சரக்கு இருப்புச் சரிசெய்தல் வரலாற்றைப் பார்த்தல்

Shopify இல் நீங்கள் தடமறியும் எந்தவொரு தயாரிப்பிற்கும் சரக்கு இருப்புச் சரிசெய்தல் வரலாற்றைப் பார்க்கலாம். யார் மாற்றத்தைச் செய்தார்கள், எப்போது நடந்தது மற்றும் அது உங்கள் அளவுகளை எவ்வாறு பாதித்தது என்பதை நீங்கள் சரிபார்ப்பதற்காக, சரக்கு இருப்பு மாற்றங்கள் தானாகவே பதிவுசெய்யப்படும். தயாரிப்பில் மாறுபாடுகள் இருந்தால், தடமறியப்படும் ஒவ்வொரு மாறுபாட்டிற்குமான சரக்கு இருப்புச் சரிசெய்தல் வரலாற்றை நீங்கள் பார்க்கலாம், ஆனால் எல்லா மாறுபாடுகளுக்குமான சரக்கு இருப்புச் சரிசெய்தல் வரலாற்றையும் ஒரே நேரத்தில் பார்க்க முடியாது.

சரிசெய்தல் வரலாற்றுத் தகவலைப் புரிந்துகொள்ளுதல்

ஒரு தயாரிப்பு அல்லது மாறுபாட்டிற்கான கடந்த 180 நாட்களின் சரக்கு இருப்பு சரிசெய்தல் வரலாற்றை மட்டுமே நீங்கள் பார்க்க முடியும். 180 நாட்களுக்கு முந்தைய சரிசெய்தல் வரலாற்றுக்கு, சரக்கு இருப்பு சரிசெய்தல் மாற்றங்கள் குறித்த அறிக்கையை (Inventory adjustment changes report) நீங்கள் பயன்படுத்தலாம். SKU, இடம், பணியாளர், செயலி மற்றும் சரிசெய்தலுக்கான காரணம் உள்ளிட்ட பல பரிமாணங்களில் சரிசெய்தல்களை வடிகட்டவும் பகுப்பாய்வு செய்யவும் இந்த அறிக்கையைப் பயன்படுத்தலாம்.

உங்கள் சரிசெய்தல் வரலாறு ஒவ்வொரு சரக்கு இருப்பு சரிசெய்தல் பற்றிய விரிவான தகவலையும் காண்பிக்கும். ஒவ்வொரு சரக்கு இருப்பின் நிலைகளுக்குக் கீழேயுள்ள எண்கள், முதலில் சரிசெய்யப்பட்ட அளவையும் இரண்டாவதாகப் புதிய மொத்த அளவையும் காண்பிக்கும். டேஷ் குறியீடானது (dash), அந்த நெடுவரிசையைச் சரிசெய்தல் பாதிக்கவில்லை என்பதைக் குறிக்கிறது. சரக்கு இருப்பின் நிலைகள் குறித்து மேலும் அறிக.

உங்கள் சரிசெய்தல் வரலாற்றில் காண்பிக்கப்படும் தகவலைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள பின்வரும் அட்டவணையைச் சரிபார்க்கவும்.

உங்கள் சரக்கு இருப்பு சரிசெய்தல் வரலாற்றில் காண்பிக்கப்படும் நெடுவரிசைகள் மற்றும் ஒவ்வொரு நெடுவரிசையின் அர்த்தம்.
நெடுவரிசைவிளக்கம்
தேதிசரிசெய்தல் செய்யப்பட்ட தேதி.
செயல்பாடுசரிசெய்தலுக்குக் காரணமான நிகழ்வு. காண்பிக்கப்படும் உரை, சரக்கு இருப்பைப் புதுப்பிக்க நீங்கள் பயன்படுத்திய முறையைப் பொறுத்து மாறுபடும். மேலும் அறிந்துகொள்ள, சரிசெய்தல் செயல்பாடுகளைப் புரிந்துகொள்ளுதல் என்பதைப் பார்க்கவும்.
உருவாக்கியவர்சரிசெய்தலைச் செய்த பணியாளர், செயலி அல்லது விற்பனைச் சேனல்.
கிடைக்காதவைசரிசெய்தலுக்குப் பிறகு கிடைக்காத சரக்கு இருப்பு.
ஒதுக்கப்பட்டவைநிறைவேற்றப்படாத ஆர்டர், வரைவு ஆர்டரில் முன்பதிவு செய்யப்பட்டவை அல்லது அனுப்பத் தயாராக உள்ளதாகக் குறிக்கப்பட்ட இடமாற்றம் போன்றவற்றில் ஒதுக்கப்பட்டு விற்க முடியாத யூனிட்களின் எண்ணிக்கை.
கிடைக்கக்கூடியவைசரிசெய்தலுக்குப் பிறகு கிடைக்கக்கூடிய மற்றும் ஒதுக்கப்பட்டதாகவோ அல்லது கிடைக்காதவை என ஒதுக்கி வைக்கப்படாததுமான சரக்கு இருப்பின் அளவு.
கையிருப்புசரிசெய்தலுக்குப் பிறகு கையிருப்பில் உள்ள சரக்கு இருப்பு. இது உங்களின் ஒதுக்கப்பட்டவை, கிடைக்காதவை மற்றும் கிடைக்கக்கூடியவை ஆகியவற்றின் மொத்த அளவாகும்.
உள்வருபவைஉள்வரும் பரிமாற்றங்களிலிருந்து இடத்திற்கு வந்துகொண்டிருக்கும் சரக்கு இருப்பு.

எடுத்துக்காட்டாக, Mel's Mustards ஸ்டோரில் கிடைக்கக்கூடியவை நிலையில் 43 காரமான Dijon கடுகு தயாரிப்புகள் உள்ளன. ஒரு வாடிக்கையாளர் 5 காரமான Dijon கடுகு தயாரிப்புகளுக்கு ஆர்டர் செய்கிறார். இதனால் இந்த SKU-க்கான ஒதுக்கப்பட்டவை எண்ணிக்கை 5-ஆக அதிகரிக்கிறது. சரக்கு இருப்பு சரிசெய்தல் பக்கத்தில், இந்த ஆர்டருக்கான ஒதுக்கப்பட்டவை என்பதற்குக் கீழேயுள்ள முதல் எண் (+5) ஆகும். மேலும், ஒதுக்கப்பட்டவை என்பதற்குக் கீழேயுள்ள இரண்டாவது எண், அனைத்து ஆர்டர்களுக்கும் இந்த SKU-க்காக ஒதுக்கப்பட்டுள்ள யூனிட்களின் மொத்த அளவைக் குறிக்கிறது.

இந்த ஆர்டருக்காக 5 யூனிட்கள் ஒதுக்கப்பட்டதால், அவை கிடைக்கக்கூடியவை நிலையில் இருந்து கழிக்கப்படுகின்றன. இந்த ஆர்டருக்கான கிடைக்கக்கூடியவை என்பதற்குக் கீழேயுள்ள முதல் எண் (-5) எனக் காண்பிக்கப்படும். இரண்டாவதாகக் காண்பிக்கப்படும் எண் 38, இது ஆர்டர் செய்யப்பட்ட பிறகு கிடைக்கக்கூடிய யூனிட்களின் மொத்த அளவாகும். கிடைக்கக்கூடியவை என்ற அளவு 43-ல் இருந்து 38-ஆகக் குறைந்துள்ளது.

சரிசெய்தல் செயல்பாடுகளைப் புரிந்துகொள்ளுதல்

ஒவ்வொரு சரக்கு இருப்பு சரிசெய்தலுக்கும் எது காரணம் என்பதை செயல்பாடு என்ற நெடுவரிசையில் நீங்கள் பார்க்கலாம். காண்பிக்கப்படும் உரை, சரிசெய்தலைத் தூண்டியதைப் பொறுத்து அமையும்.

மேனுவல் சரக்கு இருப்பு சரிசெய்தல்கள்

நீங்களோ அல்லது ஒரு பணியாளரோ சரக்கு இருப்பைச் சரிசெய்யும்போது, நீங்கள் செய்ததைச் செயல்பாடு விவரிக்கிறது. காண்பிக்கப்படும் உரை, சரக்கு இருப்பைப் புதுப்பிக்க நீங்கள் பயன்படுத்திய முறையைப் பொறுத்து மாறுபடும்:

  • இதற்கு அமை (Set to): நீங்கள் தேர்ந்தெடுத்த காரணத்தைச் செயல்பாடு காண்பிக்கும். நீங்கள் ஒரு காரணத்தைத் தேர்ந்தெடுக்கவில்லை எனில், செயல்பாடு மேனுவலாகச் சரிசெய்யப்பட்டது (Manually adjusted) எனக் காண்பிக்கப்படும். காரணங்களின் முழுமையான பட்டியலுக்கு, ஒவ்வொரு காரணத்திற்கான சரிசெய்தல் செயல்பாடுகள் என்பதைப் பார்க்கவும்.
  • இதன் மூலம் சரிசெய் (Adjust by): சரக்கு இருப்பு எங்கிருந்து வருகிறது (மூல இடம்) மற்றும் எங்கு செல்கிறது (இலக்கு) என்பதை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். பாதுகாப்பு இருப்பிற்கு நகர்த்தப்பட்டது (Moved to Safety stock) அல்லது தரக் கட்டுப்பாட்டில் இருந்து நகர்த்தப்பட்டது (Moved from Quality control) போன்ற இந்த நகர்வைச் செயல்பாடு காண்பிக்கிறது. சரிசெய்தலுக்கான காரணத்தையும் நீங்கள் தேர்ந்தெடுக்கலாம், ஆனாலும் செயல்பாடு தொடர்ந்து நகர்வையே காண்பிக்கும். ஒவ்வொரு நிலைக்கான நெடுவரிசையிலும் யூனிட் மாற்றம் பிரதிபலிக்கும்.

இதன் மூலம் சரிசெய் (Adjust by) முறைக்கான பொதுவான மூல இடங்கள் மற்றும் இலக்குகள் பின்வருமாறு:

  • சரக்கு இருப்புச் சேர்த்தல்: சப்ளையர்கள் அல்லது வெளிப்புற ஆதாரங்களில் இருந்து புதிய சரக்கு இருப்பைச் சேர்க்கும்போது இது மூல இடமாகப் பயன்படுத்தப்படும்.
  • சரக்கு இருப்பு நீக்கம்: சேதமடைந்த, தொலைந்த அல்லது காலாவதியான சரக்கு இருப்பை அகற்றும் போது இலக்காகப் பயன்படுத்தப்படும்.
  • இடத்தின் பெயர்கள்: இடங்களுக்கு இடையே சரக்கு இருப்பை இடமாற்றும்போது அல்லது ஒரு குறிப்பிட்ட இடத்தில் சரக்கு இருப்பைச் சரிசெய்யும்போது, உங்களின் கடை இருப்பிடங்கள் மூல இடங்களாகவும் இலக்குகளாகவும் தோன்றும்.
  • கிடைக்காத நிலைகள்: கிடைக்காத சரக்கு இருப்பை நிர்வகிக்கும்போது, சேதமடைந்தது, தரக் கட்டுப்பாடு, பாதுகாப்பு இருப்பு மற்றும் பிறவற்றை மூல இடங்களாகவோ இலக்குகளாகவோ பயன்படுத்தலாம்.

எடுத்துக்காட்டாக, Mel's Mustards அதன் Brooklyn கிடங்கில் பாதுகாப்பு இருப்பு நிலையில் 2 காரமான Dijon கடுகு தயாரிப்புகளைக் கொண்டுள்ளது. ஒரு பணியாளர் அவற்றை விற்பனைக்குக் கிடைக்கச் செய்ய விரும்புகிறார், எனவே அவர்கள் மூல இடமாக பாதுகாப்பு இருப்பு என்பதையும் இலக்காக Brooklyn கிடங்கு என்பதையும் தேர்ந்தெடுக்கிறார்கள். சரிசெய்தல் வரலாறு பாதுகாப்பு இருப்பிலிருந்து நகர்த்தப்பட்டது (Moved from Safety stock) என்று செயல்பாட்டைக் காண்பிக்கிறது. யூனிட் மாற்றம் கிடைக்காதவை நெடுவரிசையில் (-2) எனவும், கிடைக்கக்கூடியவை நெடுவரிசையில் (+2) எனவும் பிரதிபலிக்கும்.

தானியங்கு சரக்கு இருப்பு சரிசெய்தல்கள்

ஆர்டர்கள், செயலிகள் மற்றும் சிஸ்டம் செயல்முறைகள் மூலம் சில சரிசெய்தல்கள் தானாகவே நடைபெறும். எடுத்துக்காட்டாக, வாடிக்கையாளர் ஒரு ஆர்டரைச் செய்யும்போது, உள்வரும் பரிமாற்றம் பெறப்படும்போது அல்லது வரைவு ஆர்டர் சரக்கு இருப்பை முன்பதிவு செய்யும்போது, சரிசெய்தல் வரலாறானது முன்பதிவு உருவாக்கப்பட்டது (Reservation created) அல்லது பரிமாற்றம் உருவாக்கப்பட்டது (Transfer created) போன்ற சிஸ்டத்தால் உருவாக்கப்பட்ட செயல்பாட்டைக் காண்பிக்கும். மூன்றாம் தரப்புச் செயலிகளும் உங்கள் சரக்கு இருப்பைத் தானாகவே சரிசெய்யலாம்.

இந்தச் செயல்பாடுகளின் விளக்கங்களுக்கு, சிஸ்டம் சரக்கு இருப்பு சரிசெய்தல் செயல்பாடுகள் என்பதைப் பார்க்கவும்.

ஒரு தயாரிப்புக்கான சரக்கு இருப்பு சரிசெய்தல் வரலாற்றைப் பார்த்தல்

தயாரிப்பு விவரங்கள் பக்கத்தில் இருந்து எந்தவொரு தயாரிப்பு அல்லது மாறுபாட்டிற்கான சரிசெய்தல் வரலாற்றையும் நீங்கள் பார்க்கலாம்.

படிகள்:

டெஸ்க்டாப்
  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, தயாரிப்புகள் பகுதிக்குச் செல்லவும்.

  2. நீங்கள் எந்தத் தயாரிப்புக்கான சரக்கு இருப்பு சரிசெய்தல் வரலாற்றைப் பார்க்க விரும்புகிறீர்களோ, அந்தத் தயாரிப்பைக் கிளிக் செய்யவும்.

  3. விருப்பத்தேர்வு: தயாரிப்பிற்கு மாறுபாடுகள் இருந்தால், ஒரு மாறுபாட்டைக் கிளிக் செய்யவும்.

  4. சரக்கு இருப்பு பிரிவில், சரக்கு இருப்பு கண்காணிக்கப்படுகிறது என்ற விருப்பம் செயல்படுத்தப்பட்டுள்ளதா என்பதை உறுதிசெய்யவும்.

  5. சரிசெய்தல் வரலாற்றைப் பார் என்பதைக் கிளிக் செய்யவும்.

மொபைல்
  1. Shopify செயலியில், Products ஐகானைத் தட்டவும் .
  2. எந்தத் தயாரிப்புக்கான சரக்கு இருப்பு சரிசெய்தல் வரலாற்றைப் பார்க்க விரும்புகிறீர்களோ, அந்தத் தயாரிப்பைத் தட்டவும்.
  3. விருப்பத்தேர்வு: தயாரிப்பிற்கு மாறுபாடுகள் இருந்தால், ஒரு மாறுபாட்டைத் தட்டவும்.
  4. சரக்கு இருப்பு பிரிவில், சரக்கு இருப்பு கண்காணிக்கப்படுகிறது என்ற விருப்பம் செயல்படுத்தப்பட்டுள்ளதா என்பதை உறுதிசெய்யவும்.
  5. சரிசெய்தல் வரலாற்றைப் பார் என்பதைத் தட்டவும்.

ஒவ்வொரு காரணத்திற்கான சரிசெய்தல் செயல்பாடுகள்

இதற்கு அமை மற்றும் இவ்வளவால் சரிசெய் ஆகிய இரு முறைகளிலும், இருப்பு சரிசெய்தலைச் செய்வதற்கான காரணத்தைத் தேர்வுசெய்யலாம். இதற்கு அமை முறையைப் பயன்படுத்தும்போது ஒவ்வொரு காரணத்தையும், அதற்குரிய சரிசெய்தல் செயல்பாட்டையும் சரிசெய்தல் வரலாறு பக்கத்தில் பின்வரும் அட்டவணை காட்டுகிறது. ஒவ்வொரு காரணத்தின் விளக்கங்களுக்கும் அவற்றைப் பயன்படுத்த வேண்டிய நேரத்திற்கான வழிகாட்டலுக்கும் இருப்பு சரிசெய்தல் காரணங்கள் என்பதைப் பார்க்கவும்.

இருப்பு சரிசெய்தல் காரணங்களும் சரிசெய்தல் வரலாறு பக்கத்தில் காட்டப்படும் அவற்றுக்குரிய சரிசெய்தல் செயல்பாடும்
காரணம்சரிசெய்தல் செயல்பாடு
திருத்தம்சரக்கு இருப்புத் திருத்தம்
எண்ணிக்கைசுயமாக எண்ணப்பட்ட சரக்கு இருப்பு
பெறப்பட்டதுசரக்கு இருப்பு பெறப்பட்டது
ரிட்டர்ன் மீளிருப்புஉருப்படிகள் மீளிருப்பு செய்யப்பட்டன
சேதமடைந்தவைசேதமடைந்தவை
திருட்டு அல்லது இழப்புதிருட்டு அல்லது இழப்பு
விளம்பரம் அல்லது நன்கொடைவிளம்பரம் அல்லது நன்கொடை

சிஸ்டம் இருப்பு சரிசெய்தல் செயல்பாடுகள்

சரக்கு இருப்பைச் சுயமாகச் சரிசெய்யும்போது நீங்களோ உங்கள் பணியாளர்களோ தேர்ந்தெடுக்கும் காரணங்களுடன் பொருந்தாத சரிசெய்தல் செயல்பாடுகளை உங்கள் சரிசெய்தல் வரலாறு பக்கத்தில் நீங்கள் சந்திக்கக்கூடும். உங்கள் ஸ்டோரின் சரக்கு எண்ணிக்கையைத் துல்லியமாக வைத்திருக்க, சிஸ்டம் செயல்பாடுகள் அல்லது மூன்றாம் தரப்புச் செயலிகள் உங்கள் சரக்கு இருப்பைத் தானாகவே சரிசெய்யக்கூடும்.

எடுத்துக்காட்டாக, Mel's Mustards-க்கு 25 காரமான Dijon மஸ்டர்டுகள் அவர்களின் Brooklyn கிடங்கிற்கு வந்துகொண்டிருக்கின்றன, அவை உள்வருபவை நெடுவரிசையில் காட்டப்படும். உள்வரும் பரிமாற்றம் பெறப்பட்டதாகப் பணியாளர் ஒருவர் குறிக்கும்போது, அந்த இடத்தின் கையிருப்பில் உள்ளவை என்ற நிலையில் அந்த யூனிட்கள் தானாகவே சேர்க்கப்படும். பரிமாற்றம் உருவாக்கப்பட்டது எனச் சரிசெய்தல் வரலாறு இந்தச் செயல்பாட்டைக் காட்டும். இந்த யூனிட் மாற்றம் உள்வருபவை நெடுவரிசையில் (-25) எனவும் கையிருப்பில் உள்ளவை நெடுவரிசையில் (+25) எனவும் காட்டப்படும்.

உங்கள் சரிசெய்தல் வரலாறு பக்கத்தில் நீங்கள் பார்க்கக்கூடிய மிகவும் பொதுவான தானியங்கு சரிசெய்தல் செயல்பாடுகளையும் சுயமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சரிசெய்தல் காரணங்களையும் பின்வரும் அட்டவணை காட்டுகிறது.

சரிசெய்தல் வரலாறு பக்கத்தில் காட்டப்படும் சிஸ்டம் இருப்பு சரிசெய்தல் செயல்பாடுகளும் ஒவ்வொன்றுக்கான விளக்கமும்
சரிசெய்தல் செயல்பாடுவிளக்கம்
தரவுத் திருத்தம்தானாகவே செய்யப்பட்ட ஒரு பிழைத் திருத்தத்தைக் குறிக்கிறது.
பரிமாற்றம் உருவாக்கப்பட்டதுஉள்வரும் பரிமாற்றம் பெறப்பட்டதாகக் குறிக்கப்பட்டபோது சேர்க்கப்பட்ட சரக்கு இருப்பைக் குறிக்கிறது.
இடத்திலிருந்து அகற்றப்பட்டதுதயாரிப்பிலிருந்து ஒரு இடம் ஒதுக்கீடு நீக்கப்பட்டுள்ளதைக் குறிக்கிறது, எனவே இனி அந்த இடத்தில் சரக்கு இருப்பு வைக்கப்படாது.
முன்பதிவு உருவாக்கப்பட்டதுவரைவு ஆரடருக்காக அல்லது மூன்றாம் தரப்புச் செயலியால் தனியாக ஒதுக்கப்பட்டுள்ள சரக்கு இருப்பைக் குறிக்கிறது. வரைவு ஆர்டருக்காக முன்பதிவு செய்யப்பட்ட சரக்கு இருப்பு ஒதுக்கப்பட்டது எனவும், மூன்றாம் தரப்புச் செயலி வைத்துள்ள சரக்கு இருப்பு கிடைக்காதவை எனவும் காட்டப்படும்.
முன்பதிவு புதுப்பிக்கப்பட்டதுஒரு வரைவு ஆர்டரில் அல்லது மூன்றாம் தரப்புச் செயலி இருப்பில் மாற்றங்கள் நிகழும்போது முன்பதிவு புதுப்பிக்கப்பட்டதை இது குறிக்கிறது.
முன்பதிவு நீக்கப்பட்டதுஒரு முன்பதிவு அகற்றப்பட்டதைக் குறிக்கிறது. ஒரு மூன்றாம் தரப்புச் செயலி முன்பதிவை நீக்கும்போது அல்லது வரைவு ஆர்டர் காலாவதியாகும்போத, சரக்கு இருப்பு மீண்டும் கையிருப்பில் உள்ளவை நிலைக்குத் திரும்பும்.