விலையிடல் திட்டங்கள் தொடர்பான FAQ

Shopify-இன் விலையிடல் திட்டங்கள் தொடர்பான பொதுவான கேள்விகளுக்கான பதில்களைக் கண்டறியுங்கள்.

ஒரு திட்டத்தில் பதிவுசெய்தால் எனது இலவச சோதனையை இழக்க நேரிடுமா?

இல்லை. மாதாந்திரத் திட்டத்திற்குப் பதிவுசெய்யும்போது, உங்களின் இலவச சோதனையில் நீங்கள் செய்த எதையும் இழக்க மாட்டீர்கள்.

உங்கள் இலவச சோதனையின்போது மாதாந்திரத் திட்டத்திற்குப் பதிவுசெய்தால், இலவச சோதனை முடிவடையும் வரை உங்களிடம் எவ்விதச் சந்தாக் கட்டணங்களும் வசூலிக்கப்படாது.

எனது இலவச சோதனையின்போது என் ஸ்டோரை ரத்துசெய்வது எப்படி?

உங்கள் இலவச சோதனையின்போது விலையிடல் திட்டத்தை நீங்கள் தேர்வுசெய்யவில்லை எனில், இலவச சோதனையின் முடிவில் உங்கள் கணக்கு முடக்கப்படும். உங்களது இலவச சோதனை காலாவதியாகும்போது உங்களிடம் எதற்கும் கட்டணம் வசூலிக்கப்படாது. உங்கள் இலவச சோதனை முடிவதற்குள் விலையிடல் திட்டத்தைத் தேர்வுசெய்தால், நீங்கள் மேனுவலாக உங்கள் ஸ்டோரை முடக்க வேண்டும்.

Shopify Payments மற்றும் PayPal ஆகிய இரண்டையும் அமைத்தால் என்ன நடக்கும்?

Shopify Payments மற்றும் PayPal அல்லது பிரத்தியேகக் கட்டண முறை போன்ற மூன்றாம் தரப்பு வழங்குநர்கள் இரண்டையும் நீங்கள் அமைக்கலாம். மூன்றாம் தரப்புக் கட்டண வழங்குநர்கள் மூலம் செயலாக்கப்படும் அனைத்துப் பரிவர்த்தனைகளுக்கும் மூன்றாம் தரப்புப் பரிவர்த்தனைக் கட்டணங்கள் பொருந்தும். எனினும், Shopify Payments-ஐ உங்களின் முதன்மைக் கட்டண வழங்குநராகத் தேர்வுசெய்தால், PayPal பரிவர்த்தனைகளுக்கு மூன்றாம் தரப்புப் பரிவர்த்தனைக் கட்டணங்களில் இருந்து விலக்கு அளிக்கப்படும். மேனுவல் பேமெண்ட் முறைகளுக்கு மூன்றாம் தரப்புப் பரிவர்த்தனைக் கட்டணங்கள் விதிக்கப்படாது.

என் திட்டத்தை எப்போது மாற்ற வேண்டும்?

உங்கள் தேவைகளைச் சிறந்த முறையில் பூர்த்திசெய்யும் திட்டம் உங்கள் வணிகத்தைப் பொறுத்தது.

உங்களின் திட்டத்தை மாற்றுவதற்கு என்று குறிப்பிட்ட நேரம் எதுவும் இல்லை, ஆனால் நீங்கள் செலுத்தும் மூன்றாம் தரப்புப் பரிவர்த்தனைக் கட்டணங்களின் தொகையானது உங்களின் தற்போதைய திட்டத்திற்கும் அடுத்த திட்டத்திற்கும் இடையிலான மாதாந்திரக் கட்டணங்களின் வித்தியாசத்தைவிட அதிகமாக இருந்தால், நீங்கள் திட்டத்தை மேம்படுத்துவதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

எனது திட்டத்தை எப்படி மாற்றுவது?

உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து உங்கள் திட்டத்தை மாற்றலாம்.

எனது ஸ்டோரை இடைநிறுத்தவோ முடக்கவோ முடியுமா?

நீங்கள் உங்கள் ஸ்டோரை முடக்கலாம். உங்கள் ஸ்டோரை முடக்குவதால் சந்தாக் கட்டணங்கள் நிறுத்தப்பட்டு, உங்கள் கணக்கு காலவரையற்ற காலத்திற்கு மூடப்படும். மீண்டும் திறக்க விரும்பினால், ஸ்டோரின் தகவல்கள் 2 ஆண்டுகளுக்குப் பாதுகாக்கப்படும். Pause and Build திட்டம் புதிய சந்தாக்களுக்கு இனி கிடைக்காது, ஆனால் ஏற்கனவே அதில் உள்ள ஸ்டோர்கள் தொடர்ந்து அதைப் பயன்படுத்தலாம். மேலும் தகவலுக்கு, உங்கள் Shopify ஸ்டோரை முடக்குதல் மற்றும் மீண்டும் இயக்குதல் என்பதைப் பார்க்கவும்.

எனது Shopify ஸ்டோர் சந்தாத் திட்டத்தை ரத்துசெய்தால், நான் பணத்தைத் திரும்பப்பெற முடியுமா?

Shopify சந்தாத் திட்டங்களுக்கான கட்டணங்கள் திரும்பப் பெற முடியாதவை. அதாவது உங்களின் சந்தாத் திட்டக் கட்டணங்களுக்காகப் பணத்தை எதையும் நீங்கள் திரும்பப்பெற முடியாது. மேலும் தகவலுக்கு, Shopify-இன் சேவை விதிமுறைகள், பிரிவு 5.10-ஐப் பார்க்கவும்.