ஏஜென்டிக் திட்டம்
Shopify-ஐ தங்களின் மின்வணிகத் தளமாகப் பயன்படுத்தாத வணிகர்களுக்கானது ஏஜென்டிக் திட்டம். உங்களுக்கென Shopify ஆன்லைன் ஸ்டோர் இல்லாமலோ உங்களின் தற்போதைய வணிகத் தளத்தில் இருந்து இடமாறாமலோ, Shopify Catalog இல் உங்கள் தயாரிப்புகளைச் சேர்த்து அவற்றை Shopify ஏஜென்டிக் ஸ்டோர்ஃபிரண்டுகள் மூலம் விற்க இத்திட்டம் உங்களை அனுமதிக்கிறது.
வாடிக்கையாளர்கள் AI சேனல்களில் உங்கள் தயாரிப்புகளைக் கண்டறிந்து அவற்றை வாங்க முடியும். Shop சேனல் போன்ற பிற Shopify சேனல்களில் விற்கவும் ஏஜென்டிக் திட்டம் உங்களை அனுமதிக்கிறது.
ஏஜென்டிக் திட்டம் மூலம் நீங்கள் Shopify ஆன்லைன் ஸ்டோரையும் உருவாக்கலாம். உங்களின் Shopify ஆன்லைன் ஸ்டோரை வெளியிட்டு அதன் மூலம் விற்க, நீங்கள் கட்டணச் சேவை கொண்ட Shopify சந்தாத் திட்டத்திற்கு மாற வேண்டும். ஏஜென்டிக் திட்டத்தில் ஆன்லைன் ஸ்டோர் அணுகல் குறித்து மேலும் அறிக.
பின்வரும் வகையான பிசினஸ்களுக்கு ஏஜென்டிக் திட்டம் பொருந்தக்கூடும்:
- விரிவான உருவாக்கப் பணிகள் ஏதுமின்றி ஏஜென்டிக் காமர்ஸ் மூலம் விற்க விரும்பும் மரபு அல்லது தனிப்பயன் தளங்களில் உள்ள பிசினஸ்கள்.
- ஏஜென்டிக் காமர்ஸ் மூலம் விற்க விரும்பும், அதே சமயம் ஒவ்வொரு ஏஜென்டிக் சேனலுடனும் தனித்தனியாகத் தாமாகவே இணைக்க விரும்பாத எந்தவொரு அளவிலும் உள்ள பிசினஸ்கள்.
- கட்டணச் சேவை கொண்ட Shopify சந்தாத் திட்டத்திற்கு மாறுவதற்கு முன்பு Shopify ஆன்லைன் ஸ்டோரை உருவாக்க விரும்பும் பிசினஸ்கள்.
ஏஜென்டிக் திட்டத்தைக் கொண்டு ஏஜென்டிக் ஸ்டோர்ஃபிரண்டுகளில் விற்பது குறித்து மேலும் அறிய, ஏஜென்டிக் திட்டத்திலுள்ள ஸ்டோர்களுக்கான ஏஜென்டிக் ஸ்டோர்ஃபிரண்டுகளை அமைத்தல் என்பதைப் பார்க்கவும்.
இந்தப் பக்கத்தில்
ஏஜென்டிக் திட்டத்தின் அம்சங்கள்
ஏஜென்டிக் திட்டத்திற்கு மாதாந்திரச் சந்தாக் கட்டணம் ஏதுமில்லை. உங்கள் ஸ்டோருக்குப் பின்வரும் பிற கட்டணங்கள் இன்னும் பொருந்தக்கூடும்:
- வாடிக்கையாளர் தங்களது கொள்முதலை AI சேனலின் Shopify வழங்கும் நேரடி செக்அவுட்டில் முடிக்கும்போது, உங்களின் கட்டண வழங்குநரைப் பொறுத்து நீங்கள் Shopify Payments கட்டணங்களை அல்லது மூன்றாம் தரப்புப் பரிவர்த்தனைக் கட்டணங்களைச் செலுத்துவீர்கள்.
- கட்டணச் சேவைகள் அல்லது கட்டணச் செயலிகளைப் பயன்படுத்தினால், அந்தக் கட்டணங்கள் உங்கள் ஸ்டோருக்குப் பொருந்தும்.
- நீங்கள் கட்டணச் சேவை கொண்ட Shopify சந்தாத் திட்டத்திற்கு மாறினால், அந்தத் திட்டத்தின் சந்தாக் கட்டணம் பொருந்தும்.
பேமெண்ட் கட்டணங்கள், வாடிக்கையாளர் எந்த வகையான செக்அவுட்டைப் பயன்படுத்துகிறார் என்பதைப் பொறுத்தது. சில AI சேனல்கள் வாடிக்கையாளர்களை உங்களின் தற்போதைய ஆன்லைன் ஸ்டோர் செக்அவுட்டிற்கு அனுப்பும். பிற AI சேனல்கள் Shopify வழங்கும் நேரடி செக்அவுட்டைப் பயன்படுத்துகின்றன, இதற்கு உங்களின் Shopify நிர்வாகியில் கட்டண வழங்குநர் ஒருவரை அமைத்திருக்க வேண்டும்.
ஏஜென்டிக் திட்டத்தில் நீங்கள் செய்யக்கூடியவை குறித்து மேலும் அறிய, அனைத்துத் திட்டங்களிலும் உள்ள அம்சங்கள் என்பதைப் பார்க்கவும்.
ஏஜென்டிக் திட்டத்தில் ஆன்லைன் ஸ்டோர் அணுகல்
Shopify ஆன்லைன் ஸ்டோரை உருவாக்கித் தயார் செய்ய, ஏஜென்டிக் திட்டத்தில் ஆன்லைன் ஸ்டோர் விற்பனைச் சேனலை நீங்கள் பயன்படுத்தலாம். உங்களின் ஆன்லைன் ஸ்டோர் கடவுச்சொல் மூலம் பாதுகாக்கப்பட்டிருக்கும், இதனால் வாடிக்கையாளர்களால் அதைப் பார்வையிடவோ உங்களின் ஆன்லைன் ஸ்டோர் செக்அவுட்டில் கொள்முதலை முடிக்கவோ முடியாது.
உங்களின் Shopify ஆன்லைன் ஸ்டோரை வெளியிட்டு உங்களின் ஆன்லைன் ஸ்டோர் செக்அவுட் மூலம் ஆர்டர்களை ஏற்க, நீங்கள் கட்டணச் சேவை கொண்ட Shopify சந்தாத் திட்டத்திற்கு மாற வேண்டும்.
நீங்கள் Shopify ஆன்லைன் ஸ்டோரை உருவாக்கும்போது உங்களின் ஏஜென்டிக் ஸ்டோர்ஃபிரண்ட் பாதிக்கப்படாது. AI சேனல்களில் வாடிக்கையாளர்களால் தொடர்ந்து உங்கள் தயாரிப்புகளைக் கண்டறிந்து வாங்க முடியும், மேலும் உங்களின் தயாரிப்பு இணைப்புகள் தொடர்ந்து உங்களின் தற்போதைய ஆன்லைன் ஸ்டோரையே சுட்டிக்காட்டும். ஏஜென்டிக் திட்டத்தில் Shopify ஆன்லைன் ஸ்டோரை உருவாக்குவது எப்படி என்பதை அறிய, ஏஜென்டிக் திட்டத்தில் ஆன்லைன் ஸ்டோர் அணுகல் என்பதைப் பார்க்கவும்.
ஏஜென்டிக் திட்டத்தில் கிடைக்காத அம்சங்கள்
பின்வரும் அம்சங்கள் ஏஜென்டிக் திட்டத்தில் கிடைக்காது:
- உங்கள் ஆன்லைன் ஸ்டோரை வெளியிடுதல் அல்லது உங்களின் ஆன்லைன் ஸ்டோர் செக்அவுட் மூலம் விற்றல்
- Shopify Messaging
- கிஃப்ட் கார்டுகளை விற்றல்
- ஆர்டர்களைத் தாமாகவே உருவாக்குதல்
- Shop கொள்முதலுக்குப் பிந்தைய சலுகைகள்
ஏஜென்டிக் ஸ்டோர்ஃபிரண்டுகளின் மூலம் விற்பனை செய்வதற்கான தகுதித் தேவைகள்
Shopify ஏஜென்டிக் ஸ்டோர்ஃபிரண்டுகள் மூலம் விற்பதற்கான உங்கள் தகுதியானது பின்வரும் காரணிகளைப் பொறுத்தது:
- உங்களின் பிசினஸ் மற்றும் உங்கள் தயாரிப்புகள்.
- உங்கள் வாடிக்கையாளரின் இருப்பிடம்.
- உங்களின் Shopify நிர்வாகியில் உள்ள பேமெண்ட் அமைவு.
- வாடிக்கையாளர் பயன்படுத்தும் AI சேனல்.
உங்கள் தயாரிப்புகள் AI சேனல்களுக்குக் கிடைக்கச் செய்யப்படுவதற்கு முன்பு அவை Shopify Catalog தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும்.
தகுதி இருப்பதால் குறிப்பிட்ட AI பதில் அல்லது தயாரிப்புப் பிளேஸ்மென்டில் உங்கள் தயாரிப்புகள் காட்டப்படும் என உத்திரவாதம் அளிக்கப்படுவதில்லை. வாடிக்கையாளரின் கோரிக்கைக்கு எந்தெந்தத் தயாரிப்புகளைக் காட்ட வேண்டும் என்பதை ஒவ்வொரு AI சேனலுமே முடிவு செய்கின்றன.
கட்டணச் சேவை கொண்ட Shopify சந்தாத் திட்டத்திற்கு மாறுதல்
பின்வரும் காரணங்களுக்காக நீங்கள் ஏஜென்டிக் திட்டத்தில் இருந்து கட்டணச் சேவை கொண்ட Shopify சந்தாத் திட்டத்திற்கு மாறலாம்:
- உங்களின் Shopify ஆன்லைன் ஸ்டோரை வெளியிடுவதற்கு.
- உங்களின் Shopify ஆன்லைன் ஸ்டோர் செக்அவுட் மூலம் ஆர்டர்களை ஏற்பதற்கு.
- ஏஜென்டிக் திட்டம் கொண்டிராத Shopify அம்சங்களைப் பயன்படுத்துவதற்கு.
உங்களின் தயாரிப்புகள், ஸ்டோர் அமைப்புகள் மற்றும் ஏஜென்டிக் ஸ்டோர்ஃபிரண்டுகளின் அமைவு போன்றவை நீங்கள் புதிதாகப் பதிவுசெய்யும் எந்தவொரு திட்டத்திற்கும் அப்படியே எடுத்துச் செல்லப்படும். உங்கள் ஆன்லைன் ஸ்டோரை வெளியிட்ட பிறகு மட்டுமே உங்களின் ஏஜென்டிக் ஸ்டோர்ஃபிரண்டுகளின் தயாரிப்பு இணைப்புகள் உங்களின் Shopify ஆன்லைன் ஸ்டோரைச் சுட்டிக்காட்டும்.
Shopify சந்தாத் திட்டங்களை ஒப்பிட, சரியான திட்டத்தைத் தேர்ந்தெடுத்தல் என்பதைப் பார்க்கவும். உங்கள் திட்டத்தை மாற்றுவது குறித்து அறிய, உங்களின் Shopify பில்லிங் திட்ட மாற்றங்களை நிர்வகித்தல் என்பதைப் பார்க்கவும்.
நிறுவனப் பிசினஸ்களுக்கான ஏஜென்டிக் திட்டம்
நிலையான ஏஜென்டிக் திட்டத்தில் நீங்கள் செய்யக்கூடியவற்றுடன், நிறுவனப் பிசினஸ்களுக்கான ஏஜென்டிக் திட்டத்தில் பின்வரும் அம்சங்களும் கிடைக்கின்றன:
- வரம்பற்ற பணியாளர்கள்
- ஒருங்கிணைந்த பட்டியல்கள்
- கேரியர் கணக்கிடும் ஷிப்பிங்
- நிறைவேற்றத்தின்படி பேமெண்ட்டைப் பெறுதல்
- கூடுதல் சரக்கு இருப்பிற்கான இடங்கள்
டெவலப்பர்களுக்காக, நிறுவனப் பிசினஸ்களுக்கான ஏஜென்டிக் திட்டமானது பின்வரும் அம்சங்களை உள்ளடக்கியுள்ளது:
- Shopify Plus-க்கு நிகரான API வீத வரம்புகள்
- தனிப்பயன் செயலிகளில் நிலை 2-ஆல் பாதுகாக்கப்பட்ட வாடிக்கையாளர் தரவிற்கான அணுகல்
- Shopify Functions API-களைக் கொண்ட தனிப்பயன் செயலிகள்