இருப்பிடங்களுக்கான ஆர்டர் நிறைவேற்றத்தை அமைத்தல்
நீங்கள் இருப்பிடங்களைச் சேர்த்த பிறகு, ஒவ்வொரு இருப்பிடமும் ஆர்டர்களை எவ்வாறு நிறைவேற்றுகிறது என்பதை உள்ளமைக்க வேண்டும். உங்களிடம் பல செயலில் உள்ள இருப்பிடங்கள் இருக்கும்போது, கிடைக்கும் சரக்கு இருப்பு மற்றும் நீங்கள் உள்ளமைக்கும் ஆர்டர் வழித்தட விதிகள் ஆகியவற்றின் அடிப்படையில் ஆன்லைன் ஆர்டர்கள் இருப்பிடங்களுக்கு ஒதுக்கப்படும்.
முழு ஆர்டரையும் நிறைவேற்றுவதற்கு ஒரு இருப்பிடத்தில் போதுமான சரக்கு இருப்பு இருந்தால், அந்த ஆர்டர் அந்த இருப்பிடத்திற்கு ஒதுக்கப்படும். எந்த ஒரு இருப்பிடத்தாலும் ஆர்டரை நிறைவேற்ற முடியவில்லை என்றால், அது பல இருப்பிடங்களில் பிரிக்கப்படும் அல்லது அதிக முன்னுரிமை கொண்ட இருப்பிடம் தயாரிப்பை மிகை விற்பனை செய்யும். நீங்கள் ஆர்டர் வழிப்படுத்துதலை அமைத்த பிறகு, உங்கள் இருப்பிடங்களுக்குச் சரக்கு இருப்பை ஒதுக்கலாம்.
இந்தப் பக்கத்தில்
- ஆர்டர்கள் இருப்பிடங்களுக்கு எவ்வாறு ஒதுக்கப்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளுதல்
- ஆன்லைன் ஆர்டர்களுக்கான இருப்பிட நிறைவேற்றத்தை அமைத்தல்
- கடையிலுள்ள கொள்முதல்களுக்கான இருப்பிட நிறைவேற்றத்தை அமைத்தல்
- இயல்புநிலை இருப்பிடத்தை மாற்றுதல்
- ஒரு இருப்பிடத்திற்கான விநியோக முறைகளைச் செயலாக்குதல் அல்லது முடக்குதல்
- ஆன்லைன் ஆர்டர்களை நிறைவேற்றுவதில் இருந்து இருப்பிடத்தைத் தடுத்தல்
ஆர்டர்கள் இருப்பிடங்களுக்கு எவ்வாறு ஒதுக்கப்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளுதல்
எந்தவொரு ஆன்லைன் விற்பனைச் சேனல் மூலமாகவும் ஆர்டர்கள் செய்யப்படும்போது, அவை உங்களது ஆர்டர் வழிப்படுத்துதல் உள்ளமைவு மற்றும் கிடைக்கும் சரக்கு இருப்பு ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு இருப்பிடத்திற்கு ஒதுக்கப்படும். இயல்பாக, ஏதேனும் ஒரு இருப்பிடம் முழு ஆர்டரையும் நிறைவேற்ற முடியும் என்றால், அந்த இருப்பிடத்திலிருந்து சரக்கு இருப்பு எடுக்கப்படும். எந்தவொரு இருப்பிடத்தாலும் முழு ஆர்டரையும் நிறைவேற்ற முடியவில்லை எனில், ஆர்டர் பல இருப்பிடங்களுக்குப் பிரிக்கப்படும் அல்லது அதிக முன்னுரிமை கொண்ட இருப்பிடம் தயாரிப்பை மிகை விற்பனை செய்யும்.
அந்த இருப்பிடத்தில் ஒரு தயாரிப்பு உங்களிடம் கையிருப்பில் உள்ள அளவை விட அதிகமாக நீங்கள் விற்கும் போது அதிக விற்பனை நிகழ்கிறது. ஒரு தயாரிப்பிற்கு கையிருப்பில் இல்லாதபோதும் தொடர்ந்து விற்பனை செய் என்பதை நீங்கள் முடக்கியிருந்தால், ஆன்லைன் ஆர்டர்களை நிறைவேற்றும் அனைத்து இருப்பிடங்களிலும் உள்ள உங்களின் மொத்த ஆன்லைன் அளவின் அடிப்படையில் வாடிக்கையாளர்களுக்கு அந்தத் தயாரிப்பு கையிருப்பில் இல்லை எனக் காண்பிக்கப்படும். கையிருப்பில் இல்லாத தயாரிப்புகளை விற்பனை செய்வது குறித்து மேலும் அறிக.
உதாரணமாக, நீங்கள் சட்டைகளை விற்கிறீர்கள் மற்றும் உங்களின் ஆர்டர் வழிப்படுத்துதல் உள்ளமைவில் பின்வரும் முன்னுரிமைகளுடன் 2 இருப்பிடங்கள் உள்ளன என வைத்துக்கொள்வோம்:
- இருப்பிடம் A, அதிக முன்னுரிமையாக அமைக்கப்பட்டுள்ளது.
- இருப்பிடம் B, இரண்டாம் முன்னுரிமையாக அமைக்கப்பட்டுள்ளது.
இருப்பிடம் A-இல் 1 சட்டையும் இருப்பிடம் B-இல் 2 சட்டைகளும் உள்ளன. நீங்கள் 2 சட்டைகளுக்கான ஆர்டரைப் பெற்றால், முழு ஆர்டரையும் நிறைவேற்றுவதற்குப் போதுமான சரக்கு இருப்பு இருப்பதால் இருப்பிடம் B அதை நிறைவேற்றுகிறது. நீங்கள் 3 சட்டைகளுக்கான ஆர்டரைப் பெற்றால், இருப்பிடம் A சட்டையை மிகை விற்பனை செய்து -2 என்ற சரக்கு இருப்பில் முடிவடைகிறது.
ஆர்டர்களை இருப்பிடங்களுக்கு ஒதுக்குவதற்கான பரிசீலனைகள்
ஆர்டர்களை இருப்பிடங்களுக்கு எப்படி ஒதுக்குவது என்பதை உள்ளமைக்கும்போது பின்வரும் விஷயங்களைக் கவனத்தில் கொள்ளவும்:
- தயாரிப்பு சார்ந்த நிறைவேற்றம்: குறிப்பிட்ட தயாரிப்புகள் அல்லது தயாரிப்பு வகைகளை நிறைவேற்ற உங்களுக்கு வெவ்வேறு இருப்பிடங்கள் தேவைப்பட்டால், தயாரிப்புகளை இருப்பிடங்களுக்கு ஒதுக்க ஷிப்பிங் சுயவிவரங்களைப் பயன்படுத்தவும்.
- புவியியல் ரீதியான அருகாமை: இயல்புநிலையாக, வாடிக்கையாளரின் ஷிப்பிங் முகவரியின் அருகாமையின் அடிப்படையில் இருப்பிடங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படாது. மிக அருகில் உள்ள இருப்பிடத்திலிருந்து நிறைவேற்ற, மிக அருகிலுள்ள இருப்பிடத்திலிருந்து அனுப்பு என்ற விதியைச் சேர்க்க, ஆர்டர் வழிப்படுத்துதலை உள்ளமைக்கவும்.
- பிரிக்கப்பட்ட நிறைவேற்றங்கள்: முழு ஆர்டரையும் நிறைவேற்ற எந்தவொரு ஒற்றை இருப்பிடத்திலும் போதுமான சரக்கு இருப்பு இல்லாதபோது, ஆர்டர்கள் தானாகவே பிரிக்கப்படும். பிரிக்கப்பட்ட நிறைவேற்றங்களைக் குறை என்பது போன்ற ஆர்டர் வழித்தட விதிகள் மூலம் இந்தச் செயலைக் கட்டுப்படுத்தலாம்.
ஆன்லைன் ஆர்டர்களுக்கான இருப்பிட நிறைவேற்றத்தை அமைத்தல்
ஒன்றுக்கு மேற்பட்ட செயலில் உள்ள இருப்பிடங்கள் உங்களிடம் இருந்தால், ஆன்லைன் ஆர்டர்களை எவ்வாறு நிறைவேற்றுவது என்பதை நீங்கள் குறிப்பிட வேண்டும். ஆர்டர்களை நிறைவேற்றுவதற்காக உங்கள் இருப்பிடங்களை அமைக்க பல வழிகள் உள்ளன:
- ஆன்லைன் ஆர்டர்களுக்கான அனைத்து உருப்படிகளும் ஒரே இருப்பிடத்திலிருந்து நிறைவேற்றப்பட வேண்டும் என நீங்கள் விரும்பினால், அதை உங்கள் இயல்புநிலை இருப்பிடமாக ஆக்கிவிட்டு, ஆன்லைன் ஆர்டர்களை மற்ற இருப்பிடங்கள் நிறைவேற்றுவதைத் தடுக்கவும்.
- மற்றவற்றிற்கு முன்பாக ஆர்டர்களை நிறைவேற்றக் குறிப்பிட்ட இருப்பிடங்களுக்கு முன்னுரிமை அளிக்க நீங்கள் விரும்பினால், உங்கள் இருப்பிடங்களைத் தரவரிசைப்படுத்த ஆர்டர் வழித்தட விதிகளை உள்ளமைக்கவும்.
- தயாரிப்புகளின் அடிப்படையில் எந்த இருப்பிடம் ஆர்டர்களை நிறைவேற்ற வேண்டும் என்பதைத் தனிப்பயனாக்க நீங்கள் விரும்பினால், ஷிப்பிங் சுயவிவரங்களைப் பயன்படுத்த, உங்கள் ஷிப்பிங் அமைப்புகளைப் புதுப்பிக்கவும்.
- உங்களின் அனைத்து ஆர்டர்களையும் நிறைவேற்ற நீங்கள் டிராப்ஷிப்பிங் செயலி அல்லது நிறைவேற்றச் சேவையைப் பயன்படுத்தினால், உங்கள் இருப்பிடங்களிலோ இயல்புநிலை இருப்பிடத்திலோ எந்த மாற்றங்களையும் செய்யத் தேவையில்லை.
ஸ்டோரில் வாங்கும் பொருட்களுக்கான இருப்பிட நிறைவேற்றத்தை அமைத்தல்
Shopify POS மூலம் முடிக்கப்படும் ஸ்டோர் கொள்முதல்கள், விற்பனை செய்யப்படும் இடத்தில் கிடைக்கும் சரக்கு இருப்பைப் பயன்படுத்துகின்றன. வாடிக்கையாளரின் முகவரிக்கு ஷிப்பிங் செய்யப்படும்படி ஆர்டர்கள் செய்யப்பட்டால், அவை ஸ்டோரின் இருப்பிடத்திற்குப் பதிலாக உங்கள் ஆர்டர் வழிப்படுத்துதல் உள்ளமைவின் அடிப்படையில் சரக்கு இருப்பைப் பயன்படுத்துகின்றன.
இயல்புநிலை இருப்பிடத்தை மாற்று
நீங்கள் உங்கள் ஷிப்பிங் அமைப்புகளைப் புதுப்பிக்கவில்லை என்றால், உங்களின் இயல்புநிலை இருப்பிடமாக அமைக்கப்பட்டுள்ள இருப்பிடத்தின் அடிப்படையில் உங்கள் ஷிப்பிங் கட்டணங்கள் கணக்கிடப்படும். உங்கள் இயல்புநிலை இருப்பிடம் உங்களின் இருப்பிடங்கள் அமைப்புகளில் உள்ள இயல்புநிலை பிரிவில் காட்டப்படும்.
உங்களின் செயலில் உள்ள எந்த இருப்பிடத்தையும் இயல்புநிலை இருப்பிடமாக அமைக்கலாம். செயலிகள் மற்றும் முடக்கப்பட்ட இருப்பிடங்களை இயல்புநிலை இருப்பிடமாக அமைக்க முடியாது.
ஒரு கேரியர் ஆதரிக்கப்படாத இருப்பிடத்திற்கு இயல்புநிலை இருப்பிடத்தை மாற்றினால், அந்த கேரியருக்கான கட்டணங்கள் செக்அவுட்டில் மறைக்கப்படும். எடுத்துக்காட்டாக, நீங்கள் அமெரிக்காவை இயல்புநிலை இருப்பிடமாக அமைத்தால், செக்அவுட்டில் Canada Post கட்டணங்கள் காட்டப்படாது.
Shopify நிர்வாகியிலிருந்து ஷிப்பிங் லேபிள்களை வாங்குவதற்கான கட்டணங்கள், உங்கள் ஸ்டோரின் இயல்புநிலை இருப்பிடத்தின் அடிப்படையில் அல்லாமல், நிறைவேற்றும் இடத்தின் அடிப்படையில் கணக்கிடப்படும்.
படிகள்:
டெஸ்க்டாப்
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > இருப்பிடங்கள் பகுதிக்குச் செல்லவும்.
இயல்புநிலை இருப்பிடம் பிரிவில், மாற்று என்பதைக் கிளிக் செய்யவும்.
ஒரு இருப்பிடத்தைத் தேர்ந்தெடுத்து, சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
மொபைல்
Shopify செயலியிலிருந்து,
என்பதைத் தட்டி, பின்னர்
அமைப்புகள் என்பதைத் தட்டவும்.
ஸ்டோர் அமைப்புகள் பிரிவில், இருப்பிடங்கள் என்பதைத் தட்டவும்.
இயல்புநிலை இருப்பிடம் பிரிவில், மாற்று என்பதைத் தட்டவும்.
ஒரு இருப்பிடத்தைத் தேர்ந்தெடுத்து, சேமி அல்லது ✓ என்பதைத் தட்டவும்.
ஒரு இருப்பிடத்திற்கான விநியோக முறைகளைச் செயல்படுத்தவும் அல்லது முடக்கவும்
உங்கள் இருப்பிடத்திற்கு ஆன்லைன் ஆர்டர்களை நிறைவேற்ற இந்த இருப்பிடத்தில் உள்ள சரக்கு இருப்பைப் பயன்படுத்து என்ற விருப்பத்தைச் செயல்படுத்தியிருந்தால், கிடைக்கும் விநியோக முறைகளைப் பார்க்கலாம் மற்றும் ஒரு இருப்பிடத்திற்கு அவற்றைச் செயல்படுத்தலாம் அல்லது முடக்கலாம். ஒரு இருப்பிடத்திற்கான ஒவ்வொரு விநியோக முறையின் நிலையையும் நீங்கள் பார்க்கலாம்.
படிகள்:
டெஸ்க்டாப்
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > இருப்பிடங்கள் பகுதிக்குச் செல்லவும்.
அனைத்து இருப்பிடங்களும் பிரிவில், நீங்கள் விநியோக முறைகளைச் செயல்படுத்த அல்லது முடக்க விரும்பும் இருப்பிடத்தைக் கிளிக் செய்யவும்.
நிறைவேற்றம் பிரிவில், நீங்கள் செயல்படுத்த அல்லது முடக்க விரும்பும் விநியோக முறையைக் கிளிக் செய்யவும்.
மொபைல்
Shopify செயலியிலிருந்து,
என்பதைத் தட்டி, பின்னர்
அமைப்புகள் என்பதைத் தட்டவும்.
ஸ்டோர் அமைப்புகள் பிரிவில், இருப்பிடங்கள் என்பதைத் தட்டவும்.
அனைத்து இருப்பிடங்களும் பிரிவில், நீங்கள் விநியோக முறைகளைச் செயல்படுத்த அல்லது முடக்க விரும்பும் இருப்பிடத்தைத் தட்டவும்.
நிறைவேற்றம் பிரிவில், நீங்கள் செயல்படுத்த அல்லது முடக்க விரும்பும் விநியோக முறையைத் தட்டவும்.
ஆன்லைன் ஆர்டர்களை நிறைவேற்றுவதிலிருந்து ஒரு இருப்பிடத்தைத் தடு
சில வணிகங்கள் நேரடி விற்பனைக்கான சரக்கு இருப்பை மட்டும் வைத்திருக்கும் இருப்பிடங்கள் அல்லது சேமிப்பகத்திற்காக மட்டும் பயன்படுத்தப்படும் இருப்பிடங்களைக் கொண்டுள்ளன. ஆன்லைன் ஆர்டர்களை ஒரு இருப்பிடம் நிறைவேற்றுவதைத் தடுப்பது, ஆன்லைன் ஸ்டோர் மற்றும் Facebook Shop போன்ற விற்பனைச் சேனல்களில் இருந்து வரும் ஆர்டர்கள் இந்த இருப்பிடங்களிலுள்ள சரக்கு இருப்பைப் பயன்படுத்தாமல் இருப்பதை உறுதிசெய்கிறது.
ஆன்லைன் ஆர்டர்களை ஒரு இருப்பிடம் நிறைவேற்றுவதைத் தடுப்பது, அந்த இருப்பிடத்திற்கு ஒதுக்கப்பட்ட எந்தவொரு சரக்கு இருப்பையும் ஒரு தயாரிப்பின் ஆன்லைன் அளவிலிருந்து நீக்குகிறது. ஒரு தயாரிப்பின் ஆன்லைன் அளவு சரக்கு இருப்பு பக்கத்தில் காட்டப்படும். உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் சரக்கு இருப்பு நிலைகளைக் காட்டினால், வாடிக்கையாளர்களுக்கு இந்த எண்ணிக்கையே காட்டப்படும்.
ஆன்லைன் ஆர்டர்களை ஒரு இருப்பிடம் நிறைவேற்றுவதைத் தடுப்பதானது, இந்த இருப்பிடங்களில் உள்ள சரக்கு இருப்பை வாடிக்கையாளருக்கு அனுப்பப்படும் Shopify POS ஆர்டர்கள் பயன்படுத்துவதையும் தடுக்கிறது.
வரைவு ஆர்டர்கள் மற்றும் பிற விற்பனைச் சேனல்களிலிருந்து வரும் ஆர்டர்களை நிறைவேற்ற, இருப்பிடத்தின் சரக்கு இருப்பை இன்னும் பயன்படுத்தலாம். ஆர்டர்களை உருவாக்கும்போது உங்களின் விற்பனைச் சேனல்கள் உங்கள் ஸ்டோரின் சரக்குக் கொள்கைகளைப் பின்பற்றுகின்றனவா என்பதைச் சரிபார்க்கவும்.
படிகள்:
டெஸ்க்டாப்
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > இருப்பிடங்கள் பகுதிக்குச் செல்லவும்.
அனைத்து இருப்பிடங்களும் பிரிவில், ஆன்லைன் ஆர்டர்களை நிறைவேற்றுவதை நிறுத்த வேண்டிய இருப்பிடத்தைக் கிளிக் செய்யவும்.
நிறைவேற்றம் பிரிவில், ஆன்லைன் ஆர்டர்களை நிறைவேற்ற இந்த இருப்பிடத்தில் உள்ள சரக்கு இருப்பைப் பயன்படுத்து நிலைமாற்றியை முடக்கவும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
மொபைல்
Shopify செயலியிலிருந்து,
என்பதைத் தட்டி, பின்னர்
அமைப்புகள் என்பதைத் தட்டவும்.
ஸ்டோர் அமைப்புகள் பிரிவில், இருப்பிடங்கள் என்பதைத் தட்டவும்.
அனைத்து இருப்பிடங்களும் பிரிவில், ஆன்லைன் ஆர்டர்களை நிறைவேற்றுவதை நிறுத்த வேண்டிய இருப்பிடத்தைத் தட்டவும்.
நிறைவேற்றம் பிரிவில், ஆன்லைன் ஆர்டர்களை நிறைவேற்ற இந்த இருப்பிடத்தில் உள்ள சரக்கு இருப்பைப் பயன்படுத்து நிலைமாற்றியை முடக்கவும்.
சேமி அல்லது ✓ என்பதைத் தட்டவும்.
ஆன்லைன் ஆர்டரை நிறைவேற்றுவதற்கான எடுத்துக்காட்டு
இந்த எடுத்துக்காட்டில், ஒரு ஸ்டோர் 4 இருப்பிடங்களைக் கொண்டுள்ளது, மேலும் பல்வேறு உருப்படிகளுக்கான ஆன்லைன் ஆர்டர்களைப் பெறுகிறது. ஆர்டர் வழிப்படுத்துதல் உள்ளமைவு மற்றும் பின்வரும் இயல்புநிலை விதிகளின் அடிப்படையில் இருப்பிடங்களுக்கு ஆர்டர்கள் ஒதுக்கப்படுகின்றன:
- ஆர்டரை ஒரே இருப்பிடத்திற்கு ஒதுக்க முயலவும்.
- தேவைப்பட்டால், போதுமான சரக்கு இருப்பு உள்ள ஒரு இருப்பிடத்திற்கு வரிசை உருப்படியை ஒதுக்கவும், ஆனால் இருப்பிடங்களுக்கு இடையே வரிசை உருப்படிகளைப் பிரிக்க வேண்டாம்.
- ஒரு உருப்படி அதிகமாக விற்கப்பட்டால், அந்த உருப்படி கையிருப்பில் உள்ள அதிக முன்னுரிமை கொண்ட இருப்பிடத்திற்கு ஆர்டரை ஒதுக்கவும்.
இருப்பிடங்களில் பின்வரும் சரக்கு இருப்பு இருப்பதாகக் கருதுங்கள்:
| இருப்பிடம் | தொப்பிகள் | சட்டைகள் | குவளைகள் | காலணிகள் |
|---|---|---|---|---|
| நியூயார்க் | 5 | 1 | ஸ்டாக் செய்யப்படவில்லை | ஸ்டாக் செய்யப்படவில்லை |
| லாஸ் ஏஞ்சல்ஸ் | 0 | 5 | 1 | ஸ்டாக் செய்யப்படவில்லை |
| சிகாகோ | 1 | 0 | 5 | 1 |
| பிட்ஸ்பர்க் | 10 | 10 | 10 | 10 |
ஆர்டர் வழிப்படுத்துதல் உள்ளமைவில் தரவரிசைப்படுத்தப்பட்ட இருப்பிடங்கள் பின்வரும் வரிசையில் உள்ளன:
- நியூயார்க்
- லாஸ் ஏஞ்சல்ஸ்
- சிகாகோ
பிட்ஸ்பர்க் ஆன்லைன் ஆர்டர்களைச் சிறிதும் நிறைவேற்றுவதில்லை.
இந்த ஆர்டர் வழித்தட விதிகளின் அடிப்படையில், நிறைவேற்றத்திற்காகப் பின்வரும் இருப்பிடங்களுக்குச் சில மாதிரி ஆர்டர்கள் ஒதுக்கப்படுகின்றன:
| ஆர்டர் | ஒதுக்கப்பட்ட இருப்பிடங்கள் | காரணம் |
|---|---|---|
| 1 சட்டை | நியூயார்க் | சரக்கு இருப்பு உள்ள அதிக முன்னுரிமை கொண்ட இருப்பிடம். |
| 1 சட்டை, 1 குவளை | லாஸ் ஏஞ்சல்ஸ் | இரண்டு உருப்படிகளும் உள்ள அதிக முன்னுரிமை கொண்ட ஒற்றை இருப்பிடம். |
| 1 தொப்பி, 1 குவளை | சிகாகோ | இரண்டு உருப்படிகளும் உள்ள ஒரே இருப்பிடம். |
| 2 சட்டைகள் | லாஸ் ஏஞ்சல்ஸ் | நியூயார்க்கில் போதிய சரக்கு இருப்பு இல்லை. லாஸ் ஏஞ்சல்ஸில் போதுமான அளவு உள்ளது. |
| 2 தொப்பிகள், 2 சட்டைகள் | தொப்பிகள் நியூயார்க்கிற்கும் சட்டைகள் லாஸ் ஏஞ்சல்ஸுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன | எந்த ஒரு இருப்பிடத்திலும் இரண்டு உருப்படிகளும் இல்லை. அதிக விற்பனையைத் தவிர்க்கப் பிரிக்கப்பட்டுள்ளது. |
| 6 சட்டைகள் | நியூயார்க் | அதிக அளவில் விற்கப்பட்டது. சட்டைகள் ஸ்டாக் செய்யப்பட்டுள்ள அதிக முன்னுரிமை கொண்ட இருப்பிடத்திற்கு ஒதுக்கப்பட்டது. |
| 7 சட்டைகள் | நியூயார்க் | அதிக அளவில் விற்கப்பட்டது. சட்டைகள் ஸ்டாக் செய்யப்பட்டுள்ள அதிக முன்னுரிமை கொண்ட இருப்பிடத்திற்கு ஒதுக்கப்பட்டது. |
| 1 தொப்பி, 1 சட்டை, 1 குவளை, 1 ஜோடி காலணிகள் | தொப்பியும் சட்டையும் நியூயார்க்கிற்கும் குவளை லாஸ் ஏஞ்சல்ஸுக்கும் காலணிகள் சிகாகோவிற்கும் ஒதுக்கப்பட்டுள்ளன | எந்த ஒரு இருப்பிடத்திலும் அனைத்து உருப்படிகளும் இல்லை. சரக்கு இருப்பு உள்ள அதிக முன்னுரிமை கொண்ட இருப்பிடத்திற்கு ஒவ்வொன்றும் ஒதுக்கப்பட்டுள்ளது. |