உங்கள் ஸ்டோரின் அனுப்புநர் மின்னஞ்சலைக் காண்பித்தல்
உங்கள் வாடிக்கையாளர்களின் இன்பாக்ஸ்கள் உங்கள் மின்னஞ்சல்களை store+123@shopifyemail.com எனக் காண்பிப்பதை நீங்கள் கவனித்து, அதை மாற்ற விரும்பினால், நீங்கள் உங்கள் அனுப்புநர் மின்னஞ்சல் முகவரியை மாற்ற வேண்டும்.
இந்தக் கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ள சொற்களைப் புரிந்துகொள்ள, டொமைன்கள் கலைச்சொற்கள் என்பதைப் பார்க்கவும்.
உங்கள் அனுப்புநர் மின்னஞ்சல் store+123@shopifyemail.com என மாற்றி எழுதப்படுவதைத் தடுக்க, உங்கள் டொமைனுக்குப் பின்வரும் இரு பதிவுகளும் தேவைப்படும்:
- CNAME பதிவுகள்: இவை உங்கள் அனுப்புநர் மின்னஞ்சலுக்கான DKIM மற்றும் SPF அங்கீகாரங்கள் இரண்டையும் உள்ளமைக்கும். Shopify இன் CNAME பதிவுகள், SPF ஐத் தானாகவே கையாளும். இதற்காகப் பிரத்தியேகமான SPF TXT பதிவு எதுவும் தேவையில்லை.
- ஒரு DMARC பதிவு: குறைந்தபட்சம்
v=DMARC1; p=noneஎன்பது தேவை. DMARC பதிவைச் சேர்ப்பது எப்படி என்பதை அறிந்துகொள்ளவும்.
பொதுவான அங்கீகார இடைவெளிகளை எவ்வாறு சரிசெய்வது என்பதை அறிந்துகொள்ள, பின்வரும் உதாரணங்களைப் பார்க்கவும்.
இந்தப் பக்கத்தில்
- உதாரணம் 1: DNS அணுகல் இல்லாத மூன்றாம் தரப்புக்குச் சொந்தமான மின்னஞ்சல் டொமைன்
- உதாரணம் 2: அங்கீகாரம் ஏதுமில்லாமல் மூன்றாம் தரப்பு வழியாக வாங்கப்பட்ட டொமைன்
- உதாரணம் 3: அங்கீகாரத்தைக் கொண்டுள்ள ஆனால் DMARC பதிவு இல்லாமல் மூன்றாம் தரப்பு வழியாக வாங்கப்பட்ட டொமைன்
- உதாரணம் 4: CNAME பதிவுகள் இல்லாமல் DMARC மூலம் பாதுகாக்கப்படும் டொமைனிலிருந்து அனுப்புதல்
- உதாரணம் 5: Shopify மூலமாக வாங்கப்பட்ட டொமைன்
உதாரணம் 1: DNS அணுகல் இல்லாத மூன்றாம் தரப்புக்குச் சொந்தமான மின்னஞ்சல் டொமைன்
உங்கள் மின்னஞ்சல் டொமைன் மூன்றாம் தரப்பொன்றுக்குச் சொந்தமானதாக இருந்து, டொமைனை அங்கீகரிக்கத் தேவையான DNS பதிவுகளுக்கான அணுகல் உங்களிடம் இல்லை என்றால், உங்கள் சொந்த டொமைனைப் பயன்படுத்துவதைப் பரிசீலிக்கவும். உதாரணமாக, உங்கள் அனுப்புநர் மின்னஞ்சல் name@gmail.com அல்லது name@yahoo.com போன்றதொரு வழங்குநரைப் பயன்படுத்தினால், அந்த வழங்குநர்களின் DNS பதிவுகளுக்கான அணுகல் உங்களுக்கு இருக்காது. நீங்கள் Shopify இல் அல்லது GoDaddy அல்லது Namecheap போன்ற மூன்றாம் தரப்பு டொமைன் வழங்குநரிடமிருந்து ஒரு தனிப்பயன் டொமைனை வாங்கலாம்.
படிகள்:
- மின்னஞ்சல்களை அனுப்ப உங்கள் சொந்த டொமைனைப் பயன்படுத்தவும்.
- உங்கள் அனுப்புநர் டொமைனை அங்கீகரிக்கவும்.
- முறையானதொரு DMARC பதிவைச் சேர்க்கவும்.
உதாரணம் 2: அங்கீகாரம் ஏதுமில்லாமல் மூன்றாம் தரப்பு வழியாக வாங்கப்பட்ட டொமைன்
மூன்றாம் தரப்பு டொமைன் ஹோஸ்டிங் வழங்குநர் மூலம் நீங்கள் ஒரு டொமைனை வாங்கி, இன்னமும் அதை அங்கீகரிக்கவில்லை எனில், இந்தப் படிகளைப் பின்பற்றவும். Cloudflare, GoDaddy அல்லது IONOS இல் உங்கள் டொமைன் இருந்தால், Domain Connect மூலம் Shopify தானாகவே DNS பதிவுகளையும் உள்ளமைக்க முடியும்.
படிகள்:
- உங்கள் அனுப்புநர் டொமைனை அங்கீகரிக்கவும்.
- உங்களிடம் முறையானதொரு DMARC பதிவு இருப்பதை உறுதிசெய்யவும்.
உதாரணம் 3: அங்கீகாரத்தைக் கொண்டுள்ள ஆனால் DMARC பதிவு இல்லாமல் மூன்றாம் தரப்பு வழியாக வாங்கப்பட்ட டொமைன்
மூன்றாம் தரப்பு வழியாக உங்கள் டொமைனை வாங்கி ஏற்கனவே அதை அங்கீகரித்துவிட்ட நிலையில், உங்களிடம் DMARC பதிவு இல்லை எனில், நீங்கள் ஒரு DMARC பதிவைச் சேர்க்க வேண்டும்.
உதாரணம் 4: CNAME பதிவுகள் இல்லாமல் DMARC மூலம் பாதுகாக்கப்படும் டொமைனிலிருந்து அனுப்புதல்
ஏற்கனவே ஒரு DMARC பதிவைக் கொண்டுள்ள டொமைனிலிருந்து மின்னஞ்சல்களை அனுப்பும்போது, DKIM மற்றும் SPF அங்கீகாரத்துக்காக நீங்கள் CNAME பதிவுகளைச் சேர்க்கவில்லை எனில், இந்தப் படிகளைப் பின்பற்றவும். Cloudflare, GoDaddy அல்லது IONOS இல் உங்கள் டொமைன் இருந்தால், Domain Connect மூலம் Shopify தானாகவே DNS பதிவுகளையும் உள்ளமைக்க முடியும்.
படிகள்:
- உங்கள் டொமைனின் DNS பதிவுகளை அணுகவும்.
- உங்கள் டொமைனில் CNAME பதிவுகளைச் சேர்ப்பதன் மூலம் உங்கள் அனுப்புநர் டொமைனை அங்கீகரிக்கவும். இந்தப் பதிவுகள் உங்கள் அனுப்புநர் மின்னஞ்சலுக்கான DKIM மற்றும் SPF அங்கீகாரங்கள் இரண்டையும் உள்ளமைக்கும். இதற்காகப் பிரத்தியேகமான SPF TXT பதிவு எதுவும் தேவையில்லை.
உதாரணம் 5: Shopify மூலமாக வாங்கப்பட்ட டொமைன்
நீங்கள் Shopify மூலம் டொமைனை வாங்கியிருந்தால், DKIM, SPF மற்றும் DMARC பதிவுகள் உட்பட உங்கள் மின்னஞ்சல் அங்கீகாரம் தானாகவே முழுமையாக உள்ளமைக்கப்படும். இதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கத் தேவையில்லை. உங்களிடம் DMARC பதிவு ஏதுமில்லை எனில், v=DMARC1; p=none என்ற ஒரு DMARC பதிவு செருகப்படும்.
எனினும், நீங்கள் அதிலிருந்து விலக முடிவெடுத்தால் அல்லது அந்த DMARC பதிவை மீட்டமைக்க விரும்பினால், உங்கள் மின்னஞ்சல் முகவரி store+123@shopifyemail.com என மாற்றி எழுதப்படும்.
உங்கள் Shopify நிர்வாகியின் [டொமைன்](https://admin.shopify.com/settings/domains அமைப்புகளில், Shopify மூலமாக வாங்கப்பட்ட உங்கள் டொமைனிலுள்ள DMARC பதிவை நீங்கள் திருத்தலாம்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியில், அமைப்புகள் > டொமைன்கள் என்பதற்குச் செல்லவும்.
நீங்கள் திருத்த விரும்பும் டொமைனைக் கிளிக் செய்யவும்.
DNS அமைப்புகள் பிரிவில், நிர்வகி என்பதைக் கிளிக் செய்யவும்.
தனிப்பயன் பதிவைச் சேர் என்பதையும் பின்னர் TXT பதிவு என்பதையும் கிளிக் செய்யவும்.
பின்வரும் விவரங்களுடன் புதிய TXT பதிவொன்றைச் சேர்க்கவும்:
- பெயர்:
_dmarc - TXT மதிப்பு:
v=DMARC1; p=none
- பெயர்:
உறுதிசெய் என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்கள் DMARC பதிவைச் சரிபார்க்க, நீங்கள் DMARC பதிவு சரிபார்ப்பானைப் பயன்படுத்தலாம்.