ஜெர்மனிக்கான தயாரிப்புப் பக்கத்தில் முக்கியமான தகவலைக் காட்டுவது
தயாரிப்புப் பக்கம் ஒரு தயாரிப்பையும் அதன் மாறுபாடுகளையும் காட்சிப்படுத்துகிறது. இயல்புநிலையாக, Shopify-இன் இலவசத் தீம்களில் உள்ள ஒவ்வொரு தயாரிப்புப் பக்கமும் தயாரிப்புப் படங்கள், விலை மற்றும் கிடைக்கும் தன்மை பற்றிய தகவல், தயாரிப்பு விளக்கம் மற்றும் கார்ட்டில் சேர் பொத்தான் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். ஒரு தயாரிப்புக்காக நீங்கள் வழங்கும் விவரங்கள், வாடிக்கையாளர்களுக்கு அந்தத் தயாரிப்பு எப்படிக் காட்டப்படுகிறது என்பதைப் பாதிக்கிறது. மேலும், வாடிக்கையாளர்கள் தயாரிப்பைக் கண்டறியவும் உதவுகிறது. தயாரிப்பு விவரங்களைச் சேர்ப்பது உங்கள் தயாரிப்புகளை ஒழுங்கமைப்பதையும் எளிதாக்குகிறது.
ஜெர்மனியில் விற்பனை செய்யும் வணிகர்கள், பொதுவாகப் பின்வரும் தகவலைத் தயாரிப்புப் பக்கங்களில் காட்டுவார்கள்:
- ஷிப்பிங் தகவல்
- VAT போன்ற வரித் தகவல்
- சரக்கு இருப்பில் கிடைக்கும் தன்மை
- டெலிவரி நேரம்
இந்தப் பக்கத்தில்
தயாரிப்புப் பக்கத்தில் ஷிப்பிங் தகவலைச் சேருங்கள்
Shopify நிர்வாகியில் உங்களின் ஷிப்பிங் கொள்கையைச் சேர்த்தால், உங்கள் தயாரிப்புப் பக்கத்தில் உங்கள் ஷிப்பிங் செலவுகளுக்கான இணைப்பு தானாகவே சேர்க்கப்படும்.
தயாரிப்புப் பக்கத்தில் வரித் தகவலைச் சேருங்கள்
உங்கள் வணிகம் ஐரோப்பிய ஒன்றிய (EU) உறுப்பு நாட்டில் அமைந்திருந்து, ஜெர்மனியில் விற்பனை செய்ய விரும்பினால், நீங்கள் உங்கள் தயாரிப்புப் பக்கங்களில் வரிகள் உள்ளிட்ட விலைகளைக் காட்ட வேண்டியிருக்கலாம். ஐரோப்பிய ஒன்றிய வரிகளை அமைப்பது பற்றிய கூடுதல் தகவலுக்கு, ஐரோப்பிய ஒன்றிய வரிகள் என்பதைப் பார்க்கவும்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > வரிகள் மற்றும் சுங்க வரிகள் என்பதற்குச் செல்லவும்.
வரி எவ்வாறு வசூலிக்கப்படும் என்பதைத் தீர்மானியுங்கள் பிரிவில், விலைகளில் வரியைச் சேர் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
வரிகளைச் சேர்க்கும் வகையில் விலைகளை அமைத்த பிறகு, காண்பிக்கப்படும் விலையில் வரிகள் சேர்க்கப்படுவதை உறுதிசெய்ய, உங்கள் தயாரிப்புப் பக்கங்களில் இந்தத் தயாரிப்புக்கு வரி விதி என்பது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவும். வரித் தகவல்கள் தயாரிப்புப் பக்கத்தில் காண்பிக்கப்படும், மேலும் சேர்க்கப்பட்டுள்ள வரித் தொகை செக்அவுட்டில் காண்பிக்கப்படும்.
தயாரிப்புப் பக்கத்தில் தயாரிப்பு சரக்கு இருப்புக் கிடைக்கும் தன்மையைக் காண்பிக்கவும்
நீங்கள் ஜெர்மனியில் விற்க விரும்பினால், தயாரிப்புப் பக்கத்தில் தயாரிப்பு கிடைக்கும் தன்மை குறித்த தகவலைக் காண்பிக்க வேண்டும். உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் ஒரு தயாரிப்பை இனி வாங்க முடியாது எனில், அந்தத் தயாரிப்புப் பக்கத்தில் கையிருப்பில் இல்லை என்ற செய்தி காண்பிக்கப்பட வேண்டும்.
இயல்புநிலையாக, [Shopify-supported themes]Shopify வழங்கும் அனைத்து இலவசத் தீம்களும் ஒரு தயாரிப்பு விற்றுத்தீர்ந்துவிட்டால், தயாரிப்புப் பக்கத்தில் கையிருப்பில் இல்லை என்ற செய்தியைக் காண்பிக்கும். உங்கள் தீமைத் தனிப்பயனாக்கினால் அல்லது இயல்புநிலை அமைப்புகளை மாற்றினால், கையிருப்பில் இல்லை என்ற செய்தி உங்கள் வாடிக்கையாளர்களுக்குப் படிக்கக்கூடியதாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் தெளிவாகவும் இருப்பதை உறுதிப்படுத்தவும்.
தயாரிப்புப் பக்கத்தில் டெலிவரி நேரங்களைச் சேர்க்கவும்
உங்கள் தயாரிப்பு விளக்கங்களில் உத்தேச டெலிவரி நேரத்தைச் சேர்ப்பதன் மூலம், ஜெர்மனியில் உள்ள வாடிக்கையாளர்களுக்குச் சரியான எதிர்பார்ப்புகளை உங்களால் அமைக்க முடியும். ஒவ்வொரு தயாரிப்புக்கும் தனித்தனியாக இந்தப் படிகளை நிறைவுசெய்ய வேண்டும்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, தயாரிப்புகள் என்பதற்குச் செல்லவும்.
நீங்கள் மாற்ற விரும்பும் தயாரிப்பின் பெயரைக் கிளிக் செய்யவும்.
தயாரிப்பு விளக்கத்தில் டெலிவரி நேரத்தைச் சேர்க்கவும். உதாரணமாக, நீங்கள் "1-2 வணிக நாட்களுக்குள் டெலிவரி செய்யப்படும்." என்று சேர்க்கலாம். கையிருப்பில் இல்லாதபோதும் நீங்கள் தொடர்ந்து தயாரிப்புகளை விற்க விரும்பினால், உருப்படி டெலிவரி செய்யப்படும் தேதியைத் தொடர்ந்து காண்பிக்க வேண்டும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.