ஜெர்மனியில் வரி இணக்கம்

GoBD மற்றும் KassenSichV போன்ற ஜெர்மனியில் உள்ள வரி விதிமுறைகளுக்கு இணங்க உங்களுக்கு உதவ, Shopify App Store இல் உள்ள செயலிகளைப் பயன்படுத்தலாம்.

இந்தப் பக்கத்தில்

GoBD

ஜெர்மனியில், GoBD என்பது புத்தகங்கள், பதிவேடுகள் மற்றும் ஆவணங்களை மின்னணு வடிவத்தில் சரியான முறையில் நிர்வகிப்பதற்கும் சேமிப்பதற்கும் மற்றும் தரவு அணுகலுக்கும் உண்டான கொள்கைகளின் தொகுப்பாகும். கணக்குப்பதிவியல் மற்றும் வரி தொடர்பான தரவுகள் மின்னணு அல்லது காகித வடிவத்தில் எப்படி இருந்தாலும், அவற்றுக்கு ஜெர்மானிய வரி அதிகாரிகள் விதிக்கும் அனைத்துத் தேவைகளையும் GoBD ஒழுங்குபடுத்துகிறது. வரித் தணிக்கையின் போது, ஜெர்மன் வரி அதிகாரிகள் எப்படி மின்னணுத் தரவை அணுகலாம் என்பதற்கான வழிகாட்டுதல்களையும் GoBD அமைக்கிறது. உங்களுக்குத் தேவையான தரவு எவற்றை வரி அலுவலகம் சேமித்து வைக்கச் சொல்கிறது என்பதைக் கண்டறியவும், வரித் தணிக்கையின் ஒரு பகுதியாகத் தணிக்கையாளர் என்னென்ன செய்யலாம் என்பதைத் தெரிந்துகொள்ளவும் GoBD உதவுகிறது.

GoBD-க்கு இணங்க உங்களுக்கு உதவ, நீங்கள் Data Exporter செயலியைப் பயன்படுத்தலாம்.

TSE இணக்கம்

ஏப்ரல் 1, 2021 முதல், ஜெர்மனியில் உள்ள அனைத்துச் சில்லறை வணிகர்களும் ஜெர்மனியின் புதிய KassenSichV விதிமுறைகளுக்கு இணங்க வேண்டும். ரொக்கப் பேமெண்ட்டுகளை ஏற்கும் டிஜிட்டல் பணப் பதிவேட்டைக் கொண்டு, நேரில் விற்பனை செய்யும் ஜெர்மனியில் உள்ள அனைத்து வணிகர்களையும் இந்த விதிமுறை பாதிக்கும். இந்த விதிமுறையின்படி, தணிக்கை நோக்கங்களுக்காக வணிகர்கள் மின்னணுப் பணப் பதிவேடுகளை ஒரு தொழில்நுட்பப் பாதுகாப்பு அமைப்புடன் (TSE) இணைப்பது அவசியமாகும்.

TSE விதிமுறைகளுக்கு இணங்க, Shopify App Store இலிருந்து TSE (KassenSichV) செயலியைப் பயன்படுத்தலாம்.