Starter திட்டம்
சமூக ஊடகத் தளங்கள் அல்லது மெசேஜிங் செயலிகள் மூலமாக, எளிதாக்கப்பட்ட ஆன்லைன் ஸ்டோருடன் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்ய விரும்பும், புதிதாகத் தொடங்கும் வணிகர்களுக்கானது Starter திட்டம். சமூக ஊடகப் பதிவுகளிலோ மெசேஜ்களிலோ நீங்கள் பகிரக்கூடிய தயாரிப்பு இணைப்புகளை உருவாக்க Starter திட்டம் அனுமதிக்கிறது. விற்பனையைத் தொடங்க, கட்டணத் திட்டம் ஒன்றைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் அல்லது தனிப்பட்ட பயன்முறையை முடக்குவதன் மூலம் உங்கள் செக்அவுட்டைச் செயல்படுத்தவும்.
Starter திட்டத்தில் கிடைக்கும் அம்சங்கள்
உங்கள் Shopify ஸ்டோருக்குப் பணியாளர்களைச் சேர்த்தல், தயாரிப்புகளைச் சேகரிப்புகளாகத் தொகுத்தல் மற்றும் POS Pro சந்தா ஆகியவற்றைத் தவிர்த்து, அனைத்துத் திட்டங்களிலும் கிடைக்கும் அம்சங்களுடன் கூடுதலாகப் பின்வரும் அம்சங்களை Shopify Starter திட்டம் வழங்குகிறது:
| அம்சம் | விளக்கம் |
|---|---|
| பரிவர்த்தனைக் கட்டணங்கள் | Starter திட்டம் போட்டித்தன்மை வாய்ந்த பரிவர்த்தனைக் கட்டணங்களை வழங்குகிறது. உங்கள் பிராந்தியத்திற்கான குறிப்பிட்ட பரிவர்த்தனைக் கட்டணங்களைக் கண்டறிய, Starter திட்டத்தை மதிப்பாய்வு செய்யவும். |
| Spotlight தீம் | Starter திட்டத்தில் Spotlight தீமை உடனடியாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். லோகோ, பிராண்ட் அறிமுகம் மற்றும் சமூக ஊடக இணைப்புகளைச் சேர்க்க, நீங்கள் தீம் எடிட்டரைப் பயன்படுத்தலாம். உங்கள் தீமின் நிறங்களையும் நீங்கள் தனிப்பயனாக்கிக் கொள்ளலாம். Starter திட்டத்தில் பிற தீம்கள் மற்றும் தனிப்பயனாக்க விருப்பங்கள் கிடைக்காது. |
| அறிக்கைகள் | அறிக்கைகளைப் பயன்படுத்தி உங்கள் வணிகச் செயல்திறனை நீங்கள் தடமறியலாம். Starter திட்டத்தில் பகுப்பாய்வுப் பக்கம், நிதி அறிக்கைகள், தயாரிப்புப் பகுப்பாய்வு, லைவ் வியூ, கையகப்படுத்தல் அறிக்கைகள், சரக்கு இருப்பு அறிக்கைகள், நடத்தை அறிக்கைகள், மார்க்கெட்டிங் அறிக்கைகள், ஆர்டர் அறிக்கைகள், விற்பனை அறிக்கைகள், சில்லறை விற்பனை அறிக்கைகள், லாப அறிக்கைகள் மற்றும் வாடிக்கையாளர் அறிக்கைகள் ஆகியவை அடங்கும். |
| சர்வதேச வணிகம் | சர்வதேச விற்பனைச் செயல்முறையின் ஒவ்வொரு படியிலும் உங்களுக்கு உதவும் எல்லை தாண்டிய மேலாண்மைக் கருவிகளான சர்வதேச விற்பனைக் கருவிகள் மூலம் உங்களின் சர்வதேச வளர்ச்சியை Starter திட்டம் ஆதரிக்கிறது. |
Starter திட்டத்தில் கிடைக்காத அம்சங்கள்
நீங்கள் Shopify Starter திட்டத்தில் இருந்தால், உங்கள் Shopify ஸ்டோருக்குப் பணியாளர்களைச் சேர்த்தல், தயாரிப்புகளைச் சேகரிப்புகளாகத் தொகுத்தல், மூன்றாம் தரப்பு கேரியரால் கணக்கிடப்படும் ஷிப்பிங்கைச் செயல்படுத்துதல் மற்றும் POS Pro சந்தாவிற்கு மேம்படுத்துதல் ஆகியவை இத்திட்டத்தில் கிடைக்காது.
| கிடைக்காத அம்சம் | விளக்கம் |
|---|---|
| உங்கள் Shopify ஸ்டோருக்குப் பணியாளர்களைச் சேர்த்தல் | உங்கள் ஸ்டோரில் பணியாளர் கணக்குகளைச் சேர்ப்பதை Starter திட்டம் ஆதரிக்காது. பணியாளர் கணக்குகளைச் சேர்க்க, நீங்கள் Grow திட்டத்திலோ அதைவிட உயர்ந்த திட்டத்திலோ இருக்க வேண்டும். பணியாளர்களைச் சேர்க்கும் திறன் உங்களுக்குத் தேவைப்பட்டால், நீங்கள் Grow, Advanced அல்லது Shopify Plus போன்ற உயர்ந்த திட்டத்திற்கு மேம்படுத்த வேண்டும். வெவ்வேறு திட்டங்களுக்கான பணியாளர்கள் மற்றும் பணியாளர் கணக்கு வரம்புகளை நிர்வகித்தல் குறித்து மேலும் அறிக. |
| தயாரிப்புச் சேகரிப்புகள் | வாடிக்கையாளர்கள் வகைகளின் அடிப்படையில் தயாரிப்புகளை எளிதாகக் கண்டறியும் வகையில், உங்கள் தயாரிப்புகளைச் சேகரிப்புகளாகத் தொகுக்கும் திறனை Starter திட்டம் வழங்காது. உங்களுக்குச் சேகரிப்புகளை உருவாக்கும் திறன் தேவைப்பட்டால், நீங்கள் Basic, Grow, Advanced அல்லது Shopify Plus போன்ற உயர்ந்த திட்டத்திற்கு மேம்படுத்த வேண்டும். சேகரிப்புகள் குறித்து மேலும் அறிக. |
| வார்ப்புருக்கள் | புதிய வார்ப்புருக்களை உருவாக்குவதை Starter திட்டம் ஆதரிக்காது. இயல்புநிலை முகப்பு, தயாரிப்புப் பக்கம், தொடர்புப் பக்கம், 404 பக்கம், கார்ட் பக்கம் மற்றும் செக்அவுட் ஆகியவற்றை நீங்கள் கொண்டிருப்பீர்கள். உங்களுக்குப் பிற பக்கங்களை உருவாக்கும் திறன் தேவைப்பட்டால், நீங்கள் Basic, Grow, Advanced அல்லது Shopify Plus போன்ற உயர்ந்த திட்டத்திற்கு மேம்படுத்த வேண்டும். வார்ப்புருக்கள் குறித்து மேலும் அறிக. |
| மூன்றாம் தரப்பு கேரியரால் கணக்கிடப்படும் ஷிப்பிங்கைச் செயல்படுத்துதல் | மூன்றாம் தரப்பு கேரியரால் கணக்கிடப்படும் ஷிப்பிங்கைச் செயல்படுத்துவதை Starter திட்டம் ஆதரிக்காது. மூன்றாம் தரப்பு கேரியரால் கணக்கிடப்படும் ஷிப்பிங்கைச் செயல்படுத்த, நீங்கள் Grow, Advanced அல்லது Shopify Plus போன்ற உயர்ந்த திட்டத்திற்கு மேம்படுத்த வேண்டும். மூன்றாம் தரப்பு கேரியரால் கணக்கிடப்படும் ஷிப்பிங்கைச் செயல்படுத்துதல் குறித்து மேலும் அறிக. |
| Shopify B2B | Starter திட்டமானது Shopify B2B உடன் பிசினஸ்-டூ-பிசினஸ் (B2B) விற்பனையை ஆதரிக்காது. நிறுவனங்கள், B2B கேட்லாக்குகள் மற்றும் கட்டண விதிமுறைகள் போன்ற B2B அம்சங்கள் உங்களுக்குத் தேவைப்பட்டால், நீங்கள் Basic, Grow, Advanced அல்லது Shopify Plus திட்டம் போன்ற மேம்பட்ட திட்டத்திற்கு மேம்படுத்த வேண்டும். திட்டம் வாரியாக Shopify B2B அம்சங்கள் பற்றி மேலும் அறிக. |
| Shopify POS Pro சந்தா | உங்கள் POS திட்டத்தை POS Pro சந்தாவிற்கு மேம்படுத்துவதை Starter திட்டம் ஆதரிக்காது. POS Pro சந்தாவிற்கு மேம்படுத்த, நீங்கள் Basic, Grow, Advanced அல்லது Shopify Plus போன்ற உயர்ந்த திட்டத்திற்கு மேம்படுத்த வேண்டும். POS Pro சந்தா குறித்து மேலும் அறிக. |