சீனாவில் உள்ள வணிகர்களுக்கான எல்லை தாண்டிய நிறைவேற்ற வழிகாட்டி

எல்லை தாண்டிய நிறைவேற்றம் என்பது சீனாவிலிருந்து உலகெங்கிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்குத் தயாரிப்புகளைக் கொண்டு சேர்ப்பதை உள்ளடக்கியது. உங்கள் நிறைவேற்ற உத்தி, டெலிவரி வேகம், ஷிப்பிங் செலவுகள், வாடிக்கையாளர் அனுபவம் மற்றும் உங்கள் பணப்புழக்கம் ஆகியவற்றைப் பாதிக்கிறது. உங்களின் வணிக நிலைக்குச் சரியான நிறைவேற்ற அணுகுமுறையைத் தேர்வுசெய்யவும் உங்களின் ஷிப்பிங் செயல்பாடுகளை மேம்படுத்தவும் இந்த வழிகாட்டி உதவுகிறது.

எல்லை தாண்டிய லாஜிஸ்டிக்ஸ் மேலோட்டம்

எல்லை தாண்டிய ஷிப்பிங் பின்வரும் ஐந்து முக்கிய நிலைகளை உள்ளடக்கியது:

  1. முதல் கட்டப் பிக்அப்: உங்கள் இடம் அல்லது சப்ளையரிடமிருந்து சேகரிக்கப்படும் தயாரிப்புகள்
  2. முதன்மைப் போக்குவரத்து: சர்வதேச ஷிப்பிங் மையத்திற்கு மாற்றப்படும் தயாரிப்புகள்
  3. இணைப்புப் போக்குவரத்து: சர்வதேச வான் அல்லது கடல்வழிச் சரக்கு
  4. சுங்க அனுமதி: இலக்கு நாட்டின் சுங்கத்துறை மூலம் அனுமதிக்கப்படும் தயாரிப்புகள்
  5. இறுதிக் கட்ட டெலிவரி: வாடிக்கையாளரின் முகவரிக்கு வழங்கப்படும் இறுதி டெலிவரி

ஒவ்வொரு நிலையிலும் தாமதங்கள் மற்றும் செலவுகள் ஏற்படலாம். இந்தத் தொடரைத் தெரிந்துகொள்வது, எதார்த்தமான டெலிவரி எதிர்பார்ப்புகளை அமைக்கவும் மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளைக் கண்டறியவும் உங்களுக்கு உதவுகிறது.

ஷிப்பிங் நிலைகள் குறித்த விளக்கம்

மொத்த ஷிப்பிங் தொடரும் எளிமையானதாகத் தோன்றலாம், ஆனால் பல நேரங்களில் அதன் நுணுக்கங்களில் சிக்கல்கள் ஏற்படுகின்றன. போக்குவரத்து நேரங்கள், கேரியர் மற்றும் வழியைப் பொறுத்து மாறுபடும்; சுங்க நடைமுறைகள் நாடுகளைப் பொறுத்து மாறுபடும்; அதுமட்டுமின்றி, அனைத்து நிலைகளிலும் டிராக்கிங் சிஸ்டம்கள் சீராகப் புதுப்பிக்கப்படாமல் போகலாம்.

பொதுவான லாஜிஸ்டிக்ஸ் சவால்கள்

சீனாவிலிருந்து ஷிப் செய்யும்போது, இந்தச் சவால்களுக்குத் தயாராகுங்கள்:

  • நிலையற்ற போக்குவரத்து நேரங்கள்: வெவ்வேறு கேரியர்கள் மற்றும் வழிகள் வெவ்வேறு வேகங்களைக் கொண்டுள்ளன. பீக் சீசன்களில் டெலிவரி நேரங்களில் 10 முதல் 15 நாட்கள் கூடுதலாக ஆகலாம்.
  • சுங்கத்துறை அபாயங்கள்: முழுமையற்ற ஆவணங்கள், துல்லியமற்ற அறிவிப்புகள் அல்லது தடைசெய்யப்பட்ட தயாரிப்புகள் போன்றவற்றால் பறிமுதல் அல்லது ரிட்டர்ன்கள் ஏற்படலாம்.
  • டிராக்கிங் இடைவெளிகள்: பேக்கேஜ்கள் சர்வதேசப் போக்குவரத்திற்குள் நுழைந்த பிறகு உள்நாட்டு டிராக்கிங் புதுப்பிக்கப்படாமல் போகலாம், இதனால் வாடிக்கையாளருக்குக் கவலை ஏற்படலாம்.

நிறைவேற்ற மாடலைத் தேர்வுசெய்தல்

சீனாவைச் சேர்ந்த பெரும்பாலான வணிகர்கள் நான்கு நிறைவேற்ற மாடல்களில் ஒன்றைப் பயன்படுத்துகின்றனர். உங்கள் தேர்வு என்பது உங்கள் வணிக நிலை, ஆர்டர் அளவு, முதலீடு மற்றும் டெலிவரி வேகத் தேவைகளைப் பொறுத்தது.

எல்லை தாண்டிய விற்பனைக்கான நிறைவேற்ற மாடல்கள்.
மாடல்டெலிவரி நேரம்தேவையான மூலதனம்இதற்குச் சிறந்தது
சீனாவிலிருந்து சுயமாக நிறைவேற்றுதல்10-30 நாள்கள்குறைவுதயாரிப்புகளைச் சோதித்தல், குறைந்த அளவிலான ஆர்டர்கள்
டிராப்ஷிப்பிங்15-40 நாள்கள்மிகக் குறைவுதயாரிப்பைச் சரிபார்த்தல், குறைந்த பட்ஜெட்
மெய்நிகர் வெளிநாட்டுக் கிடங்கு7-10 நாள்கள்நடுத்தரம்வளரும் விற்பனையாளர்கள் (ஒரு நாளுக்கு 5-10 ஆர்டர்கள்)
வெளிநாட்டுக் கிடங்கு2-5 நாள்கள்அதிகம்வளர்ச்சி காணும் விற்பனையாளர்கள் (ஒரு நாளுக்கு 10-20+ ஆர்டர்கள்)

சீனாவிலிருந்து சுயமாக நிறைவேற்றுதல்

சுயமாக நிறைவேற்றுதல் என்பது, நீங்கள் தயாரிப்புகளை வாங்கிப் பேக்கேஜ் செய்து, உங்கள் வாடிக்கையாளர்களுக்கு அவற்றை அனுப்பும் சரக்கு அனுப்புநருக்கு (Freight forwarder) அனுப்புவதாகும். புதிதாக எல்லை தாண்டி விற்பனை செய்யும் சுமார் 80% பேர் இந்த மாடலையே முதலில் தேர்வு செய்கிறார்கள்.

செயல்படும் விதம்:

  1. உங்கள் Shopify ஸ்டோரில் ஆர்டரைப் பெறுவீர்கள்.
  2. தயாரிப்பை வாங்குவீர்கள் அல்லது உங்கள் சரக்கு இருப்பிலிருந்து அதை மீட்டெடுப்பீர்கள்.
  3. தயாரிப்பைப் பேக்கேஜ் செய்து ஷிப்பிங் லேபிள்களை உருவாக்குவீர்கள்.
  4. சரக்கு அனுப்புநரின் உள்நாட்டுக் கிடங்கிற்குப் பேக்கேஜ்களை அனுப்புவீர்கள்.
  5. சர்வதேச ஷிப்பிங் மற்றும் கடைசி-கட்ட டெலிவரியைச் சரக்கு அனுப்புநர் கவனித்துக்கொள்வார்.

இந்த மாடலை எப்போது பயன்படுத்த வேண்டும்:

  • புதிய தயாரிப்புகளைச் சோதிப்பதால், மொத்தமான சரக்கு இருப்பில் முதலீடு செய்ய விரும்பவில்லை என்றால்
  • உங்கள் ஆர்டர்களின் எண்ணிக்கை ஒரு நாளுக்கு 5 என்ற அளவிற்குக் கீழே இருந்தால்
  • பேக்கேஜிங் மற்றும் தரத்தில் உங்களுக்கு முழுமையான கட்டுப்பாடு வேண்டும் என்றால்

டிராப்ஷிப்பிங்

டிராப்ஷிப்பிங்கில், நீங்கள் சரக்கு இருப்பை வைத்திருக்க வேண்டியதில்லை. வாடிக்கையாளர் ஆர்டர் செய்யும்போது, சப்ளையரிடமிருந்து தயாரிப்பை நீங்கள் வாங்குவீர்கள், அவர் நேரடியாக வாடிக்கையாளருக்கு அதை அனுப்பிவிடுவார்.

நன்மைகள்:

  • சரக்கு இருப்பில் முதலீடு செய்யத் தேவையில்லை
  • தொடங்குவதற்குத் தடைகள் குறைவு
  • தயாரிப்புக்கும் சந்தைக்குமான பொருத்தத்தைச் சோதிக்கச் சிறந்தது

குறைபாடுகள்:

  • அதிகமான டெலிவரி நேரம் (15-40 நாள்கள்)
  • தரக் கட்டுப்பாடு குறைவாக இருக்கும்
  • பிரத்தியேகப் பிராண்டிங் அல்லது பேக்கேஜிங் இருக்காது
  • சரக்கு இருப்பு ஒத்திசைவுச் சிக்கல்களால் அதிக விற்பனை ஏற்படலாம்

இந்த மாடலை எப்போது பயன்படுத்த வேண்டும்:

  • சரக்கு இருப்பில் முதலீடு செய்வதற்கு முன் தயாரிப்பு தொடர்பான யோசனைகளைச் சரிபார்க்கிறீர்கள் என்றால்
  • உங்களிடம் குறைந்த மூலதனம் இருந்தால்
  • தேவை உறுதியாகத் தெரியாத ட்ரெண்டிங் தயாரிப்புகளை விற்கிறீர்கள் என்றால்

நீங்கள் டிராப்ஷிப்பிங்கைப் பயன்படுத்தினால், உங்கள் Shopify நிர்வாகியில் உங்கள் டிராப்ஷிப்பிங் ஆப்ஸிற்கான நிறைவேற்றும் இடம் சரியாக உள்ளமைக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தவும். ஷிப்பிங் கட்டணங்கள் காட்டப்படுவதற்கும், டிராக்கிங் சரியாக ஒத்திசைக்கப்படுவதற்கும் தயாரிப்புகள் சரியான இடத்திற்கு ஒதுக்கப்பட வேண்டும்.

மெய்நிகர் வெளிநாட்டுக் கிடங்கு

மெய்நிகர் வெளிநாட்டுக் கிடங்கு என்பது ஒரு ஹைப்ரிட் மாடலாகும். இதில் நீங்கள் கடைசி-கட்ட லேபிள்களை (USPS லேபிள்கள் போன்றவற்றை) முன்கூட்டியே பிரிண்ட் செய்து, உள்நாட்டிலேயே தயாரிப்புகளைப் பேக்கேஜ் செய்து, இலக்கு நாட்டிற்கு விமானம் மூலம் அனுப்புவீர்கள். அங்குள்ள உள்ளூர் கேரியர் டெலிவரியை முடிப்பார்.

செயல்படும் விதம்:

  1. இலக்கு நாட்டிலுள்ள கேரியருக்கான கடைசி-கட்ட லேபிள்களை உருவாக்குவீர்கள்.
  2. இந்த லேபிள்களை இணைத்து உள்நாட்டிலேயே தயாரிப்புகளைப் பேக்கேஜ் செய்வீர்கள்.
  3. சரக்கு அனுப்புநர் பேக்கேஜ்களை ஒன்றிணைத்து விமானம் மூலம் அனுப்புவார்.
  4. கிடங்கில் சேமிக்கப்படாமல், பேக்கேஜ்கள் நேரடியாக உள்ளூர் கேரியரிடம் (USPS போன்றவை) ஒப்படைக்கப்படும்.
  5. வாடிக்கையாளர்கள் டிராக்கிங் விவரத்தைப் பெறுவார்கள், அதில் "அமெரிக்காவிலிருந்து அனுப்பப்பட்டது" அல்லது அது போன்ற தகவல் காட்டப்படும்.

நன்மைகள்:

  • முழுமையான உள்நாட்டு நிறைவேற்றத்தை விட விரைவான டெலிவரி (7-10 நாள்கள்)
  • வெளிநாட்டுக் கிடங்கை விடக் குறைந்த மூலதனமே தேவைப்படும்
  • வாடிக்கையாளருக்கான டிராக்கிங் விவரத்தில், அவரது பகுதியிலிருந்தே பொருள் அனுப்பப்பட்டதாகக் காட்டப்படும்
  • சேமிப்புக் கட்டணங்கள் இல்லை

இந்த மாடலை எப்போது பயன்படுத்த வேண்டும்:

  • சீரான எண்ணிக்கையில் ஆர்டர்கள் (ஒரு நாளுக்கு 5-10 ஆர்டர்கள்) இருந்தால்
  • வெளிநாட்டுக் கிடங்கிற்கான மூலதனம் இல்லாமல் விரைவான டெலிவரியை வழங்க விரும்பினால்
  • உங்கள் வணிகத்தை விரிவுபடுத்துகிறீர்கள் மற்றும் அதற்கேற்ற ஒரு தீர்வு தேவை என்றால்

வெளிநாட்டுக் கிடங்கு

வெளிநாட்டுக் கிடங்கு மூலம், உங்கள் இலக்குச் சந்தையில் உள்ள ஒரு கிடங்கிற்கு கடல் அல்லது விமானப் போக்குவரத்து மூலம் மொத்தமாகச் சரக்கு இருப்பை அனுப்புவீர்கள். இந்தக் கிடங்கிலிருந்து ஆர்டர்கள் உள்ளூரில் நிறைவேற்றப்படும்.

நன்மைகள்:

  • மிக விரைவான டெலிவரி நேரம் (2-5 நாள்கள்)
  • சிறந்த வாடிக்கையாளர் அனுபவம்
  • ரிட்டர்ன்களைக் கையாளுவது எளிது
  • உள்நாட்டு விற்பனையாளர்களுடன் போட்டியிடலாம்

குறைபாடுகள்:

  • மொத்தச் சரக்கு இருப்புக்கு அதிக மூலதனம் தேவை
  • சேமிப்புக் கட்டணங்கள் மாதாந்திர அடிப்படையில் குவியும்
  • தயாரிப்புகள் விற்கவில்லை என்றால், அவை தேக்கமடையும் (Dead stock) ஆபத்து உள்ளது
  • சிக்கலான சரக்கு இருப்புக் கணிப்பு

உங்கள் வணிக நிலைக்கு ஏற்ப நிறைவேற்றத்தைப் பொருத்துதல்

உங்கள் வணிகம் வளரும்போது உங்கள் நிறைவேற்றும் உத்தியும் மேம்பட வேண்டும். உங்கள் ஆர்டர்கள் அதிகரிக்கும்போது, உங்களின் நிறைவேற்றும் அணுகுமுறையை மாற்றுவது குறித்து நீங்கள் பரிசீலிக்கலாம்.

சோதனைக் கட்டம் (ஒரு நாளுக்கு 0-5 ஆர்டர்கள்):

  • டிராப்ஷிப்பிங் அல்லது சீனாவிலிருந்து சுயமாக நிறைவேற்றும் முறையைப் பயன்படுத்தவும்
  • தயாரிப்புகளைச் சரிபார்ப்பதிலும் சிறப்பாக விற்பனையாகும் உருப்படிகளைக் கண்டறிவதிலும் கவனம் செலுத்தவும்
  • சரக்கு இருப்பிலோ விரைவான ஷிப்பிங்கிலோ அதிக முதலீடு செய்ய வேண்டாம்

வளரும் கட்டம் (ஒரு நாளுக்கு 5-10 ஆர்டர்கள்):

  • விரைவான டெலிவரிக்கு மெய்நிகர் வெளிநாட்டுக் கிடங்கிற்கு மாறவும்
  • நம்பகத்தன்மைக்காக 2-3 சரக்கு அனுப்புநர்களுடன் இணைந்து பணியாற்றுங்கள்
  • நம்பகமான சப்ளையர்களுடன் உறவுகளை உருவாக்கத் தொடங்குங்கள்

அளவிடுதல் கட்டம் (நாளொன்றுக்கு 10-20+ ஆர்டர்கள்):

  • அதிகம் விற்பனையாகும் தயாரிப்புகளுக்கு வெளிநாட்டுக் கிடங்கைப் பயன்படுத்துவதைப் பரிசீலியுங்கள்
  • மெதுவாக நகரும் உருப்படிகளுக்குச் சுய-நிறைவேற்றத்தைப் பராமரியுங்கள்
  • சரக்கு இருப்பு முன்கணிப்பு மற்றும் நிர்வாகத்தில் முதலீடு செய்யுங்கள்
  • கிடங்குகளில் உள்ள சரக்கு இருப்பை நிர்வகிக்க, பல்வேறு நிறைவேற்றும் இடங்களை அமைத்து, ஆர்டர் வழிப்படுத்துதலை உள்ளமைக்கவும்

தளவாடச் சேனல்களைத் தேர்ந்தெடுத்தல்

பல்வேறு தளவாடச் சேனல்கள் வெவ்வேறு தயாரிப்புகளுக்கும் இலக்குகளுக்கும் பொருந்தும். உங்கள் இலக்குச் சந்தைகளில் நிபுணத்துவம் பெற்ற சரக்கு அனுப்புநர்களுடன் இணைந்து பணியாற்றுங்கள்.

இலக்கு வாரியாகச் சேனல்கள்

இலக்கு வாரியாகத் தளவாடச் சேனல்கள்.
இலக்குபரிந்துரைக்கப்படும் சேனல்கள்வழக்கமான டெலிவரி
அமெரிக்கா மற்றும் ஐரோப்பாசிறப்பு வாய்ந்த எல்லை தாண்டிய கேரியர்கள்7-12 நாட்கள்
மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாபிராந்திய கேரியர்கள்10-15 நாட்கள்
கனமான அல்லது பருமனான உருப்படிகள்கடல்வழிச் சரக்குப் போக்குவரத்து + உள்ளூர் டெலிவரி30-45 நாட்கள்
அதிக மதிப்புள்ள தயாரிப்புகள்சர்வதேச எக்ஸ்பிரஸ்3-5 நாட்கள்

தயாரிப்பு வகை வாரியாகச் சேனல்கள்

பின்வரும் மாடல்களைப் பயன்படுத்தி உங்கள் தயாரிப்புப் பண்புகளுடன் உங்கள் ஷிப்பிங் சேனலைப் பொருத்தவும்:

  • அதிக மதிப்பு, அதிக லாபம் தரக்கூடிய தயாரிப்புகள்: 3-5 நாள் டெலிவரிக்கு சர்வதேச எக்ஸ்பிரஸ் (DHL, UPS) ஐப் பயன்படுத்தவும். அதிக ஷிப்பிங் செலவானது லாப வரம்பால் ஈடுகட்டப்படுகிறது.
  • நடுத்தர மதிப்புள்ள தயாரிப்புகள்: 10-15 நாள் டெலிவரிக்கு, சிறப்பு வாய்ந்த எல்லை தாண்டிய கேரியர்கள் அல்லது EMS (Express Mail Service) ஐப் பயன்படுத்தவும்.
  • குறைந்த விலை தயாரிப்புகள்: 20-40 நாள் டெலிவரிக்கு எகானமி சேனல்களைப் (சீனா போஸ்ட் போன்றவை) பயன்படுத்தவும். உங்கள் ஷிப்பிங் கொள்கையில் எதிர்பார்ப்புகளைத் தெளிவாக அமைக்கவும்.

சரக்கு அனுப்புநர்களுடன் பணியாற்றுதல்

எப்போதும் மலிவான விருப்பத்தேர்வைத் தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக, 2-3 நம்பகமான சரக்கு அனுப்புநர்களுடன் உறவுகளை உருவாக்குங்கள். சரக்கு அனுப்புநர்களை மதிப்பிடும்போது, பின்வரும் காரணிகளைக் கருத்தில் கொள்ளவும்:

  • தொடர்பு: சிக்கல்கள் எழும்போது அவர்களை விரைவாகத் தொடர்புகொள்ள முடியுமா?
  • கண்காணிப்புத் தரம்: அவர்கள் Shopify உடன் ஒத்திசையும் நம்பகமான கண்காணிப்பை வழங்குகிறார்களா?
  • சிக்கல் தீர்வு: தொலைந்துபோன பேக்கேஜ்கள் அல்லது தாமதங்களை அவர்கள் எவ்வாறு கையாளுகிறார்கள்?
  • கட்டுப்படுத்தப்பட்ட உருப்படிகள் குறித்த நிபுணத்துவம்: தாங்கள் எந்தெந்தத் தயாரிப்புகளை ஷிப் செய்யலாம், எவற்றைச் செய்ய முடியாது என்பது அவர்களுக்குத் தெரியுமா?

ஷிப்பிங் செலவுகள் மற்றும் உகப்பாக்கம்

சரக்கு அனுப்புநர்கள் பொதுவாக உண்மையான எடை அல்லது பரிமாண எடை, இவற்றில் எது அதிகமோ அதற்கான கட்டணத்தையே வசூலிப்பார்கள். எடைக் கணக்கீடுகளைப் புரிந்துகொள்வது, பொருத்தமான ஷிப்பிங் கட்டணங்களை அமைக்கவும் செலவுகளைக் குறைக்கவும் உதவுகிறது. எடையைக் கணக்கிடப் பின்வருவனவற்றைப் பயன்படுத்தவும்:

  • உண்மையான எடை: தராசில் பேக் செய்யப்பட்ட உருப்படியின் பௌதிக எடை
  • பரிமாண எடை: நீளம் × அகலம் × உயரம் ÷ 5000 (சில கேரியர்கள் 6000 ஐப் பயன்படுத்துகின்றன) எனக் கணக்கிடப்படுகிறது

எடுத்துக்காட்டாக, 40×30×20cm அளவும் 2 கிலோ எடையும்கொண்ட பேக்கேஜின் பரிமாண எடை 4.8 கிலோ (40×30×20÷5000) ஆகும். உண்மையான எடையான 2 கிலோவை விட 4.8 கிலோ அதிகம் என்பதால், நீங்கள் 4.8 கிலோவிற்குக் கட்டணம் செலுத்த வேண்டும்.

முதல் எடை மற்றும் தொடர்ச்சியான விலை நிர்ணயம்

பல சரக்கு அனுப்புநர்கள் பின்வரும் கூறுகளுடனான விலை நிர்ணய அமைப்பைப் பயன்படுத்துகின்றனர்:

  • முதல் எடை: முதல் யூனிட்டிற்கான அடிப்படை கட்டணம் (முதல் 500 கிராம் போன்றவை)
  • தொடர்ச்சி: ஒவ்வொரு கூடுதல் எடை யூனிட்டிற்கும் குறைக்கப்பட்ட கட்டணம்

இந்த அமைப்பைப் புரிந்துகொள்வது, செலவுகளைத் துல்லியமாகக் கணக்கிடவும், உங்கள் ஸ்டோரில் பொருத்தமான ஷிப்பிங் கட்டணங்களை அமைக்கவும் உதவுகிறது.

பொதியாக்கத்தை உகப்பாக்குதல்

சரக்கு அனுப்புநர்கள் அடிக்கடி பரிமாண எடை அடிப்படையில் கட்டணம் வசூலிப்பதால், பேக்கேஜ் பரிமாணங்களைக் குறைப்பது ஷிப்பிங் செலவுகளையும் நேரடியாகக் குறைக்கிறது.

உங்கள் பேக்கேஜ்களைத் தேர்ந்தெடுப்பதற்குப் பின்வரும் உத்தி ஆலோசனையை நீங்கள் முயற்சி செய்யலாம்:

  • மென்மையான பொருட்களை வெற்றிடமாகச் சுருக்கவும்: ஆடைகள், போர்வைகள், மெத்தென்ற உருப்படிகள் போன்றவற்றின் கனளவைக் கணிசமாகக் குறைப்பதற்கு அவற்றைச் சுருக்கலாம்.
  • பருமனான உருப்படிகளுக்கு உறுதியான பெட்டிகளைப் பயன்படுத்தவும்: ஷிப்பிங்கின்போது சிதைவடைவதைத் தடுத்து, வீணாகும் இடத்தைக் குறைக்கிறது.
  • தடிமனான பேடிங்கைப் மாற்றவும்: தடிமனான ஃபோர் பேடிங்கிற்குப் பதிலாகத் தேன்கூடு காகிதம் அல்லது குமிழிப் பைகளைப் பயன்படுத்தவும்.
  • உங்கள் பெட்டிகளைச் சரியான அளவில் தேர்வு செய்யவும்: தயாரிப்பிற்குப் பாதுகாப்பாகப் பொருந்தக்கூடிய மிகச் சிறிய பெட்டியைப் பயன்படுத்தவும். பரிமாணங்களில் குறைக்கப்படும் ஒவ்வொரு 5 செ.மீ அளவும் ஷிப்பிங் செலவுகளை மிச்சப்படுத்துகிறது.

ஷிப்பிங் சவால்களை நிர்வகித்தல்

எல்லை தாண்டிய ஷிப்பிங் நேரக்கட்டுப்பாடு, சுங்கம், குறிப்பிட்ட சீசன் அளவுகளில் தனித்துவமான சவால்களைக் கொண்டுவருகிறது. முன்கூட்டியே திட்டமிடுவது விலையுயர்ந்த இடையூறுகளைத் தவிர்க்க உங்களுக்கு உதவுகிறது.

அதிகத் தேவை இருக்கும் சீசனுக்கான திட்டமிடல்

பிளாக் ஃப்ரைடே, கிறிஸ்துமஸ், சீனப் புத்தாண்டு போன்ற அதிகம் ஷாப்பிங் நடைபெறும் சீசன்கள், எல்லை தாண்டிய ஷிப்பிங்கைக் கணிசமாகப் பாதிக்கின்றன. டெலிவரி நேரங்களை 7-12 நாட்களில் இருந்து 20+ நாட்கள் வரை நீட்டிக்கலாம்.

பின்வரும் செயல்பாடுகளுடன் முன்கூட்டியே திட்டமிடுவதன் மூலம், அதிகத் தேவையுள்ள சீசன்களுக்கு நீங்கள் தயாராகலாம்:

  • முன்கூட்டியே ஸ்டாக் செய்தல்: அதிகத் தேவையுள்ள சீசன்கள் தொடங்கும் முன்பே வெளிநாட்டுக் கிடங்குகள் அல்லது சரக்கு அனுப்புநர்களுக்குச் சரக்கு இருப்பை அனுப்புங்கள்
  • பல்வேறு கேரியர்களைப் பயன்படுத்துதல்: அதிகத் தேவையுள்ள சீசன்களின்போது, ஒரேயொரு சரக்கு அனுப்புநரை மட்டுமே நம்பியிருக்க வேண்டாம்
  • ஷிப்பிங் மதிப்பீடுகளைப் புதுப்பித்தல்: உங்கள் ஷிப்பிங் கொள்கையில் உங்கள் டெலிவரி நேர மதிப்பீடுகளைச் சரிசெய்யவும்
  • தீவிரமாகத் தொடர்புகொள்ளுதல்: வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்வதற்கு முன்பு, ஏற்படக்கூடிய தாமதங்கள் குறித்து அவர்களுக்குத் தெரிவிக்கவும்
  • கட்ஆஃப் தேதிகளைக் கருத்தில் கொள்ளுதல்: உத்தரவாதமான விடுமுறைக்கால டெலிவரிக்கு, ஆர்டர் செய்வதற்கான இறுதித் தேதிகளை அமைக்கவும்

சுங்கம் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட உருப்படிகள்

எந்தவொரு தயாரிப்பையும் சர்வதேச அளவில் அனுப்புவதற்கு முன்பு, உங்கள் இலக்கு நாடுகளில் அதற்குத் தடை இல்லை என்பதைச் சரிபார்க்கவும். சுங்கச் சிக்கல்கள் காரணமாகப் பறிமுதல், திருப்பியளித்தல், அபராதம் போன்றவை ஏற்படலாம்.

பின்வரும் உருப்படிகளை ஷிப் செய்வதற்கு முன், எப்போதும் உங்கள் சரக்கு அனுப்புநரிடம் உறுதிப்படுத்தவும்:

  • பேட்டரிகள் மற்றும் மின்னணுவியல் பொருட்கள் (பவர் பேங்க்கள் உட்பட)
  • அழகுசாதனப் பொருட்கள், வாசனை திரவியங்கள் மற்றும் ஏரோசால்கள்
  • உணவு மற்றும் பானங்கள்
  • வைட்டமின்கள், சப்ளிமெண்ட்டுகள் மற்றும் மருந்துச்சீட்டு இல்லாத மருந்துகள்
  • CBD (கன்னாபிடியோல்) மற்றும் கஞ்சா தொடர்பான தயாரிப்புகள்
  • மின்-சிகரெட்டுகள் மற்றும் வேப்பிங் தயாரிப்புகள்
  • பொடிகள் மற்றும் திரவங்கள்

சுங்க ஆவணங்கள்

சரியான ஆவணங்கள் சுங்கத்துறை தாமதங்களைக் குறைக்கின்றன. உங்கள் தயாரிப்புகளுக்கான பின்வரும் தகவல்கள் உங்களிடம் இருப்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள்:

  • HS (ஹார்மோனைஸ்டு சிஸ்டம்) குறியீடுகள்: அனைத்துச் சர்வதேச ஷிப்மென்ட்டுகளுக்கும் தேவைப்படும். Shopify-இல் உங்கள் தயாரிப்புகளுக்கு HS குறியீடுகளைச் சேர்க்கவும்.
  • மூல நாடு: தயாரிப்பு எங்கு உற்பத்தி செய்யப்பட்டது அல்லது அசெம்பிள் செய்யப்பட்டது
  • துல்லியமான தயாரிப்பு விளக்கங்கள்: ஒவ்வொரு பேக்கேஜிலும் என்ன இருக்கிறது என்பதற்கான தெளிவான விளக்கங்கள்
  • அறிவிக்கப்பட்ட மதிப்புகள்: தயாரிப்பு மதிப்புகளின் நேர்மையான அறிவிப்பு

சுங்க ஆவணங்கள் பற்றி மேலும் அறிக.

ரிட்டர்ன்களை நிர்வகித்தல்

சர்வதேச ரிட்டர்ன் ஷிப்பிங் செலவு அதிகம் என்பதால் எல்லை தாண்டி விற்பனை செய்பவர்களுக்கு ரிட்டர்ன்கள் சவாலானவை. பின்வரும் உத்திகளைக் கவனியுங்கள்:

  • ரிட்டர்ன் செலவு பகுப்பாய்வு: பல எல்லை தாண்டிய ஆர்டர்களில், தயாரிப்பு மதிப்பை விட ரிட்டர்ன் ஷிப்பிங்கிற்கு அதிகச் செலவாகும். பருப்பொருள் ரீதியான ரிட்டர்ன்கள் எப்போது அர்த்தமுள்ளதாக இருக்கும் என்பதைத் தீர்மானிக்க, உங்கள் பிரேக்-ஈவன் பாயிண்ட்டைக் கணக்கிடுங்கள்.
  • மாற்று ரிட்டர்ன் உத்திகள், அவை பின்வருமாறு:
    • ரிட்டர்ன் இல்லாமல் பகுதி அளவு பணத்தைத் திரும்பப்பெறுதல்: குறைந்த மதிப்புள்ள உருப்படிகளுக்கு, பகுதி அளவு பணத்தைத் திரும்பப் பெறுவதை வழங்கி வாடிக்கையாளரே தயாரிப்பை வைத்துக்கொள்ள அனுமதியுங்கள். ரிட்டர்ன் ஷிப்பிங்கிற்குப் பணம் செலுத்துவதை விட இது பெரும்பாலும் மலிவானது.
    • தள்ளுபடி கூப்பன்: முழுமையாகப் பணத்தைத் திரும்பப் பெறுவதற்குப் பதிலாக ஸ்டோர் கிரெடிட் மற்றும் தள்ளுபடி கூப்பனை வழங்குங்கள். இது வாடிக்கையாளரைத் தக்கவைத்துக்கொள்வதோடு உங்கள் இழப்பைக் குறைக்கிறது.
    • உள்ளூர் ரிட்டர்ன் முகவரி: நீங்கள் வெளிநாட்டுக் கிடங்கைப் பயன்படுத்தினால், அந்த இடத்திற்கு ரிட்டர்ன்களை ஏற்றுக்கொள்ளுங்கள்.
    • பருப்பொருள் ரீதியான ரிட்டர்ன் தேவை: அதிக மதிப்புள்ள உருப்படிகளுக்கு ($100 USD அல்லது அதற்கு மேற்பட்டவை) அல்லது மோசடி என்று சந்தேகிக்கப்படும் வழக்குகளுக்கு மட்டும் பருப்பொருள் ரீதியான ரிட்டர்ன்களைக் கோரலாம்.
  • ரிட்டர்ன் எதிர்பார்ப்புகளை அமைத்தல்: உங்கள் திருப்பியளிப்புக் கொள்கையில், பின்வரும் விவரங்களைத் தெளிவாகத் தெரியப்படுத்துங்கள்:
    • எந்த உருப்படிகள் ரிட்டர்ன்களுக்குத் தகுதியானவை
    • ரிட்டர்ன் ஷிப்பிங்கிற்கு யார் பணம் செலுத்துவார்கள்
    • பணத்தைத் திரும்பப்பெறுதலுக்கான செயலாக்க நேரம்
    • ரீஸ்டாக்கிங் கட்டணங்கள் ஏதேனும் உள்ளதா