நிறுவனங்களுக்கான Shopify
நிறுவனங்களுக்கான Shopify, நிறுவன வணிகங்கள் தங்களுக்கு ஏற்ற வகையில் டிஜிட்டல் வர்த்தக அனுபவங்களை உருவாக்குவதற்கான சுதந்திரத்தை வழங்குகிறது. Shopify-இன் முழு பிளாட்ஃபார்மையும் பயன்படுத்தலாம் அல்லது உங்களுக்குத் தேவையான கூறுகளை மட்டும் தேர்ந்தெடுத்து, ஏற்கனவே உள்ள உங்கள் சிஸ்டம்களுடன் இணைக்கலாம். மேலும், நிறுவன வணிகங்களுக்குத் தேவைப்படும் நெகிழ்வுத்தன்மை, அளவு மற்றும் வேகத்துடன் உருவாக்கலாம். நிறுவனங்களுக்கான Shopify பற்றி மேலும் அறிக
இந்தப் பக்கத்தில்
உருவாக்குவதற்கான வழிகள்
நிறுவன வணிகங்கள் Shopify-இன் முழு பிளாட்ஃபார்மையோ மாடுலர் கூறுகளையோ பயன்படுத்தலாம். உருவாக்குவதற்கான வழிகள் மற்றும் தேர்ந்தெடுப்பதற்கான கூறுகள் பற்றிய மேலோட்டத்திற்கு, மாடுலர் கூறுகள் அட்டவணையைப் பார்க்கவும்.
முழு பிளாட்ஃபார்ம்
உண்மையான ஒருங்கிணைந்த வணிகத்திற்கு, Shopify-இன் முழுமையான வணிகச் செயலாக்க அமைப்பைப் பயன்படுத்தவும். நுகர்வோருக்கு நேரடியாக (D2C), சில்லறை விற்பனை மற்றும் வணிகங்களுக்கு இடையேயான (B2B) சேனல்கள் முழுவதும் விற்பனை செய்யுங்கள், இவையனைத்தும் Shopify-ஆல் நிர்வகிக்கப்படும் மற்றும் உலகளவில் அளவிடப்பட்ட உள்கட்டமைப்பால் இயக்கப்படுபவை. எங்களின் விரிவான API லைப்ரரி, முன்பே உருவாக்கப்பட்ட ஒருங்கிணைப்புகள், செயலிகள் மற்றும் கூட்டாளர்ச் சூழலமைப்பு ஆகியவற்றின் மூலம் உங்களுக்கு விருப்பமான சேவைகள் மற்றும் தீர்வுகளை ஒருங்கிணைக்கலாம் மற்றும் உங்கள் செயலாக்கத்தைத் தனிப்பயனாக்கலாம்.
பின்வரும் நிறுவன அளவிலான சேவைகள் மற்றும் திறன்களுக்கான அணுகலைப் பெறுங்கள்:
செயல்திறன்
- செக்அவுட் கிடைக்கும் தன்மைக்கான சேவை நிலை ஒப்பந்தம் (SLA)*
- கட்டுப்பாடற்ற Storefront API-க்கான SLA*
- Storefront API கிடைக்கும்தன்மைக்கான SLA*
- அதிகரிக்கப்பட்ட GraphQL Admin API அழைப்பு வரம்புகள்
செக்அவுட்
- ஒரு நிமிடத்திற்கு 40K செக்அவுட் தொடக்கங்கள் வரை*
- Shopify செயல்பாடுகளுக்கான நெட்வொர்க் அணுகல்
பேமெண்ட்டுகள்
- சேமிக்கப்பட்ட கட்டண முறைகள்
சில்லறை விற்பனை
- வரம்பற்ற Shopify POS Pro இருப்பிடங்கள்*
- வன்பொருள் தள்ளுபடிகள்*
கூடுதல் அம்சங்கள்
- தனிப்பயனாக்கக்கூடிய Shopify நிர்வாகி
வியூக வழிகாட்டுதல்
- Shopify Professional Services வழங்கும் வெளியீட்டு ஆதரவு
- தொழில்நுட்பக் கணக்கு நிர்வாகம்
- மேம்பட்ட தொழில்நுட்ப ஆதரவு
- நிகழ்வுப் பதில் நிர்வாகம்
- எதிர்பார்ப்புகள் நிர்வாகம் மற்றும் கருவி
- சில்லறை விற்பனை ஆதரவு
*ஒப்பந்த விதிமுறைகளைப் பொறுத்தது
மாடுலர்
அதிகபட்சக் கட்டுப்பாடு மற்றும் தனிப்பயனாக்கத்திற்கு, உங்களுக்குத் தேவையானதை மட்டும் தேர்வுசெய்யுங்கள். Shopify-ன் மாடுலர் வணிகத் திறன்கள் மற்றும் நீங்கள் தற்போது நம்பியிருக்கும் தளங்கள், சேவைகளைக் கொண்டு உங்களின் சிறந்த கட்டமைப்பை வடிவமைத்திடுங்கள்.
| மாடுலர் கூறுகள் | விளக்கம் |
|---|---|
| Shop Pay | மாற்றத்தை அதிகரிக்கவும் வாங்குபவர்களுக்கு விரைவான, பழக்கமான கட்டண முறையை வழங்கவும் உங்களின் தற்போதைய வணிகத் தளம் மற்றும் செக்அவுட்டில் Shop Pay-ஐச் சேர்க்கவும். எந்தவொரு தளத்திலும் நிறுவன ஒப்பந்தம் இல்லாமலும் Shop Pay-ஐப் பயன்படுத்தலாம். மேலும் அறிய, எந்த தளத்திலும் Shop Pay என்பதைப் பார்க்கவும். |
| செக்அவுட் மற்றும் கார்ட் கூறு | உங்களின் ஒட்டுமொத்த செக்அவுட் அனுபவத்தை மேம்படுத்தவும் மாற்றத்தை அதிகரிக்கவும், உங்களின் தற்போதைய வணிகத் தளத்தில் செக்அவுட் மற்றும் கார்ட் கூறுகளைச் சேர்க்கவும். |
| ஸ்டோர்ஃபிரண்ட் கூறு | உங்களுக்கு விருப்பமான ஃபிரேம்வொர்க் மற்றும் ஹோஸ்டிங் வழங்குநரைப் பயன்படுத்திப் பிரத்தியேக ஸ்டோர்ஃபிரண்ட்களை உருவாக்க ஸ்டோர்ஃபிரண்ட் கூறினைப் பயன்படுத்தவும். |
நிறுவனங்களுக்கான Shopify தொடர்பான ஆதாரங்கள்
பின்வரும் ஆதாரங்கள் உட்பட, நிறுவனங்களுக்கான Shopify தொடர்பான கூடுதல் தகவல்களை நீங்கள் கண்டறியலாம்: