சரக்கு இருப்பு நிலைகளைப் புரிந்துகொள்ளுதல்
உங்கள் Shopify நிர்வாகியில் துல்லியமான சரக்கு இருப்பு அளவுகளைப் பராமரிக்க, உங்கள் தயாரிப்புகளுக்குச் சரக்கு இருப்பு நிலை ஒதுக்கப்படும். ஒரு தயாரிப்பானது கையிருப்பில் உள்ளதா மற்றும் வாங்குவதற்குக் கிடைக்கிறதா, கமிட் செய்யப்பட்டுள்ளதா, கிடைக்கவில்லையா அல்லது உள்வரும் ஷிப்மென்ட்டின் ஒரு பகுதியா என்பதை உள்ளடக்கிய தயாரிப்பின் நிலையை ஒரு சரக்கு இருப்பு நிலை வரையறுக்கிறது. சரக்கு இருப்பு நிலைகளைப் புரிந்துகொள்வதன் மூலம், உங்கள் தயாரிப்புகள் குறித்த சமீபத்திய தகவல்களைப் பெற்றுள்ளீர்கள் என்பதை உறுதிசெய்துகொள்ளலாம், இது உங்கள் ஆர்டர்கள் மற்றும் சரக்கு மேலாண்மை பற்றிச் சிறந்த முடிவுகளை எடுக்க உதவும்.
உங்கள் அளவுகளின் நிலையானது, உங்கள் சரக்கு இருப்பு பக்கத்தில் உள்ள ஒவ்வொரு தயாரிப்பு அல்லது மாறுபாட்டிற்கும் அடுத்துக் காட்டப்படும். உங்களுக்கு வேண்டிய தகவலைக் காட்ட சரக்கு இருப்பு பக்கத்தில் காட்சிகளை உருவாக்கலாம் மற்றும் திருத்தலாம். எடுத்துக்காட்டாக, உங்களுக்கு கையிருப்பு நெடுவரிசை தேவையில்லை எனில், அதை மறைத்துவிட்டுக் காட்சியைச் சேமிக்கலாம். சரக்கு இருப்பு பக்கம் பற்றி மேலும் அறிக.
குறிப்பிட்ட தயாரிப்பு அல்லது மாறுபாட்டுப் பக்கங்களிலும் நீங்கள் சரக்கு இருப்பு நிலைகளைக் காண முடியும். தயாரிப்பு மற்றும் மாறுபாட்டுப் பக்கங்களில் உள்ள சரக்கு இருப்புக் கார்டானது, மாறுபாட்டை நிறைவேற்றாத இடங்கள் உட்பட அதற்கான ஒவ்வொரு செயலில் உள்ள இருப்பிடத்தையும் பட்டியலிடுகிறது. மாறுபாட்டை நிறைவேற்றாத இடங்களில், கையிருப்பு காட்டப்படுவதுடன் 0-க்கும் அதிகமாக உள்ள ஏதேனும் கமிட் செய்யப்பட்ட, கிடைக்காத அல்லது உள்வரும் அளவுகளும் காட்டப்படும். மாறுபாட்டை நிறைவேற்றாத இடங்களுக்குக் கிடைப்பது காட்டப்படாது. ஒரு இடத்தில் கையிருப்பு பதிவுசெய்யப்பட்டு, கிடைப்பது என்ற இடத்தில் ஒரு கோடு இருந்தால், அந்த மாறுபாடு அந்த இடத்தில் செயலற்ற நிலையில் உள்ளது என்று பொருளாகும். மாறுபாட்டை நிறைவேற்றுவதற்கு இடம் செயலில் உள்ளதா என்பதைப் பொருட்படுத்தாமல், இந்த இடங்களில் எதிலும் நீங்கள் சரக்கு இருப்பு அளவுகளைச் சரிசெய்யலாம்.
உங்கள் சரக்கு இருப்பின் நிலைகளைத் தீர்மானிக்க, Shopify-இல் சரக்கு இருப்புத் தகவலை உள்ளிட்டு சரக்கு இருப்பைத் தடமறிதல் என்பதைச் செயல்படுத்த வேண்டும்.
இந்தப்பக்கத்தில்
சரக்கு இருப்பு நிலைகள்
உங்கள் சரக்கு இருப்பு வெவ்வேறு நிலைகளில் இருக்கலாம். சரக்கு இருப்பு நிலைகள் பற்றி மேலும் அறியப் பின்வரும் அட்டவணையை மதிப்பாய்வு செய்யவும்.
| சரக்கு இருப்பு நிலை | வரையறை |
|---|---|
| கையிருப்பு | கையிருப்புச் சரக்கு என்பது நீங்கள் ஒரு இடத்தில் வைத்துள்ள அனைத்துச் சரக்கு இருப்பு அலகுகளையும் குறிக்கும். உங்களின் கமிட் செய்யப்பட்ட, கிடைக்காத மற்றும் கிடைக்கும் சரக்கு இருப்பின் மொத்த அளவே கையிருப்புச் சரக்கு இருப்பு ஆகும். |
| கிடைப்பது | கிடைக்கும் சரக்கு இருப்பு என்பது நீங்கள் விற்கக்கூடிய சரக்கு இருப்பைக் குறிக்கும். கிடைக்கும் சரக்கு இருப்பு என்பது கமிட் செய்யப்பட்டதோ அல்லது கிடைக்காதது என ஒதுக்கி வைக்கப்பட்டதோ அல்ல. உள்வருவது எனக் கருதப்படும் சரக்கு இருப்பும் இதில் அடங்காது. |
| கமிட் செய்யப்பட்டது | கமிட் செய்யப்பட்ட சரக்கு இருப்பு என்பது, ஒதுக்கிவைக்கப்பட்ட மற்றும் விற்க முடியாத அலகுகளின் எண்ணிக்கையைக் குறிக்கும். எடுத்துக்காட்டாக, நிறைவேற்றப்படாத ஆர்டரில் உள்ள, ஒரு வரைவு ஆர்டரில் முன்பதிவு செய்யப்பட்டுள்ள அல்லது அனுப்பத் தயாராக உள்ளதாகக் குறிக்கப்பட்ட ஓர் இடமாற்றத்திலுள்ள அலகுகள். |
| கிடைக்காதது | கிடைக்காத சரக்கு இருப்பு என்பது செயலிகளால் ஒதுக்கிவைக்கப்பட்ட அல்லது சேதமடைந்தவை, தரக் கட்டுப்பாடு அல்லது பாதுகாப்பு இருப்பு போன்ற பிற காரணங்களுக்காக நிறுத்திவைக்கப்பட்டுள்ள அலகுகளின் எண்ணிக்கையைக் குறிக்கும். கிடைக்காத சரக்கு இருப்பானது உங்கள் இடத்தில் ஸ்டாக் செய்யப்பட்டிருக்கும், ஆனால் விற்கக் கிடைக்காது. |
| உள்வருவது | உள்வரும் சரக்கு இருப்பு என்பது சரக்கு இடமாற்றங்கள் அல்லது செயலிகள் மூலமாக உங்கள் இடத்திற்கு வந்துகொண்டிருக்கும் சரக்கு இருப்பைக் குறிக்கிறது. பெறப்பட்டு அதன் நிலை கிடைப்பது என மாற்றப்படும் வரை, உள்வரும் சரக்கு இருப்பை விற்க முடியாது. |
கையிருப்புச் சரக்கு நிலை
கையிருப்பு சரக்கு இருப்பு என்பது ஒரு இருப்பிடத்தில் உங்களிடம் உள்ள யூனிட்டுகளின் மொத்த எண்ணிக்கையைக் குறிக்கிறது. கையிருப்பு சரக்கு இருப்பு என்பது உங்கள் கமிட் செய்யப்பட்ட, கிடைக்காத மற்றும் கிடைக்கும் சரக்கு இருப்புகளின் கூடுதல் ஆகும். Shopify நிர்வாகியில் உங்கள் கையிருப்பு அளவைத் திருத்தலாம். கையிருப்பு அளவைத் திருத்தும்போது, உங்கள் கிடைக்கும் அளவும் அதே அளவுக்கு மாறும்.
எடுத்துக்காட்டாக, Jo's Jams பின்வரும் சரக்கு இருப்பைக் கொண்டுள்ளது:
- 10 ஜாம்கள் கமிட் செய்யப்பட்டவை, ஏனெனில் அவை பிளேஸ் செய்யப்பட்ட ஆர்டர்களில் உள்ளன அல்லது வரைவு ஆர்டர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன
- 6 ஜாம்கள் கிடைக்காதவை, ஏனெனில் அவை சேதமடைந்துள்ளன அல்லது ஒரு செயலியால் தனியாக வைக்கப்பட்டுள்ளன
- 4 ஜாம்கள் கிடைப்பவை மற்றும் விற்பனைக்குத் தயாராக உள்ளன
Jo's Jam கடையில் கையிருப்பில் உள்ள ஜாம்களின் மொத்த யூனிட்டுகள் 20 ஆகும், இது கமிட் செய்யப்பட்ட, கிடைக்காத மற்றும் கிடைக்கும் நிலைகளில் உள்ள யூனிட்டுகளின் மொத்த அளவை அடிப்படையாகக் கொண்டது.
உங்கள் கையிருப்பு சரக்கு இருப்பைப் பல இடங்களில் பார்க்கலாம்:
- சரக்கு இருப்பு பட்டியல் பக்கம்
- தயாரிப்பு அல்லது மாறுபாட்டுப் பக்கங்களில் உள்ள சரக்கு இருப்புக் கார்டு
- Shopify மொபைல் செயலி
- Shopify POS
கிடைக்கும் சரக்கு இருப்பு நிலை
கிடைக்கும் சரக்கு இருப்பு என்பது நீங்கள் விற்கக்கூடிய சரக்கு இருப்பைக் குறிக்கிறது. கிடைக்கும் சரக்கு இருப்பு கமிட் செய்யப்படவில்லை அல்லது கிடைக்காதவை என ஒதுக்கி வைக்கப்படவில்லை. இதில் உள்வருபவை எனக் கருதப்படும் சரக்கு இருப்பும் அடங்காது. Shopify நிர்வாகியில் கிடைக்கும் அளவைத் திருத்தலாம். கிடைக்கும் அளவைத் திருத்தும்போது, உங்களின் கையிருப்பு அளவும் அதே அளவுக்கு மாறும்.
எடுத்துக்காட்டாக, Jo's Jams கடையில் 60 யூனிட் ஜாம்கள் கையிருப்பில் உள்ளன, அவை விற்பனைக்குத் தயாராக உள்ளன.
இந்த Jo's Jams கடை இருப்பிடத்தில் கிடைக்கக்கூடிய ஜாம் யூனிட்டுகளின் அளவு 60 ஆகும்.
கமிட் செய்யப்பட்ட சரக்கு இருப்பு நிலை
கமிட் செய்யப்பட்ட சரக்கு இருப்பு என்பது, விற்க முடியாதபடி தனியாக வைக்கப்பட்டுள்ள யூனிட்டுகளின் எண்ணிக்கையைக் குறிக்கிறது, அதாவது நிறைவேற்றப்படாத ஆர்டரில் உள்ள யூனிட்டுகள், வரைவு ஆர்டரில் முன்பதிவு செய்யப்பட்டவை அல்லது அனுப்பத் தயாராக உள்ளதாகக் குறிக்கப்பட்ட இடமாற்றத்தில் உள்ளவை.
எடுத்துக்காட்டாக, Jo's Jams இன்று சில ஆன்லைன் விற்பனைகளைச் செய்துள்ளது. அவர்கள் 20 ஜாம்களை விற்றனர். விற்கப்பட்ட 20 சரக்கு இருப்பு யூனிட்டுகள் இப்போது கமிட் செய்யப்பட்ட நிலையில் உள்ளன, ஏனெனில் அவை பிளேஸ் செய்யப்பட்ட, ஆனால் இன்னும் நிறைவேற்றப்படாத ஆர்டர்களின் ஒரு பகுதியாகும். ஒரு வரைவு ஆர்டருக்காக Jo சரக்கு இருப்பை முன்பதிவு செய்தால், அந்த வரைவு ஆர்டர் நிறைவடைவதற்கு முன்பு அந்த யூனிட்டுகளும் கமிட் செய்யப்பட்டவையாகும்.
கிடைக்காத சரக்கு இருப்பு நிலை
கிடைக்காத சரக்கு இருப்பு என்பது செயலிகளால் தனியாக வைக்கப்பட்டுள்ள அல்லது சேதமடைந்தவை, தரக் கட்டுப்பாடு அல்லது பாதுகாப்பு இருப்பு போன்ற பிற காரணங்களுக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள யூனிட்டுகளின் எண்ணிக்கையைக் குறிக்கிறது. கிடைக்காத சரக்கு இருப்பு உங்கள் இருப்பிடத்தில் இருப்பில் இருக்கும், ஆனால் விற்கக் கிடைக்காது. சரக்கு இருப்பு அளவுகளைச் சரிசெய்வதன் மூலம் கிடைக்கும் உருப்படிகளை கிடைக்காதவையாகவும் மாற்றலாம்.
எடுத்துக்காட்டாக, Jo's Jams கிடங்கில் 55 ஜாம்கள் இருப்பில் உள்ளன. ஒரு செயலி 35 ஜாம்களைப் பாதுகாப்பு இருப்பாக ஒதுக்கியுள்ளது. சரக்கு எண்ணிக்கையின்போது, ஒரு ஜாடியில் லேபிள் இல்லை என்பதை Jo கவனித்து, தரக் கட்டுப்பாட்டுக்காக கிடைக்கக்கூடிய ஒரு ஜாமை கிடைக்காததாக மாற்றுகிறார். இந்த இருப்பிடத்திற்கான கிடைக்காத மொத்தச் சரக்கு இருப்பு 36 யூனிட் ஜாம்களாகும். கிடைக்கும் மொத்தச் சரக்கு இருப்பு 19 யூனிட் ஜாம்களாகும். Jo லேபிளை மாற்றிவிட்டு, ஜாமை மீண்டும் விற்பனைக்குக் கிடைக்கும்படி செய்தால், கிடைக்கும் சரக்கு இருப்பு 20 யூனிட் ஜாம்களாக இருக்கும்.
உள்வரும் சரக்கு இருப்பு நிலை
உள்வரும் சரக்கு இருப்பு என்பது இடமாற்றங்கள், கொள்முதல் ஆர்டர்கள் அல்லது செயலிகளிலிருந்து உங்கள் இருப்பிடத்திற்கு வந்து கொண்டிருக்கும் சரக்கு இருப்பைக் குறிக்கிறது. இருப்பிடத்தில் பெறப்படும் வரை உள்வரும் சரக்கு இருப்பை விற்க முடியாது. கொள்முதல் ஆர்டர்கள் அல்லது இடமாற்றங்களில் இருந்து உள்வரும் சரக்கு இருப்பைப் பெற்ற பிறகு, நிலை தானாகவே கிடைப்பவை என மாறும். உள்வரும் சரக்கு இருப்பைப் பெற்ற பிறகு, செயலிகள் கிடைப்பவை என்பதைத் தவிர வேறு நிலைகளையும் கொண்டிருக்கலாம். எடுத்துக்காட்டாக, ஒரு செயலி பெறப்பட்ட சரக்கு இருப்பைப் பாதுகாப்பு இருப்பாகக் கருதி கிடைக்காதவை என்ற நிலைக்கு மாற்றலாம். உள்வரும் சரக்கு இருப்பு பெறப்பட்டு கிடைக்கக்கூடியதாக மாறும்போது, அது கையிருப்பு அளவிலும் கணக்கிடப்படும். சரக்கு இடமாற்றங்களைப் பெறுவது குறித்து மேலும் அறிக.
எடுத்துக்காட்டாக, Jo's Jams இரண்டு கடைகளைக் கொண்டுள்ளது: கடை A மற்றும் கடை B. கடை A 90 ஜாம்கள் கொண்ட ஒரு ஷிப்மென்ட்டை கடை B க்கு அனுப்புகிறது.
கடை B இல் உள்ள Jo's Jams க்கான உள்வரும் அளவு 90 யூனிட் ஜாம்களாகும்.