சரக்கு மேலாண்மையைப் புரிந்துகொள்ளுதல்

சரக்கு மேலாண்மையில் உங்கள் வணிகத்தின் சரக்கு இருப்பான எந்தவொரு மூலப்பொருள்கள், கூறுகள் மற்றும் முடிக்கப்பட்ட தயாரிப்புகள் போன்றவற்றுக்கான கண்காணிப்பு அடங்கும். சரக்கு இருப்பை நீங்கள் திறம்பட நிர்வகிக்க உதவுவதற்கான உத்திகள் மற்றும் நடைமுறைகளை இந்த வழிகாட்டி வழங்குகிறது.

உங்கள் Shopify நிர்வாகியின் சரக்கு இருப்பு பக்கத்திலிருந்து நீங்கள் உங்கள் சரக்கு இருப்பை நிர்வகிக்கலாம் மற்றும் கண்காணிக்கலாம்.

உங்கள் சரக்கு இருப்பு விற்பனைச் சுழற்சியைப் புரிந்துகொள்ளுதல்

உங்கள் சரக்கு இருப்பை வெற்றிகரமாக நிர்வகிக்க, உங்களின் விற்பனைச் சுழற்சியைப் புரிந்துகொள்ள வேண்டும். விற்பனை முறைகளை அடையாளம் காணவும், எதிர்கால விற்பனையைக் கணிக்கவும் உதவும் வகையில் உங்களின் கடந்தகால விற்பனைத் தரவை நீங்கள் பகுப்பாய்வு செய்யலாம்.

ஒரு வணிகம் சரக்கு இருப்பின் ஒரு அலகைப் பெறும் நேரம் முதல் இறுதி வாடிக்கையாளருக்கு அது விற்கப்படும் நேரம் வரையிலான முழு செயல்முறையையும் சரக்கு இருப்பு விற்பனைச் சுழற்சி குறிக்கிறது. இந்தச் சுழற்சியானது சரக்கு இருப்பைப் பெறுதல், சேமித்தல், நிர்வகித்தல் மற்றும் விற்பனை செய்தல் ஆகிய நிலைகளை உள்ளடக்கியுள்ளது. ஒவ்வொரு புதிய சரக்கு உருப்படிக்கும் சுழற்சிகள் மீண்டும் நிகழும்.

சரக்கு மேலாண்மை, மீளிருப்பு மற்றும் திட்டமிடல் ஆகியவற்றுக்கு உதவும் உங்கள் தயாரிப்புச் சரக்கு இருப்பு பற்றிய அளவீடுகளை, தயாரிப்புகள் பக்கத்தில் உள்ள தயாரிப்புச் சரக்கு இருப்புப் பகுப்பாய்வுப் பட்டியில் நீங்கள் பார்க்கலாம். சரக்கு இருப்புப் பகுப்பாய்வை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றி மேலும் அறிக.

ஒரு உருப்படிக்கான வழக்கமான சரக்கு இருப்பு விற்பனைச் சுழற்சியானது, பின்வரும் நிலைகளை உள்ளடக்கியிருக்கக்கூடும்:

  1. கொள்முதல் செய்தல்: உங்கள் ஸ்டோரில் குறிப்பிட்ட தயாரிப்பின் தேவையைக் கண்டறிந்து, பொருள்களைக் கொள்முதல் செய்ய உங்கள் சப்ளையரிடம் ஒரு ஆர்டரை மேற்கொள்ளவும்.
  2. பெறுதல் மற்றும் ஆய்வு செய்தல்: சரக்கு இருப்பின் தரம் மற்றும் அளவு ஆகியவற்றை ஆய்வுசெய்து, அது நீங்கள் ஆர்டர் செய்தவற்றுடன் பொருந்துகிறதா என்பதை உறுதிப்படுத்தவும். ஏதேனும் முரண்பாடுகள் அல்லது சேதம் இருந்தால் சப்ளையரிடம் தெரிவிக்கவும்.
  3. சேமிப்பகம்: உருப்படிகளை அவற்றின் வகை மற்றும் தேவைகளின் அடிப்படையில் சேமிக்கவும். சரக்கு இருப்பிற்கு ஏற்படும் சேதம் அல்லது இழப்பைத் தடுப்பதற்குச் சரியான சேமிப்பு நடைமுறைகள் முக்கியமானதாகும்.
  4. சரக்கு மேலாண்மை: உங்கள் ஸ்டோரில் உள்ள ஒவ்வொரு உருப்படியின் அளவையும் தடமறிய, உங்கள் Shopify நிர்வாகியின் சரக்கு இருப்பு பக்கத்தில் உங்கள் இருப்பு நிலைகளை நிர்வகிக்கவும். உருப்படிகளை வகைப்படுத்தவும், SKUகளை அமைக்கவும், உங்கள் சரக்கு இருப்புப் பதிவுகளைத் தவறாமல் புதுப்பிக்கவும்.
  5. விற்பனை: வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்யும்போது, உங்கள் சரக்கு இருப்பு வாடிக்கையாளர்களுக்கு விற்கப்படும். மேலும் உங்கள் Shopify நிர்வாகியில் உங்கள் சரக்கு இருப்பு நிலைகள் தானாகவே புதுப்பிக்கப்படும்.
  6. டெலிவரி: உங்கள் வாடிக்கையாளருக்குத் தயாரிப்பை பேக் செய்து அனுப்பவும். வாடிக்கையாளர் திருப்தியைப் பராமரிக்க, தயாரிப்புகளை விரைவாக அனுப்புவதுடன் நம்பகமான டெலிவரிச் சேவைகளைப் பயன்படுத்தவும்.
  7. மீண்டும் ஆர்டர் செய்: விற்பனைத் தரவு மற்றும் தற்போதைய சரக்கு இருப்பு நிலைகளின் அடிப்படையில், தயாரிப்பை எப்போது மீண்டும் ஆர்டர் செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிக்கவும். விற்பனையாகும் வீதத்தைப் புரிந்துகொள்வதற்கும் விற்பனையைக் கணிப்பதற்கும் Shopify இல் உள்ள உங்கள் ஸ்டோரின் சரக்கு இருப்புப் பகுப்பாய்வைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
  8. வாடிக்கையாளர் கருத்து மற்றும் ரிட்டர்ன் மேலாண்மை: வாடிக்கையாளர் கருத்தைச் சேகரித்து, ஏதேனும் ரிட்டர்ன்கள் அல்லது பரிமாற்றங்கள் இருந்தால் அவற்றைக் கையாளவும். எதிர்காலச் சரக்கு இருப்புத் திட்டமிடலுக்கு வாடிக்கையாளரின் கருத்து பயனுள்ளதாக இருக்கும்.

சரக்கு மேலாண்மை முறைகள்

செலவுகளைக் குறைத்து, வாடிக்கையாளர் தேவையைப் பூர்த்தி செய்யும் அதே நேரத்தில், உங்கள் வணிகத்தில் சரியான நேரத்தில் சரியான தயாரிப்புகள் இருப்பதை உறுதிசெய்யப் பல்வேறு முறைகள் உள்ளன.

சரக்கு மேலாண்மைக்குச் சரியான முறையைத் தேர்ந்தெடுப்பது என்பது வணிக மாதிரி, தயாரிப்புகளின் வகை, தேவையில் ஏற்படும் மாறுபாடுகள், சப்ளையர் நம்பகத்தன்மை போன்ற பல்வேறு காரணிகளைப் பொறுத்தது. சரக்கு மேலாண்மையை மேம்படுத்த, வணிகங்கள் பெரும்பாலும் பல முறைகளின் கலவையைப் பயன்படுத்துகின்றன.

சரக்கு மேலாண்மைக்குப் பயன்படுத்தப்படும் சில பொதுவான முறைகளின் மேலோட்டப் பார்வைக்குப் பின்வரும் அட்டவணையைப் பார்க்கவும்:

EOQ, JIT, ABC பகுப்பாய்வு, பாதுகாப்பு இருப்பு மற்றும் பிற உத்திகள் உள்ளிட்ட பொதுவான சரக்கு மேலாண்மை முறைகளின் மேலோட்டப் பார்வை.
முறைவிளக்கம்
பொருளாதார ஆர்டர் அளவு (EOQ)EOQ என்பது உங்கள் வணிகம் ஆர்டர் செய்ய வேண்டிய மிகச் சிக்கனமான ஒரு உருப்படியின் அளவைக் கணக்கிடும் ஒரு முறையாகும். சரக்குகளை ஆர்டர் செய்வது மற்றும் வைத்திருப்பது தொடர்பான செலவுகளைக் குறைப்பதே இதன் நோக்கமாகும். சரக்கு இருப்புச் சேமிப்புச் செலவையும் ஆர்டர் செய்யும் செலவையும் இம்முறை சமன்செய்கிறது.
ஜஸ்ட்-இன்-டைம் (JIT)JIT முறையானது, உற்பத்தி செயல்முறையின்போது தேவைக்கேற்ப மட்டுமே பொருட்களைப் பெற்று, அதன் மூலம் சரக்கு இருப்புச் செலவுகளைக் குறைத்து, செயல்திறனை அதிகரிப்பதையும் விரயத்தைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இதற்குத் துல்லியமான கணிப்பும் நம்பகமான சப்ளையர்களும் அவசியமாகும்.
ABC பகுப்பாய்வுஇந்த முறையானது, சரக்கு இருப்பை அவற்றின் முக்கியத்துவத்தின் அடிப்படையில் மூன்று வகுப்புகளாக வகைப்படுத்துகிறது: 'A' உருப்படிகள் என்பவை குறைவான விற்பனை அதிர்வெண்ணைக் கொண்ட அதிக மதிப்புள்ள தயாரிப்புகளாகும், 'B' உருப்படிகள் என்பவை மிதமான விற்பனை அதிர்வெண்ணைக் கொண்ட மிதமான மதிப்புள்ள தயாரிப்புகளாகும் மற்றும் 'C' உருப்படிகள் என்பவை அதிக விற்பனை அதிர்வெண்ணைக் கொண்ட குறைந்த மதிப்புள்ள தயாரிப்புகளாகும். இது வணிகங்கள் தங்களின் மிகவும் மதிப்புமிக்க தயாரிப்புகளை நிர்வகிப்பதில் கவனம் செலுத்த அனுமதிக்கிறது. ABC பகுப்பாய்வு பற்றி மேலும் அறிக.
பாதுகாப்பு இருப்புசந்தைத் தேவையில் ஏற்படும் மாற்றங்கள் அல்லது சப்ளையாவதில் ஏற்படும் தாமதங்கள் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்க, கையிருப்பில் வைக்கப்படும் கூடுதல் சரக்கு இருப்பே பாதுகாப்பு இருப்பாகும். இம்முறை, சரக்கு காலியாவதைத் தடுத்து வாடிக்கையாளர் திருப்தியைப் பராமரிக்க உதவுகிறது.
தொடர் சரக்கு மேலாண்மைவிற்பனை மற்றும் கொள்முதல் நடைபெறும்போதே, சரக்கு இருப்புப் பதிவுகளை உடனுக்குடன் புதுப்பிக்கும் செயல்முறையை இந்த முறை உள்ளடக்கியுள்ளது. இது துல்லியமான சரக்கு எண்ணிக்கைகளை வழங்குவதுடன், சரக்கு மேலாண்மை மென்பொருள் மூலம் இதனைத் தானியங்குபடுத்தலாம்.
ஃபர்ஸ்ட்-இன், ஃபர்ஸ்ட்-அவுட் (FIFO)FIFO என்பது ஒரு சரக்கு இருப்பு மதிப்பீட்டு முறையாகும், இதில் முதலில் உற்பத்தி செய்யப்பட்ட அல்லது வாங்கப்பட்ட சொத்துகள் முதலில் விற்கப்படும், பயன்படுத்தப்படும் அல்லது அப்புறப்படுத்தப்படும். எளிதில் கெட்டுப்போகும் பொருட்களுக்கு இது மிகவும் முக்கியமானது, மேலும் அனைத்து வகையான தயாரிப்புகளும் பயனற்றதாக மாறுவதையோ சேதமடைவதையோ தடுக்க இது ஒரு சிறந்த நடைமுறையாகும்.
டிராப்ஷிப்பிங்டிராப்ஷிப்பிங் என்பது ஸ்டோரில் விற்கும் தயாரிப்புகளை ஸ்டாக்கில் வைத்திருக்காத ஒரு நிறைவேற்ற முறையாகும். அதற்குப் பதிலாக, ஒரு ஸ்டோர் தயாரிப்பை விற்கும்போது, அது மூன்றாம் தரப்பினரிடமிருந்து அந்த உருப்படியை வாங்கி நேரடியாக வாடிக்கையாளருக்கு அனுப்புகிறது. இந்த முறை சரக்கு இருப்பு மேலாண்மையின் தேவையைக் குறைக்கிறது.
கன்சைன்மென்ட்கன்சைன்மென்ட் முறையில், பொருட்கள் சரக்குப் பெறுநருக்கு அனுப்பப்படும், ஆனால் பொருட்கள் விற்கப்படும் வரை அவற்றை அனுப்புபவரே (சப்ளையர்) அவற்றின் உரிமையாளராகத் தொடருவார். சில்லறை விற்பனையாளர்கள் தாங்கள் விற்கும் சரக்கு இருப்புக்கு மட்டுமே பணம் செலுத்துவதால், இந்த முறை அவர்களுக்கான ஆபத்தைக் குறைக்கிறது.

சரக்கு இருப்புச் சரிபார்ப்புகளை நிறைவுசெய்தல்

உங்கள் பதிவுகள் உங்கள் கையிருப்பில் உள்ள சரக்கு இருப்புடன் பொருந்துவதை உறுதிசெய்ய, உங்கள் சரக்கு இருப்பை நீங்கள் வழக்கமாகச் சரிபார்க்கலாம். இருப்பு சரிபார்த்தல் என்றும் அழைக்கப்படும் சரக்கு இருப்புச் சரிபார்ப்பு, திருட்டு, சேதம் அல்லது பதிவு பிழைகளால் ஏற்படும் முரண்பாடுகளைக் கண்டறிய உதவுவதோடு திட்டமிடுவதற்கும் மீண்டும் ஆர்டர் செய்வதற்கும் துல்லியமான தரவை வழங்குகிறது.

குறிப்பி குறிப்பிட்ட தயாரிப்புகள் அல்லது மண்டலங்களை விரைவாகச் சரிபார்க்க, Shopify POS இல் விரைவு எண்ணிக்கை அம்சத்தைப் பயன்படுத்தவும், இது ஒரே அமர்வில் 1,000 உருப்படிகள் வரை ஆதரிக்கும்.

பல பங்கேற்பாளர்கள் கொண்ட முழுமையான இருப்பிட இருப்பு சரிபார்த்தலுக்கு அல்லது தணிக்கைக்கு, பின்வரும் ஆஃப்லைன் செயல்முறையைப் பயன்படுத்தவும்:

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, தயாரிப்புகள் > சரக்கு இருப்பு பகுதிக்குச் செல்லவும்.

  2. கையிருப்பிலுள்ள உங்கள் சரக்கு இருப்பை CSV ஆக ஏற்றுமதி செய்யவும்.

  3. விரிதாள் அல்லது ஸ்கேனிங் கருவியைப் பயன்படுத்தி ஆஃப்லைனில் உங்கள் உருப்படிகளை எண்ணவும்.

  4. உங்கள் சரக்கு இருப்பைப் புதுப்பிக்க, எண்ணப்பட்ட அளவுகளை CSV ஐப் பயன்படுத்தி இறக்குமதி செய்யவும்.

  5. அசல் ஏற்றுமதி, எண்ணப்பட்ட கோப்பு, இறக்குமதிப் பதிவு ஆகியவற்றை உங்களின் தணிக்கைப் பதிவாக வைத்திருக்கவும்.

உங்களுக்குக் கடுமையான வெளிப்புறத் தணிக்கைத் தேவைகள் இருந்தால், மூன்றாம் தரப்புச் சரக்கு இருப்புச் செயலி பிரத்யேக எண்ணுதல் மற்றும் ஒப்புதல் பணிப்பாய்வுகளை வழங்க முடியும்.