ஸ்பெயினில் விற்பனை செய்தல்
ஸ்பெயினில் உங்கள் பிசினஸை நடத்துவது, உங்கள் ஆன்லைன் ஸ்டோர் வடிவமைப்பு மற்றும் நீங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் தகவல் ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். விதிமுறைகள், வாடிக்கையாளரின் எதிர்பார்ப்புகள் மற்றும் மொழி சார்ந்த பரிசீலனைகள் ஆகிய அனைத்துமே உங்களின் ஆன்லைன் ஸ்டோர் மற்றும் தயாரிப்புப் பக்கங்களில் எவ்வகையான தகவல்களைக் காட்ட வேண்டும் என்பதைத் தீர்மானிக்கின்றன.
ஐரோப்பியப் பொருளாதாரப் பகுதியில் (EEA) உள்ள வாடிக்கையாளர்களுக்கு நீங்கள் விற்பனை செய்தால், ஐரோப்பிய விலை நிர்ணயக் குறிப்பு உத்தரவுக்கு நீங்கள் இணங்க வேண்டும். பிற விஷயங்களோடு சேர்த்து, ஏதேனும் விலைக்குறைப்புகளை நீங்கள் அறிவிக்கும்போது, கடந்த 30 நாட்களுக்குள் தயாரிப்புக்கு வசூலிக்கப்பட்ட மிகக் குறைந்த விலையை (அந்தக் காலகட்டத்தில் வழங்கப்பட்ட விளம்பர விலைகள் உட்பட) காட்ட வேண்டும் என்று இந்தச் சட்டம் கோருகிறது. ஐரோப்பிய விலை நிர்ணயக் குறிப்பு உத்தரவு பற்றி மேலும் அறிக.
ஸ்பெயினில் விற்பனை செய்யும் வணிகர்கள் தங்களின் Shopify ஸ்டோர்களில் அடிக்கடி செயல்படுத்தும் பொதுவான மாற்றங்களை இந்தப் பகுதி (முழுமையாக இல்லாவிட்டாலும்) சுருக்கமாகக் கூறுகிறது. இந்த வழிகாட்டியின் சில பகுதிகள், தங்களின் தீம்களைத் தனிப்பயனாக்குவதற்கு Liquid குறியீட்டைத் திருத்தத் தெரிந்த வணிகர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. உங்களின் பிற பிசினஸ் சார்ந்த பணிகளில் நீங்கள் கவனம் செலுத்தும் வகையில், ஸ்பெயினில் விற்பனை செய்வதற்கு ஏற்ப உங்கள் தளத்தைத் தனிப்பயனாக்க, நீங்கள் ஒரு Shopify பார்ட்னரைப் பணியமர்த்தலாம்:
- ஸ்பெயினில் உள்ள பார்ட்னர் ஏஜென்சிகளைப் பார்க்கவும்
- ஸ்டோர் அமைவு நிபுணரை எவ்வாறு பணியமர்த்துவது என அறியவும்
ஸ்பெயினில் விற்பனை செய்வது தொடர்பான கூடுதல் தகவல்கள் பின்வரும் வழிகாட்டிகளில் உள்ளன:
- ஸ்பெயினுக்கான Shopify Payments
- Correos மூலம் ஷிப்பிங் செய்தல்
- GDPR விதிகளுக்கு இணங்க Shopifyஐப் பயன்படுத்துதல்
- Shopify மூலம் MONEI தவணைகள்
- சர்வதேச Shopify உதவி மையத்தின் YouTube வீடியோக்கள்
- Shopify சமூகம்
- Shopify ஈகாமர்ஸ் சந்தைப்படுத்தல் வலைப்பதிவு
- ஸ்பானிஷ் வரி முகமை