உங்கள் ஸ்டோருக்கான வணிக அமைப்புகளைச் சேர்த்தல்
உங்கள் Shopify ஸ்டோரை அமைக்கத் தொடங்குவதற்கு முன், நீங்கள் ஒரு Shopify கணக்கை உருவாக்கி, உங்கள் ஸ்டோருக்கான வணிகத் தகவல்களைச் சேர்க்க வேண்டும். நீங்கள் ஒவ்வொரு விவரத்தையும் உடனடியாகச் சேர்க்க வேண்டியதில்லை, ஆனால் பின்வரும் உருப்படிகளைச் சேர்ப்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள்:
- ஸ்டோர் பெயர்
- சட்டப்பூர்வ வணிகப் பெயர் மற்றும் முகவரி
- ஸ்டோர் நேர மண்டலம்
- இயல்புநிலை ஸ்டோர் நாணயம்
- இயல்புநிலை எடை அலகு
- உங்கள் ஆன்லைன் ஸ்டோரைப் பாதுகாப்பதற்கான கடவுச்சொல்
இந்தப் பக்கத்தில்
- உங்கள் myshopify.com டொமைன் பெயரைச் சரிபார்த்தல்
- உங்கள் ஸ்டோர் பெயர் மற்றும் தொடர்புத் தகவலை அமைக்கவும் அல்லது மாற்றவும்
- உங்கள் ஸ்டோர் முகவரியை அமைக்கவும் அல்லது மாற்றவும்
- உங்கள் ஸ்டோர் நேர மண்டலத்தை அமைக்கவும் அல்லது மாற்றவும்
- ஸ்டோர் நாணயத்தைத் தேர்ந்தெடுக்கவும்
- பல நாணயங்களைக் காட்டவும்
- உங்கள் ஸ்டோரின் இயல்புநிலை எடை அலகை அமைக்கவும் அல்லது மாற்றவும்
- உங்கள் முகப்புப் பக்க மெட்டாடேட்டாவை அமைக்கவும் அல்லது புதுப்பிக்கவும்
- உங்கள் ஆர்டர் ID-களை வடிவமைக்கவும்
- அடுத்த படிகள்
உங்கள் myshopify.com டொமைன் பெயரைச் சரிபார்த்தல்
கணக்கை உருவாக்கும்போது, 1a2b3c4-5.myshopify.com போன்ற தானாக உருவாக்கப்பட்ட myshopify.com டொமைன் பெயர் உங்களுக்கு ஒதுக்கப்படும். உங்கள் myshopify.com டொமைன் உங்கள் ஸ்டோருக்கே உரிய தனித்துவமானது. இது Shopify நிர்வாகியில் உள்நுழையவும் உங்கள் கணக்கை அடையாளம் காணவும் பயன்படுகிறது. உங்கள் Shopify நிர்வாகியின் URL-இலும் myshopify.com ID ஒரு பகுதியாகப் பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக, admin.shopify.com/store/1a2b3c4-5.
உங்கள் myshopify.com டொமைன் பெயரைக் குறித்துவைத்துப் பாதுகாப்பான இடத்தில் வைத்திருக்கவும். இது உங்கள் Shopify ஸ்டோரின் முக்கிய அடையாளங்காட்டியாகும். எடுத்துக்காட்டாக, மூன்றாம் தரப்புச் செயலிகள் அல்லது சேவைகள் உங்கள் கணக்கை இணைக்க, Shopify கணக்கு ID அல்லது கணக்கு எண்ணாக உங்கள் myshopify.com டொமைனைக் கேட்கலாம். Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளும்போதும் உங்கள் கணக்கை அடையாளம் காண இது தேவைப்படும்.
இயல்பாக, உங்கள் myshopify.com டொமைனே உங்கள் ஸ்டோரின் முதன்மை டொமைனாகவும் இருக்கும். அதாவது, வாடிக்கையாளர்கள் உங்கள் ஸ்டோரைப் பார்வையிடப் பயன்படுத்தும் இணைய முகவரி இதுதான். இதற்குப் பதிலாக முதன்மை டொமைனாகப் பயன்படுத்த தனிப்பயன் டொமைனைச் சேர்க்கலாம். தனிப்பயன் டொமைனை முதன்மை டொமைனாகப் பயன்படுத்தும்போது, உங்கள் myshopify.com டொமைன் வாடிக்கையாளர்களுக்குக் காட்டப்படாது. நீங்களும் உங்கள் பணியாளர்களும் Shopify நிர்வாகியில் உள்நுழைய அதைத் தொடர்ந்து பயன்படுத்துவீர்கள்.
புதிய myshopify.com டொமைன் பெயரைத் தேர்வுசெய்யவும்
உங்கள் ஸ்டோரின் பிராண்டுக்கு ஏற்ப myshopify.com டொமைனை அமைக்க, புதிய myshopify.com டொமைன் பெயரை இலவசமாகத் தேர்ந்தெடுக்கலாம். பெரும்பாலான ஸ்டோர்களில் புதிய myshopify.com டொமைன் பெயரை 1 முறை மட்டுமே தேர்ந்தெடுக்க முடியும். உங்கள் ஸ்டோர் டெவ் ஸ்டோராக இருந்தால், புதிய myshopify.com டொமைன் பெயரைத் தேர்ந்தெடுக்க முடியாது. டெவ் ஸ்டோர்கள் தொடர்பாகக் கவனிக்க வேண்டியவற்றைப் பற்றி மேலும் அறிக. நீங்கள் பதிவுசெய்தபோது உள்ளிட்ட ஸ்டோர் பெயரிலிருந்து உங்கள் myshopify.com டொமைன் உருவாக்கப்பட்டிருந்தால், அப்போதும் புதிய பெயரை 1 முறை தேர்ந்தெடுக்கலாம்.
உங்கள் myshopify.com டொமைன் தற்போது முதன்மை டொமைனாக இருந்தால், புதிய myshopify.com டொமைன் உங்கள் முதன்மை டொமைனாக மாறும். முந்தைய myshopify.com டொமைன் தானாகவே புதிய டொமைனுக்குத் திசைதிருப்பும். கூடுதல் URL திசைதிருப்பல்களை நீங்கள் உருவாக்க வேண்டியதில்லை. தனிப்பயன் டொமைனை முதன்மை டொமைனாகப் பயன்படுத்தினால், உங்கள் முதன்மை டொமைன் மாறாது. இரு நிலைகளிலும், உங்கள் Shopify நிர்வாகியின் URL அதே நேரத்தில் புதுப்பிக்கப்படும். எடுத்துக்காட்டாக, உங்கள் myshopify.com டொமைனை johns-apparel.myshopify.com என மாற்றினால், உங்கள் Shopify நிர்வாகியின் URL admin.shopify.com/store/johns-apparel என மாறும்.
படிகள்:
டெஸ்க்டாப்
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > டொமைன்கள் என்பதற்குச் செல்லவும்.
டொமைன்கள் பக்கத்தில், உங்கள்
myshopify.comடொமைன் மீது கர்சரை வைத்து, அதை மாற்ற பென்சில் ஐகானைக் கிளிக் செய்யவும்.புதிய பெயரை உள்ளிட்டு, டொமைனைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
மொபைல்
Shopify செயலியிலிருந்து,
என்பதைத் தட்டி, பின்னர்
அமைப்புகள் என்பதைத் தட்டவும்.
ஸ்டோர் அமைப்புகள் பிரிவில், டொமைன்கள் என்பதைத் தட்டவும்.
டொமைன்கள் பக்கத்தில், உங்களின்
myshopify.comடொமைனுக்கான செயல்கள் என்பதைத் தட்டி, myshopify.com டொமைனை மாற்று என்பதைத் தட்டவும்.புதிய பெயரை உள்ளிட்டு, டொமைனைச் சேர் என்பதைத் தட்டவும்.
உங்கள் ஸ்டோர் பெயர் மற்றும் தொடர்புத் தகவலை அமைக்கவும் அல்லது மாற்றவும்
உங்கள் இணையதளத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் காட்டப்படும் பெயர், உங்களின் ஸ்டோர் பெயராகும். இயல்புநிலையாக, உங்களின் ஸ்டோர் பெயர் "My Store" என்பதாக இருக்கும். ஒரு Shopify கணக்கைத் திறக்க, உங்கள் முழுமையான சட்டப்பூர்வப் பெயர், உங்கள் வணிக முகவரி, செயலில் உள்ள மொபைல் எண் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை நீங்கள் வழங்க வேண்டும். கோரிக்கையின்பேரில் நீங்கள் மேற்கொண்டு சில தகவல்களை வழங்க வேண்டியிருக்கலாம். Shopify கணக்கில் பதிவுசெய்யும்போது உங்களின் அடையாளத்தைச் சரிபார்க்க இந்தத் தகவல் பயன்படுத்தப்படுகிறது, இது உங்கள் வாடிக்கையாளர்களிடம் பகிரப்படாது. மேலும் பல தகவல்களை நீங்கள் வழங்க வேண்டியிருக்கலாம். Shopify-இன் சேவை விதிமுறைகள் குறித்து மேலும் அறிக.
ஸ்டோர் தொடர்புத் தகவல் பொதுவானதாகும். வாடிக்கையாளர்கள் உங்கள் ஸ்டோர் மற்றும் கொள்கைப் பக்கங்களில் இந்தத் தகவலைப் பார்க்கலாம். வாடிக்கையாளர் சேவையை வழங்குவதற்கு, வாடிக்கையாளர்களுடன் உங்கள் மொபைல் எண் போன்ற தகவல்களைப் பகிர்வதைத் தேர்ந்தெடுக்கலாம்.
உங்கள் ஸ்டோர் Shopify Payments சேவையைப் பயன்படுத்தினால், உங்களின் Shopify Payments கணக்கில் உள்ள வணிகப் பெயரை மாற்றுவதற்கு நீங்கள் Shopify ஆதரவையும் தொடர்புகொள்ள வேண்டும். மற்றபடி, உங்கள் ஸ்டோர் பெயர் மற்றும் தொடர்புத் தகவலை மாற்றுவதற்கு எந்த வரம்புகளும் இல்லை. நீங்கள் விரும்பும்போதெல்லாம், எந்த நேரத்திலும் அவற்றை மாற்றிக்கொள்ளலாம்.
படிகள்:
டெஸ்க்டாப்
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > பொதுவானவை என்பதற்குச் செல்லவும்.
ஸ்டோர் தொடர்பு விவரங்கள் பிரிவில், உங்களின் ஸ்டோர் பெயரைக் கிளிக் செய்யவும் அல்லது உங்கள் ஸ்டோர் பெயருக்கான > என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்டோர் தொடர்பு விவரங்கள் பக்கத்தில், ஸ்டோர் பெயர் புலத்தில் உங்கள் ஸ்டோர் பெயரைத் திருத்தவும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
மொபைல்
Shopify செயலியிலிருந்து,
என்பதைத் தட்டி, பின்னர்
அமைப்புகள் என்பதைத் தட்டவும்.
ஸ்டோர் அமைப்புகள் பிரிவில், பொதுவானவை என்பதைத் தட்டவும்.
ஸ்டோர் தொடர்பு விவரங்கள் பிரிவில், உங்கள் ஸ்டோர் பெயரைத் தட்டவும்.
ஸ்டோர் தொடர்பு விவரங்கள் பக்கத்தில், ஸ்டோர் பெயர் புலத்தில் உங்கள் ஸ்டோர் பெயரைத் திருத்தவும்.
சேமி அல்லது ✓ என்பதைத் தட்டவும்.
உங்கள் ஸ்டோர் முகவரியை அமைக்கவும் அல்லது மாற்றவும்
உங்கள் ஸ்டோர் முகவரியானது உங்கள் வணிகத்தின் நேரடி முகவரி அல்லது வாடிக்கையாளர் பார்க்கும் முகவரியாகும். வாடிக்கையாளர்கள் உங்கள் ஸ்டோர் மற்றும் கொள்கைப் பக்கங்களில் இந்த முகவரியைப் பார்க்கலாம். அமைப்புகள் > பொதுவானவை என்பதில் உள்ள ஸ்டோர் தொடர்பு விவரங்கள் பிரிவில் இதை நீங்கள் அமைக்கலாம்.
உங்கள் Shopify பில்களில் உள்ள நிறுவனத்தின் பெயரும் முகவரியும் உங்களின் பில்லிங் முகவரியிலிருந்து பெறப்படுகின்றன, இது ஒரு தனிப்பட்ட அமைப்பாகும். உங்கள் ஸ்டோர் முகவரியை மாற்றுவது உங்களின் பில்லிங் முகவரியை மாற்றாது. உங்கள் Shopify பில்லிங் முகவரியை நிர்வகிப்பது குறித்து மேலும் அறிக.
படிகள்:
டெஸ்க்டாப்
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > பொதுவானவை என்பதற்குச் செல்லவும்.
ஸ்டோர் தொடர்பு விவரங்கள் பிரிவில், ஸ்டோர் முகவரி என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்கள் நிறுவனத்தின் பெயர் மற்றும் ஸ்டோர் முகவரியை உள்ளிடவும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
மொபைல்
Shopify செயலியிலிருந்து,
என்பதைத் தட்டி, பின்னர்
அமைப்புகள் என்பதைத் தட்டவும்.
ஸ்டோர் அமைப்புகள் பிரிவில், பொதுவானவை என்பதைத் தட்டவும்.
ஸ்டோர் தொடர்பு விவரங்கள் பிரிவில், ஸ்டோர் முகவரி என்பதைத் தட்டவும்.
உங்கள் நிறுவனத்தின் பெயர் மற்றும் ஸ்டோர் முகவரியை உள்ளிடவும்.
சேமி அல்லது ✓ என்பதைத் தட்டவும்.
உங்கள் ஸ்டோர் Shopify Payments, Shopify Balance, Shopify Capital அல்லது Shopify Credit போன்ற நிதிச் சேவைகளைப் பயன்படுத்தினால், உங்கள் Shopify நிர்வாகியில் உங்களின் ஸ்டோர் நாட்டை மாற்றுவதற்கு முன்பு, நீங்கள் அனைத்து நிதிச் சேவைகளையும் முடக்க வேண்டும்.
உங்கள் ஸ்டோரின் நேர மண்டலத்தை அமைக்கவும் அல்லது மாற்றவும்
டெஸ்க்டாப்
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > பொதுவானவை என்பதற்குச் செல்லவும்.
ஸ்டோர் இயல்புநிலைகள் பிரிவில், நேர மண்டலப் பட்டியலிலிருந்து புதிய நேர மண்டலத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
மொபைல்
Shopify செயலியிலிருந்து,
என்பதைத் தட்டி, பின்னர்
அமைப்புகள் என்பதைத் தட்டவும்.
ஸ்டோர் அமைப்புகள் பிரிவில், பொதுவானவை என்பதைத் தட்டவும்.
ஸ்டோர் இயல்புநிலைகள் பிரிவில், நேர மண்டலப் பட்டியலிலிருந்து புதிய நேர மண்டலத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
சேமி அல்லது ✓ என்பதைத் தட்டவும்.
ஒரு ஸ்டோர் நாணயத்தைத் தேர்ந்தெடுக்கவும்
உங்கள் Shopify நிர்வாகியின் பொதுவானவை அமைப்புகள் பக்கத்தில், உங்கள் ஸ்டோர் எந்த நாணயத்தைப் பயன்படுத்துகிறது என்பதை நீங்கள் தேர்வுசெய்யலாம் (எடுத்துக்காட்டாக, USD, EUR, CAD, AUD, JPY).
உங்களின் கிரெடிட் கார்டு கட்டண நுழைவாயிலாக நீங்கள் Shopify Payments சேவையைப் பயன்படுத்தினால், Shopify Payments பயன்படுத்தும் வங்கிக் கணக்கு மற்றும் நாணய அமைப்புகளைத் திருத்துவதன் மூலம் உங்களின் நாணயத்தை மாற்ற வேண்டும்.
படிகள்:
டெஸ்க்டாப்
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > பொதுவானவை என்பதற்குச் செல்லவும்.
ஸ்டோரின் இயல்புநிலைகள் பிரிவில்,
> ஸ்டோரின் நாணயத்தை மாற்று என்பதைக் கிளிக் செய்யவும்.
கீழ்தோன்றும் மெனுவைப் பயன்படுத்திப் புதிய பண அலகைத் தேர்ந்தெடுக்கவும்.
முதல் ஆர்டருக்குப் பிறகு உங்கள் நாணயத்தை மாற்றினால், ஸ்டோரின் நாணயத்தை மாற்றுவதால் ஏற்படும் ஆபத்தை நான் புரிந்துகொண்டுள்ளேன் என்பதையும் நீங்கள் சரிபார்க்க வேண்டும். நாணயத்தை மாற்றுவதற்கான காரணத்தையும் விருப்பத் தேர்வாக நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
விருப்பத்தேர்வு: பணத் தொகைகள் காட்டப்படும் விதத்தை மாற்ற, பின்வரும் படிகளை நிறைவு செய்யவும்:
> நாணய வடிவமைப்பை மாற்று என்பதைக் கிளிக் செய்யவும்.
- உங்கள் நாணய வடிவமைப்பில் மாற்றங்களைச் செய்யவும்.
- சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
மொபைல்
Shopify செயலியிலிருந்து,
என்பதைத் தட்டி, பின்னர்
அமைப்புகள் என்பதைத் தட்டவும்.
ஸ்டோர் அமைப்புகள் பிரிவில், பொதுவானவை என்பதைத் தட்டவும்.
ஸ்டோரின் இயல்புநிலைகள் பிரிவில்,
அல்லது
> ஸ்டோரின் நாணயத்தை மாற்று என்பதைத் தட்டவும்.
கீழ்தோன்றும் மெனுவைப் பயன்படுத்திப் புதிய பண அலகைத் தேர்ந்தெடுக்கவும்.
முதல் ஆர்டருக்குப் பிறகு உங்கள் நாணயத்தை மாற்றினால், ஸ்டோரின் நாணயத்தை மாற்றுவதால் ஏற்படும் ஆபத்தை நான் புரிந்துகொண்டுள்ளேன் என்பதையும் நீங்கள் சரிபார்க்க வேண்டும். நாணயத்தை மாற்றுவதற்கான காரணத்தையும் விருப்பத் தேர்வாக நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். சேமி என்பதைத் தட்டவும்.
விருப்பத்தேர்வு: பணத் தொகைகள் காட்டப்படும் விதத்தை மாற்ற, பின்வரும் படிகளை நிறைவு செய்யவும்:
அல்லது
> நாணய வடிவமைப்பை மாற்று என்பதைத் தட்டவும்.
- உங்கள் நாணய வடிவமைப்பில் மாற்றங்களைச் செய்யவும்.
- சேமி அல்லது ✓ என்பதைத் தட்டவும்.
பல நாணயங்களைக் காட்டு
நீங்கள் Shopify Payments ஐப் பயன்படுத்தினால், பல நாணயங்களில் விற்க உங்கள் ஸ்டோரை அமைக்கலாம். வாடிக்கையாளர்கள் உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் உலாவி, அவர்கள் விரும்பும் உள்ளூர் நாணயத்தில் செக்அவுட் செய்யலாம்.
நீங்கள் Shopify Payments ஐப் பயன்படுத்தவில்லை எனில், காட்சி நோக்கங்களுக்காக மட்டும் உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் பல நாணயங்களைச் சேர்க்க தீம்களைத் தனிப்பயனாக்கலாம். உங்கள் ஸ்டோரின் இயல்புநிலைகள் பிரிவில் உள்ள பொது அமைப்புகள் பக்கத்தில் நீங்கள் அமைத்த நாணயத்தில் மட்டுமே உங்கள் வாடிக்கையாளர்களால் செக்அவுட் செய்ய முடியும்.
உங்கள் தீமில் பல நாணயங்களை ஆதரிப்பது குறித்து மேலும் அறிக.
உங்கள் ஸ்டோரின் இயல்புநிலை எடை அலகை அமைத்தல் அல்லது மாற்றுதல்
பின்வரும் இயல்புநிலை எடை அலகுகளில் ஒன்றைத் தேர்வுசெய்யலாம்:
- பவுண்டுகள் (lb) - இம்பீரியல் முறை
- அவுன்ஸ்கள் (oz) - இம்பீரியல் முறை
- கிலோகிராம் (kg) - மெட்ரிக் முறை
- கிராம் (g) - மெட்ரிக் முறை
உங்கள் வணிகத்திற்கு மிகவும் பொருத்தமான எடை அலகைத் தேர்வுசெய்யவும். இது வெறும் இயல்புநிலை மதிப்புதான், இதைப் பின்னர் ஒவ்வொரு தயாரிப்புக்கும் ஏற்பத் திருத்தலாம்.
உங்கள் இயல்புநிலை எடை அலகைத் தேர்வுசெய்வதற்கு முன், அதே திரையிலிருந்து உங்களின் அலகு முறையைத் தேர்வுசெய்ய வேண்டும்.
படிகள்:
டெஸ்க்டாப்
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > பொதுவானவை என்பதற்குச் செல்லவும்.
ஸ்டோரின் இயல்புநிலைகள் பிரிவில், அலகு முறை மற்றும் இயல்புநிலை எடை அலகு கீழ்தோன்றும் மெனுக்களைப் பயன்படுத்தி நீங்கள் விரும்பும் எடை அலகைத் தேர்ந்தெடுக்கவும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
மொபைல்
Shopify செயலியிலிருந்து,
என்பதைத் தட்டி, பின்னர்
அமைப்புகள் என்பதைத் தட்டவும்.
ஸ்டோர் அமைப்புகள் பிரிவில், பொதுவானவை என்பதைத் தட்டவும்.
ஸ்டோரின் இயல்புநிலைகள் பிரிவில், அலகு முறை மற்றும் இயல்புநிலை எடை அலகு கீழ்தோன்றும் மெனுக்களைப் பயன்படுத்தி நீங்கள் விரும்பும் எடை அலகைத் தேர்ந்தெடுக்கவும்.
சேமி அல்லது ✓ என்பதைத் தட்டவும்.
உங்கள் முகப்புப் பக்கத்தின் மெட்டாடேட்டாவை அமைத்தல் அல்லது புதுப்பித்தல்
பக்கத்தின் தலைப்பு மற்றும் மெட்டா விளக்கம் போன்ற மெட்டாடேட்டாவானது தேடுபொறி முடிவுகளில் காட்டப்படும். தேடுபொறியில் பட்டியலிடப்படுவதற்கான வாய்ப்புகளை இது பாதிக்காது, ஆனால் சிறந்த மெட்டா விளக்கம் பார்வையாளர்கள் உங்கள் ஸ்டோரைக் கிளிக் செய்வதற்கான வாய்ப்பை அதிகரிக்கும். அதிக டிராஃபிக்கை ஈர்க்க இது சிறந்த வழியாகும்.
ஒவ்வொரு பக்கத்திற்கும் தலைப்பு மற்றும் மெட்டா விளக்கம் தனித்துவமாக இருக்க வேண்டும், அத்துடன் அந்தப் பக்கத்தின் உள்ளடக்கத்தை விவரிப்பதாகவும் இருக்க வேண்டும். உங்கள் Shopify நிர்வாகியில் உள்ள ஒவ்வொரு தயாரிப்பு, பக்கம் அல்லது வலைப்பதிவிற்கும் ஒரு தேடுபொறிப் பிரிவு உள்ளது, அதில் தேடுபொறி முடிவுகள் பக்கங்களில் தகவல் எப்படித் தோன்ற வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அப்படியே அதை உள்ளிடலாம்.
தலைப்புகளுக்கு 70 எழுத்துகள் என்ற வரம்பு உள்ளது. எழுத்து வரம்பை எட்டியவுடன் எல்லாத் தேடுபொறிகளும் வெட்டுவதில்லை, ஆனால் பெரும்பாலானவை வாசிப்புத்திறனை மேம்படுத்த ஒரு வார்த்தையின் நடுவில் வெட்டுவதற்குப் பதிலாக, வார்த்தையில் வெட்டுகின்றன. தேடுபொறிகள் உங்கள் தலைப்பு டேக்கிற்குத் தாழே உங்கள் மெட்டா விளக்கத்தின் சுமார் 140 எழுத்துகளை மட்டுமே பட்டியலிடும், எனவே இதைச் சுருக்கமாக வைத்திருக்கவும்.
Google முடிவுகள் பக்கத்தில் தேடல் முடிவாக உங்கள் பக்கம் எப்படிக் காட்டப்படும் என்பதற்கான முன்னோட்டத்தை நீங்கள் பார்க்கலாம்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, ஆன்லைன் ஸ்டோர் > விருப்பத்தேர்வுகள் என்பதற்குச் செல்லவும்.
சமூகப் பகிர்வுப் படம் மற்றும் SEO பிரிவில், உங்களின் முகப்புப் பக்க மெட்டாடேட்டாவை முகப்புப் பக்கத் தலைப்பு மற்றும் மெட்டா விளக்கம் புலங்களில் உள்ளிடவும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்கள் Shopify ஸ்டோரில் SEO க்கான முக்கியச் சொற்களைச் சேர்ப்பது குறித்து மேலும் அறிக.
உங்கள் ஆர்டர் ID களை வடிவமைத்தல்
இயல்புநிலையாக, உங்கள் முதல் ஆர்டர் ID க்கு #1001 என்ற வடிவம் வழங்கப்படுகிறது. அதன்பிறகு ஒவ்வொரு புதிய ஆர்டருக்கும் ஆர்டர்கள் 1 என்ற அளவில் அதிகரிக்கப்படும். உங்கள் ஆர்டர்கள் தொடங்கும் எண்ணை (1001) உங்களால் மாற்ற முடியாது, ஆனால் ஆர்டர் ID முன்னொட்டு அல்லது பின்னொட்டைச் சேர்ப்பதன் மூலம் அல்லது திருத்துவதன் மூலம் உங்கள் ஆர்டர் ID களின் வடிவத்தைத் தனிப்பயனாக்கலாம்.
ஆர்டர் ID முன்னொட்டைச் சேர்ப்பது அல்லது திருத்துவது
முன்னொட்டு புலத்தில் # என்பதை நீங்கள் நீக்கலாம் அல்லது A-Z, 0-9 ஆகிய எந்தவோர் எழுத்துகளையும் எண்களையும் கொண்டோ சின்னங்களைக் கொண்டோ மாற்றிக்கொள்ளலாம். விரும்பினால், பல எழுத்துகளைக் கொண்டும் மாற்றிக்கொள்ளலாம்.
படிகள்:
டெஸ்க்டாப்
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > பொதுவானவை என்பதற்குச் செல்லவும்.
ஆர்டர் ID வடிவம் பிரிவில், முன்னொட்டு புலத்தைக் கிளிக் செய்து, உங்கள் ஆர்டர் வடிவத்திற்கான முன்னொட்டை உள்ளிடவும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
மொபைல்
Shopify செயலியிலிருந்து,
என்பதைத் தட்டி, பின்னர்
அமைப்புகள் என்பதைத் தட்டவும்.
ஸ்டோர் அமைப்புகள் பிரிவில், பொதுவானவை என்பதைத் தட்டவும்.
ஆர்டர் ID வடிவம் பிரிவில், முன்னொட்டு புலத்தைத் தட்டி, உங்கள் ஆர்டர் வடிவத்திற்கான முன்னொட்டை உள்ளிடவும்.
சேமி அல்லது ✓ என்பதைத் தட்டவும்.
ஆர்டர் ID பின்னொட்டைச் சேர்ப்பது அல்லது திருத்துவது
பின்னொட்டு புலத்தில் # என்பதை நீங்கள் நீக்கலாம் அல்லது A-Z, 0-9 ஆகிய எந்தவோர் எழுத்துகளையும் எண்களையும் கொண்டோ சின்னங்களைக் கொண்டோ மாற்றிக்கொள்ளலாம். விரும்பினால், பல எழுத்துகளைக் கொண்டும் மாற்றிக்கொள்ளலாம்.
படிகள்:
டெஸ்க்டாப்
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > பொதுவானவை என்பதற்குச் செல்லவும்.
ஆர்டர் ID வடிவம் பிரிவில், பின்னொட்டு புலத்தைக் கிளிக் செய்து, உங்கள் ஆர்டர் வடிவத்திற்கான பின்னொட்டை உள்ளிடவும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
மொபைல்
Shopify செயலியிலிருந்து,
என்பதைத் தட்டி, பின்னர்
அமைப்புகள் என்பதைத் தட்டவும்.
ஸ்டோர் அமைப்புகள் பிரிவில், பொதுவானவை என்பதைத் தட்டவும்.
ஆர்டர் ID வடிவம் பிரிவில், பின்னொட்டு புலத்தைத் தட்டி, உங்கள் ஆர்டர் வடிவத்திற்கான பின்னொட்டை உள்ளிடவும்.
சேமி அல்லது ✓ என்பதைத் தட்டவும்.
அடுத்த படிகள்
உங்கள் வணிகத் தகவலை அமைத்த பிறகு, உங்கள் ஸ்டோரை உருவாக்கத் தொடங்கலாம்.