இத்தாலியில் விற்பனை செய்வதற்கான பொதுவான சரிபார்ப்புப் பட்டியல்
நீங்கள் Shopify-ஐத் தொடங்க எடுக்க வேண்டிய அனைத்துப் படிகளையும் இந்தச் சரிபார்ப்புப் பட்டியல் சுருக்கமாகக் கூறுகிறது. Shopify-ஐத் தொடங்குவதற்கு முன் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதையும், உங்கள் ஆன்லைன் ஸ்டோரை அறிமுகப்படுத்தி விளம்பரப்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களையும் இந்தப் படிகள் உள்ளடக்குகின்றன. அமைவுச் செயல்முறை முழுவதும் இதைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், இந்தச் சரிபார்ப்புப் பட்டியலை அச்சிடுவது அல்லது PDF ஆகப் பதிவிறக்குவது உங்களுக்கு உதவியாக இருக்கலாம்.
இப்பக்கத்தில்
தொடங்குவதற்கு முன்
உங்கள் Shopify ஸ்டோரை அமைக்கத் தொடங்குவதற்கு முன், உங்கள் இலக்குகளைப் புரிந்துகொள்வது முக்கியமாகும். உங்கள் ஸ்டோரைப் பற்றிய அடிப்படைக் கேள்விகளை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். இது உங்கள் கவனத்தை ஒருமுகப்படுத்தவும் அமைவுச் செயல்முறையை வேகப்படுத்தவும் உதவும். எந்த விலையிடல் திட்டம் உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யும் என்பது குறித்தும் நீங்கள் சிந்திக்கலாம். இருப்பினும், உங்கள் இலவசச் சோதனை முடியும் வரை நீங்கள் திட்டத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டியதில்லை.
பரிசீலனைகளும் வரம்புகளும்
- உங்கள் Shopify சந்தா விலையிடல் திட்டம் பணியாளர் கணக்குகளின் எண்ணிக்கை, பரிவர்த்தனைக் கட்டணங்கள், அறிக்கையிடல் திறன்கள், விற்பனைச் சேனல் தகுதி உட்பட உங்களுக்குக் கிடைக்கும் அம்சங்களைப் பாதிக்கும்.
- Shopify POS வன்பொருள் கிடைக்கும் தன்மையும் Tap to Pay ஆதரவும் நாட்டிற்கு நாடு மாறுபடும். இத்தாலிய வணிகர்களுக்கு நிதி ரசீதுகளுக்கான குறிப்பிட்ட POS வன்பொருளும் தேவைப்படும்.
- வேறு தளத்திலிருந்து Shopify-க்கு உங்கள் ஸ்டோரை மாற்றினால், உங்கள் தேடுபொறித் தரவரிசைகளைப் பாதுகாக்க நீங்கள் URL திசைதிருப்பல்களை அமைக்க வேண்டியிருக்கலாம்.
- விற்பனைச் சேனல் தகுதியானது உங்கள் பிராந்தியம், தயாரிப்பு வகைகள் மற்றும் சில சமயங்களில் உங்கள் சந்தாத் திட்டத்தைப் பொறுத்தது. விற்பனை உத்தியில் ஈடுபடுவதற்கு முன் தனிப்பட்ட சேனல் தேவைகளை மதிப்பாய்வு செய்யவும்.
- Shopify அல்லாத மெய்நிகர் வங்கிக் கணக்குகள் ஆதரிக்கப்பட்டாலும், இந்தக் கணக்குகள் மூலம் அதிகப் பேஅவுட் தோல்விகளை நீங்கள் சந்திக்க நேரிடலாம்.
தொடங்குவதற்கான சரிபார்ப்புப் பட்டியல்
முதல் படிகள்
உங்கள் Shopify ஸ்டோரில் தயாரிப்புகளை ஸ்டாக் செய்வதற்கு முன், நீங்களும் உங்கள் ஸ்டோரும் குறித்த சில தகவல்களை உள்ளிட வேண்டும். உங்கள் தயாரிப்புப் பட்டியல்கள் மற்றும் வாடிக்கையாளர் பரிவர்த்தனைகளுக்கான சில அடிப்படைத் தரநிலைகளை நீங்கள் முடிவுசெய்ய வேண்டும். மேலும், வாடிக்கையாளர்கள் உங்கள் ஸ்டோரை ஆன்லைனில் கண்டறிய முடியும் என்பதை உறுதிப்படுத்த, உங்கள் டொமைனை அமைக்க வேண்டும்.
பரிசீலனைகளும் வரம்புகளும்
- உங்கள்
myshopify.comடொமைன் பெயரை ஒரு முறை மட்டுமே மாற்ற முடியும். ஆரம்ப அமைவின்போது கவனமாகத் தேர்ந்தெடுக்கவும். - Gmail, Yahoo போன்ற முக்கிய மின்னஞ்சல் வழங்குநர்களுக்கு மின்னஞ்சல் அனுப்புநர் அங்கீகரிப்பு (SPF மற்றும் DKIM பதிவுகள்) அவசியமாகும். அது இல்லையெனில், உங்கள் ஸ்டோர் மின்னஞ்சல்கள் ஸ்பேம் அல்லது ஜங்க் கோப்புறைகளுக்கு அனுப்பப்படலாம்.
- வரி இணக்கம் என்பது உங்கள் பொறுப்பாகும். நீங்கள் Shopify Tax தானியங்கு தாக்கல் சேவையைப் பயன்படுத்தாவிட்டால், Shopify வரிகளைக் கணக்கிடுமே தவிர உங்கள் சார்பாக வரிகளைத் தாக்கல் செய்யவோ பணம் அனுப்பவோ செய்யாது. மதிப்புக்கூட்டு வரிப் பதிவுத் தேவைகளுக்கு, இத்தாலியில் வரி இணக்கம் என்பதை மதிப்பாய்வு செய்யவும்.
- நீங்கள் சேர்க்கக்கூடிய பணியாளர் கணக்குகளின் எண்ணிக்கை உங்கள் திட்டத்தைப் பொறுத்தது. Basic திட்டத்தில் கூடுதல் பணியாளர்கள் யாரையும் சேர்க்க முடியாது, Grow திட்டத்தில் 5 பேரையும், Advanced திட்டத்தில் 15 பேரையும், Shopify Plus திட்டத்தில் வரம்பற்ற பணியாளர்களையும் அனுமதிக்கலாம்.
- ஸ்டோர் கொள்கை வார்ப்புருக்கள் ஆங்கிலம் மற்றும் இத்தாலிய மொழிகளில் கிடைக்கின்றன.
- நீங்கள் உருவாக்கக்கூடிய சந்தைகளின் எண்ணிக்கை உங்கள் சந்தாத் திட்டத்தைப் பொறுத்தது.
- நீங்கள் உங்கள் ஸ்டோரை முடக்கும்போது, அனைத்துச் செயலிகளும் தானாகவே நிறுவல் நீக்கப்படும், ஆனால் Shopify பில்லிங்கிற்கு வெளியே பில் செய்யப்படும் செயலிக்கான கட்டணங்கள் தொடரக்கூடும்.
முதல் படிகளுக்கான சரிபார்ப்புப் பட்டியல்
உங்கள் ஆன்லைன் ஸ்டோரை ஒழுங்கமைக்கவும்
உங்கள் ஸ்டோர் வடிவமைக்கப்பட்டுள்ள விதம், நீங்கள் விற்கவிருக்கும் தயாரிப்புகளின் வகைகள் ஆகிய இரண்டுமே உங்கள் ஆன்லைன் ஸ்டோரின் மிக முக்கியமான பகுதிகளாகும். உங்கள் வணிகத்தை எது சிறப்பாகப் பிரதிபலிக்கிறது என்பதை உறுதிப்படுத்தச் சில வெவ்வேறு தீம்களை முயன்று பார்க்கவும், பிறகு விற்பனை செய்வதற்குச் சில தயாரிப்புகளைச் சேர்க்கவும்.
நீங்கள் எத்தனை தயாரிப்புகளை வழங்கத் திட்டமிட்டுள்ளீர்கள் என்பதைப் பொறுத்து, உங்களின் தயாரிப்புப் பட்டியல்களைச் சேர்ப்பது மற்றும் ஒழுங்கமைப்பது என்பது Shopify ஸ்டோரை அமைப்பதில் அதிக நேரமெடுக்கும் படியாக இருக்கலாம். உங்கள் தயாரிப்புகளைச் சேர்க்கவும், தர்க்கரீதியான குழுக்களாக அவற்றை ஒழுங்கமைக்கவும், தேவையான வரி மற்றும் ஷிப்பிங் தகவல்களை அமைக்கவும் உங்களுக்குப் போதுமான நேரத்தை ஒதுக்கிக்கொள்ளவும்.
பரிசீலனைகளும் வரம்புகளும்
- தயாரிப்புகளுக்கு குறைந்தபட்சம் ஒரு தலைப்பும் விலையும் தேவை. ஒவ்வொரு தயாரிப்பிற்கும் 250 டேக்குகள் வரை உங்களால் சேர்க்க முடியும், அல்லது Shopify Plus திட்டத்தில் வரம்பற்ற டேக்குகளைச் சேர்க்கலாம்.
- அடிக்கடி தயாரிப்பு URL ஹேண்டில்களை மாற்றுவதைத் தவிர்க்கவும், ஏனெனில் இது உங்கள் தேடுபொறித் தரவரிசைகளைப் பாதிக்கலாம்.
- நீண்ட தயாரிப்புத் தலைப்புகளும் விளக்கங்களும் தேடுபொறி முடிவுகளில் துண்டிக்கப்படலாம். தலைப்புகளைச் சுருக்கமாகவும் முக்கியமான முக்கியச் சொற்கள் தொடக்கத்திலும் இருக்கும்படியும் வைத்துக்கொள்ளவும்.
- Shopify Theme Store-இலிருந்து பெறப்படும் இலவச மற்றும் கட்டண தீம்கள் தளவமைப்பு மற்றும் அம்சங்களில் வேறுபடுகின்றன. உங்கள் உள்ளடக்கத் தேவைகளுக்குத் தீம் ஆதரவளிக்கிறதா என்பதை உறுதிசெய்ய, வெளியிடும் முன் தீம்களின் முன்தோற்றத்தைப் பார்க்கவும்.
- நீங்கள் ஐரோப்பியப் பொருளாதாரப் பகுதியில் (EEA) உள்ள வாடிக்கையாளர்களுக்கு விற்றால், விலைக் குறைப்புகளை அறிவிக்கும்போது European Pricing Indication Directive-க்கு நீங்கள் இணங்க வேண்டும்.
- Poste Italiane மூலமான ஷிப்பிங் இத்தாலியில் கிடைக்கிறது. இதில் ஷிப்பிங் லேபிள்கள் மற்றும் பெற்றுக்கொள்ளும் இடங்களும் அடங்கும்.
- இத்தாலியில் கேஷ் ஆன் டெலிவரி இன்னமும் பிரபலமான ஒரு கட்டண முறையாக உள்ளது.
உங்கள் ஆன்லைன் ஸ்டோரை ஒழுங்கமைப்பதற்கான சரிபார்ப்புப் பட்டியல்
உங்கள் ஆன்லைன் ஸ்டோரைச் சோதிக்கவும்
உங்கள் ஆன்லைன் ஸ்டோரை அறிமுகப்படுத்துவதற்கு முன், செக்அவுட் செயல்முறை எவ்வாறு செயல்படுகிறது என்பதை மதிப்பாய்வு செய்ய, சில சோதனை ஆர்டர்களைச் செய்து பார்க்கவும்.
பரிசீலனைகளும் வரம்புகளும்
- Grow மற்றும் அதற்கும் மேலான திட்டங்களில் அல்லது Shopify Payments உள்ள எந்தவொரு திட்டத்திலும் மோசடி பகுப்பாய்வுப் பரிந்துரைகள் கிடைக்கும். Shopify Payments இல்லாத Basic திட்டம் மோசடிக் குறிகாட்டிகளை மட்டுமே வழங்கும்.
- அதிக சார்ஜ்பேக் வீதங்கள் காரணமாக, Shopify Payments முடக்கப்படலாம். அதிக ஆபத்துள்ளவை எனக் கொடியிடப்பட்ட ஆர்டர்களை நிறைவேற்றுவதற்கு முன் மதிப்பாய்வு செய்யவும்.
- கட்டணத்தைத் திரும்பப்பெறுவது குறித்து உங்கள் வங்கி இறுதி முடிவை எடுக்கும். சார்ஜ்பேக் இழப்புகளை Shopify ஈடுகட்டாது.
- ஒவ்வொரு செக்அவுட் படிக்குப் பிறகும், கார்ட்டின் சரக்கு இருப்பு மீண்டும் சரிபார்க்கப்படும். கட்டண விவரங்கள் சமர்ப்பிக்கப்படும்போது மட்டுமே சரக்கு இருப்பு நிறுத்தி வைக்கப்படும்.
உங்கள் ஆன்லைன் ஸ்டோரைச் சோதிப்பதற்கான சரிபார்ப்புப் பட்டியல்
உங்கள் ஆன்லைன் ஸ்டோரை அறிமுகப்படுத்துங்கள்
ஒரு திட்டத்தைத் தேர்ந்தெடுத்து உங்கள் ஆன்லைன் ஸ்டோரைச் சோதித்த பிறகு, வாடிக்கையாளர்கள் வருகை தருவதற்கு அது தயாராக இருக்கும். உங்கள் ஸ்டோரை மீண்டும் ஒருமுறை மதிப்பாய்வு செய்த பிறகு, அதை அறிமுகப்படுத்துங்கள்.
பரிசீலனைகளும் வரம்புகளும்
- இலவச சோதனையின் போது உங்கள் ஆன்லைன் ஸ்டோரை அறிமுகப்படுத்த நீங்கள் ஒரு சந்தாத் திட்டத்தைத் தேர்வுசெய்ய வேண்டும்.
- உங்கள் ஸ்டோரை நீங்கள் அறிமுகப்படுத்திய பிறகு, அதனை அனைவரும் பார்க்க முடியும். தளத்தை நேரலையாக்கும் முன் உங்கள் ஸ்டோர் கொள்கைகள், தொடர்புத் தகவல் மற்றும் ஷிப்பிங் கட்டணங்கள் ஆகியவை இறுதிசெய்யப்பட்டதை உறுதிப்படுத்தவும்.
உங்கள் ஆன்லைன் ஸ்டோரை அறிமுகப்படுத்துவதற்கான சரிபார்ப்புப் பட்டியல்
பிற ஆன்லைன் விற்பனைச் சேனல்களைச் சேர்க்கவும்
உங்கள் ஆன்லைன் ஸ்டோரை அறிமுகப்படுத்திய பிறகு, உங்கள் Shopify ஸ்டோரில் வேறு சில ஆன்லைன் சேனல்களைச் சேர்ப்பது உங்கள் வணிகத்திற்குப் பயனளிக்கலாம். ஆன்லைனில் விற்கும்போது உங்கள் Shopify நிர்வாகியில் நீங்கள் சேர்க்கக்கூடிய பல விருப்பத்தேர்வு ஆன்லைன் சேனல்கள் உள்ளன.
பரிசீலனைகளும் வரம்புகளும்
- Google & YouTube-ஐப் பயன்படுத்த Google Merchant Center கணக்கு, உங்கள் ஸ்டோரில் அனைவரும் பார்க்கக்கூடிய தொடர்புத் தகவல், உங்கள் ஸ்டோர்ஃபிரண்ட் அடிப்பகுதியில் பணத்தைத் திரும்பப்பெறுதல் மற்றும் சேவை விதிமுறைகள் குறித்த கொள்கைகள், ஆதரிக்கப்படும் நாட்டிற்கான ஷிப்பிங் ஆகியவை இருக்க வேண்டும். தயாரிப்புத் தரவில் குளோபல் ட்ரேட் ஐட்டம் நம்பர் (GTIN), உற்பத்தியாளர் பகுதி எண் (MPN) அல்லது பிராண்ட் போன்ற விவரங்கள் இருக்க வேண்டும்.
- Facebook and Instagram by Meta-ஐப் பயன்படுத்த Meta பிசினஸ் போர்ட்ஃபோலியோ இருக்க வேண்டியதும் Meta-வின் வணிகக் கொள்கைகளுக்கு இணங்க வேண்டியதும் அவசியமாகும். Meta சேனல் ஆர்டர்களுக்கு வரி வசூலித்துச் செலுத்துவது வணிகர்களின் பொறுப்பாகும்.
- அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், அயர்லாந்து, மெக்சிகோ, ஜப்பான் மற்றும் பிரேசில் உள்ளிட்ட குறிப்பிட்ட சில நாடுகளில் TikTok கிடைக்கிறது. தயாரிப்புகள் TikTok-இன் தடைசெய்யப்பட்ட தயாரிப்புகளுக்கான பிராந்தியக் கொள்கைகளுக்கு இணங்க வேண்டும்.
- Shop சேனலைப் பயன்படுத்த, Shopify Payments செயலில் இருக்க வேண்டியதும் கடந்த ஆறு மாதங்களில் சார்ஜ்பேக் வீதம் 1%-க்கும் குறைவாக இருக்க வேண்டியதும் அவசியமாகும்.
- தள்ளுபடிக் குறியீடுகளைக் குறிப்பிட்ட விற்பனைச் சேனல்களுக்கு மட்டும் என வரம்பிட முடியாது. உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் வேலை செய்யும் ஒரு குறியீடு, நீங்கள் விற்கும் பிற சேனல்களிலும் வேலை செய்யும்.
- தள்ளுபடி சேர்க்கைகளில் ஒரு ஆர்டருக்கு அதிகபட்சம் 5 தயாரிப்பு அல்லது ஆர்டர் தள்ளுபடிக் குறியீடுகள் மற்றும் 1 ஷிப்பிங் தள்ளுபடிக் குறியீடு மட்டுமே இருக்க முடியும். மேலும், இதில் அதிகபட்சமாக 25 செயலில் உள்ள தானியங்கு தள்ளுபடிகள் மட்டுமே இடம்பெற முடியும்.
விற்பனைச் சேனல்களைச் சேர்ப்பதற்கான சரிபார்ப்புப் பட்டியல்
உங்கள் ஆன்லைன் ஸ்டோரை விளம்பரப்படுத்துங்கள்
உங்கள் ஆன்லைன் ஸ்டோரை அறிமுகப்படுத்திய பிறகு, அதனை நீங்கள் விளம்பரப்படுத்த வேண்டும். தேடுபொறிகளால் பயன்படுத்தப்படும் தகவலைச் சேர்ப்பதன் மூலமும், பொருத்தமான அனைத்து இடங்களிலும் உங்கள் ஸ்டோரை விளம்பரப்படுத்துவதன் மூலமும் உங்கள் ஸ்டோரின் பார்வைத்திறனை நீங்கள் மேம்படுத்தலாம்.
பரிசீலனைகளும் வரம்புகளும்
- தேடுபொறி அட்டவணையிடல் உடனடியாக நடக்காது. Google மற்றும் பிற தேடுபொறிகள் புதிய பக்கங்களை அட்டவணையிட 48 முதல் 72 மணிநேரம் வரை ஆகலாம். மேலும், எல்லாப் பக்கங்களும் கட்டாயம் அட்டவணையிடப்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
- Shopify Messaging-ஐப் பயன்படுத்த செயலில் உள்ள ஒரு கட்டணத் திட்டம் அவசியம். மேலும் இது Basic அல்லது அதற்கும் மேலான திட்டங்களில் கிடைக்கிறது. அனுப்பப்படும் மின்னஞ்சல் மற்றும் SMS-இன் அளவைப் பொறுத்து விலை நிர்ணயிக்கப்படும். சோதனை அல்லது Pause and Build திட்டங்களில், உங்களால் பிரச்சாரங்களை உருவாக்கி உங்களுக்கு நீங்களே சோதனைகளை அனுப்பிக் கொள்ள முடியும். ஆனால், சந்தாதாரர்களுக்கு உங்களால் அனுப்ப முடியாது.
- Shopify Inbox செயலியானது Basic, Grow, Advanced மற்றும் Shopify Plus ஆகிய திட்டங்களில் கிடைக்கிறது.
- அறிக்கைகள் மற்றும் பகுப்பாய்வு அம்சங்கள் திட்டத்திற்குத் திட்டம் மாறுபடும். மேம்பட்ட மற்றும் பிரத்தியேக அறிக்கைகள், உயர்நிலைத் திட்டங்களில் கிடைக்கின்றன.
உங்கள் ஆன்லைன் ஸ்டோரை விளம்பரப்படுத்துவதற்கான சரிபார்ப்புப் பட்டியல்
நேரில் விற்பனை செய்தல்
உங்களிடம் செங்கல் மற்றும் காரையால் கட்டப்பட்ட நிஜமான ஸ்டோர் இருந்தால், உங்கள் நேரடி விற்பனையைத் தடமறியவும் உங்கள் சரக்கு இருப்பை ஒத்திசைக்கவும் Shopify POS உங்களுக்கு உதவும். Shopify POS மூலம் செயலாக்கப்படும் சில்லறை விற்பனை ஆர்டர்களுக்கான நிதி ரசீதை உருவாக்க, இத்தாலிய வரி அதிகார அமைப்புடன் இணைக்க Epson FP-81 II RT ரசீது அச்சுப்பொறி போன்ற குறிப்பிட்ட வன்பொருள் உங்களுக்குத் தேவைப்படும்.
இத்தாலியில் உள்ள வணிகர்களுக்கெனப் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட Shopify POS மூலம் நேரில் விற்பனை செய்வது குறித்த விரிவான தகவல்களுக்கு, இத்தாலியச் சில்லறை விற்பனைத் தேவைகள் என்பதைப் பார்க்கவும்.