விலையிடல் திட்டங்கள் மற்றும் பில்லிங் மேலோட்டம்
Shopify-இல் பல்வேறு விலையிடல் திட்டங்கள், கட்டணச் சுழற்சிகள், கிரெடிட் கார்டு கட்டணங்கள் மற்றும் பல கிடைக்கின்றன. திட்டங்கள், அம்சங்கள் மற்றும் செலவுகள் தொடர்பான மிகத் துல்லியமான, விரிவான தகவல்களைப் பெற, விலையிடல் பக்கத்திற்குச் செல்லவும். பில்லிங் பற்றிய மேலும் தகவலுக்கு, பில்லிங்கை நிர்வகிப்பது என்பதை மதிப்பாய்வு செய்யவும்.
உங்கள் திட்டத்தை ரத்துசெய்ய விரும்பினால், உங்கள் ஸ்டோரை முடக்க வேண்டும். ரத்துசெய்வதற்கு முன் திட்டங்களுக்கான Shopifyயின் பணத்தைத் திரும்பப்பெறுதல் கொள்கை குறித்து மேலும் அறிக.
இந்தப் பக்கத்தில்
திட்டக் கட்டணங்கள்
Basic, Grow மற்றும் Advanced விலையிடல் திட்டங்களில் மாதாந்திர விலை, கிரெடிட் கார்டு கட்டணங்கள், மூன்றாம் தரப்பு பரிவர்த்தனைக் கட்டணங்கள் எனப் பல கட்டணங்கள் உள்ளன. உங்கள் இருப்பிடத்தைப் பொறுத்து, உங்களின் சந்தாவிற்குப் பின்வரும் நாணயங்களில் ஒன்றில் பில் செய்யப்படும்:
- யூரோக்கள் (EUR)
- பிரிட்டிஷ் பவுண்டுகள் (GBP)
- அமெரிக்க டாலர்கள் (USD)
- இந்திய ரூபாய்கள் (INR)
உங்கள் Shopify சந்தாத் திட்டத்திற்கான உள்ளூர் விலை நிர்ணயம் பற்றி மேலும் அறிக.
மாதாந்திர விலை
மாதாந்திர விலை என்பது Shopify-ஐப் பயன்படுத்துவதற்கான தொடர்ச்சியான சந்தாக் கட்டணமாகும், இது நீங்கள் தேர்வுசெய்யும் திட்டத்தைப் பொறுத்து மாறுபடும். நீங்கள் எந்தத் திட்டத்தைத் தேர்வுசெய்தாலும், அதனுடன் தொடர்புடைய விலை உங்களுக்கு ஒதுக்கப்பட்ட கட்டணச் சுழற்சியின் முடிவில் வழங்கப்படும் பில்லில் சேர்க்கப்படும்.
ஆண்டுதோறுமான கட்டணச் சுழற்சிக்கு மாறினால், உங்களின் சந்தாக் கட்டணத்தில் தள்ளுபடியைப் பெறலாம். வருடாந்திர பில்லிங்கில் முழு ஆண்டிற்கான கட்டணமும் முன்கூட்டியே வசூலிக்கப்படும் என்பதுடன் குறைவான மாதாந்திரக் கட்டணம் காட்டப்படும். விலையிடலில் கட்டணச் சுழற்சிகள் எவ்வித தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பது குறித்து மேலும் அறிக.
கிரெடிட் கார்டு கட்டணங்கள்
உங்களின் கட்டண வழங்குநராக Shopify Payments என்பதைப் பயன்படுத்தினால், உங்கள் ஸ்டோரில் Visa மற்றும் Mastercard போன்ற முக்கியக் கிரெடிட் கார்டுகளைக் கட்டணங்களாக ஏற்க உங்களை அனுமதிக்க, Shopify ஒரு சிறிய கட்டணத்தை வசூலிக்கும். கிரெடிட் கார்டு கட்டண வழங்குநருக்கு (Visa அல்லது Mastercard போன்றவை) நீங்கள் எந்தக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. நேரில் பேமெண்ட்டைப் பெறுவதற்கும் ஆன்லைனில் பேமெண்ட்டைப் பெறுவதற்கும் உள்ள பாதுகாப்பு மற்றும் ஆபத்து வேறுபாடுகளின் காரணமாக, Shopify POS பயன்படுத்தும் ஆன்லைன் மற்றும் நேரடிப் பரிவர்த்தனைகளுக்கு இந்தக் கட்டணங்கள் மாறுபடும்.
நீங்கள் தேர்வுசெய்யும் திட்டத்தைப் பொறுத்து கிரெடிட் கார்டு கட்டணங்கள் மாறுபடும்.
Brexit காரணமாக, இங்கிலாந்து (UK) மற்றும் ஐரோப்பிய ஒன்றியப் (EU) பரிவர்த்தனைகளை வகைப்படுத்தும் மற்றும் கட்டணம் விதிக்கும் முறையை Visa மற்றும் Mastercard மாற்றியுள்ளன. இந்த மாற்றங்களுக்கு இணங்க, Shopify இந்தப் பரிவர்த்தனைகளைச் சர்வதேசப் பரிவர்த்தனைகளாக வகைப்படுத்துகிறது. இதனால், உங்கள் பிராந்தியத்திற்கான தற்போதைய சர்வதேசக் கட்டணத்தின்படி உங்களிடம் கட்டணம் வசூலிக்கப்படும்.
மூன்றாம் தரப்பு பரிவர்த்தனைக் கட்டணங்கள்
பாதுகாப்பான செக்அவுட் பிளாட்ஃபார்மை வழங்குவதற்கும், வெளிப்புறக் கட்டண வழங்குநர்களுடன் ஒருங்கிணைப்பதற்கும் Shopify-க்கு ஆகும் செலவுகளை மூன்றாம் தரப்பு பரிவர்த்தனைக் கட்டணங்கள் ஈடுசெய்கின்றன. நீங்கள் தேர்வுசெய்யும் Shopify திட்டத்தைப் பொறுத்துப் பரிவர்த்தனைக் கட்டணங்கள் மாறுபடும், அத்துடன் அவை பின்வரும் சூழ்நிலைகளில் வசூலிக்கப்படும்:
- வாடிக்கையாளர் பேமெண்ட்டுகளை ஏற்க மூன்றாம் தரப்பு கட்டண வழங்குநரைப் பயன்படுத்தும்போது.
- மே 12, 2025 அன்றும் அதற்குப் பிறகும் உருவாக்கப்பட்ட Shopify ஸ்டோர்களில், ஒரு ஆர்டரில் கட்டண முறையாக ஸ்டோர் கிரெடிட் அல்லது கிஃப்ட் கார்டுகள் சேர்க்கப்படும்போது. எடுத்துக்காட்டாக, உங்கள் ஸ்டோர் Shopify Payments-ஐப் பயன்படுத்துகிறது என்றும், ஒரு வாடிக்கையாளர் ஒரு ஆர்டருக்கு கிரெடிட் கார்டு மற்றும் $10 CAD மதிப்பிலான ஸ்டோர் கிரெடிட் ஆகிய இரண்டையும் பயன்படுத்திக் கட்டணம் செலுத்துகிறார் என்றும் வைத்துக்கொண்டால், அந்த $10 CAD மதிப்பிலான ஸ்டோர் கிரெடிட்டுக்கு மட்டுமே உங்களுக்கு மூன்றாம் தரப்பு பரிவர்த்தனைக் கட்டணங்கள் வசூலிக்கப்படும்.
நீங்கள் Shopify Payments என்பதைப் பயன்படுத்தும்போது, பின்வரும் கட்டண முறைகளைப் பயன்படுத்திச் செயலாக்கப்படும் ஆர்டர்களுக்கு உங்களிடம் மூன்றாம் தரப்பு பரிவர்த்தனைக் கட்டணங்கள் வசூலிக்கப்படாது:
- Shopify Payments
- Shop Pay
- Shop Pay Installments
- ரொக்கம், கேஷ் ஆன் டெலிவரி (COD) மற்றும் வங்கிப் பரிமாற்றங்கள் போன்ற மேனுவல் கட்டண முறைகள்.
Shopify Payments-ஐ உங்களின் முதன்மைக் கட்டண வழங்குநராகத் தேர்வுசெய்தால், PayPal பரிவர்த்தனைகளுக்கு மூன்றாம் தரப்புப் பரிவர்த்தனைக் கட்டணங்களில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.
கட்டண வழங்குநர்
உங்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து உங்களுக்குப் பணத்தைப் பரிமாற்றும் சேவையைக் கட்டண வழங்குநர்கள் வழங்குகின்றனர். வாடிக்கையாளர்கள் கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்துவதற்குக் கிரெடிட் கார்டு கட்டண வழங்குநர்கள் அனுமதிக்கின்றனர். உங்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து கிரெடிட் கார்டு பேமெண்ட்களை நீங்கள் பெற விரும்பினால், நீங்கள் Shopify Payments அல்லது மூன்றாம் தரப்புக் கட்டண வழங்குநரை அமைக்கலாம்.
Shopify Payments
Shopify இல் அதன் சொந்தக் கட்டண வழங்குநரான Shopify Payments உள்ளது. இது உங்கள் செக்அவுட் உடன் நேரடியாக ஒருங்கிணைக்கப்படும். உங்கள் வணிகம் Shopify Paymentsக்குத் தகுதிபெற்றிருந்தால், பின்வரும் நன்மைகளைப் பெறுவீர்கள்:
- கூடுதல் மூன்றாம் தரப்புப் பரிவர்த்தனைக் கட்டணங்கள் இல்லாமல், கிரெடிட் கார்டு கட்டணத்தை மட்டும் செலுத்தலாம்.
- உங்கள் வாடிக்கையாளர்கள் ஆன்லைன் ஸ்டோரில் இருந்து வெளியேறாமலேயே செக்அவுட்டில் அவர்களின் கட்டணத் தகவலை உள்ளிட முடியும்.
- வேறொரு இணையதளம் அல்லது கணக்கில் உள்நுழைவதற்குப் பதிலாக, உங்கள் Shopify நிர்வாகியிலிருந்தே Shopify Payments ஐ அமைக்க முடியும்.
- உங்கள் Shopify நிர்வாகியிலிருந்தே உங்கள் பேஅவுட்களை நிகழ்நேரத்தில் நீங்கள் பார்க்க முடியும்.
உங்கள் வாடிக்கையாளர்களுக்கு PayPal அல்லது ஒரு பிரத்தியேகக் கட்டண முறை போன்ற வேறொரு கட்டணம் செலுத்தும் வழியை வழங்க விரும்பினால், அவற்றை நீங்கள் Shopify Payments-உடன் கூடுதலாக அமைக்கலாம். Shopify Payments-ஐ உங்களின் முதன்மைக் கட்டண வழங்குநராகத் தேர்வுசெய்தால், PayPal பரிவர்த்தனைகளுக்கு மூன்றாம் தரப்புப் பரிவர்த்தனைக் கட்டணங்களில் இருந்து விலக்கு அளிக்கப்படும். மேனுவல் பேமெண்ட் முறைகளுக்கு மூன்றாம் தரப்புப் பரிவர்த்தனைக் கட்டணங்கள் விதிக்கப்படாது.
மூன்றாம் தரப்புக் கட்டண வழங்குநர்கள்
உங்கள் நாட்டில் Shopify Payments கிடைக்கவில்லை என்றாலோ அல்லது அதைப் பயன்படுத்த நீங்கள் விரும்பவில்லை என்றாலோ, Shopify உடன் ஒருங்கிணைக்கப்படும் மூன்றாம் தரப்புக் கட்டண வழங்குநர்களில் ஒன்றை நீங்கள் செயல்படுத்தலாம். இந்தச் சூழ்நிலையில், நீங்கள் தேர்வுசெய்யும் திட்டத்தைப் பொறுத்து மாறுபடும் மூன்றாம் தரப்புப் பரிவர்த்தனைக் கட்டணங்களைச் Shopify வசூலிக்கும். உங்கள் மூன்றாம் தரப்புக் கட்டண வழங்குநர் தங்களுக்கான கிரெடிட் கார்டு கட்டணங்களைத் தனியாக வசூலிப்பார்.
கிடைக்கக்கூடிய விருப்பங்களில் எந்தக் கட்டண வழங்குநரைப் பயன்படுத்த வேண்டும் என நீங்கள் தீர்மானித்ததும், உங்கள் Shopify நிர்வாகியில் உங்கள் கட்டண அமைப்புகளை உள்ளமைக்கலாம்.
கட்டணச் சுழற்சி
கட்டணச் சுழற்சி என்பது Shopify உங்களது திட்டக் கட்டணங்களையும் மற்ற கட்டணங்களையும் வசூலிக்கும் 30-நாள் இடைவெளியாகும். உங்களிடம் கட்டணம் வசூலிக்கப்படும் தேதியை உங்களால் தேர்ந்தெடுக்க முடியாது. ஆனால், தள்ளுபடியைப் பெற, உங்கள் கட்டணச் சுழற்சியை ஓராண்டுக்கான இடைவெளி வரை நீட்டிக்கலாம்.
செயலிச் சந்தாக்களுக்கு வேறுபட்ட கட்டணச் சுழற்சி பொருந்தும். எனவே, அவற்றின் கட்டணச் சுழற்சிகள் எப்போதும் உங்களது Shopify சந்தாக் கட்டணச் சுழற்சியின் பில்லிங் தேதியுடன் பொருந்தாமல் போகலாம்.
நீங்கள் எப்போதாவது உங்கள் ஸ்டோரை முடக்கினால், எதிர்காலத்தில் கூடுதல் கட்டணங்களைத் தவிர்க்க உங்கள் செயலிச் சந்தாக்களையும் ரத்துசெய்துள்ளீர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
தொடர்புடைய தகவல்
பல்வேறு திட்டங்கள் மற்றும் பரிவர்த்தனைக் கட்டணங்கள் குறித்து மேலும் அறிக: உங்கள் Shopify பில்லைப் பார்க்கவும்.