Shopify Plus திட்ட அறிமுகச் சரிபார்ப்புப் பட்டியல்
Shopify Plus இல் அறிமுகப்படுத்தும்போது முக்கியமான மைல்கற்களுக்கான வழிகாட்டுதல் மற்றும் ஆதாரங்களை இந்தச் சரிபார்ப்புப் பட்டியல் வழங்குகிறது. ஒவ்வொரு தலைப்பிலும் கூடுதல் சூழல் மற்றும் ஆதார இணைப்புகள் இருக்கும். அமைவுச் செயல்முறை முழுவதிலும் இந்தச் சரிபார்ப்புப் பட்டியலைப் பார்ப்பதற்கு வசதியாக, இதை அச்சிடுவது அல்லது PDF ஆகப் பதிவிறக்குவது உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கலாம்.
உங்களுக்கு உதவி தேவைப்பட்டால், Shopify Plus ஆதரவைத் தொடர்புகொள்ளவும்.
இந்தப் பக்கத்தில்
- தொடங்குதல்
- உங்கள் தரவை இடமாற்றுதல்
- உள்ளடக்கத்தை உருவாக்குதல் மற்றும் பதிவேற்றுதல்
- தரவை ஒழுங்கமைத்தல்
- உங்கள் Shopify நிர்வாகி அமைப்புகளை உள்ளமைத்தல்
- உங்கள் ஆன்லைன் ஸ்டோரை அமைத்தல்
- Shopify ஆதரிக்கும் செயலிகள் மற்றும் ஒருங்கிணைப்புகள்
- மூன்றாம் தரப்புச் செயலிகள் மற்றும் ஒருங்கிணைப்புகள்
- சர்வதேச விற்பனைக் கருவிகளை அமைத்தல்
- சந்தாக்களை அமைத்தல்
- Shopify B2B ஐ அமைத்தல்
- உங்கள் ஸ்டோரை அறிமுகப்படுத்தத் தயாராகுதல்
- உங்கள் ஆன்லைன் ஸ்டோரை அறிமுகப்படுத்துதல்
- உங்கள் ஆன்லைன் ஸ்டோரை அறிமுகப்படுத்திய பிறகு
தொடங்குதல்
உங்கள் Shopify நிர்வாகியைப் பற்றித் தெரிந்துகொண்டு, உங்கள் ஸ்டோரில் பணியாளர்களைச் சேர்க்கவும்.
உங்கள் தரவை இடமாற்றுதல்
உங்கள் தரவை இடமாற்றுவதற்கு முன், தரவு இடமாற்ற ஆவணங்களை மதிப்பாய்வு செய்யவும். உங்கள் தரவை இடமாற்ற, பின்வரும் விருப்பங்களைப் பயன்படுத்தலாம்:
| இடமாற்ற விருப்பம் | விளக்கம் |
|---|---|
| CSV இறக்குமதி | உங்கள் Shopify நிர்வாகியில் இருந்து நேரடியாக CSV கோப்பைப் பயன்படுத்தி தயாரிப்புகள் மற்றும் வாடிக்கையாளர்களை இறக்குமதி செய்யுங்கள். இந்த விருப்பம் எளிய தயாரிப்பு அட்டவணைகளுக்கும் சிறிய வாடிக்கையாளர் பட்டியல்களுக்கும் சிறப்பாகச் செயல்படும். |
| மூன்றாம் தரப்பு இடமாற்றச் செயலிகள் | CSV இறக்குமதிகள் மூலம் புலம் மேப்பிங் செய்வதில் உள்ள யூகங்களைத் தவிர்க்க, உங்கள் தரவை இடமாற்ற மூன்றாம் தரப்புத் தரவு இடமாற்றச் செயலியைப் பயன்படுத்தவும். |
| இடமாற்றச் சேவைகள் | உங்கள் தரவு இடமாற்றத்தை விரைவாகவும் எளிதாகவும் மாற்றக்கூடிய LitExtension, Cart2Cart போன்ற மூன்றாம் தரப்பு இடமாற்றச் சேவைகளைப் பயன்படுத்தவும். மேலும் பல இடமாற்றப் பார்ட்னர்கள் குறித்து Shopify Plus பார்ட்னர்கள் கோப்பகத்தில் தெரிந்துகொள்ளவும். |
| பிரத்தியேக ஒருங்கிணைப்புகள் | Shopify இல் உங்களின் Plus ஸ்டோரை அறிமுகப்படுத்த ஏஜென்சி அல்லது டெவலப்பர்கள் குழுவுடன் பணிபுரிகிறீர்கள் என்றால், Shopify API ஐப் பயன்படுத்தி உங்களுக்கான சொந்தப் பிரத்தியேக இடமாற்றத் தீர்வை உருவாக்குவதைக் கவனத்தில் கொள்ளவும். உங்கள் டெவலப்பர்கள் REST அல்லது GraphQL API ஐப் பயன்படுத்தலாம். |
உங்கள் தயாரிப்பு, வாடிக்கையாளர் மற்றும் கடந்தகால ஆர்டர் தரவை இறக்குமதி செய்யும் வரிசை முக்கியமானது. Shopify இல் உங்கள் வாடிக்கையாளர்களின் முழுமையான பரிவர்த்தனை வரலாற்றை அணுகுவதை உறுதிசெய்ய, கீழே உள்ள இடமாற்ற வரிசையைப் பின்பற்ற வேண்டும். இடமாற்றப்பட்ட ஆர்டர்கள் அவற்றுடன் தொடர்புடைய தயாரிப்புகள் மற்றும் வாடிக்கையாளர்களுடனும் இணைக்கப்பட்டிருக்கும்.
1. தயாரிப்புகளை இடமாற்றுதல்
உங்கள் தயாரிப்புத் தரவை இடமாற்றுவது, உங்கள் தயாரிப்புப் பட்டியல்கள், தயாரிப்பு மாறுபாடுகள் மற்றும் தயாரிப்புச் சேகரிப்புகள் அனைத்தையும் Shopify-க்குக் கொண்டுவரும். உங்கள் தயாரிப்புகளை இறக்குமதி செய்வதற்கு முன், உங்கள் Shopify ஸ்டோருக்கான சேகரிப்புகளைத் திட்டமிடுவதைக் கவனத்தில் கொள்ளவும், இதன் மூலம் இடமாற்றத்தின்போது உங்கள் தயாரிப்புகளைச் சரியான சேகரிப்புக்கு ஒதுக்கலாம்.
- CSV கோப்பைப் பயன்படுத்தித் தயாரிப்புகளை இடமாற்றவும்
- தயாரிப்பு API ஐப் பயன்படுத்தித் தயாரிப்புகளை இடமாற்றவும்
காலாவதித் தேதி போன்ற இயல்புநிலைத் தயாரிப்புப் பட்டியலின் ஒரு பகுதியாக இல்லாத தகவல் புலங்களை மெட்டாஃபீல்டுகளைப் பயன்படுத்தி ஒரு தயாரிப்பில் சேர்க்கலாம்.
2. வாடிக்கையாளர்களை இடமாற்றுதல்
உங்கள் வாடிக்கையாளர் தரவை இடமாற்றிய பிறகு, உங்கள் வாடிக்கையாளர் பதிவுகள் அனைத்தும் உங்கள் Shopify நிர்வாகியில் கிடைக்கும். இதில் வாடிக்கையாளரின் தொடர்பு விவரங்கள், முகவரிகள், சந்தைப்படுத்தல் விருப்பத்தேர்வுகள் போன்ற தகவல்கள் அடங்கும்.
- CSV கோப்பைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களை இடமாற்றவும்
- வாடிக்கையாளர் API ஐப் பயன்படுத்தித் தயாரிப்புகளை இடமாற்றவும்
பிறந்த தேதி போன்ற இயல்புநிலை வாடிக்கையாளர் சுயவிவரத்தின் ஒரு பகுதியாக இல்லாத தகவல்களை மெட்டாஃபீல்டுகள் அல்லது டேக்குகளைப் பயன்படுத்தி வாடிக்கையாளர் சுயவிவரத்தில் சேர்க்கலாம்.
3. கடந்தகால ஆர்டர்களை இடமாற்றுதல்
ஆர்டர் தரவை இடமாற்றுவது, தயாரிப்பு விற்பனை மற்றும் வாடிக்கையாளர் கொள்முதல் வரலாறு பற்றிய தகவல்கள் உங்கள் Shopify ஸ்டோருக்கு மாற்றப்படுவதை உறுதி செய்கிறது. குறைந்தபட்சமாக, உங்கள் வணிகத்தின் திருப்பியளிப்புக் கொள்கை காலத்திற்குள் உள்ள அனைத்துக் கடந்தகால ஆர்டர்களையாவது இடமாற்றுங்கள். இதனால், ரிட்டர்ன் அல்லது பரிமாற்றத்திற்கு இன்னும் திறந்திருக்கும் ஆர்டர்களுக்கான தங்களின் ஆர்டர் வரலாற்றை வாடிக்கையாளர்களால் அணுக முடியும். இருப்பினும், கடந்த 2-5 ஆண்டுகளில் உள்ள ஆர்டர்களை இறக்குமதி செய்யப் பரிந்துரைக்கப்படுகிறது.
உங்கள் ஸ்டோரில் இடப்படும் ஒவ்வொரு புதிய ஆர்டருக்கும் புதிய ஆர்டர் அறிவிப்புகளைப் பெறுவீர்கள். இறக்குமதி செய்யப்படும் ஒவ்வொரு ஆர்டருக்கும் புதிய ஆர்டர் அறிவிப்புகள் ட்ரிகர் செய்யப்படும்.
நீங்கள் அதிகளவிலான பழைய ஆர்டர்களை உங்கள் ஸ்டோருக்கு இறக்குமதி செய்யும்போதோ அல்லது இறக்குமதி செய்யப்பட்ட ஒவ்வொரு ஆர்டருக்கும் அறிவிப்பைப் பெறுவதைத் தவிர்க்க விரும்பினாலோ, அமைப்புகள் > அறிவிப்புகள் என்பதற்குச் சென்று, உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து புதிய ஆர்டர் அறிவிப்புகளை முடக்கலாம் அல்லது அறிவிப்புகளைத் தற்காலிகமாக முடக்க, Shopify Plus ஆதரவைத் தொடர்புகொள்ளலாம். உங்கள் ஆர்டர்களை இறக்குமதி செய்ய மூன்றாம் தரப்புச் செயலியைப் பயன்படுத்தினால், மேலும் விவரங்களுக்குச் செயலியை உருவாக்குபவரைத் தொடர்புகொள்ளவும்.
4. கிஃப்ட் கார்டுகளை இடமாற்றுதல்
உங்களின் முந்தைய ஸ்டோரில் பயன்படுத்தக்கூடிய கிஃப்ட் கார்டுகளை இடமாற்றினால், உங்கள் Shopify ஸ்டோரைத் தொடங்குவதற்கு முன்பே கிஃப்ட் கார்டு தரவை Shopify-க்கு இடமாற்ற வேண்டும். Shopify-இல் கிஃப்ட் கார்டுகளைத் திருத்தவோ நீக்கவோ முடியாது. எனவே, கிஃப்ட் கார்டு தரவை இறக்குமதி செய்த பிறகு உங்கள் முந்தைய ஸ்டோரில் உள்ள வாடிக்கையாளர் கிஃப்ட் கார்டைப் பயன்படுத்தினால், அந்த கிஃப்ட் கார்டை Shopify-இல் உங்களால் புதுப்பிக்க முடியாது.
கிஃப்ட் கார்டுகளை இடமாற்றுவதற்கு முன், பின்வரும் விஷயங்களைக் கவனத்தில் கொள்ளவும்:
- கிஃப்ட் கார்டு எண்கள் குறியாக்கம் செய்யப்பட்டுள்ளன. நீங்கள் ஒரு கிஃப்ட் கார்டை உருவாக்கிய பிறகு, உங்கள் Shopify நிர்வாகியில் அதன் கடைசி 4 இலக்கங்கள் மட்டுமே காண்பிக்கப்படும். கிஃப்ட் கார்டு எண்களின் பதிவை நீங்கள் வைத்திருக்க விரும்பினால், வெளிப்புறத் தரவுத்தளத்தைப் பராமரிக்க வேண்டும்.
- கிஃப்ட் கார்டுகளை முடக்க மட்டுமே முடியும், அவற்றை நீக்க முடியாது. அந்த எண்ணைக் கொண்ட அசல் கிஃப்ட் கார்டு முடக்கப்பட்டிருந்தாலும், அதே கிஃப்ட் கார்டு எண்ணை எதிர்காலத்தில் மீண்டும் பயன்படுத்த முடியாது.
- ஏற்கெனவே உள்ள கிஃப்ட் கார்டுகளை வாடிக்கையாளரின் மின்னஞ்சல் முகவரியுடன் இறக்குமதி செய்தால், வாடிக்கையாளர்களின் கிஃப்ட் கார்டுகளை இறக்குமதி செய்யும்போது அவர்கள் அறிவிப்புகளைப் பெறுவதைத் தடுக்க, கிஃப்ட் கார்டு அறிவிப்பு மின்னஞ்சல்களைத் தற்காலிகமாக முடக்குவதற்கு Shopify Plus ஆதரவைத் தொடர்புகொள்ளலாம்.
ஏற்கெனவே உள்ள எந்தவொரு கிஃப்ட் கார்டுகளையும் Shopify-க்கு இடமாற்ற, நீங்கள் மூன்றாம் தரப்பு கிஃப்ட் கார்டு இடமாற்றச் செயலியையும் பயன்படுத்தலாம்.
5. B2B தரவை இடமாற்றுதல்
Shopify B2B என்பது ஆன்லைன் ஸ்டோர் மூலம் பிசினஸ்-டு-பிசினஸ் (B2B) விற்பனை செய்ய அனுமதிக்கும் அம்சங்களின் தொகுப்பாகும். இதற்கு மூன்றாம் தரப்புச் செயலிகளோ மாற்றுவழிகளோ தேவையில்லை. Shopify B2B-ஐப் பயன்படுத்தத் திட்டமிட்டிருந்தால், நிறுவனங்கள் மற்றும் கேட்டலாக்குகள் போன்ற கூடுதல் தரவு வகைகளை நீங்கள் இடமாற்ற வேண்டியிருக்கலாம்.
உங்கள் Shopify நிர்வாகியில் நிறுவனங்கள் மற்றும் இடங்களை மேனுவலாக உருவாக்கலாம் அல்லது Matrixify என்ற மூன்றாம் தரப்புச் செயலி மூலம் மொத்தமாக இறக்குமதி செய்யலாம். கேட்டலாக்குகளை மேனுவலாக உருவாக்கலாம் அல்லது உங்கள் Shopify நிர்வாகியில் Shopify வடிவத்தில் உள்ள CSV கோப்புகளைப் பயன்படுத்தி மொத்தமாக இறக்குமதி செய்யலாம்.
6. பிற தரவை இடமாற்றுதல்
உங்கள் பிசினஸ் தேவைகளைப் பொறுத்து, நீங்கள் இடமாற்ற வேண்டிய பிற தரவுகளும் இருக்கலாம். இடமாற்ற ஆலோசனை பற்றி விசாரிக்க, Shopify Plus ஆதரவைத் தொடர்புகொள்ளவும். மூன்றாம் தரப்பு தரவு இடமாற்றச் செயலியைப் பயன்படுத்தி உங்கள் தள்ளுபடிகள் மற்றும் வலைப்பதிவுகளை இடமாற்றலாம்.
உள்ளடக்கத்தை உருவாக்குதல் மற்றும் பதிவேற்றுதல்
பக்கங்கள் மற்றும் வலைப்பதிவு இடுகைகள் போன்ற உள்ளடக்கத்தை உருவாக்கி, உங்களின் கோப்புகள் மற்றும் படங்களைப் பதிவேற்றவும். உங்கள் Shopify ஸ்டோரைத் தனிப்பயனாக்க, மெட்டாஃபீல்டுகள் மற்றும் மெட்டாஆப்ஜெக்ட்களைப் பயன்படுத்தவும்.
பக்கங்கள்
உங்கள் ஆன்லைன் ஸ்டோருக்காக FAQ, எங்களைப் பற்றி அல்லது எங்களைத் தொடர்புகொள்ளவும் போன்ற பக்கங்களை நீங்கள் உருவாக்கலாம். நீங்கள் Shopify Theme Store-இலிருந்து ஒரு தீமைப் பயன்படுத்தினால், பிரிவுகள் மற்றும் பிளாக்குகளைப் பயன்படுத்தி உங்கள் சொந்தப் பக்க வார்ப்புருக்களை உருவாக்க அனுமதிக்கும் இணக்கமான தீமைப் பயன்படுத்தலாம்.
வலைப்பதிவுகள்
Shopify ஒரு உள்ளடக்க மேலாண்மை அமைப்பைக் கொண்டுள்ளது, எனவே வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் உங்கள் சொந்த வலைப்பதிவு இடுகைகளுடன் வெவ்வேறு வலைப்பதிவுகளை நீங்கள் உருவாக்கலாம். உங்கள் இணையப்பக்கங்களில் மெட்டா தலைப்புகள், விளக்கங்கள் மற்றும் பலவற்றைச் சேர்க்க அனுமதிக்கும் அம்சங்களையும் Shopify கொண்டுள்ளது. முந்தைய வலைப்பதிவு URL-களில் இருந்து திசைதிருப்பல்களையும் நீங்கள் அமைக்கலாம்.
கோப்புகள் மற்றும் படங்களைப் பதிவேற்றுதல்
உங்கள் மீடியா மற்றும் உள்ளடக்கம் கோப்பிற்கான தேவைகளைப் பூர்த்தி செய்வதை உறுதிசெய்யவும்.
மெட்டாஃபீல்டுகள்
Shopify நிர்வாகியில் இயல்புநிலையாகச் சேகரிக்கப்படாத சிறப்பான தகவல்களைச் சேமிக்க உங்களை அனுமதிப்பதன் மூலம், உங்கள் Shopify ஸ்டோரின் செயல்பாடு மற்றும் தோற்றத்தைத் தனிப்பயனாக்க மெட்டாஃபீல்டுகள் உதவுகின்றன. அகக் கண்காணிப்பிற்காக அல்லது உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் சிறப்பான தகவல்களைப் பல்வேறு வழிகளில் காண்பிக்க, மெட்டாஃபீல்டுகளைப் பயன்படுத்தலாம்.
மெட்டாஆப்ஜெக்ட்டுகள்
உங்கள் ஸ்டோருக்கான கூடுதல் கட்டமைக்கப்பட்ட தகவல்களைச் சேர்க்கவும் சேமிக்கவும் மெட்டாஆப்ஜெக்ட்டுகள் உதவுகின்றன. எடுத்துக்காட்டாக, சிறப்பம்சங்கள், விவரக்குறிப்புகள், அளவு விளக்கப்படங்கள் போன்ற ஒரு தயாரிப்புக்கான தகவல்களை நீங்கள் சேமிக்கலாம்.
அறிவிப்புகள்
தரவை ஒழுங்கமைத்தல்
டேக்குகளைப் பயன்படுத்தி உங்கள் வாடிக்கையாளர்கள், தயாரிப்புகள், ஆர்டர்களை ஒழுங்கமைக்கவும். தொகுப்புகளைப் பயன்படுத்தி உங்கள் தயாரிப்புகளைக் குழுவாக்கவும், மேலும் மெட்டாஃபீல்டுகளைப் பயன்படுத்தி நிபந்தனைகளுடன் தொகுப்புகளை உருவாக்கவும்.
தொகுப்புகள்
வாடிக்கையாளர்கள் வகைகளின்படி தயாரிப்புகளை எளிதாகக் கண்டறிய, உங்கள் தயாரிப்புகளைத் தொகுப்புகளாகக் குழுவாக்கலாம். வாடிக்கையாளர்களுக்காக உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் ஒரு தொகுப்பை வெளிப்புறமாகக் காட்ட நீங்கள் தேர்வுசெய்யலாம் அல்லது வரியற்ற தயாரிப்புத் தொகுப்பை உருவாக்குவது போன்ற உங்களின், உங்கள் பணியாளர்களின் அகப் பயன்பாட்டிற்கு ஒரு தொகுப்பைப் பயன்படுத்தலாம்.
வாடிக்கையாளர், தயாரிப்பு, ஆர்டர் டேக்குகள்
டேக்குகளைப் பயன்படுத்தும்போது துல்லியமாக இருக்க, பெரிய, சிறிய எழுத்துகளின் வடிவமைப்பு மற்றும் இடைவெளியைச் சீராகப் பயன்படுத்துவதை உறுதிசெய்யவும், இதன்மூலம் கூடுதல் டேக்குகள் தற்செயலாக உருவாக்கப்படுவதைத் தவிர்க்கலாம்.
மெட்டாஃபீல்டுகள்
API அல்லது செயலிகளைப் பயன்படுத்தி நேரடியாக உங்கள் Shopify நிர்வாகியில் மெட்டாஃபீல்டு வரையறைகளை உருவாக்கலாம், திருத்தலாம்.
உங்கள் Shopify நிர்வாகி அமைப்புகளை உள்ளமைத்தல்
உங்கள் ஸ்டோரின் பொதுவான தகவல்களை அமைக்கவும், பணியாளர்களைச் சேர்க்கவும், ஸ்டோர் அமைப்புகளை உள்ளமைக்கவும்.
பொதுவானவை
உங்கள் ஆன்லைன் ஸ்டோரின் தொடர்புத் தகவல்கள், சட்டப்பூர்வ வணிகப் பெயர் மற்றும் முகவரி, ஸ்டோர் நாணயம், இயல்புநிலை எடை அலகுகள் ஆகியவற்றை அமைக்கவும் அல்லது மாற்றவும்.
பயனர்கள் மற்றும் அனுமதிகள்
பணியாளர் கணக்குகளை அமைக்கவும், எந்தவொரு கூட்டாளர்களுக்கும் கூட்டுப்பணியாளர் அனுமதிகளை வழங்கவும்.
பேமெண்ட்டுகள்
உங்கள் ஸ்டோரில் பேமெண்ட்டுகள் மற்றும் கட்டண முறைகளை அமைக்கவும். கடையின் உரிமையாளர் மட்டுமே Shopify Payments ஐ அமைக்க முடியும்.
உங்கள் Shopify ஸ்டோரை நீங்கள் அமைக்கும்போது, உங்கள் ஸ்டோரில் உள்நுழைய நீங்கள் பயன்படுத்தும் மின்னஞ்சல் முகவரியைக் கொண்டு PayPal Express Checkout கணக்கு உருவாக்கப்படும். நீங்கள் இந்தக் கணக்கையோ உங்களின் சொந்தக் கணக்கையோ பயன்படுத்தலாம் அல்லது PayPal Express Checkout ஐ முடக்கலாம்.
செக்அவுட் தனிப்பயனாக்கம்
செக்அவுட் தோற்றம், செயல்பாட்டைத் தனிப்பயனாக்கவும். எடுத்துக்காட்டாக, உங்கள் செக்அவுட் மொழியை நீங்கள் தேர்வுசெய்யலாம், மேலும் வாடிக்கையாளர் கணக்குகள் அல்லது சில செக்அவுட் புலங்களைக் கட்டாயமாக்க வேண்டுமா அல்லது விருப்பத்திற்குரியதாக மாற்ற வேண்டுமா என்பதையும் நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.
செக்அவுட் பிரத்தியேகமாக்கல்கள் மற்றும் செக்அவுட், கணக்குகள் எடிட்டர் ஆகியவற்றுடன் சேர்த்து, Checkout Branding API க்கான அணுகலையும் Shopify Extensions வழங்குகிறது.
மூன்றாம் தரப்புச் செயலிகளைப் பயன்படுத்தி உங்கள் செக்அவுட்டைத் தனிப்பயனாக்கலாம் மற்றும் விரிவாக்கலாம். உங்கள் கூட்டாளர் அல்லது டெவலப்மெண்ட் குழுவால் உங்கள் ஸ்டோருக்கான செக்அவுட் செயலிகளை உருவாக்க முடியும்.
- செக்அவுட் செயலி நீட்டிப்புகள்
- செக்அவுட் UI நீட்டிப்புகள்
- நீட்டிப்பு இலக்குகள்
- செக்அவுட் UI நீட்டிப்புகளின் கூறுகள்
- செக்அவுட் நீட்டிப்பு APIகள்
வாடிக்கையாளர் கணக்குகள்
உங்கள் வாடிக்கையாளர்கள் தங்கள் ஆர்டர் வரலாறு மற்றும் கணக்குத் தகவலை அணுகும் வகையில், உங்கள் ஸ்டோரில் உள்நுழைய வாடிக்கையாளர் கணக்குகள் அனுமதிக்கின்றன. நீங்கள் Shopify B2B-ஐப் பயன்படுத்தினால், B2B ஆர்டர்களை ஏற்க வாடிக்கையாளர் கணக்குகளை நீங்கள் செயல்படுத்த வேண்டும்.
ஷிப்பிங் மற்றும் டெலிவரி
உங்களுக்குச் சிக்கலான ஷிப்பிங் தேவைகள் இருந்தால், நீங்கள் Shopify App Store இலிருந்து மூன்றாம் தரப்பு ஷிப்பிங் செயலிகளைப் பயன்படுத்தலாம்.
வரி மற்றும் சுங்க வரிகள்
இருப்பிடங்கள்
Shopify-இல் உள்ள இருப்பிடங்கள் என்பவை நீங்கள் தயாரிப்புகளை விற்கிற, ஆர்டர்களை ஷிப்பிங் செய்கிற அல்லது நிறைவேற்றுகிற மற்றும் சரக்கு இருப்பை ஸ்டாக் செய்கிற செயலிகள் அல்லது நேரடி இடங்களைக் குறிக்கின்றன.
பரிசு கார்டுகள்
இயல்பாகவே, ஒரு ஆர்டருக்கான கட்டணம் செலுத்தப்பட்டதும் கிஃப்ட் கார்டுகள் தானாகவே நிறைவேற்றப்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன, அத்துடன் வாடிக்கையாளர் ஓர் அறிவிப்பு மின்னஞ்சலைப் பெறுவார். கிஃப்ட் கார்டுகள் உட்பட ஆர்டரில் உள்ள அனைத்து உருப்படிகளையும் மேனுவலாக நிறைவேற்ற, நீங்கள் நிறைவேற்றல் அமைப்பை மாற்றிக்கொள்ளலாம்.
ஒரு ஆர்டர் மிதமான அல்லது அதிக ஆபத்துள்ளதாக இருந்தால், அந்த ஆர்டரில் உள்ள கிஃப்ட் கார்டுகள் தானாகவே நிறைவேற்றப்படாது. ஆர்டரின் விவரப் பக்கத்திலிருந்து கிஃப்ட் கார்டுகளை நீங்கள் மேனுவலாக நிறைவேற்றலாம்.
சர்வதேச விற்பனைக் கருவிகள்
விற்பனை செய்வதற்கான கூடுதல் நாடுகளை அமைக்கவும், உங்கள் வணிகத்தைச் சர்வதேசமயமாக்கவும் சர்வதேச விற்பனைக் கருவிகள் உங்களை அனுமதிக்கின்றன.
வாடிக்கையாளர் தனியுரிமை
நீங்கள் விற்பனை செய்யும் பிராந்தியங்களில் உள்ள தரவுப் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்ற, உங்கள் வாடிக்கையாளர் தனியுரிமை அமைப்புகளை உள்ளமைக்கவும்.
செயலிகள் மற்றும் விற்பனைச் சேனல்கள்
உங்கள் ஸ்டோரை அறிமுகப்படுத்துவதற்கு முன் சோதனை செய்ய உங்களுக்குப் போதிய நேரம் கிடைக்கும் வகையில், உங்கள் ஸ்டோரை அமைக்கும்போதே தேவையான செயலிகளை நிறுவிவிடுங்கள். நீங்கள் Shopify App Store இலிருந்து செயலிகளைப் பயன்படுத்த நினைத்தால், அவற்றை நிறுவும் முன் அவற்றின் செயல்பாடுகளைக் கவனமாக மதிப்பாய்வு செய்யவும். சில செயலிகளுக்குச் சோதனைக் காலங்கள் இருக்கலாம். தேவையற்ற கட்டணங்களைத் தவிர்க்க, சோதனைக் காலம் முடிவதற்கு முன்பாகவே அத்தகைய செயலிகளை நிறுவல் நீக்குவதை உறுதிசெய்யவும்.
சில செயலிகள் உங்கள் தீமில் குறியீட்டைச் சேர்க்கக்கூடும், எனவே ஒரு செயலி உங்கள் தீமின் குறியீட்டில் ஏற்படுத்தும் மாற்றங்களை நீங்கள் ஆவணப்படுத்த வேண்டும், அத்துடன் நீங்கள் செயலியை நிறுவல் நீக்கும்போது தேவையற்ற குறியீடு ஏதேனும் இருந்தால் அதை அகற்றிவிட வேண்டும்.
பின்வரும் செயலிப் பரிந்துரைகளை மதிப்பாய்வு செய்யவும்:
- Shopify வழங்கும் செயலிகள் மற்றும் விற்பனைச் சேனல்கள்
- சிறந்த 20+ இலவச Shopify செயலிகள்
- முதல் 12 Shopify ஈகாமர்ஸ் செயலிகள்
- B2B வாங்குதல் மற்றும் விற்பனைக்காக உருவாக்கப்பட்ட செயலிகள்
டொமைன்கள்
பிக்சல்கள் மற்றும் வாடிக்கையாளர் நிகழ்வுகள்
பிராண்ட்
அறிவிப்புகள்
உங்கள் அறிவிப்புகளின் உள்ளடக்கம் மற்றும் வடிவமைப்பை நீங்கள் தனிப்பயனாக்கலாம். Shopify Plus திட்டத்தில் உள்ள ஒரு வணிகராக, நீங்கள் Shopify Plus ஆதரவைத் தொடர்புகொண்டு உங்கள் மின்னஞ்சல் அறிவிப்புகளை முடக்குமாறு கேட்கலாம். நீங்கள் உங்கள் தரவை இடமாற்றும்போது அல்லது உங்களின் சொந்தச் சந்தைப்படுத்தல் தன்னியக்கமாக்கல் அமைப்பிலிருந்து ஆர்டர் உறுதிப்படுத்தல்களையும் புதுப்பிப்புகளையும் அனுப்ப விரும்பும்போது இது பயனுள்ளதாக இருக்கலாம்.
தனிப்பயன் தரவு
மொழிகள்
நீங்கள் பல மொழிகளைக் கொண்ட ஸ்டோர்ஃபிரண்டை உருவாக்குகிறீர்கள் எனில், உங்கள் ஸ்டோரில் கூடுதல் மொழிகளைச் சேர்க்கலாம்.
கொள்கைகள்
பணத்தைத் திரும்பப்பெறுதல் கொள்கை, ஷிப்பிங் கொள்கை, சேவை விதிமுறைகள் அல்லது தனியுரிமைக் கொள்கை போன்ற உங்கள் ஸ்டோர் கொள்கைகளை நீங்கள் அமைக்கலாம். இலவசத் தனியுரிமைக் கொள்கை ஜெனரேட்டரையும் நீங்கள் பயன்படுத்தலாம்.
உங்கள் ஆன்லைன் ஸ்டோரை அமைத்தல்
உங்கள் ஆன்லைன் ஸ்டோர் தீமைத் தேர்ந்தெடுத்து, ஆன்லைன் ஸ்டோரின் விருப்பத்தேர்வுகள், மெனுக்கள் மற்றும் வடிகட்டல் ஆகியவற்றை உள்ளமைக்கவும்.
தீம்கள்
உங்கள் ஆன்லைன் ஸ்டோருக்கான தீம்களை Shopify Theme Store இல் ஆராயலாம். இலவச மற்றும் கட்டண தீம்களில் இருந்து நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். தீம்கள் வெவ்வேறு அம்சங்களைக் கொண்டிருக்கலாம், அத்துடன் பெரிய அல்லது சிறிய தயாரிப்பு அட்டவணைகள் போன்ற குறிப்பிட்ட வணிகத் தேவைகளுக்கு மிகவும் பொருத்தமானவையாக இருக்கும். தீமின் டெமோ பதிப்பை நிறுவி, தீமை நீங்களே முன்னோட்டமிடலாம்.
உங்கள் ஸ்டோரின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஆயத்த தீம் எதையும் உங்களால் கண்டறிய முடியவில்லை எனில், உங்களுக்கெனச் சொந்தமாக ஒரு தீமை உருவாக்க டெவலப்பர் அல்லது ஏஜென்சியுடன் இணைந்து பணியாற்றுவது குறித்துப் பரிசீலிக்கலாம். Shopify தீம்களை உருவாக்குவது மற்றும் சிறந்த நடைமுறைகள் பற்றி மேலும் அறிக.
விருப்பத்தேர்வுகள்
மெனுக்கள்
ஸ்டோர்ஃபிரண்ட் வடிகட்டல்
Google Analytics
Google Analytics ஐப் பயன்படுத்துவது மற்றும் சிறந்த நடைமுறைகள் பற்றி மேலும் அறியப் பின்வரும் ஆதாரங்களைப் பார்க்கவும்:
Shopify ஆதரிக்கும் செயலிகள் மற்றும் ஒருங்கிணைப்புகள்
உங்கள் ஆன்லைன் ஸ்டோரை மேம்படுத்தவும் தனிப்பயனாக்கவும் Shopify உருவாக்கியுள்ள செயலிகள் மற்றும் விற்பனைச் சேனல்களை ஆராயுங்கள்.
மீண்டும் மீண்டும் செய்யும் பணிகளைத் தானியங்குபடுத்துவதற்கும் உங்களின் செக்அவுட் செயல்பாட்டை மேலும் தனிப்பயனாக்குவதற்கும் உதவ, பின்வரும் Shopify செயலிகளைப் பயன்படுத்துவது குறித்துப் பரிசீலிக்கவும்:
- Launchpad மூலம் விற்பனை, தயாரிப்பு அறிமுகங்கள் மற்றும் சரக்கு இருப்பு மீளிருப்புகள் போன்ற நிகழ்வுகளுக்குத் தொடக்கத் தேதி மற்றும் முடிவுத் தேதியை அமைத்துத் திட்டமிடவும், ஒருங்கிணைக்கவும் மற்றும் நடத்தவும் முடியும்.
- தள்ளுபடிகள், ஷிப்பிங் மற்றும் கட்டண முறைகளுக்கான தனிப்பயனாக்கங்களை Shopify Functions ஆதரிக்கிறது.
- எந்தவொரு குறியீட்டு முறையும் இல்லாமல் உங்கள் ஸ்டோருக்கும் செயலிகளுக்கும் இடையேயான பணிகள் மற்றும் செயல்முறைகளைத் தானியங்குபடுத்த Shopify Flow உங்களை அனுமதிக்கிறது.
Shopify உருவாக்கியுள்ள பிற செயலிகள் மற்றும் விற்பனைச் சேனல்களில் பின்வரும் உதாரணங்கள் அடங்கும்:
- Shop
- Shopify Audiences
- Shopify Bundles
- Shopify Collabs
- Shopify Collective
- Shopify Messaging
- Shopify Forms
- Shopify Inbox
- Shopify விற்பனைப் புள்ளி
- Shopify Search & Discovery
- Marketplace Connect
- கார்பன்‑நடுநிலை ஷிப்பிங்கிற்கான Planet செயலி
Shop Pay Installments
மூன்றாம் தரப்புச் சேவை தேவைப்படாமலேயே, Shop Pay Installments மூலம் உங்கள் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் கட்டண விருப்பத்தேர்வுகளை நீங்கள் வழங்கலாம். Shop Pay இல் Installments உட்பொதிக்கப்பட்டுள்ளதால், அனைத்து Installments பேமெண்ட்டுகளும் உங்களின் Shopify பேஅவுட் அறிக்கைகளில் சேர்க்கப்படும், இது மூன்றாம் தரப்புச் சேவைகளில் இருந்து அறிக்கைகளைச் சரிபார்க்க வேண்டிய தேவையைக் குறைக்கும்.
Shopify வரி இன்ஜின்
பிரத்தியேக ஒருங்கிணைப்புகள்
கிடைக்கக்கூடிய செயலிகள் மற்றும் ஒருங்கிணைப்புகளை நீங்கள் ஆராய்ந்தும் இன்னும் உங்களுக்கு ஒரு தனிப்பயன் தீர்வு தேவைப்பட்டால், Shopify API ஐப் பயன்படுத்தித் தனிப்பயன் செயலியை உருவாக்குவதற்கான விருப்பத்தேர்வு உங்களுக்கு உள்ளது.
Shopify API பதிப்பாக்கம் (versioning) இயங்குதளத்தைத் தொடர்ந்து மேம்படுத்த உதவுவதோடு அம்ச மேம்பாடுகள் மற்றும் நீக்கங்கள் குறித்து டெவலப்பர்களுக்கு யூகிக்கக்கூடிய வழியையும் வழங்குகிறது. வரவிருக்கும் API மாற்றங்களைப் பற்றி அறிய, டெவலப்பர் மாற்றப் பதிவைப் பின்தொடரவும்.
உங்களுக்கான சொந்த செயலியை உருவாக்க உதவும் பின்வரும் ஆதாரங்களைப் பார்க்கவும்:
பிரத்தியேக ஸ்டோர்ஃபிரண்ட் அனுபவங்கள்
Shopify மற்றும் கூட்டாளர்கள் வழங்கும் விற்பனைச் சேனல்கள் அல்லது செயலிகள் ஏதேனும் ஒன்றில் உங்கள் வணிக மாதிரி பொருந்தவில்லை எனில், பிரத்தியேக ஸ்டோர்ஃபிரண்ட் ஒன்றை உருவாக்க டெவலப்பர் ஒருவருடன் இணைந்து செயல்படுவது குறித்து நீங்கள் பரிசீலிக்கலாம்.
மூன்றாம் தரப்புச் செயலிகள் மற்றும் ஒருங்கிணைப்புகள்
நீங்கள் Shopify App Store மூலம் மூன்றாம் தரப்புச் செயலிகளையும் விற்பனைச் சேனல்களையும் நிறுவலாம். சில மூன்றாம் தரப்புச் செயலிகள் Shopify Plus Certified App Program திட்டத்தின் அங்கமாக இருக்கும். அதில் நிறுவனத் தீர்வுகளுக்கான Shopify-இன் சிறந்த பரிந்துரைகளும் அடங்கும்.
பல மூன்றாம் தரப்பு சிஸ்டம்களில் கனெக்டர் செயலிகள் ஏற்கனவே இருக்கின்றன. ஒரு பிரத்தியேக ஒருங்கிணைப்பை உருவாக்குவதற்குப் பதிலாக, கனெக்டர் செயலி ஏதேனும் இருக்கிறதா என்று சோதிக்க, Shopify App Store-இல் தேடவும்.
பிரத்தியேக ஒருங்கிணைப்பு ஒன்றை உருவாக்க உங்களுக்கு உதவி தேவைப்பட்டால், Shopify ஆதரிக்கும் செயலிகள் மற்றும் ஒருங்கிணைப்புகளைப் பார்க்கவும்.
நிறுவன வளத் திட்டமிடல் (ERP) ஒருங்கிணைப்புக் கூட்டாளர்கள்
Shopify-இன் Global ERP Program மற்றும் European ERP Program ஆகியவற்றில், உங்கள் Shopify ஸ்டோருடன் நேரடியாக ஒருங்கிணைக்கக்கூடிய அங்கீகரிக்கப்பட்ட ERP செயலிகளின் தொகுப்பு உள்ளது. உங்களின் ERP தற்போது Shopify-உடன் ஒருங்கிணைக்கப்படவில்லை எனில், உங்கள் ERP மற்றும் Shopify இடையே ஹோஸ்ட் செய்யப்பட்ட, பயன்படுத்தத் தயாராக உள்ள கனெக்டரை வழங்கும் ஒருங்கிணைப்புக் கூட்டாளரைப் பயன்படுத்துவது குறித்துப் பரிசீலிக்கவும்.
பிரத்தியேக ஒருங்கிணைப்புகள்
Shopify API மூலம் பிரத்தியேக கனெக்டர்களைப் பயன்படுத்தி, மூன்றாம் தரப்பு சிஸ்டம்களை இணைப்பதை நிர்வகிக்க நீங்கள் விரும்பலாம். உங்களுக்கான சொந்தச் செயலியை உருவாக்குவதைத் தொடங்க உதவும் சில ஆதாரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன:
பிளாட்ஃபார்மைத் தொடர்ந்து மேம்படுத்தவும், அம்ச மேம்பாடுகள் மற்றும் நீக்கங்கள் குறித்து டெவலப்பர்கள் முன்கூட்டியே அறியும் வகையிலும் Shopify API பதிப்பாக்கத்தைப் பயன்படுத்துகிறது. வரவிருக்கும் API மாற்றங்கள் குறித்து நீங்கள் எப்போதுமே அறிந்துகொள்வதை உறுதிசெய்ய, டெவலப்பர் மாற்றப் பதிவைப் பின்தொடரவும்.
பிரத்தியேக ஒருங்கிணைப்பு ஒன்றை உருவாக்க உங்களுக்கு உதவி தேவைப்பட்டால், ERP ஒருங்கிணைப்புக் கூட்டாளர்களின் பட்டியலைப் பார்க்கவும்.
சர்வதேச விற்பனைக் கருவிகளை அமைத்தல்
எல்லை தாண்டி விற்பனை செய்யவும் உங்கள் வணிகத்தை பிற நாடுகளுக்கும் பிராந்தியங்களுக்கும் விரிவுபடுத்தவும் சர்வதேச விற்பனைக் கருவிகளை அமைக்கலாம். Managed Markets அமெரிக்காவை அடிப்படையாகக் கொண்ட வணிகங்களுக்கு மட்டுமே கிடைக்கிறது.
- சர்வதேச விற்பனைக் கருவிகள் மற்றும் Managed Markets ஆகியவற்றை ஒப்பிடுங்கள்
- சர்வதேச விற்பனைக் கருவிகளை ஆராயுங்கள்
- Managed Markets என்பதை ஆராயுங்கள்
சர்வதேச விற்பனைக் கருவிகளுடன் சந்தைகளை உருவாக்கி நிர்வகியுங்கள்
நீங்கள் வரம்பற்ற நாடு அல்லது பிராந்தியச் சந்தைகளை உருவாக்கலாம். சந்தை வகைகள் பற்றி மேலும் அறிக.
பல நாணயத்திற்கான Shopify Payments
செக்அவுட் முடியும் வரை பல நாணய விருப்பம் இருப்பதற்கு, Shopify Payments-ஐ உங்கள் முதன்மைக் கட்டண நுழைவாயிலாக நீங்கள் அமைக்க வேண்டும், இதன் மூலம் ஒவ்வொரு சந்தையின் வாடிக்கையாளர்களும் தங்கள் உள்ளூர் நாணயத்தில் பொருட்களை வாங்க முடியும்
ஷிப்பிங் சுயவிவரங்கள்
மொழிபெயர்ப்பு மற்றும் உள்ளூர்மயமாக்கல்
சந்தாக்களை அமைத்தல்
உங்கள் Shopify நிர்வாகி மூலமாகவே நேரடியாக உங்களின் தயாரிப்புச் சந்தாக்களை உருவாக்கி நிர்வகிக்கலாம்.
சந்தாக்கள் B2B-உடன் பொருந்தாது.
சந்தாக்களை இடமாற்றுதல்
சந்தாக்களை இடமாற்ற, Shopify Payments, Authorize.net அல்லது Stripe ஆகியவற்றை முதன்மைக் கட்டண நுழைவாயிலாக நீங்கள் பயன்படுத்த வேண்டும். சந்தா இடமாற்றச் செயல்முறையானது மூன்றாம் தரப்புச் செயலிகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது, Shopify-ஆல் அல்ல. எனவே, இடமாற்றச் செயல்முறையானது ஒவ்வொரு செயலிக்கும் மாறுபடும், மேலும் இது செயலிக்குள்ளேயே தொடங்கப்படும்.
பிரத்தியேகச் சந்தாச் செயலி
உங்கள் செக்அவுட்டிற்கான சொந்தச் சந்தாச் செயலியையும் நீங்கள் உருவாக்கலாம்.
சந்தாக்களை நிர்வகித்தல்
Shopify B2B-ஐ அமைத்தல்
Shopify B2B என்பது, மூன்றாம் தரப்புச் செயலிகளையோ மாற்றுவழிகளையோ பயன்படுத்தத் தேவையில்லாமல், ஆன்லைன் ஸ்டோர் மூலம் வணிகங்களுக்கு இடையே (B2B) விற்பனை செய்ய உங்களை அனுமதிக்கும் அம்சங்களின் தொகுப்பாகும்.
Shopify B2B கவனத்தில் கொள்ள வேண்டியவை
Shopify B2B-ஐப் பயன்படுத்துவதற்கு முன், கவனத்தில் கொள்ள வேண்டிய பின்வருவனவற்றை மதிப்பாய்வு செய்யவும்:
- Shopify B2B-ஆனது, புதிய வாடிக்கையாளர் கணக்குகள் பதிப்பில் மட்டுமே செயல்படும்.
- சந்தாக்கள் B2B-உடன் பொருந்தாது.
- Shopify POS, B2B-உடன் இணங்காது.
உங்களின் மொத்த விற்பனைத் தேவைகளை Shopify B2B பூர்த்தி செய்யவில்லை எனில், மூன்றாம் தரப்பு மொத்த விற்பனைச் செயலியைப் பரிசீலனை செய்யவும்.
நிறுவனங்களை உருவாக்குதல் அல்லது இடமாற்றம் செய்தல்
- உங்கள் Shopify நிர்வாகியில் B2B நிறுவனங்களை உருவாக்குங்கள்
- Matrixify செயலியைப் பயன்படுத்தி B2B நிறுவனங்களை Shopify-க்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யுங்கள்
B2B கேட்லாக்குகள் மற்றும் அளவு விதிகளை அமைத்தல்
நீங்கள் ஒட்டுமொத்தமாக நிறுவனங்களுக்கு விலைப்பட்டியல்களைச் சேர்க்கலாம். அதிகரிப்புகள் மற்றும் குறைந்தபட்ச அல்லது அதிகபட்ச அளவுகள் போன்ற அளவு விதிகளுக்கு 8.0.0 மற்றும் அதற்குப் பிந்தைய இலவச Shopify தீம் வெர்ஷன்களில் மட்டுமே ஆதரவளிக்கப்படும்.
B2B ஆர்டர் வரலாற்றை இறக்குமதி செய்தல்
REST Admin API-ஐப் பயன்படுத்தி Shopify-இல்லாத B2B ஆர்டர் வரலாற்றை நீங்கள் இறக்குமதி செய்யலாம்.
உங்கள் ஸ்டோரை அறிமுகப்படுத்தத் தயார்படுத்துதல்
உங்கள் ஸ்டோரை அறிமுகப்படுத்துவதற்கு முன், உங்கள் ஸ்டோரில் உள்ள அனைத்தும் திட்டமிட்டபடிச் செயல்படுகின்றனவா என்பதை நீங்கள் உறுதிசெய்ய வேண்டும். அத்துடன் URL திசைதிருப்பல்களை அமைத்தல், சோதனை ஆர்டர்களைச் செய்தல், உங்கள் டொமைனை அமைத்தல், மற்றும் உங்கள் செயலிகள் மற்றும் பயனர்களை மதிப்பாய்வு செய்தல் ஆகியவற்றையும் மேற்கொள்ள வேண்டும்.
URL திசைதிருப்பல்கள்
சுமுகமான மாற்றத்தை உறுதிசெய்யவும், டிராஃபிக் மற்றும் SEO-வில் ஏற்படும் எதிர்மறைத் தாக்கத்தைத் தவிர்க்கவும், நீங்கள் 301 திசைதிருப்பல்களை உருவாக்க வேண்டும். இல்லையெனில், உங்களின் பழைய இணைப்புகள் 404 ஈவென்ட்களாக (செயலிழந்த இணைப்புகள்) மாறி வாடிக்கையாளர்களைக் குழப்புவதுடன் தேடல் முடிவுகளிலும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.
- உங்கள் Shopify நிர்வாகியில் URL திசைதிருப்பல்களை மேனுவலாக உருவாக்குங்கள்
- உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து நேரடியாக CSV கோப்பைப் பயன்படுத்தி URL திசைதிருப்பல்களை இறக்குமதி செய்யுங்கள்
- மூன்றாம் தரப்புப் பக்கத் திசைதிருப்பல் செயலியைப் பயன்படுத்தி URL திசைதிருப்பல்களை இறக்குமதி செய்யுங்கள்.
சோதனை ஆர்டர்கள்
உங்கள் ஆர்டர் ஓட்டத்தை முழுமையாகச் சரிபார்க்கவும். உங்கள் ஸ்டோர்ஃபிரண்டில் சோதனை ஆர்டர்களைச் செய்து, அந்த ஆர்டர்களை நிறைவேற்றவும். முடிந்தளவு அதிகமான சூழ்நிலைகளில் சோதிக்கவும். எடுத்துக்காட்டாக, பின்வரும் சூழ்நிலைகளுடன் ஆர்டர்களைச் சோதிக்கவும்:
- தள்ளுபடிக் குறியீடுகள்
- வாடிக்கையாளர் உள்நுழைந்திருக்கும்போதும் வெளியேறியிருக்கும்போதும்
- வெவ்வேறு கட்டண முறைகள்
- வெவ்வேறு ஷிப்பிங் கட்டணங்கள்
- வெவ்வேறு ஷிப்பிங் முகவரிகள் (வரி எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதில் சிறப்புக் கவனம் செலுத்துவதுடன்)
- வெவ்வேறு சாதனங்கள்
- தோல்வியடைந்த பரிவர்த்தனைகள்
நீங்கள் சோதனை ஆர்டரைச் செய்த பிறகு, பின்வரும் சூழ்நிலைகளைச் சோதிக்கவும்:
- வாடிக்கையாளராக நீங்கள் பெறும் ஆர்டர் அறிவிப்பை மதிப்பாய்வு செய்யவும். நீங்கள் ஆர்டர் அறிவிப்புகளில் ஏதேனும் மாற்றங்களைச் செய்ய விரும்பினால், உங்கள் அறிவிப்பு வார்ப்புருக்களைத் திருத்தலாம்.
- நீங்களாகவே, செயலி மூலமாக அல்லது ERP மூலமாக ஆர்டர்களை நிறைவேற்றத் திட்டமிட்டிருந்தாலும், உங்களின் ஆர்டர் நிறைவேற்ற ஓட்டத்தைச் சோதிக்கவும்.
- உங்கள் சோதனை ஆர்டருக்கு, பணத்தை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ திரும்பப்பெறுதலை வழங்கவும்.
டெல்டா இடமாற்றத்தைத் திட்டமிடுங்கள்
டெல்டா இடமாற்றம் என்பது உங்களின் தொடக்க இடமாற்றத்திற்கு நீங்கள் தேர்ந்தெடுத்த கட்-ஆஃப் புள்ளிக்குப் பிறகு பழைய ஸ்டோரில் சேர்க்கப்பட்ட புதிய தரவை மாற்றுவதாகும். டெல்டா இடமாற்றத்தைச் செய்வதற்கான முறைகள், நீங்கள் தொடக்க இடமாற்றத்திற்குப் பயன்படுத்திய முறையைப் போன்றதே ஆகும். இருப்பினும், சில முக்கியமான அம்சங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும்:
- டெல்டா இடமாற்றத்திற்கான தரவின் அளவு, லைவ்-ஆகும் தேதியிலிருந்து கட்-ஆஃப் புள்ளி எவ்வளவு தொலைவில் உள்ளது என்பதைப் பொறுத்தது. இரண்டு தேதிகளுக்கு இடையில் இவ்வளவு நேரம் மட்டுமே இருக்க வேண்டும் என்பதில்லை, ஆனால் குறைந்த நேரமே இருக்கும்பட்சத்தில் டெல்டா இடமாற்றம் எளிதாக அமையும்.
- கட்-ஆஃப் புள்ளிக்குப் பிறகு உங்கள் பழைய ஸ்டோரில் என்னென்ன மாறியுள்ளன என்பதைக் கவனமாகப் பரிசீலிக்கவும். புதிய ஆர்டர்களும் வாடிக்கையாளர்களும் இருப்பார்கள், ஆனால் நீங்கள் புதிய தயாரிப்புகள் அல்லது உள்ளடக்கத்தைச் சேர்த்திருந்தால், அவற்றை புதிய ஸ்டோரில் சேர்க்க வேண்டியிருக்கலாம், அத்துடன் 301 திசைதிருப்பல்களை உருவாக்க வேண்டும்.
- DNS மாற்றங்கள் செயல்பாட்டிற்கு வர எடுத்துக்கொள்ளும் குறுகிய காலத்தில் உங்களின் பழைய ஸ்டோரில் புதிய ஆர்டர்கள் எதுவும் செய்யப்படவில்லை என்பதையும் நீங்கள் உறுதிசெய்ய வேண்டும். இந்த நேரத்தில், சில வாடிக்கையாளர்கள் உங்களின் பழைய ஸ்டோருக்கும் மற்றவர்கள் உங்களின் புதிய ஸ்டோருக்கும் அனுப்பப்பட வாய்ப்புள்ளது. இந்த நேரத்தில் உங்களின் பழைய ஸ்டோரின் செக்அவுட் செயல்பாட்டை முடக்குவதைக் கருத்தில் கொள்ளவும்.
பயனர்கள் மற்றும் அனுமதிகளை மதிப்பாய்வு செய்தல்
லைவ்-ஆகுவதற்கு முன், உங்களின் பயனர்கள் மற்றும் கூட்டுப்பணியாளர்களைத் தரவுநீக்கம் செய்யவும். கூட்டாளர் அல்லது பயனருக்கு இனி அணுகல் தேவையில்லை எனில், லைவ்-ஆகுவதற்கு முன் அவர்களை நீங்கள் அகற்ற வேண்டும்.
செயலிகளை மதிப்பாய்வு செய்தல்
ஆன்லைனில் வெளியிடுவதற்கு முன்பு, உங்கள் செயலிகளைச் சரிபார்த்து, தயாரிப்புகளுக்குப் பயன்படுத்தப்படாத செயலிகளை அகற்றுங்கள். எடுத்துக்காட்டாக, ஒரு குறிப்பிட்ட அம்சத்தின் செயல்பாட்டை ஒப்பிட்டுப் பார்க்கச் சில வேறுபட்ட செயலிகளைச் சேர்த்திருந்தால், பயன்படுத்தப்படாதவற்றை அகற்றுங்கள்.
டொமைன்கள்
வெளியிடும்போது டொமைன் பரவுதலை விரைவுபடுத்த, வெளியிடுவதற்கு முன்பே உங்களின் டொமைன் ஹோஸ்டிங் வழங்குநரிடம் உள்ள TTL-ஐ 300 ஆகக் குறையுங்கள். ஆன்லைனில் வெளியிடுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு இதைச் செய்யுங்கள். ஆன்லைனில் வெளியிடத் தயாரானதும், டொமைனைச் சேர்ப்பதற்கான படிகளைப் பின்பற்றுங்கள்.
Shopify SPF, DKIM பதிவுகள்
மின்னஞ்சல் செய்தியின் கையொப்பத்தைச் சரிபார்க்க, மின்னஞ்சல் அனுப்பும் சேவைகளில் SPF மற்றும் DKIM பயன்படுத்தப்படுகின்றன. இது உங்கள் மின்னஞ்சல் சென்றடையும் திறனை அதிகரிக்கும், அத்துடன் உங்கள் மின்னஞ்சல்களைப் போலியாக உருவாக்குவதையும் ஃபிஷிங் செய்வதையும் கடினமாக்கும்.
உங்கள் ஸ்டோர் தரவை பேக்கப் செய்
இயல்பாகவே உங்கள் ஸ்டோர் தரவை Shopify பேக்கப் செய்வதில்லை. உங்கள் ஸ்டோரை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு, உங்கள் ஸ்டோர் தரவை மேனுவலாகவோ ஒரு மூன்றாம் தரப்புச் செயலியைப் பயன்படுத்தியோ பேக்கப் செய்வதைக் கருத்தில் கொள்ளுங்கள்.
உங்கள் ஆன்லைன் ஸ்டோரை அறிமுகப்படுத்துதல்
உங்கள் Shopify ஸ்டோரை அறிமுகப்படுத்த, உங்கள் Shopify நிர்வாகியின் அமைப்புகள் > பேமெண்ட்டுகள் என்பதற்குச் சென்று உங்களின் Shopify Payments கணக்கில் சோதனைப் பயன்முறையை முடக்குங்கள், பிறகு பின்வரும் பணிகளை நிறைவுசெய்யுங்கள்:
உங்கள் ஆன்லைன் ஸ்டோரை அறிமுகப்படுத்திய பிறகு
உங்கள் ஆன்லைன் ஸ்டோரை அறிமுகப்படுத்திய உடனே, புதிய ஸ்டோருக்குச் சுமூகமாக மாறுவதை உறுதிப்படுத்த, பின்வரும் படிகளை மேற்கொள்ளுங்கள்.
உங்கள் திசைதிருப்பல்களைச் சோதித்து 404 பிழைகளைத் தீருங்கள்
உங்கள் தளத்தை அறிமுகப்படுத்திய பிறகு, 404 பிழைகள் எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்த, 301 திசைதிருப்பல்களை உருவாக்கிய இணைப்புகளைச் சோதியுங்கள். உங்கள் தளத்தில் ஏதேனும் 404 பிழைகள் இருந்தால், உங்கள் SEO தரவரிசையைப் பராமரிக்க உதவக்கூடிய, URL திசைதிருப்பல்களை உருவாக்கி அவற்றைத் தீர்க்கலாம்.
வாடிக்கையாளர் கணக்கு அழைப்புகளை அனுப்புங்கள்
நீங்கள் பழைய வாடிக்கையாளர் கணக்குகளைப் பயன்படுத்தினால், உங்கள் ஸ்டோரில் கணக்கை உருவாக்க உங்கள் வாடிக்கையாளர்களுக்கு அழைப்பை அனுப்பலாம்.
B2B வாடிக்கையாளர்களை உள்நுழைய அழையுங்கள்
நீங்கள் ஒரு நிறுவனத்திற்கு வாடிக்கையாளரை ஒதுக்கிய பிறகு அல்லது புதிய B2B வாடிக்கையாளர் சுயவிவரத்தை உருவாக்கிய பிறகு, உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் B2B ஆர்டர்களை வழங்கத் தொடங்குமாறு, வாடிக்கையாளரை அழைக்க மின்னஞ்சலை அனுப்பலாம். இந்த அறிவிப்பு விருப்பத்திற்குரியது, அத்துடன் இதைத் தனிப்பயனாக்கலாம்.
உங்கள் தளவரைபடத்தை Google-க்கு மீண்டும் சமர்ப்பியுங்கள்
உங்கள் ஸ்டோர் நேரலையில் வந்ததும், Google Console-இல் உங்கள் தளவரைபடத்தை மீண்டும் சமர்ப்பிப்பதன் மூலம், உங்கள் தளத்தின் புதிய கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்தை Google எளிதாகக் கண்டறிந்து அட்டவணைப்படுத்த முடியும்.