸ்கிராப் செய்கிறது, மீளிருப்பு செய்யப்பட்டவுடன் தானாகவே தயாரிப்புகளை வாங்குகிறது, இன்னும் பொதுமக்களுக்கு வழங்கப்படாத நேரடி இணைய URL-களைத் தேடுகிறது (ஃபூட்பிரிண்டிங்) மற்றும் சரக்கு இருப்பை மறுக்கிறது. |
| செக்அவுட் பாட் | தானாகவே தயாரிப்புகளை வாங்குவதோடு, செக்அவுட் வரிசை நேரத்தை அதிகரிக்கிறது |
தீங்கிழைக்கும் பாட்கள்
இயல்பான செயல்பாடுகளை சீர்குலைக்கும் பரவலாக்கப்பட்ட சேவை மறுப்பு (DDoS) தாக்குதல்கள் அல்லது நிதி மோசடி மற்றும் தரவு வெளியேற்றத்தில் ஈடுபடும் பாட்கள் போன்ற தீங்கிழைக்கும் பாட்கள் தீய நோக்கங்களைக் கொண்டுள்ளன. தீங்கிழைக்கும் பாட் வகைகள் மற்றும் அவற்றின் தாக்கம் குறித்து மேலும் அறிந்துகொள்ள, பின்வரும் அட்டவணையை மதிப்பாய்வு செய்யவும்.
| தீங்கிழைக்கும் பாட்டிற்கான எடுத்துக்காட்டு | விளக்கம் |
|---|---|
| பரவலாக்கப்பட்ட சேவை மறுப்பு (DDoS) பாட் | Shop அல்லது Shopify இன் இயல்பான செயல்பாட்டைக் கேடுவிளைவிக்கும் வகையில் சீர்குலைக்கும். குறுகிய காலகட்டத்தில், பரவலாக்கப்பட்ட சிஸ்டத்தைப் பயன்படுத்தி அதிகளவிலான இணையக் கோரிக்கைகளை அனுப்புவதன் மூலம் Shopify இன் உள்கட்டமைப்பை நிலைகுலையச் செய்ய தாக்குதல் நடத்துபவர்கள் முயற்சிப்பார்கள். இந்தத் தாக்குதலைத் தானாகவே கண்டறிந்து தடுப்பதிலுள்ள கடினத்தன்மையை அதிகரிப்பதற்காக, பரவலாக்கப்பட்ட சிஸ்டம் பயன்படுத்தப்படுகிறது. |
| தனிப்பட்ட தரவு வெளியேற்றப் பாட் | உங்கள் நிறுவனத்திலிருந்து தனிப்பட்ட தரவை வெளியே இடமாற்றும் அல்லது வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தரவை இடமாற்றும் |
| தானியங்கு வாடிக்கையாளர் பதிவுசெய்தல் உருவாக்கப் பாட் | டொமைன் மற்றும் மின்னஞ்சல் நற்பெயரைக் குறைக்கும், சந்தைப்படுத்தல் முயற்சிகளைக் கடினமாக்குவதோடு விளம்பரச் செலவின் மீதான வருவாயிலும் (ROAS) தாக்கத்தை ஏற்படுத்தும், பதிவுசெய்யாத வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சல்களை அனுப்புவதன் மூலம் ஸ்டோரின் நற்பெயரைக் குறைக்கும், தானாகவே தயாரிப்புகளை வாங்கும் அல்லது கிளிக்கில் மோசடி செய்யும். |
| நிதியியல் மோசடிப் பாட் | இலவசத் தயாரிப்புகளைப் பெற மோசடியான ஆர்டர்களை உருவாக்கும், கார்டு விவரங்கள் சரியானவையா என்பதைத் தீர்மானிக்கக் கார்டுகளைச் சோதிக்கும் அல்லது ஒரு பிசினஸை முடக்குவதற்குச் சார்ஜ்பேக்குகளை வழங்கும். |
| போலி ஸ்கிராப்பர் பாட் | உள்ளடக்கத்தை நகலெடுக்க இணையதளத்தைச் சுரண்டும், SEO மீது பாதகமான தாக்குதல் நடத்தும் அல்லது பணம் சம்பாதிக்க ஸ்டோர் போன்று ஆள்மாறாட்டம் செய்யும். |