Shopify Plus திட்டத்தில் நேரலைக்குச் செல்வதற்கான வழிகாட்டி

Shopify Plus திட்டத்தில் உங்களின் வெளியீட்டுப் பயணம் எதுவாக இருந்தாலும், அது ஒரு நேரலைக்குச் செல்லும் தேதியில் முடிகிறது, அந்த நேரத்தில்தான் உங்கள் வாடிக்கையாளர்கள் உங்கள் புதிய ஸ்டோரில் ஷாப்பிங் செய்ய முடியும்.

Shopify Plus இல் வெற்றிகரமான வெளியீட்டிற்கு நீங்கள் மேற்கொள்ள வேண்டிய தயாரிப்பு, செயல்படுத்துதல் மற்றும் நேரலைக்கு பிந்தையச் செயல்பாடுகளுக்கான ஆதாரங்களை இந்த வழிகாட்டி வழங்குகிறது. இந்தச் சரிபார்ப்புப் பட்டியலானது பொதுவான Shopify Plus திட்ட வெளியீட்டுச் சரிபார்ப்புப் பட்டியலுடன் கூடுதலாகப் பயன்படுத்தப்பட வேண்டும். ஒவ்வொரு தலைப்பிலும் கூடுதல் சூழல் மற்றும் ஆதார இணைப்புகள் உள்ளன. வெளியீட்டு நாள் செயல்முறை முழுவதும் நீங்கள் இதைப் பார்ப்பதற்கு, இந்தச் சரிபார்ப்புப் பட்டியலை அச்சிடுவது அல்லது PDF ஆகப் பதிவிறக்குவது உதவியாக இருக்கலாம்.

உங்களுக்கு உதவி தேவைப்பட்டால், Shopify Plus ஆதரவைத் தொடர்புகொள்ளவும்.

நேரலைக்குச் செல்வதற்கான தயார்படுத்தல் வழிகாட்டி

நீங்கள் நேரலைக்குச் செல்லத் தயாராகும்போது பின்வரும் பிரிவுகளைப் பார்க்கவும்:

ஆர்டர் ஓட்டச் சரிபார்ப்பு

சோதனை ஆர்டர்களை அளிப்பதன் மூலம் ஆர்டர் ஓட்டத்தை முழுமையாகச் சரிபார்க்கவும். ஆர்டர் ஓட்டத்தைச் சோதிக்கும்போது கருத்தில் கொள்ள வேண்டியவை பற்றி அறிந்துகொள்ள சோதனை ஆர்டர் சரிபார்ப்புப் பட்டியலைப் பார்க்கவும்.

ஒருங்கிணைப்புகளின் சரிபார்ப்பு

உங்களின் அனைத்து ஒருங்கிணைப்புகளும் சரியாக வேலை செய்கின்றனவா என உறுதிசெய்யவும். ஒருங்கிணைப்புகளைக் கவனமாகச் சரிபார்ப்பது மூலம், வலுவான மற்றும் நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட தொழில்நுட்ப அடுக்குடன் நீங்கள் நேரலைக்குச் செல்வதை உறுதிசெய்யலாம்; மேலும், அறிமுகத்திற்குப் பிறகான சிக்கல்களைத் தவிர்க்கவும் இது உதவும்.

இந்தக் கட்டத்தில் நீங்கள் எதைச் சோதிக்க வேண்டும் என்பதற்கான சரியான விவரங்கள், Shopify உடன் நீங்கள் இணைத்துள்ள சிஸ்டம்கள் மற்றும் செயலிகளைப் பொறுத்தது. உங்களிடம் Shopify ஆதரிக்கும் செயலிகள் மற்றும் ஒருங்கிணைப்புகள் மற்றும் மூன்றாம் தரப்புச் செயலிகள் மற்றும் ஒருங்கிணைப்புகள் என இரண்டும் கலந்திருக்கலாம்.

பகுப்பாய்வு அமைவுச் சரிபார்ப்பு

நீங்கள் இயக்க விரும்பும் எந்தவொரு தரவு கண்காணிப்பையும் அமைத்திருக்க வேண்டும்.

DNS அமைப்புகள் மற்றும் சேவையகச் சரிபார்ப்புகள்

நீங்கள் நேரலைக்குச் செல்ல விரும்பும் தேதிக்குக் குறைந்தபட்சம் நான்கு வாரங்களுக்கு முன்பு பின்வரும் தகவல்களைக் கண்டறியவும்:

உங்கள் நேரலைத் தேதிக்கு சுமார் 1 வாரம் முன்பு:

Shopify Plus திட்டமானது உங்கள் சந்தாவுடன் கூடுதல் கட்டணம் ஏதுமின்றி ஓர் SSL சான்றிதழை வழங்குகிறது. வேறொரு வழங்குநரின் தற்போதைய SSL சான்றிதழ்களை Shopify-க்கு மாற்ற முடியாது. நேரலைக்குச் செல்லத் தயாராகும் போது இதைக் கருத்தில் கொள்ளவும்.

தரவை காப்புநகல் எடுத்தல்

உங்கள் ஸ்டோர் தரவை காப்புநகல் எடுப்பதற்கான விருப்பத்தேர்வை Shopify வழங்கவில்லை. உதாரணத்திற்கு, உங்கள் ஸ்டோரில் உள்ள அனைத்துத் தயாரிப்புகளையும் நீங்கள் நீக்கிவிட்டால், இந்தத் தரவை மீட்டமைக்க வழியில்லை.

இந்தக் காரணத்திற்காக, உங்கள் ஸ்டோர் தரவை கைமுறையாக அல்லது ஒரு மூன்றாம் தரப்புச் செயலியைப் பயன்படுத்தி காப்புநகல் எடுக்கத் திட்டமிடுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். உங்களிடம் பெரிய குழுவோ, தயாரிப்புகள், சரக்கு இருப்பு, வாடிக்கையாளர்கள், பக்கங்கள் அல்லது தீம்கள் போன்று உங்கள் ஸ்டோரின் தரவைப் பாதிக்கக்கூடிய ஒருங்கிணைப்புகளோ இருக்கும்போது இது மிகவும் முக்கியமானது.

நேரலைக்குச் செல்வதற்கான சரிபார்ப்புப் பட்டியல்

உங்கள் ஸ்டோரின் அனைத்து அம்சங்களையும் பிற சிஸ்டம்களுடன் அதன் ஒருங்கிணைப்புகளையும் நீங்கள் முழுமையாகச் சோதிக்க வேண்டும். Shopify Plus-க்கு மாறுவதற்கு முன், அனைத்தும் சரியாக உள்ளதா என்பதை உறுதிசெய்ய இந்தச் சரிபார்ப்புப் பட்டியல் உங்களுக்கு உதவும்.

பின்வரும் பிரிவுகளைப் பார்க்கவும்:

தரவு மற்றும் உள்ளடக்க இடமாற்றம்

பின்வரும் உள்ளடக்கத்தை இறக்குமதி செய்துள்ளீர்களா அல்லது உருவாக்கியுள்ளீர்களா என்பதை உறுதிப்படுத்தவும்:

தரவை ஒழுங்கமைத்தல்

பின்வருவனவற்றைப் சரிபார்ப்பதன் மூலம் உங்கள் உள்ளடக்கம் உங்களுக்கு விருப்பமான முறையில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தவும்:

முன்-முனை

உங்கள் ஸ்டோர்ஃபிரண்டின் பின்வரும் பகுதிகள் நீங்கள் விரும்பியபடி தோற்றமளிக்கிறதா மற்றும் செயல்படுகிறதா என்பதைச் சரிபார்க்கவும்:

செயலிகள் மற்றும் ஒருங்கிணைப்புகள்

பின்வரும் ஒருங்கிணைப்புகள் சரியாகச் செயல்படுவதை உறுதிசெய்ய அவற்றைச் சோதிக்கவும்:

பொருந்தும் இடங்களில், நீங்கள் நிறுவிய ஆனால் பயன்படுத்த வேண்டாம் என முடிவு செய்த எந்தச் செயலிகளையும் நிறுவல் நீக்க வேண்டும்:

தள்ளுபடிகள் மற்றும் விலை விதிகள்

பின்வருபவை எதிர்பார்த்தபடி செயல்படுகின்றனவா என்பதை உறுதிசெய்ய அவற்றைச் சோதிக்கவும்:

ஸ்டோர் அமைப்புகள்

உங்கள் ஸ்டோர்களுக்கான பின்வரும் அமைப்புகளைச் சரிபார்க்கவும்:

செக்அவுட் மற்றும் ஆர்டர் உருவாக்கம்

முறையான செக்அவுட் செயல்பாட்டை உறுதிசெய்ய இந்தச் சூழ்நிலைகளைச் சோதிக்கவும்:

தானியக்கமாக்கல்

சரியான செயல்பாட்டை உறுதிப்படுத்த இந்தத் தானியக்கமாக்கல்களைச் சோதிக்கவும்:

ஆர்டர் மேலாண்மை

ஆர்டர்கள் எதிர்பார்த்தபடி செயல்படுவதை உறுதிசெய்ய, இந்தச் செயல்பாடுகளைச் சோதிக்கவும்:

விரிவாக்க ஸ்டோர்கள்

பின்வருவனவற்றைச் சரிபார்க்கவும்:

DNS அமைப்புகள்

பின்வரும் DNS அமைப்புகளை உறுதிப்படுத்தவும்:

பகுப்பாய்வு

இந்தப் பகுப்பாய்வுத் தடமறிதல் சிஸ்டம்கள் உள்ளனவா மற்றும் செயல்படுகின்றனவா என்பதைச் சரிபார்க்கவும்:

லைவிற்குச் செல்லுதல்

பின்வரும் பணிகளை நிறைவுசெய்யவும்:

லைவிற்குச் செல்லுதல்

நீங்கள் லைவிற்குச் செல்லத் தயாரானதும், உங்கள் புதிய ஸ்டோரை அறிமுகப்படுத்த இந்தப் படிகளைப் பின்பற்றவும்:

  1. உங்கள் ரூட் டொமைனின் A பதிவை மாற்றி, அதை Shopify இன் IP முகவரிக்குப் பாயிண்ட் செய்யவும்.
  2. Shopify-ஹோஸ்ட் செய்த உங்கள் டொமைனுக்கு CNAME பதிவை மாற்றவும்.
  3. Shopify இல் உங்கள் டொமைனை இணைக்கவும்.
  4. Shopify இல் உங்கள் முதன்மை டொமைனை அமைக்கவும்.
  5. உங்கள் ஆன்லைன் ஸ்டோரை அறிமுகப்படுத்தவும்.

அடுத்த படிகள்

உங்கள் ஸ்டோரை அறிமுகப்படுத்திய பிறகு என்ன செய்ய வேண்டும் என்பதற்கான சரிபார்ப்புப் பட்டியலுக்கு, Shopify Plus திட்ட அறிமுகச் சரிபார்ப்புப் பட்டியலின் உங்கள் ஆன்லைன் ஸ்டோரை அறிமுகப்படுத்திய பிறகு என்ற பகுதியைப் பார்க்கவும்.