உங்கள் மின்னஞ்சலை அமைத்தல்
ஸ்டோர் தொடர்பான அறிவிப்புகளைப் பெறவும், உங்கள் வாடிக்கையாளர்களுடன் தொடர்புகொள்ளவும் மின்னஞ்சலைப் பயன்படுத்தலாம். உங்கள் ஸ்டோரில் மின்னஞ்சல் எவ்வாறு செயல்படுகிறது என்பதை ஸ்டோர் மின்னஞ்சல் மற்றும் அனுப்புநர் மின்னஞ்சல் அமைப்புகள் கட்டுப்படுத்துகின்றன.
உங்கள் ஸ்டோர் மின்னஞ்சல் என்பது Shopify-இல் நீங்கள் பதிவுசெய்யும்போது பயன்படுத்திய மின்னஞ்சல் முகவரியாகும், இது உங்கள் Shopify நிர்வாகியின் அமைப்புகள் > பொது என்பதில் பட்டியலிடப்பட்டிருக்கும். உங்களின் தயாரிப்புகள், ஆர்டர்கள் அல்லது வாடிக்கையாளர்களின் பட்டியலை ஏற்றுமதி செய்தால், அவை உங்களின் ஸ்டோர் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்.
உங்களின் அனுப்புநர் மின்னஞ்சல் என்பது வாடிக்கையாளர்களைத் தொடர்புகொள்ளும் முகவரியாகும், இது அமைப்புகள் > அறிவிப்புகள் என்பதில் பட்டியலிடப்பட்டிருக்கும், மேலும் இது பின்வரும் வழிகளில் பயன்படுத்தப்படுகிறது:
- உங்கள் வாடிக்கையாளர்கள் உங்களை நேரடியாகத் தொடர்புகொள்ளக்கூடிய மின்னஞ்சல் முகவரியாகப் பயன்படுத்தப்படும்.
- உங்கள் வாடிக்கையாளர்கள் தானியங்கு அறிவிப்பு மின்னஞ்சல்கள், ஆர்டர் உறுதிப்படுத்தல் மின்னஞ்சல்கள் மற்றும் உங்கள் ஸ்டோரிலிருந்து அனுப்பப்படும் ஏதேனும் சந்தைப்படுத்தல் மின்னஞ்சல்களைப் பெறும்போது, அதற்கான அனுப்புநர் (From) மின்னஞ்சல் முகவரியாகப் பயன்படுத்தப்படும்.
- உங்கள் ஆன்லைன் ஸ்டோரிலிருந்து சமர்ப்பிக்கப்படும் தொடர்புகொள்ளும் படிவங்கள் வழங்கப்படும் முகவரியாகப் பயன்படுத்தப்படும்.
SPF மற்றும் DKIM அங்கீகாரத்தைக் கையாள, உங்கள் டொமைனில் Shopify-இன் CNAME பதிவுகளைச் சேர்க்கலாம். உங்களின் மின்னஞ்சல் செய்திகள் உங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுவதை உறுதிசெய்ய, நீங்கள் DMARC கொள்கையையும் சேர்க்கலாம்.
இந்தப் பக்கத்தில்
உங்கள் ஸ்டோர் மின்னஞ்சல் முகவரியை மாற்றுதல்
இயல்பாக, நீங்கள் Shopify-இல் பதிவுசெய்யும்போது பயன்படுத்தும் மின்னஞ்சல் முகவரியே ஸ்டோரின் தொடர்பு முகவரியாகும். உங்களைத் தொடர்புகொள்ளவும், உங்களின் தயாரிப்பு, ஆர்டர் அல்லது வாடிக்கையாளர் பட்டியல்களை நீங்கள் ஏற்றுமதி செய்யும்போது உங்களின் கோப்புகளைப் பெறவும் ஸ்டோரின் தொடர்பு முகவரியைத்தான் Shopify பயன்படுத்துகிறது. புதிய மின்னஞ்சல் முகவரியில் Shopify உங்களைத் தொடர்புகொள்ள வேண்டுமென விரும்பினால், அந்தத் தகவலை நீங்கள் புதுப்பிக்கலாம்.
நீங்கள் ஒற்றை உள்நுழைவை அமைக்கவில்லை என்றால், ஸ்டோர் மின்னஞ்சலுக்குப் பதிலாக கணக்கு மின்னஞ்சல் தோன்றும்.
படிகள்:
டெஸ்க்டாப்
உங்கள் Shopify நிர்வாகியில், அமைப்புகள் > பொது என்பதற்குச் செல்லவும்.
ஸ்டோர் தொடர்பு விவரங்கள் பிரிவில், உங்களின் ஸ்டோர் பெயரைக் கிளிக் செய்யவும்.
ஸ்டோர் மின்னஞ்சல் என்பதன் கீழ் உங்களின் மின்னஞ்சல் முகவரியை மாற்றவும். உங்கள் கணக்கு தொடர்பாக உங்களைத் தொடர்புகொள்ள, Shopify இந்த மின்னஞ்சலைப் பயன்படுத்தும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்கள் புதிய மின்னஞ்சல் கணக்கின் இன்பாக்ஸிற்குச் சென்று, Shopify அனுப்பிய சரிபார்ப்பு மின்னஞ்சலில் உள்ள இணைப்பைக் கிளிக் செய்யவும்.
மொபைல்
Shopify செயலியில்,
என்பதைத் தட்டி,
அமைப்புகள் என்பதைத் தட்டவும்.
ஸ்டோர் அமைப்புகள் பிரிவில், பொது என்பதைத் தட்டவும்.
ஸ்டோர் தொடர்பு விவரங்கள் பிரிவில், உங்களின் ஸ்டோர் பெயரைக் தட்டவும்.
ஸ்டோர் மின்னஞ்சல் என்பதன் கீழ் உங்களின் மின்னஞ்சல் முகவரியை மாற்றவும். உங்கள் கணக்கு தொடர்பாக உங்களைத் தொடர்புகொள்ள, Shopify இந்த மின்னஞ்சலைப் பயன்படுத்தும்.
சேமி அல்லது ✓ என்பதைத் தட்டவும்.
உங்கள் புதிய மின்னஞ்சல் கணக்கின் இன்பாக்ஸிற்குச் சென்று, Shopify அனுப்பிய சரிபார்ப்பு மின்னஞ்சலில் உள்ள இணைப்பைத் தட்டவும்.
உங்கள் அனுப்புநர் மின்னஞ்சல் முகவரியை மாற்றுதல்
உங்கள் அனுப்புநர் டொமைனிற்கு அங்கீகாரப் பதிவுகள் தேவைப்படலாம். அங்கீகாரப் பதிவுகள் உள்ளமைக்கப்படவில்லை எனில், உங்களின் அனுப்புநர் மின்னஞ்சல் முகவரி store+123@shopifyemail.com என மாற்றி எழுதப்படும்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியில், அமைப்புகள் > அறிவிப்புகள் என்பதற்குச் செல்லவும்.
அனுப்புநர் மின்னஞ்சல் பிரிவில், உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்களின் அனுப்புநர் மின்னஞ்சலாகப் பகிர்தல் முகவரியைப் பயன்படுத்துதல்
Shopify நிர்வகிக்கும் தனிப்பயன் டொமைனை நீங்கள் வைத்திருந்தால், உங்களின் தனிப்பயன் டொமைனிலிருந்து ஒரு பகிர்தல் மின்னஞ்சல் முகவரியை உங்கள் ஸ்டோரின் அனுப்புநர் மின்னஞ்சலாகப் பயன்படுத்தலாம். உங்கள் வாடிக்கையாளர்கள் தொடர்புகொள்வதற்காக, உங்கள் டொமைனுடன் இணைக்கப்பட்ட தனிப்பயன் மின்னஞ்சல் முகவரியை உருவாக்க மின்னஞ்சல் பகிர்தலை அமைக்கவும்.
நீங்கள் பகிர்தலை அமைத்த பிறகு, உங்களின் புதிதாக உருவாக்கப்பட்ட பகிர்தல் மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் அனுப்புநர் மின்னஞ்சலை மாற்றவும். உங்கள் அனுப்புநர் மின்னஞ்சலை மாற்றும்போது, உங்கள் தனிப்பயன் டொமைனுடன் இணைக்கப்பட்டுள்ள பகிர்தல் மின்னஞ்சல் மூலம் வாடிக்கையாளர்கள் உங்கள் ஸ்டோர் அறிவிப்புகளைப் பெறுவார்கள். உங்கள் ஸ்டோரின் மின்னஞ்சல்களுக்கு அவர்கள் பதிலளித்தால், உங்கள் மின்னஞ்சல் பகிர்தல் அமைப்புகளில் நீங்கள் உள்ளமைத்துள்ள தனிப்பட்ட மின்னஞ்சலுக்கு அவர்களின் செய்தி பகிரப்படும்.
சில மின்னஞ்சல் ஹோஸ்ட்கள் "no-reply", "do-not-reply" அல்லது "noreply" போன்ற வார்த்தைகளைக் கொண்ட மின்னஞ்சல் முகவரிகளைத் தானாகவே நிராகரிக்கும். உங்களின் மின்னஞ்சல்கள் வாடிக்கையாளர்களைச் சென்றடைவதை உறுதிசெய்ய, உங்கள் அனுப்புநர் மின்னஞ்சல் முகவரியில் இதுபோன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
உங்கள் தனிப்பயன் டொமைன் ரத்துசெய்யப்பட்டாலோ அல்லது காலாவதியாகிவிட்டாலோ, டொமைனின் பகிரப்பட்ட மின்னஞ்சலை இனி உங்கள் அனுப்புநர் மின்னஞ்சலாகப் பயன்படுத்த முடியாது.
உங்கள் மூன்றாம் தரப்பு டொமைனை அங்கீகரித்தல்
Shopify மூலம் உங்கள் டொமைனை வாங்கியிருந்தால், உங்கள் மின்னஞ்சல் அங்கீகாரம் தானாகவே அமைக்கப்பட்டு, உங்களுக்கான DKIM, SPF மற்றும் DMARC பதிவுகள் உள்ளமைக்கப்படும். Cloudflare, GoDaddy அல்லது IONOS ஆகியவற்றில் ஹோஸ்ட் செய்யப்பட்டுள்ள மூன்றாம் தரப்பு டொமைன்களுக்கான DNS பதிவுகளையும் Shopify-ஆல் தானாகவே உள்ளமைக்க முடியும்.
நீங்கள் ஒரு மூன்றாம் தரப்பு டொமைனைப் பயன்படுத்தினால், உங்கள் மின்னஞ்சல் செய்திகள் ஸ்பேம் என்று குறிக்கப்படுவதைத் தடுக்கவும், உங்கள் மின்னஞ்சல் செய்திகள் வாடிக்கையாளர்களுக்குச் சரியாக டெலிவரி செய்யப்படுவதை உறுதிசெய்யவும், உங்கள் அனுப்புநர் மின்னஞ்சல் முகவரியை நீங்கள் அங்கீகரிக்க வேண்டும்.
தானாகவே அங்கீகரி
Cloudflare, GoDaddy அல்லது IONOS இடமிருந்து உங்கள் டொமைனை வாங்கியிருந்தால், உங்கள் டொமைனை Shopify-க்குத் தானாகவே அங்கீகரிக்க முடியும். இதற்குப் பதிலாக, நீங்கள் கைமுறையாகவும் அங்கீகரிக்கலாம். மூன்றாம் தரப்பு டொமைன்களை இணைப்பது பற்றி மேலும் அறிக.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியில், அமைப்புகள் > அறிவிப்புகள் என்பதற்குச் செல்லவும்.
அனுப்புநர் மின்னஞ்சல் பிரிவில், மின்னஞ்சல் டொமைன் அங்கீகாரம் என்பதைக் கிளிக் செய்யவும்.
தானாகவே அங்கீகரி என்பதைக் கிளிக் செய்யவும்.
திறக்கும் சாளரத்தில், மாற்றத்தை அங்கீகரிக்க உங்கள் டொமைன் வழங்குநரின் படிகளைப் பின்பற்றிவிட்டு, Return to Shopify போன்று உங்களை மீண்டும் Shopify-க்கு அழைத்துச் செல்லும் பொத்தானைக் கிளிக் செய்யவும்.
அங்கீகாரம் முடியும் வரை காத்திருக்கவும்.
நீங்கள் Shopify-க்குத் திரும்பாமல் டொமைன் வழங்குநரின் சாளரத்தை மூடினால், அங்கீகாரச் சரிபார்ப்பு தொடங்காது, மேலும் நிலையிலும் எந்த மாற்றமும் இருக்காது. சரிபார்ப்பைத் தொடங்க, கைமுறை அமைவு என்பதைக் கிளிக் செய்துவிட்டு I updated DNS records என்பதைக் கிளிக் செய்யவும்.
கைமுறையாக அங்கீகரி
உங்கள் அனுப்புநர் மின்னஞ்சல் முகவரியை அங்கீகரிக்க, நீங்கள் பின்வரும் பதிவுகளை உங்கள் மூன்றாம் தரப்பு டொமைனில் சேர்க்க வேண்டும்:
- CNAME பதிவுகள் (இவை தேவையான DKIM மற்றும் SPF அங்கீகாரத்தைக் கையாளுகின்றன)
- DMARC பதிவு
உங்கள் CNAME அல்லது DMARC பதிவுகளை மாற்றுவதற்கு உதவி தேவையென்றால், உங்கள் டொமைன் வழங்குநரைத் தொடர்புகொள்ளவும்.
உங்கள் டொமைன் அங்கீகாரத்தைப் புதுப்பிக்கவும்
மின்னஞ்சல் டொமைன் அங்கீகாரத்தின் நிலை, புதுப்பிப்பு பரிந்துரைக்கப்படுகிறது என்று இருந்தால், உங்கள் டொமைனில் புதிய CNAME பதிவுகள் கிடைக்கின்றன அல்லது உங்கள் CNAME பதிவுகள் எதிர்பார்த்த மதிப்புடன் பொருந்தவில்லை என்று அர்த்தமாகும். இந்தப் புதிய பதிவுகள் கிடைப்பதற்கு முன்பாகவே உங்கள் டொமைனை அங்கீகரித்திருந்தால் பொதுவாக இவ்வாறு நிகழும். இப்போதும் உங்கள் டொமைன் அங்கீகரிக்கப்பட்ட நிலையிலேயே இருக்கும், மேலும் உங்கள் அனுப்புநர் மின்னஞ்சல் முகவரியிலிருந்தே உங்கள் மின்னஞ்சல்கள் தொடர்ந்து அனுப்பப்படும்.
பரிந்துரைக்கப்பட்ட புதுப்பிப்பானது சேவையில் ஏற்படக்கூடிய இடையூறுகளில் இருந்து உங்கள் பிராண்ட் அனுப்புநர் மின்னஞ்சல் முகவரியைப் பாதுகாக்கிறது. இந்தப் புதுப்பிப்பு கட்டாயமற்றது, இதற்குக் காலக்கெடு ஏதுமில்லை. பரிந்துரைக்கப்படும் பதிவுகள் இல்லாவிட்டால், மின்னஞ்சல் டெலிவரி இடையூறு ஏற்படும் சமயங்களில் உங்கள் மின்னஞ்சல்கள் store+123@shopifyemail.com என்பதிலிருந்து தற்காலிகமாக அனுப்பப்படலாம்.
மின்னஞ்சல் டொமைன் அங்கீகாரம் என்பதன் நிலை அங்கீகரிக்கப்பட்டது என்று இருந்தால், நீங்கள் எதுவும் செய்ய வேண்டியதில்லை.
நீங்கள் Shopify-இலிருந்து டொமைனை வாங்கியிருந்தால் அல்லது Shopify-க்கு மாற்றியிருந்தால், இந்தப் பதிவுகள் உங்களுக்காக நிர்வகிக்கப்படும், அவற்றை மின்னஞ்சல் டொமைன் அங்கீகாரம் பக்கத்திலிருந்து உங்களால் புதுப்பிக்க முடியாது. நிலை தொடர்ந்து புதுப்பிப்பு பரிந்துரைக்கப்படுகிறது என்று இருந்தால், Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளவும்.
உங்கள் டொமைன் அங்கீகாரத்தைப் புதுப்பிக்க, விடுபட்ட CNAME பதிவுகளை உங்கள் டொமைனில் சேர்த்து, பொருந்தாத பதிவுகள் ஏதேனும் இருந்தால் சரிசெய்யவும். உங்கள் டொமைனில் ஏற்கெனவே உள்ள CNAME பதிவுகள் தொடர்ந்து தேவைப்படுவதால் அவற்றை அப்படியே வைத்துக்கொள்ளவும்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியில், அமைப்புகள் > அறிவிப்புகள் என்பதற்குச் செல்லவும்.
அனுப்புநர் மின்னஞ்சல் பிரிவில், மின்னஞ்சல் டொமைன் அங்கீகாரம் என்பதைக் கிளிக் செய்யவும்.
பின்வரும் வழிகளில் ஒன்றைப் பயன்படுத்தி உங்கள் DNS பதிவுகளைப் புதுப்பிக்கவும்:
- உங்கள் டொமைனானது Cloudflare, GoDaddy அல்லது IONOS-இல் ஹோஸ்ட் செய்யப்பட்டிருந்தால், தானாகப் புதுப்பி என்பதைக் கிளிக் செய்யவும். உங்கள் டொமைன் வழங்குநரின் படிகளைப் பின்பற்றிவிட்டு, Return to Shopify போன்று உங்களை மீண்டும் Shopify-க்கு அழைத்துச் செல்லும் பொத்தானைக் கிளிக் செய்யவும்.
- உங்கள் பதிவுகளைக் கைமுறையாகப் புதுப்பிக்க, CNAME பதிவுகள் காட்டப்படவில்லை எனில் கைமுறைப் புதுப்பிப்பு என்பதைக் கிளிக் செய்யவும். உங்கள் டொமைன் வழங்குநரில் உள்நுழைந்து, நிலை நெடுவரிசையில் சரிபார்ப்புக் குறி இல்லாத ஒவ்வொரு CNAME பதிவையும் சேர்க்கவும் அல்லது சரிசெய்யவும். I updated DNS records என்பதைக் கிளிக் செய்யவும்.
நீங்கள் தானாகப் புதுப்பித்தாலும் Shopify-க்குத் திரும்பாமல் டொமைன் வழங்குநரின் சாளரத்தை மூடினால், நிலை மாறாது. சரிபார்ப்பைத் தொடங்க, கைமுறைப் புதுப்பிப்பு என்பதைக் கிளிக் செய்துவிட்டு I updated DNS records என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்கள் பதிவுகளைப் புதுப்பித்த பிறகு, நிலை பரப்பப்படுகிறது என மாறும், அத்துடன் உங்கள் அனுப்புநர் மின்னஞ்சல் முகவரியிலிருந்து உங்கள் மின்னஞ்சல்கள் தொடர்ந்து அனுப்பப்படும். அனைத்துப் பதிவுகளும் கண்டறியப்பட்டதும், நிலை அங்கீகரிக்கப்பட்டது என மாறும்.
சுமார் ஒரு நாளுக்குள் பதிவுகள் கண்டறியப்படாவிட்டால், நிலை மீண்டும் புதுப்பிப்பு பரிந்துரைக்கப்படுகிறது என்று மாறும். DNS மாற்றங்கள் பரப்பப்படுவதற்கு 48 மணிநேரம் வரை ஆகலாம். உங்களின் பதிவுகள் உங்கள் Shopify நிர்வாகியிலுள்ள மதிப்புகளுடன் பொருந்துவதை உறுதிசெய்துவிட்டு, மீண்டும் I updated DNS records என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்கள் மூன்றாம் தரப்பு டொமைனில் CNAME பதிவுகளைச் சேர்
உங்களின் அனுப்புநர் மின்னஞ்சல் முகவரியுடன் தொடர்புடைய டொமைனை Shopify SPF மற்றும் DKIM பதிவுகளுடன் இணைப்பதற்கான CNAME பதிவுகளைச் சேர்ப்பதன் மூலம், உங்கள் மின்னஞ்சல் செய்திகள் வாடிக்கையாளர்களைச் சென்றடைவதை உறுதிசெய்யலாம். உதாரணமாக, உங்களின் அனுப்புநர் மின்னஞ்சல் info@johns-apparel.com எனில், நீங்கள் johns-apparel.com டொமைனில் CNAME பதிவுகளைச் சேர்க்க வேண்டும். உங்கள் டொமைனில் IP முகவரிகள் எதையும் நீங்கள் சேர்க்கத் தேவையில்லை - அங்கீகாரத்திற்கு CNAME பதிவுகளே போதுமானவை.
உங்கள் டொமைனில் CNAME பதிவுகளைச் சேர்க்க, பின்வரும் தகவல் உங்களிடம் இருக்க வேண்டும்:
- உங்கள் அனுப்புநர் மின்னஞ்சலுடன் தொடர்புடைய மூன்றாம் தரப்பு டொமைன் வழங்குநர் கணக்கிற்கான உங்களின் உள்நுழைவுத் தகவல்.
- உங்கள் வாடிக்கையாளர்களுடன் தொடர்புகொள்வதற்கு நீங்கள் பயன்படுத்தும் மின்னஞ்சல் முகவரியான உங்கள் அனுப்புநர் மின்னஞ்சல்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியில், அமைப்புகள் > அறிவிப்புகள் என்பதற்குச் செல்லவும்.
அனுப்புநர் மின்னஞ்சல் பிரிவில், உங்கள் டொமைனை அங்கீகரி என்பதைக் கிளிக் செய்யவும்.
காண்பிக்கப்படும் அனைத்து CNAME பதிவுகளையும் உங்கள் மூன்றாம் தரப்பு டொமைன் நிர்வாகியில் உள்ளிடுவதற்கான வழிமுறைகளைப் பின்பற்றவும். பதிவுகளின் எண்ணிக்கை மாறுபடலாம், எனவே மாடலில் காண்பிக்கப்படும் அனைத்துப் பதிவுகளையும் நீங்கள் சேர்க்க வேண்டும்.
மாற்றங்கள் முழுமையாகப் பிரதிபலிக்க 48 மணிநேரம் வரை ஆகலாம். டொமைன் சரிபார்ப்பு தோல்வியுற்றால், உங்கள் மூன்றாம் தரப்பு டொமைன் வழங்குநரிடம் நீங்கள் உள்ளிட்ட DNS பதிவுகள் உங்களின் Shopify நிர்வாகியில் வழங்கப்பட்ட பதிவுகளுடன் பொருந்துகின்றனவா என்பதைச் சரிபார்க்கவும்.
உங்கள் டொமைனில் CNAME-ஐச் சேர்க்க உதவி தேவைப்பட்டால், உங்கள் டொமைன் வழங்குநரைத் தொடர்புகொள்ளவும்.
உங்கள் மூன்றாம் தரப்பு டொமைனில் ஒரு DMARC பதிவைச் சேர்
உங்கள் பிராண்டட் மின்னஞ்சல் முகவரியிலிருந்து மின்னஞ்சல்களை அனுப்புவதற்கு, உங்கள் டொமைனில் DMARC பதிவு ஒன்றைச் சேர்க்குமாறு Gmail மற்றும் Yahoo போன்ற சில மின்னஞ்சல் வழங்குநர்கள் கோருகின்றனர்.
உங்கள் டொமைனில் ஒரு DMARC பதிவு உள்ளதா எனச் சரிபார்ப்பது மற்றும் அதைச் சேர்ப்பது எப்படி என்பதை அறிய, பின்வரும் மூன்றாம் தரப்பு ஆதாரங்களைச் சரிபார்க்கவும்:
படிகள்:
- உங்களின் டொமைன் ஹோஸ்ட்டின் நிர்வாக கன்சோலில் உள்நுழையவும்.
- நீங்கள் DNS பதிவுகளைப் புதுப்பிக்கும் பக்கத்தைக் கண்டறியவும்.
- DMARC-க்கு ஒரு TXT பதிவைச் சேர்க்கவும்.
- பதிவுப் பெயர் (Record name)/DNS ஹோஸ்ட் பெயர் (DNS host name) புலத்தில்,
_dmarcஎனச் சேர்க்கவும். சில டொமைன் ஹோஸ்ட்கள்_dmarc.example.comபோன்ற டொமைன் பகுதியைத் தானாகவே சேர்க்கும். TXT பதிவைச் சேர்த்த பிறகு, அது சரியாக வடிவமைக்கப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்கவும். - உரை பதிவு மதிப்பு (Text Record Value) புலத்தில்,
v=DMARC1; p=none;எனச் சேர்க்கவும்.
- பதிவுப் பெயர் (Record name)/DNS ஹோஸ்ட் பெயர் (DNS host name) புலத்தில்,
p=none குறித்த குறிப்பிட்ட விவரங்களுக்கு, DMARC பதிவு என்ற கலைச்சொல் உருப்படியை மதிப்பாய்வு செய்யவும்.
மின்னஞ்சல் பகிர்தல்
மின்னஞ்சல் பகிர்தல் என்பது உங்களின் தனிப்பயன் டொமைனிலிருந்து வரும் மின்னஞ்சலை Gmail, Outlook, Yahoo அல்லது பிற வழங்குநரிடம் உள்ள தற்போதைய மின்னஞ்சல் கணக்கிற்குத் திசைதிருப்ப அனுமதிக்கும் ஒரு சேவையாகும்.
எடுத்துக்காட்டாக, உங்களிடம் example.com என்ற டொமைன் பெயர் இருந்தால், info@example.com என்ற அனுப்புநர் மின்னஞ்சல் முகவரியை நீங்கள் உருவாக்கலாம். வாடிக்கையாளர்கள் info@example.com-க்கு மின்னஞ்சல் அனுப்பும்போது, அவர்களின் செய்திகள் நீங்கள் இணைத்துள்ள தனிப்பட்ட கணக்கிற்குப் பகிரப்படும், உதாரணமாக, john@gmail.com.
மின்னஞ்சல் பகிர்தல் பற்றி மேலும் அறிக.