பிரிவு 88

ஜனவரி 1, 2018 முதல், ஃபிரான்ஸில் விற்பனை செய்யும் மற்றும் மதிப்புக்கூட்டு வரிக்கு (VAT) உட்பட்ட அனைத்து வணிகர்களும் சான்றளிக்கப்பட்ட பதிவு அமைப்பைக் கொண்டிருக்க வேண்டும் என்று பிரெஞ்சு அரசாங்கம் கட்டாயப்படுத்தியுள்ளது. வரி மோசடியைத் தடுக்க உதவுவதே இந்தச் சட்டத்தின் நோக்கமாகும்.

வணிகர்கள் இந்தச் சட்டத்திற்கு இணங்குவதற்கு Shopify அதிகாரமளிக்கிறது, ஆனால் ஒவ்வொரு வணிகரின் சூழ்நிலையும் தனித்துவமானது. அனைத்து உள்ளூர்ச் சட்டங்களுக்கும் விதிமுறைகளுக்கும் நீங்கள் இணங்குகிறீர்களா என்பதைத் தீர்மானிக்க உள்ளூர்ச் சட்ட நிபுணர்களைக் கலந்தாலோசிப்பது முக்கியமாகும். Shopify உங்களுக்கான வரிப் பதிவேடுகளைச் சமர்ப்பிக்காது, ஆனால் உங்கள் தகவலை நீங்களே சமர்ப்பிக்கக்கூடிய ஒரு வடிவமைப்பில் ஏற்றுமதி செய்வதற்கான வழியை நாங்கள் வழங்குகிறோம். உங்களின் வரிப் பதிவேடுகளை நீங்கள் எப்படிச் சமர்ப்பிக்கிறீர்கள் என்பது உங்களின் உள்ளூர் அல்லது தேசிய வரி அதிகாரிகளைப் பொறுத்தது.

ஃபிரான்ஸில் உள்ள 2016 நிதியச் சட்டத்தின் 88 ஆவது பிரிவுக்கு இணங்க, நீங்கள் Loi Anti-Fraude TVA ஆவணத்தைப் பதிவிறக்கிப் பூர்த்திசெய்து உங்களின் பதிவேடுகளில் வைத்திருக்க வேண்டும். Loi Anti-Fraude TVA ஆவணம் என்பது ஃபிரான்ஸில் உள்ள விற்பனைப் புள்ளி அமைப்புகளுக்கான தேவைகளை Shopify POS பூர்த்தி செய்வதை உறுதிப்படுத்தும் Shopify வழங்கும் சுய-சான்றளிப்பு ஆகும். NF525 சான்றிதழ் போன்ற மூன்றாம் தரப்புச் சான்றிதழைப் போலவே, மேற்கண்ட தேவைகளுக்கு இணங்குவதை நிறுவுவதற்கான முறையான வழியாக இந்தச் சுய-சான்றளிப்பு விளங்குகிறது.

வரி ஆவணங்களை ஏற்றுமதி செய்தல்

உங்களின் இணக்கப் பதிவேடுகளை ஏற்றுமதி செய்ய, Data Exporter - Tax Compliance செயலியை நிறுவி, நீங்கள் ஏற்றுமதி செய்ய விரும்பும் காலண்டர் ஆண்டைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் ஏற்றுமதி செய்த பதிவேடுகள் ஸ்டோர் உரிமையாளரின் மின்னஞ்சல் கணக்கிற்கு அனுப்பப்படும். தரவு மற்றும் ரசீதுகள் போன்ற ஆர்டர் தகவல் மாற்றப்படவில்லை என்பதை நிரூபிக்கும் வகையில், இந்த ஏற்றுமதி செயலி ஒவ்வொரு ஆர்டருக்கும் ஒரு தணிக்கைக் கையொப்பத்தைச் சேர்க்கிறது.

பிரிவு 88 மற்றும் Data Exporter - Tax Compliance செயலி குறித்து மேலும் அறிக.