இருப்பிடங்கள்
கிடங்குகள், சில்லறை விற்பனை ஸ்டோர்கள் அல்லது பாப்-அப்கள் போன்ற நீங்கள் தயாரிப்புகளைச் சேமித்து வைக்கும் அல்லது விற்கும் இருப்பிடங்களைச் சேர்த்து நிர்வகிக்கலாம். இருப்பிடம் என்பது நீங்கள் தயாரிப்புகளை விற்கும், ஆர்டர்களை நிறைவேற்றும் அல்லது சரக்கு இருப்பை வைக்கும் ஏதேனும் ஓர் இடமாகும். டிராப்ஷிப்பிங் செயலிகள் மற்றும் மூன்றாம் தரப்பு லாஜிஸ்டிக்ஸ் சேவைகள் உள்ளிட்ட சில செயலிகளும்கூட இருப்பிடங்களாகக் கருதப்படலாம்.
பின்வருவனவற்றைச் செய்ய நீங்கள் இருப்பிடங்களைப் பயன்படுத்தலாம்:
- ஒவ்வொரு நேரடி இருப்பிடத்திலும் சரக்கு இருப்பைத் தனித்தனியாகத் தடமறிதல்
- உங்கள் வாடிக்கையாளருக்கு மிகவும் அருகிலுள்ள இருப்பிடத்திலிருந்து ஆர்டர்களை நிறைவேற்றுதல்
- Shopify POS-ஐப் பயன்படுத்திச் சில்லறை விற்பனை இருப்பிடங்களில் நேரடி விற்பனைகளைச் செயலாக்குதல்
- டிராப்ஷிப்பிங் அல்லது மூன்றாம் தரப்பு நிறைவேற்றத்திற்கான செயலிகளுடன் ஒருங்கிணைத்தல்
நீங்கள் இருப்பிடங்களைச் சேர்த்த பிறகு, இருப்பிடங்களுக்கு ஆர்டர்கள் எவ்வாறு ஒதுக்கப்படுகின்றன என்பதைக் கட்டுப்படுத்த ஆர்டர் நிறைவேற்றத்தை உள்ளமைக்கலாம், பின்னர் அந்த இருப்பிடங்களுக்குச் சரக்கு இருப்பை ஒதுக்கலாம். சரக்கு இருப்பு கிடைக்கும் தன்மை மற்றும் அருகாமையின் அடிப்படையில் ஆன்லைன் ஆர்டர்களைத் தானாக ஒதுக்க ஆர்டர் வழித்தட விதிகளைப் பயன்படுத்தலாம்.
அதிகபட்ச இருப்பிடங்களின் எண்ணிக்கை உங்கள் ஸ்டோரின் Shopify சந்தாத் திட்டத்தைப் பொறுத்தது. Shopify POS செயலியைப் பயன்படுத்தி நேரடி இருப்பிடங்களில் நீங்கள் விற்பனை செய்தால், உங்கள் சரக்கு இருப்பைத் துல்லியமாகத் தடமறிய உங்கள் POS சாதனத்தில் ஓர் இருப்பிடத்தைச் சேர்க்கலாம்.