பிரேசிலில் உங்கள் ஸ்டோர் கொள்கைகள் மற்றும் பிற சட்டப்பூர்வத் தகவலைக் காட்டுதல்

உங்கள் Shopify நிர்வாகியில் பின்வரும் ஸ்டோர் கொள்கைகளைச் சேர்க்கலாம்:

  • சேவை விதிமுறைகள்
  • சட்டப்பூர்வ அறிவிப்பு

உங்கள் சொந்த ஸ்டோர் கொள்கைகளை நீங்கள்தான் உருவாக்க வேண்டும். உதவிக்கு, உங்கள் பகுதியில் உள்ள சட்ட நிபுணரைத் தொடர்புகொள்ளவும். இலவசத் தனியுரிமைக் கொள்கை ஜெனரேட்டரைப் பயன்படுத்தியும் நீங்கள் கொள்கைகளை உருவாக்கலாம்.

படிநிலைகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > கொள்கைகள் என்பதற்குச் செல்லவும்.

  2. உங்கள் ஸ்டோர் கொள்கைகளை உள்ளிடவும்.

  3. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

உங்களின் ஸ்டோர் கொள்கைகளைச் சேர்க்கும்போது, அவை உங்கள் செக்அவுட் பக்கங்களின் அடிப்பகுதியில் தானாகவே இணைக்கப்படும். உங்கள் ஆன்லைன் ஸ்டோர் மெனுக்களிலிருந்தும் கொள்கைகளை இணைக்கலாம்.