கொள்முதல் ஆரடரிலிருந்து சரக்கு இருப்பைப் பெறுதல்
நீங்கள் கொள்முதல் ஆர்டரை உருவாக்கி, அதை ஆர்டர் செய்யப்பட்டது எனக் குறித்த பிறகு, உங்கள் சப்ளையரிடமிருந்து உங்கள் ஸ்டோருக்குச் சரக்குகள் கொண்டுசெல்லப்படுவதைத் தடமறிய, கொள்முதல் ஆர்டரிலிருந்து நேரடியாக நீங்கள் சரக்கு இடமாற்றத்தை உருவாக்கலாம். கொள்முதல் ஆர்டரில் உள்ள அதே சப்ளையர், வரிசை உருப்படிகள் மற்றும் அளவுகள் ஆகியவை இடமாற்றத்தில் முன்கூட்டியே நிரப்பப்பட்டிருக்கும். கொள்முதல் ஆர்டர் வணிக ரீதியான ஒப்பந்தத்தைப் பதிவுசெய்கிறது, அதேசமயம் அதனுடன் இணைக்கப்பட்ட சரக்கு இடமாற்றமானது ஷிப்மென்ட்கள், பெறுதல் மற்றும் செலவு சரிசெய்தல்கள் ஆகியவற்றை உங்கள் Shopify நிர்வாகியில் கையாளுகிறது. ஒரு ஆர்டரும் அதன் நிறைவேற்றங்களும் தனித்தனியாகத் தடமறியப்படுவதைப் போன்றே இதுவும் செயல்படுகிறது. ஒரு பதிவு ஒப்பந்தத்தைப் பதிவுசெய்கிறது, மற்றொன்று சரக்குகள் கொண்டுசெல்லப்படுவதைத் தடமறிகிறது.
உங்கள் இருப்பிடங்களுக்கு இடையேயான சரக்கு இடமாற்றங்களில் பயன்படுத்தப்படும் அதே பணிப்பாய்வையே இணைக்கப்பட்ட இடமாற்றங்களும் பயன்படுத்துகின்றன, இது பன்முக ஷிப்மென்ட் தடமறிதலையும் உங்கள் Shopify நிர்வாகியில் சரக்கு இருப்பு நகர்வை நிர்வகிப்பதற்கான ஒரே இடத்தையும் உங்களுக்கு வழங்குகிறது. ஒவ்வொரு கொள்முதல் ஆர்டரும் ஒரே நேரத்தில் ஒரு இணைக்கப்பட்ட சரக்கு இடமாற்றத்தை ஆதரிக்கும்.
இந்தப் பக்கத்தில்
கொள்முதல் ஆர்டரிலிருந்து சரக்கு இடமாற்றத்தை உருவாக்குதல்
ஆர்டர் செய்யப்பட்டது என நீங்கள் குறித்த ஒரு கொள்முதல் ஆர்டருக்குச் சரக்கு இடமாற்றத்தை உருவாக்கலாம். இடமாற்றமானது உங்கள் சப்ளையரை மூல இடமாக அமைப்பதோடு கொள்முதல் ஆர்டரிலிருந்து வரிசை உருப்படிகளையும் உள்ளடக்கியிருக்கும்.
சப்ளையரிடமிருந்து சரக்கு இருப்பைப் பெற உங்களுக்கு எப்போதும் கொள்முதல் ஆர்டர் தேவையில்லை. ஒரு சப்ளையரை மூல இடமாக அமைக்கும் தனித்த சரக்கு இடமாற்றத்தை நீங்கள் கொள்முதல் ஆர்டருடன் இணைக்காமலேயே உருவாக்கவும் முடியும். நீங்கள் ஒரு மூல இடத்தைக் குறிப்பிட விரும்பவில்லை எனில், அந்த மூல இருப்பிடத்தைக் காலியாக விடலாம்.
இடமாற்றத்தைச் சேமித்த பிறகு, சரக்கு இருப்பை ரிசர்வ் செய்யவும் பெறவும் இடமாற்றத்தை நீங்கள் செயலாக்கலாம். நீங்கள் இடமாற்றத்தைச் செயலாக்கும்போது Shopify தானாகவே ஒரு ஷிப்மென்ட்டை உருவாக்கும். நீங்கள் பல ஷிப்மென்ட்களை நிர்வகிக்கவோ அல்லது தடமறிதல் தகவலைச் சேர்க்கவோ விரும்பினால், நீங்கள் ஷிப்மென்ட்களைத் தனித்தனியாக நிர்வகிக்கலாம்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியில், தயாரிப்புகள் > கொள்முதல் ஆர்டர்கள் என்பதற்குச் செல்லவும்.
நீங்கள் எந்தக் கொள்முதல் ஆர்டரிலிருந்து சரக்கு இடமாற்றத்தை உருவாக்க விரும்புகிறீர்களோ அதைக் கிளிக் செய்யவும்.
இடமாற்றத்தை உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
சரக்கு இடமாற்றத்திற்கான ஓர் இலக்கு இடத்தைத் தேர்ந்தெடுக்கவும். மூல இடமும் வரிசை உருப்படிகளும் கொள்முதல் ஆர்டரிலிருந்து முன்கூட்டியே நிரப்பப்பட்டிருக்கும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
கொள்முதல் ஆர்டரிலிருந்து சரக்கு இருப்பைப் பெறுங்கள்
பெறுதல் உங்கள் கொள்முதல் ஆர்டருடன் இணைக்கப்பட்ட சரக்கு இடமாற்றத்தில் நிகழ்கிறதே தவிர, கொள்முதல் ஆர்டரிலேயே அல்ல. இது வணிக ஒப்பந்தத்தை உண்மையான சரக்கு இருப்பு நகர்விலிருந்து தனித்து வைக்கிறது.
உங்கள் சரக்கு இருப்பு இலக்கு இடத்தை அடைந்ததும், உருப்படிகளைப் பெறலாம். ஒவ்வொரு உருப்படியையும் நீங்கள் ஏற்கலாம், நிராகரிக்கலாம் அல்லது சப்ளையரிடமிருந்து அது அனுப்பப்படவில்லையெனில் ரத்துசெய்யலாம். இதை நீங்களாகவே செய்யலாம் அல்லது உருப்படிகளைப் பெற பார்கோடு ஸ்கேனரைப் பயன்படுத்தலாம்.
உருப்படிகளை மொத்தமாகவோ அல்லது குறிப்பிட்ட அளவுகளிலோ நீங்கள் பெறலாம். நீங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளும் உருப்படிகளுக்கான பின்வரும் முடிவுகளை மதிப்பாய்வு செய்யவும்:
- ஏற்கப்பட்டது: சரக்கு இருப்பு இலக்கு இடத்தில் கிடைக்கும்.
- நிராகரிக்கப்பட்டது: சரக்கு இருப்பு இடமாற்றத்தில் பதிவுசெய்யப்படும், எந்த இடத்திலும் உள்ள கிடைக்கக்கூடிய அளவில் இது சேர்க்கப்படாது.
- ரத்துசெய்யப்பட்டது: ஒரு கொள்முதல் ஆர்டரின் மூல இடம் சப்ளையர் என்பதால், சரக்கு இருப்பை ஓர் இடத்திற்குத் திருப்பியளிப்பதற்குப் பதிலாக அது அகற்றப்படும்.
எதிர்பார்த்த அளவில் எத்தனை அலகுகள் கணக்கில் கொள்ளப்பட்டுள்ளன என்பதை மொத்தம் நெடுவரிசை காட்டுகிறது. அனைத்து அளவுகளும் கணக்கில் கொள்ளப்பட்ட பிறகு, இடமாற்ற நிலை இடமாற்றப்பட்டது என மாறும். சில அளவுகள் இன்னும் நிலுவையில் இருந்தால், மீதமுள்ளவற்றை நீங்கள் கணக்கில் கொள்ளும் வரை இடமாற்றம் செயல்பாட்டில் உள்ளது என்பதாகவே இருக்கும்.
உங்கள் சப்ளையர் உருப்படிகளைப் பல ஷிப்மென்ட்களில் அனுப்பினால், ஒவ்வொரு ஷிப்மென்டும் வந்து சேரும்போது அதை தனித்தனியாக நீங்கள் பெறலாம்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, தயாரிப்புகள் > பரிமாற்றங்கள் என்பதற்குச் செல்லவும்.
உங்கள் கொள்முதல் ஆர்டருடன் இணைக்கப்பட்ட சரக்கு இடமாற்றத்தைக் கிளிக் செய்யவும்.
உருப்படிகளைப் பெறு என்பதைக் கிளிக் செய்யவும்.
உருப்படிகளைப் பெறுங்கள்:
- ஒவ்வொரு உருப்படிக்கான செயலை அமைக்க, செயலைப் பெறு நெடுவரிசையில், ஏற்கவும், நிராகரி அல்லது ரத்துசெய் என்பதைத் தேர்ந்தெடுத்து, பெறுதல் நெடுவரிசையில் அளவை உள்ளிடவும்.
- அனைத்து உருப்படிகளையும் ஏற்க, அனைத்தையும் ஏற்கவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
- அனைத்து உருப்படிகளையும் நிராகரிக்க, அனைத்தையும் நிராகரி என்பதைக் கிளிக் செய்யவும்.
விருப்பத்தேர்வு: ஒரே உருப்படிக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட செயல்களைப் பதிவுசெய்ய, வரிசையைச் சேர்க்க
என்பதைக் கிளிக் செய்து, ஒரு செயலைத் தேர்ந்தெடுத்து அளவை உள்ளிடவும்.
விருப்பத்தேர்வு: நீங்கள் ஏன் ஒரு செயலைத் தேர்ந்தெடுத்தீர்கள் என்பதைப் பதிவுசெய்ய, செயலுக்கு அடுத்துள்ள கருத்திடல் ஐகானைக் கிளிக் செய்து, ஒரு குறிப்பை உள்ளிடவும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
ஒரு ஷிப்மென்டில் ஷிப்பிங் செலவுகள் மற்றும் கட்டணங்களைச் சேர்த்தல்
நீங்கள் கொள்முதல் ஆர்டரை உருவாக்கும்போது, ஷிப்பிங் செலவுகள், சுங்க வரிகள் மற்றும் பிற கட்டணங்கள் பெரும்பாலும் தெரிந்திருக்காது. இணைக்கப்பட்ட சரக்கு இடமாற்றத்தில் உள்ள தனிப்பட்ட ஷிப்மென்ட்களுக்கு இவற்றைச் செலவுச் சரிசெய்தலாகச் சேர்க்கலாம்.
சரக்கு இடமாற்றத்தில் உள்ள செலவுச் சுருக்கம் அனைத்து ஷிப்மென்ட் சரிசெய்தல்களையும் ஒன்றிணைக்கிறது, எனவே கொள்முதல் ஆர்டரில் ஒப்புக்கொள்ளப்பட்ட செலவைப் பொருட்களைப் பெறுவதற்கான உண்மையான செலவுடன் ஒப்பிடலாம்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, தயாரிப்புகள் > பரிமாற்றங்கள் என்பதற்குச் செல்லவும்.
உங்கள் கொள்முதல் ஆர்டருடன் இணைக்கப்பட்டுள்ள சரக்கு இடமாற்றத்தைக் கிளிக் செய்யவும்.
ஷிப்மென்ட் பிரிவில்,
பட்டனைக் கிளிக் செய்து, ஷிப்மென்ட்டைத் திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
செலவுச் சுருக்கம் பிரிவில், நிர்வகி என்பதைக் கிளிக் செய்யவும்.
ஷிப்பிங் தொகை அல்லது சுங்க வரிகள் போன்ற சரிசெய்தல் வகையைத் தேர்ந்தெடுத்து, தொகையை உள்ளிடவும்.
விருப்பத்தேர்வு: மேலும் செலவுச் சரிசெய்தல்களைச் சேர்க்க, சரிசெய்தலைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
இணைக்கப்பட்ட கொள்முதல் ஆர்டர்கள் மற்றும் சரக்கு இடமாற்றங்களை நிர்வகித்தல்
நீங்கள் கொள்முதல் ஆர்டரிலிருந்து ஒரு சரக்கு இடமாற்றத்தை இணைத்த அல்லது உருவாக்கிய பிறகு, கொள்முதல் ஆர்டர் பக்கப்பட்டியில் இணைக்கப்பட்ட இடமாற்றம் கார்டு காண்பிக்கப்படும். இந்த கார்டு, சரக்கு இடமாற்ற எண், அதன் தற்போதைய நிலை மற்றும் பெறப்பட்ட உருப்படிகளுடனான விரிவாக்கக்கூடிய ஷிப்மென்ட் முன்னோட்டம் மற்றும் ஒரு ஷிப்மென்டிற்கான அளவுகளைப் பட்டியலிடும். இடமாற்றத்தின் விவரங்களைப் பார்க்க, ஷிப்மென்ட்களை நிர்வகிக்க அல்லது சரக்கு இருப்பைப் பெற, கார்டைக் கிளிக் செய்யவும்.
சரக்கு இடமாற்றப் பக்கப்பட்டியில் கொள்முதல் ஆர்டர் எண், நிலை மற்றும் ஆர்டர் மொத்தம் ஆகியவற்றுடன் பொருந்துகிற இணைக்கப்பட்ட கொள்முதல் ஆர்டர் கார்டு உள்ளது. தயாரிப்புச் செலவுகள் மற்றும் வரிகளுடனான செலவுச் சுருக்கத்தைக் காண, மொத்தத்தை விரிவாக்கவும் அல்லது கொள்முதல் ஆர்டருக்குத் திரும்ப கார்டைக் கிளிக் செய்யவும்.
நீங்கள் இருபுறமும் இணைக்கலாம் மற்றும் இணைப்பை அகற்றலாம், மேலும் ஒவ்வொன்றையும் தனித்தனியாகப் புதுப்பிக்கலாம். இரு பதிவுகளிலும் உள்ள காலவரிசையில் இணைத்தல் மற்றும் இணைப்பை அகற்றுதல் நிகழ்வுகள் சேகரிக்கப்படும்.
சரக்கு இடமாற்றத்தை நீங்கள் உருவாக்கிய பிறகு அல்லது இணைத்த பிறகு, கொள்முதல் ஆர்டரிலிருந்து தனித்தனியாக அது இயங்கும். அசல் கொள்முதல் ஆர்டரில் இடம்பெறாத உருப்படிகளை இடமாற்றத்தில் நீங்கள் சேர்க்கலாம், மேலும் ஒரு பதிவில் செய்யும் மாற்றங்கள் தானாக மற்றொன்றைப் புதுப்பிக்காது. இடமாற்றத்தின் இணைப்பை அகற்றினால், சரக்கு இருப்பைத் தொடர்ந்து பெறுவதோடு அதற்கான செலவுகளையும் நிர்வகிக்கலாம். இணைப்பை அகற்றுவது பெறுதல் அல்லது செலவுச் சரிசெய்தல்கள் எதையும் செயல்தவிர்க்காது.
கொள்முதல் ஆர்டருக்கு ஏற்கனவே உள்ள சரக்கு இடமாற்றத்தை இணைத்தல்
ஒரே சப்ளையரிடமிருந்து ஏற்கனவே உங்களுக்குச் சரக்கு இடமாற்றம் இருந்தால், புதிய ஒன்றை உருவாக்குவதற்குப் பதிலாக அதைக் கொள்முதல் ஆர்டருடன் இணைக்கலாம். இடமாற்றத்தில் அதே சப்ளையரை மூல இடமாகக் கொண்டிருக்க வேண்டும், அதேபோல ஒரே நேரத்தில் ஒரு இடமாற்றத்தை மட்டுமே இணைக்க முடியும்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியில், தயாரிப்புகள் > கொள்முதல் ஆர்டர்கள் என்பதற்குச் செல்லவும்.
நீங்கள் ஒரு சரக்கு இடமாற்றத்தை இணைக்க விரும்பும் கொள்முதல் ஆர்டரைக் கிளிக் செய்யவும்.
இடமாற்றத்தை இணை என்பதைக் கிளிக் செய்யவும்.
கொள்முதல் ஆர்டருடன் இணைக்க விரும்பும் சரக்கு இடமாற்றத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
சரக்கு இடமாற்றத்திலிருந்து கொள்முதல் ஆர்டரை இணைத்தல்
இடமாற்றத் தரப்பிலிருந்தும் நீங்கள் சரக்கு இடமாற்றத்துடன் ஒரு கொள்முதல் ஆர்டரை இணைக்கலாம். கொள்முதல் ஆர்டரில் அதே மூல இடமும் பொருந்தக்கூடிய ஒரு உருப்படியாவது இருக்க வேண்டும்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, தயாரிப்புகள் > பரிமாற்றங்கள் என்பதற்குச் செல்லவும்.
நீங்கள் ஒரு கொள்முதல் ஆர்டரை இணைக்க விரும்பும் சரக்கு இடமாற்றத்தைக் கிளிக் செய்யவும்.
இணைக்கப்பட்ட கொள்முதல் ஆர்டர் பிரிவில், திருத்து ஐகானைக் கிளிக் செய்யவும்.
நீங்கள் இணைக்க விரும்பும் கொள்முதல் ஆர்டரைத் தேர்ந்தெடுக்கவும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
கொள்முதல் ஆர்டரிலிருந்து சரக்கு இடமாற்றத்தின் இணைப்பை அகற்றுதல்
கொள்முதல் ஆர்டருக்கும் சரக்கு இடமாற்றத்துக்கும் இடையிலான தொடர்பை நீங்கள் அகற்ற வேண்டியிருந்தால், அவற்றின் இணைப்பை அகற்றலாம். சரக்கு இடமாற்றத்தின் இணைப்பை அகற்றுவதால், சரக்கு இடமாற்றமோ கொள்முதல் ஆர்டரோ நீக்கப்படாது.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியில், தயாரிப்புகள் > கொள்முதல் ஆர்டர்கள் என்பதற்குச் செல்லவும்.
இணைக்கப்பட்ட சரக்கு இடமாற்றத்துடன் உள்ள கொள்முதல் ஆர்டரைக் கிளிக் செய்யவும்.
இணைக்கப்பட்ட இடமாற்றம் பிரிவில்,
பட்டனைக் கிளிக் செய்யவும்.
இணைப்பை அகற்று என்பதைக் கிளிக் செய்யவும்.