சரியான திட்டத்தைத் தேர்ந்தெடுத்தல்

உங்கள் வணிகத்திற்கான சிறந்த திட்டம் என்பது உங்களின் ஈகாமர்ஸ் அனுபவம் மற்றும் எதிர்பார்க்கப்படும் விற்பனை அளவைப் பொறுத்தது. பின்வரும் திட்டங்களைச் சரிபார்க்கவும்:

  • Basic திட்டம்: ஆன்லைன் ஸ்டோரை அறிமுகப்படுத்தி விற்பனையைத் தொடங்கத் தயாராக இருக்கும் புதிய வணிகங்களுக்குச் சிறந்தது.
  • Grow திட்டம்: மேம்பட்ட அறிக்கையிடல் அல்லது கூடுதல் பணியாளர் கணக்குகள் போன்ற அதிக அம்சங்கள் தேவைப்படும், நிலையான விற்பனையைக் கொண்ட வளர்ந்து வரும் வணிகங்களுக்குச் சிறந்தது.
  • Advanced திட்டம்: மிகக் குறைந்த பரிவர்த்தனைக் கட்டணங்கள் தேவைப்படும் அதிக விற்பனையைக் கொண்ட வணிகங்கள் அல்லது வேறு பிளாட்ஃபார்மில் இருந்து மாறும் வணிகங்களுக்குச் சிறந்தது. சில்லறை விற்பனை ஸ்டோர்களுக்கான மேம்பட்ட அம்சங்களும் Advanced திட்டத்தில் அடங்கும்.

உங்கள் திட்டத்தை மேம்படுத்துவது குறித்து எப்போது பரிசீலிக்கலாம்

உயர் அடுக்குத் திட்டங்களில் கிரெடிட் கார்டு கட்டணங்கள் குறைவாக இருக்கும். உங்கள் விற்பனை போதுமான அளவு உயர்ந்த பிறகு, இந்தச் சேமிப்புகள் அதிக மாதாந்திரத் திட்டச் செலவை ஈடுகட்டக்கூடும். திட்டத்தை மேம்படுத்துவதன் மூலம் பணத்தை எப்போது சேமிக்கலாம் என்பது உங்கள் இருப்பிடம் மற்றும் நீங்கள் Shopify Payments ஐப் பயன்படுத்துகிறீர்களா என்பதைப் பொறுத்தது. Shopify விலையிடல் பக்கத்தில் தற்போதைய கட்டணங்களைச் சரிபார்க்கவும்.

இந்த மதிப்பீடுகள், திட்டங்களுக்கு இடையிலான கிரெடிட் கார்டு செயலாக்கக் கட்டணங்களின் வேறுபாட்டை அடிப்படையாகக் கொண்டவை. உங்களின் உண்மையான பிரேக்-ஈவன் பாயிண்ட் (லாபநட்டமற்ற புள்ளி) மாறுபடலாம்.

Grow திட்டத்திற்கான தோராயமான பிரேக்-ஈவன் பாயிண்டுகளைப் பின்வரும் அட்டவணை காட்டுகிறது:

Grow திட்டத்தின் பிரேக்-ஈவன் மதிப்பீடுகள்

Grow திட்டத்திற்கு மேம்படுத்துவதன் மூலம் பரிவர்த்தனைக் கட்டணங்களில் பணத்தைச் சேமிக்கக்கூடிய தோராயமான ஆண்டு விற்பனை அளவு
பிராந்தியம்Shopify Payments ஐப் பயன்படுத்தும்போதுShopify Payments ஐப் பயன்படுத்தாதபோது
அமெரிக்கா (US), யுனைடெட் கிங்டம் (UK) மற்றும் அயர்லாந்து$200,000 USD/ஆண்டு$60,000 USD/ஆண்டு
கனடா, நியூசிலாந்து$300,000 USD/ஆண்டு$60,000 USD/ஆண்டு
ஆஸ்திரேலியா$400,000 USD/ஆண்டு$60,000 USD/ஆண்டு
சிங்கப்பூர்$600,000 USD/ஆண்டு$60,000 USD/ஆண்டு

Advanced திட்டத்திற்கான தோராயமான பிரேக்-ஈவன் பாயிண்டுகளைப் பின்வரும் அட்டவணை காட்டுகிறது:

Advanced திட்டத்தின் பிரேக்-ஈவன் மதிப்பீடுகள்

Advanced திட்டத்திற்கு மேம்படுத்துவதன் மூலம் பரிவர்த்தனைக் கட்டணங்களில் பணத்தைச் சேமிக்கக்கூடிய தோராயமான ஆண்டு விற்பனை அளவு
பிராந்தியம்Shopify Payments ஐப் பயன்படுத்தும்போதுShopify Payments ஐப் பயன்படுத்தாதபோது
US, ஆஸ்திரேலியா$1,320,000 USD/ஆண்டு$528,000 USD/ஆண்டு
கனடா, UK, அயர்லாந்து$880,000 USD/ஆண்டு$528,000 USD/ஆண்டு
சிங்கப்பூர், நியூசிலாந்து$2,640,000 USD/ஆண்டு$528,000 USD/ஆண்டு

Shopify விலையிடல் பக்கத்தில் தற்போதைய கட்டணங்களைச் சரிபார்க்கவும்.