ஸ்பெயினில் விற்பனை செய்வதற்கான பொதுவான சரிபார்ப்புப் பட்டியல்

நீங்கள் Shopifyஐத் தொடங்க எடுக்க வேண்டிய அனைத்துப் படிகளையும் இந்தச் சரிபார்ப்புப் பட்டியல் சுருக்கமாகக் கூறுகிறது. Shopifyஐத் தொடங்குவதற்கு முன் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்தப் படிகள் உள்ளடக்கியிருப்பதுடன், உங்கள் ஆன்லைன் ஸ்டோரை அறிமுகப்படுத்தி, விளம்பரப்படுத்துவது குறித்த வழிகாட்டுதலையும் வழங்குகின்றன. அமைவுச் செயல்முறை முழுவதும் நீங்கள் பயன்படுத்துவதற்காக, இந்தச் சரிபார்ப்புப் பட்டியலை அச்சிடுவது அல்லது PDF ஆகப் பதிவிறக்குவது உதவக்கூடும்.

நீங்கள் தொடங்குவதற்கு முன்

உங்கள் Shopify ஸ்டோரை அமைக்கத் தொடங்குவதற்கு முன், உங்கள் இலக்குகளைப் புரிந்துகொள்வது முக்கியமாகும். உங்கள் ஸ்டோர் குறித்து உங்களிடமே அடிப்படைக் கேள்விகளைக் கேட்டுக்கொள்ளுங்கள். இது உங்கள் கவனத்தைக் குவியப்படுத்தவும் உங்கள் அமைவுச் செயல்முறையை விரைவுபடுத்தவும் உதவும். எந்த விலையிடல் திட்டம் உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யும் என்பது குறித்தும் நீங்கள் சிந்திக்க விரும்பலாம். இருப்பினும், உங்களின் இலவச சோதனை முடியும் வரை நீங்கள் திட்டத்தைத் தேர்ந்தெடுக்கத் தேவையில்லை.

பரிசீலனைகள் மற்றும் வரம்புகள்

  • உங்களுக்குக் கிடைக்கும் அம்சங்களில், பணியாளர் கணக்குகளின் எண்ணிக்கை, பரிவர்த்தனைக் கட்டணங்கள், அறிக்கையிடல் திறன்கள் மற்றும் விற்பனைச் சேனல் தகுதி உட்பட அனைத்தையும் உங்களின் Shopify சந்தாவுக்கான விலையிடல் திட்டமே தீர்மானிக்கிறது.
  • Shopify POS வன்பொருள் கிடைக்கும் தன்மை மற்றும் Tap to Pay ஆதரவு ஆகியவை நாட்டைப் பொறுத்து மாறுபடும்.
  • நீங்கள் மற்றொரு பிளாட்ஃபார்மில் இருந்து Shopifyக்கு உங்கள் ஸ்டோரை மாற்றினால், உங்களின் தேடுபொறி தரவரிசைகளைப் பாதுகாக்க URL திசைதிருப்பல்களை அமைக்க வேண்டியிருக்கலாம்.
  • விற்பனைச் சேனல் தகுதியானது உங்கள் பிராந்தியம், தயாரிப்பு வகைகள் மற்றும் சில நேரங்களில் உங்கள் சந்தாத் திட்டத்தைப் பொறுத்தது. ஒரு விற்பனை உத்தியில் ஈடுபடுவதற்கு முன் தனிப்பட்ட சேனல் தேவைகளை மதிப்பாய்வு செய்யவும்.

தொடங்குவதற்கான சரிபார்ப்புப் பட்டியல்

முதல் படிகள்

உங்கள் Shopify ஸ்டோரில் தயாரிப்புகளை ஸ்டாக் செய்வதற்கு முன்பு, உங்களைப் பற்றியும் உங்கள் ஸ்டோரைப் பற்றியும் சில தகவல்களை உள்ளிட வேண்டும். உங்கள் தயாரிப்புப் பட்டியல்கள் மற்றும் வாடிக்கையாளர் பரிவர்த்தனைகளுக்கான சில அடிப்படைத் தரங்களை நீங்கள் தீர்மானிக்க வேண்டும். மேலும், ஆன்லைனில் வாடிக்கையாளர்கள் உங்கள் ஸ்டோரைக் கண்டறிய முடியும் என்பதை உறுதிசெய்ய உங்கள் டொமைனை அமைக்க வேண்டும்.

பரிசீலனைகள் மற்றும் வரம்புகள்

  • உங்கள் myshopify.com டொமைன் பெயரை ஒருமுறை மட்டுமே மாற்ற முடியும். ஆரம்ப அமைவின்போது கவனமாகத் தேர்வுசெய்யவும்.
  • Gmail மற்றும் Yahoo போன்ற முன்னணி மின்னஞ்சல் வழங்குநர்களுக்கு மின்னஞ்சல் அனுப்புநர் அங்கீகாரம் (SPF மற்றும் DKIM பதிவுகள்) தேவை. இது இல்லையென்றால், உங்கள் ஸ்டோர் மின்னஞ்சல்கள் ஸ்பேம் அல்லது ஜங்க் கோப்புறைகளுக்கு அனுப்பப்படலாம்.
  • வரி இணக்கம் என்பது உங்கள் பொறுப்பு. நீங்கள் Shopify Tax தானியங்கு தாக்கலைப் பயன்படுத்தாவிட்டால், Shopify வரிகளைக் கணக்கிடுமே தவிர, உங்கள் சார்பாக வரிகளைத் தாக்கல் செய்யவோ பணம் அனுப்பவோ செய்யாது.
  • நீங்கள் சேர்க்கக்கூடிய பணியாளர் கணக்குகளின் எண்ணிக்கை உங்கள் திட்டத்தைப் பொறுத்தது. Basic திட்டத்தில் கூடுதல் பணியாளர்களைச் சேர்க்க முடியாது, Grow திட்டத்தில் 5 பேரையும், Advanced திட்டத்தில் 15 பேரையும், Shopify Plus திட்டத்தில் வரம்பற்ற பணியாளர்களையும் சேர்க்கலாம்.
  • ஸ்டோர் கொள்கை வார்ப்புருக்கள் ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் ஆகிய மொழிகளில் கிடைக்கின்றன.
  • நீங்கள் உருவாக்கக்கூடிய சந்தைகளின் எண்ணிக்கை உங்கள் சந்தாத் திட்டத்தைப் பொறுத்தது.
  • நீங்கள் உங்கள் ஸ்டோரை முடக்கும்போது, அனைத்துச் செயலிகளும் தானாகவே நிறுவல் நீக்கப்படும், ஆனால் Shopify பில்லிங்கிற்கு வெளியே பில் செய்யப்படும் செயலிக்கான கட்டணங்கள் தொடரக்கூடும்.

முதல் படிகளுக்கான சரிபார்ப்புப் பட்டியல்

உங்கள் ஆன்லைன் ஸ்டோரை ஒழுங்கமைக்கவும்

உங்கள் ஸ்டோர் வடிவமைக்கப்பட்டுள்ள விதம் மற்றும் நீங்கள் விற்கப் போகும் தயாரிப்புகளின் வகைகள் ஆகிய இரண்டும்தான் உங்கள் ஆன்லைன் ஸ்டோரின் மிக முக்கியமான பகுதிகளாகும். உங்கள் வணிகத்தை எது சிறப்பாகப் பிரதிபலிக்கிறது என்பதை உறுதிப்படுத்த சில வெவ்வேறு தீம்களை முயன்று பார்க்கவும், அதன் பிறகு விற்பனைக்குச் சில தயாரிப்புகளைச் சேர்க்கவும். நீங்கள் எத்தனை தயாரிப்புகளை வழங்கத் திட்டமிட்டுள்ளீர்கள் என்பதைப் பொறுத்து, உங்கள் தயாரிப்புப் பட்டியல்களைச் சேர்ப்பது மற்றும் ஒழுங்கமைப்பது என்பது Shopify ஸ்டோரை அமைக்கும்போது அதிக நேரம் எடுக்கும் படியாக இருக்கலாம். உங்கள் தயாரிப்புகளைச் சேர்க்கவும், அவற்றைச் சரியான குழுக்களாக ஒழுங்கமைக்கவும், தேவையான வரி மற்றும் ஷிப்பிங் தகவலை அமைக்கவும் போதிய நேரத்தை ஒதுக்குங்கள்.

பரிசீலனைகள் மற்றும் வரம்புகள்

  • தயாரிப்புகளுக்குக் குறைந்தது ஒரு தலைப்பும் விலையும் தேவை. ஒவ்வொரு தயாரிப்புக்கும் நீங்கள் 250 டேக்குகள் வரை சேர்க்கலாம் அல்லது Shopify Plus திட்டத்தில் வரம்பற்ற எண்ணிக்கையிலான டேக்குகளைச் சேர்க்கலாம்.
  • தயாரிப்பின் URL ஹேண்டில்களை அடிக்கடி மாற்றுவதைத் தவிர்க்கவும், ஏனெனில் இது உங்கள் தேடுபொறித் தரவரிசைகளைப் பாதிக்கலாம்.
  • நீண்ட தயாரிப்புத் தலைப்புகள் மற்றும் விவரணங்கள் தேடுபொறி முடிவுகளில் துண்டிக்கப்படலாம். தலைப்புகளைச் சுருக்கமாக வைத்திருக்கவும், மேலும் முக்கியச் சொற்களைத் தொடக்கத்தில் சேர்க்கவும்.
  • Shopify Theme Store-இல் உள்ள இலவச மற்றும் கட்டண தீம்கள் தளவமைப்பு மற்றும் அம்சங்களில் வேறுபடுகின்றன. உங்கள் உள்ளடக்கத் தேவைகளைத் தீம் ஆதரிக்கிறது என்பதை உறுதிசெய்ய, வெளியிடுவதற்கு முன்பு தீம்களை முன்னோட்டமிட்டுப் பார்க்கவும்.
  • ஐரோப்பியப் பொருளாதாரப் பகுதியில் (EEA) உள்ள வாடிக்கையாளர்களுக்கு நீங்கள் விற்பனை செய்தால், விலைக் குறைப்புகளை அறிவிக்கும்போது ஐரோப்பிய விலை அறிவிப்பு வழிகாட்டுதலுக்கு நீங்கள் இணங்க வேண்டும்.
  • ஸ்பெயினில் உள்ள வணிகர்களுக்கான விநியோக முறையாகப் பெற்றுக்கொள்ளும் இடங்கள் கிடைக்கின்றன.

உங்கள் ஆன்லைன் ஸ்டோரை ஒழுங்கமைப்பதற்கான சரிபார்ப்புப் பட்டியல்

உங்கள் ஆன்லைன் ஸ்டோரைச் சோதிக்கவும்

உங்கள் ஆன்லைன் ஸ்டோரை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு, செக்அவுட் செயல்முறை எப்படிச் செயல்படுகிறது என்பதைச் சரிபார்க்க சில சோதனை ஆர்டர்களைச் செய்து பார்க்கவும்.

பரிசீலனைகள் மற்றும் வரம்புகள்

  • மோசடி பகுப்பாய்வுப் பரிந்துரைகள் Grow திட்டம் அல்லது அதற்கும் மேலான திட்டங்களில், அல்லது Shopify Payments உள்ள எந்தவொரு திட்டத்திலும் கிடைக்கும். Shopify Payments இல்லாத Basic திட்டத்தில் மோசடி குறிகாட்டிகள் மட்டுமே வழங்கப்படும்.
  • அதிக சார்ஜ்பேக் வீதங்களால் Shopify Payments முடக்கப்படலாம். அதிக ஆபத்துள்ளவை எனக் குறிக்கப்பட்ட ஆர்டர்களை நிறைவேற்றுவதற்கு முன்பு அவற்றை மதிப்பாய்வு செய்யவும்.
  • கட்டணத் திருப்பல்கள் குறித்த இறுதி முடிவை உங்கள் வங்கிதான் எடுக்கும். கட்டணத் திருப்பல் இழப்புகளை Shopify ஈடுகட்டாது.
  • ஒவ்வொரு செக்அவுட் படிக்குப் பிறகும், கார்ட் சரக்கு இருப்பு மீண்டும் சரிபார்க்கப்படும். பேமெண்ட் விவரங்கள் சமர்ப்பிக்கப்படும்போது மட்டுமே சரக்கு இருப்பு நிறுத்திவைக்கப்படும்.

உங்கள் ஆன்லைன் ஸ்டோரைச் சோதிப்பதற்கான சரிபார்ப்புப் பட்டியல்

உங்கள் ஆன்லைன் ஸ்டோரை அறிமுகப்படுத்துங்கள்

நீங்கள் ஒரு திட்டத்தைத் தேர்ந்தெடுத்து உங்கள் ஆன்லைன் ஸ்டோரைச் சோதித்த பிறகு, வாடிக்கையாளர்கள் அதைப் பார்வையிடத் தயாராகலாம். உங்கள் ஸ்டோரை மீண்டும் ஒருமுறை மதிப்பாய்வு செய்துவிட்டு, அதை அறிமுகப்படுத்துங்கள்.

பரிசீலனைகள் மற்றும் வரம்புகள்

உங்கள் ஆன்லைன் ஸ்டோரை அறிமுகப்படுத்துவதற்கான சரிபார்ப்புப் பட்டியல்

மற்ற ஆன்லைன் விற்பனைச் சேனல்களைச் சேர்க்கவும்

உங்கள் ஆன்லைன் ஸ்டோரை அறிமுகப்படுத்திய பிறகு, உங்களின் Shopify ஸ்டோரில் வேறு சில ஆன்லைன் சேனல்களைச் சேர்ப்பது உங்கள் வணிகத்திற்குப் பயனளிக்கலாம். ஆன்லைனில் விற்கும்போது உங்களின் Shopify நிர்வாகியில் சேர்க்கக்கூடிய பல விருப்பத்தேர்வு ஆன்லைன் சேனல்கள் உள்ளன.

பரிசீலனைகள் மற்றும் வரம்புகள்

  • Google & YouTube-க்கு Google Merchant Center கணக்கு, உங்கள் ஸ்டோரில் வெளிப்படையாகத் தெரியும் தொடர்புத் தகவல், உங்கள் ஸ்டோர்ஃபிரண்ட் அடிப்பகுதியில் பணத்தைத் திரும்பப்பெறுதல் மற்றும் சேவை விதிமுறைகள் குறித்த கொள்கைகள், மற்றும் ஆதரிக்கப்படும் நாட்டிற்கான ஷிப்பிங் ஆகியவை தேவை. தயாரிப்புத் தரவில் குளோபல் டிரேட் ஐட்டம் நம்பர் (GTIN), உற்பத்தியாளர் பகுதி எண் (MPN) அல்லது பிராண்ட் போன்ற விவரங்கள் இருக்க வேண்டும்.
  • Meta வழங்கும் Facebook மற்றும் Instagram-க்கு Meta வணிகப் போர்ட்ஃபோலியோ மற்றும் Meta-வின் வணிகக் கொள்கைகளுடனான இணக்கம் ஆகியவை தேவை. Meta சேனல் ஆர்டர்கள் மீதான வரியை வசூலிப்பதற்கும் செலுத்துவதற்கும் வணிகர்களே பொறுப்பாவார்கள்.
  • அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், அயர்லாந்து, மெக்சிகோ, ஜப்பான் மற்றும் பிரேசில் உட்பட குறிப்பிட்ட சில நாடுகளில் TikTok கிடைக்கிறது. தயாரிப்புகள், தடைசெய்யப்பட்ட தயாரிப்புகள் குறித்த TikTok-இன் பிராந்தியக் கொள்கைகளுக்கு இணங்க வேண்டும்.
  • Shop சேனலுக்கு, Shopify Payments செயலில் இருக்க வேண்டும் என்பதோடு கடந்த ஆறு மாதங்களில் சார்ஜ்பேக் வீதம் 1%-க்கும் குறைவாக இருக்க வேண்டும்.
  • தள்ளுபடிக் குறியீடுகளைக் குறிப்பிட்ட விற்பனைச் சேனல்களுக்கு மட்டும் என வரம்பிட முடியாது. உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் வேலை செய்யும் குறியீடு, நீங்கள் விற்கும் பிற சேனல்களிலும் வேலை செய்யும்.
  • ஒரு ஆர்டருக்கு அதிகபட்சமாக 5 தயாரிப்பு அல்லது ஆர்டர் தள்ளுபடிக் குறியீடுகள் மற்றும் அதோடு சேர்த்து 1 ஷிப்பிங் தள்ளுபடிக் குறியீடு, அத்துடன் அதிகபட்சமாக 25 செயலில் உள்ள தானியங்கு தள்ளுபடிகள் என்ற அளவில் தள்ளுபடி சேர்க்கைகள் வரம்பிடப்பட்டுள்ளன.

விற்பனைச் சேனல்களைச் சேர்ப்பதற்கான சரிபார்ப்புப் பட்டியல்

உங்கள் ஆன்லைன் ஸ்டோரை விளம்பரப்படுத்துங்கள்

உங்கள் ஆன்லைன் ஸ்டோரை அறிமுகப்படுத்திய பிறகு, அதை நீங்கள் விளம்பரப்படுத்த வேண்டும். தேடுபொறிகளால் பயன்படுத்தப்படும் தகவலைச் சேர்ப்பதன் மூலமும், தகுந்த இடங்கள் அனைத்திலும் உங்கள் ஸ்டோரை விளம்பரப்படுத்துவதன் மூலமும் உங்கள் ஸ்டோரின் பார்வைத்திறனை மேம்படுத்தலாம்.

பரிசீலனைகள் மற்றும் வரம்புகள்

  • தேடுபொறி அட்டவணையிடல் உடனடியாக நடக்காது. Google மற்றும் பிற தேடுபொறிகள் புதிய பக்கங்களை அட்டவணையிட 48 முதல் 72 மணிநேரம் ஆகலாம். அத்துடன், அனைத்துப் பக்கங்களும் அட்டவணையிடப்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
  • Shopify Messaging-ஐப் பயன்படுத்த செயலில் உள்ள கட்டணத் திட்டம் தேவை. இது Basic திட்டம் அல்லது அதற்கு மேற்பட்ட திட்டங்களில் கிடைக்கிறது. மின்னஞ்சல் மற்றும் SMS அனுப்புதலின் அளவைப் பொறுத்து விலை நிர்ணயிக்கப்படுகிறது. சோதனை அல்லது Pause and Build திட்டங்களில், நீங்கள் பிரச்சாரங்களை உருவாக்கி உங்களுக்கு நீங்களே சோதனைகளை அனுப்பிக்கொள்ளலாம். ஆனால் சந்தாதாரர்களுக்கு அனுப்ப முடியாது.
  • Shopify Inbox ஆனது Basic, Grow, Advanced மற்றும் Shopify Plus திட்டங்களில் கிடைக்கிறது.
  • திட்டத்தைப் பொறுத்து அறிக்கைகள் மற்றும் பகுப்பாய்வு அம்சங்கள் மாறுபடும். மேம்பட்ட மற்றும் தனிப்பயன் அறிக்கைகள் உயர் அடுக்குத் திட்டங்களில் கிடைக்கின்றன.

உங்கள் ஆன்லைன் ஸ்டோரை விளம்பரப்படுத்துவதற்கான சரிபார்ப்புப் பட்டியல்