CSV கோப்புகளைப் பயன்படுத்தி உங்கள் சரக்கு இருப்பிற்கான பின் இருப்பிடங்களை உருவாக்குதல் மற்றும் நிர்வகித்தல்

பின் இருப்பிடங்களின் மூலம், உங்கள் நிஜ இடங்களுக்குள் குறிப்பிட்ட ஷெல்ஃப்கள், ரேக்குகள் அல்லது அறைகளில் உங்கள் சரக்கு இருப்பை ஒழுங்கமைக்கலாம். CSV கோப்புகளைப் பயன்படுத்தி உங்கள் தயாரிப்புகளுக்கான பின் இருப்பிடங்களை உருவாக்கலாம் மற்றும் நிர்வகிக்கலாம். பின் இருப்பிடங்களை உருவாக்கிய பிறகு, மொத்தத் திருத்தியைப் பயன்படுத்தியும் உங்கள் பின் இருப்பிடங்களைத் திருத்தலாம்.

உங்களிடம் ஏராளமான தயாரிப்புகள் அல்லது சிக்கலான கிடங்குத் தளவமைப்பு இருக்கும்போது பின் இருப்பிடங்கள் பயனுள்ளதாக இருக்கும். பின்வரும் பணிகளைச் செய்ய நீங்கள் பின் இருப்பிடங்களைப் பயன்படுத்தலாம்:

  • ஆர்டர்களைச் சேகரிக்கும்போது தயாரிப்புகளை விரைவாகக் கண்டறிதல்.
  • உங்கள் கிடங்கை மிகவும் திறம்பட ஒழுங்கமைத்தல்.
  • குறிப்பிட்ட உருப்படிகள் எங்கு சேமிக்கப்பட்டுள்ளன என்பதைத் தடமறிதல்.

பின் இருப்பிடங்களை உருவாக்குதல் மற்றும் நிர்வகிப்பதற்கான கவனிக்க வேண்டியவை

நீங்கள் பின் இருப்பிடங்களை உருவாக்கி நிர்வகிப்பதற்கு முன், பின்வரும் கவனிக்க வேண்டியவற்றை மதிப்பாய்வு செய்யவும்:

  • ஒவ்வொரு தயாரிப்பு மாறுபாட்டையும் ஒரு இடத்திற்கு ஒரு பின்னிற்கு மட்டுமே ஒதுக்க முடியும்.
  • ஒரே பின்னிற்குப் பல SKUகளை ஒதுக்கலாம்.
  • ஒரு இடத்திற்குள் பின் பெயர்கள் தனித்துவமானதாக இருக்க வேண்டும்.
  • பிக்லிஸ்ட்களில் சரியாக வரிசைப்படுத்த, A-1 என்பதற்குப் பதிலாக A-01 போன்ற நிலையான பின் பெயரிடும் வடிவமைப்பைப் பயன்படுத்துவதைக் கருத்தில் கொள்ளவும்.

உங்கள் பின் இருப்பிடங்களுக்குப் பெயரிடுதல்

உங்கள் பின் இருப்பிடங்களுக்குப் பெயரிடுவதற்கான பின்வரும் உதவிக்குறிப்புகள் மற்றும் கவனிக்க வேண்டியவற்றை மதிப்பாய்வு செய்யவும்:

  • தர்க்கரீதியாக வரிசைப்படுத்தும் A-01, A-02 போன்ற நிலையான வடிவமைப்பைப் பயன்படுத்தவும்.
  • சரியாக வரிசைப்படுத்த, 1 என்பதற்குப் பதிலாக 01 என்பது போல எண்களுக்கு முன்னால் பூஜ்ஜியங்களைச் சேர்க்கவும்.
  • aisle-unit-shelf-bin என்பது போல, உங்கள் பின்களுக்கு - மூலம் பிரிக்கப்பட்ட பிரிவுகளைச் சேர்ப்பதைக் கருத்தில் கொள்ளவும்.
  • பின் பெயர்களை உருவாக்கும்போது உங்கள் கிடங்குத் தளவமைப்பைக் கருத்தில் கொள்ளவும்.
  • முன் மற்றும் பின் பகுதிகளைக் கொண்ட சில்லறை விற்பனை ஸ்டோர்களுக்கு, F- மற்றும் B- போன்ற முன்னொட்டுகளைப் பயன்படுத்தவும்.

பின் இருப்பிடங்களின் வரிசை

பின் இருப்பிடங்கள் அகர வரிசைப்படி வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. எழுத்துகள் இடமிருந்து வலமாக ஒவ்வொன்றாக ஒப்பிடப்படுகின்றன, மேலும் அடுத்த இடத்திற்குச் செல்வதற்கு முன் ஒவ்வொரு இடமும் தனித்தனியாக மதிப்பிடப்படும்.

எடுத்துக்காட்டாக, A-01 என்பது A-02 என்பதற்கு முன் வரும், ஏனெனில் A-0 பொருந்தியா பிறகு, 2 என்பதற்கு முன் 1 வரும். இதேபோல், A- என்பதற்குப் பிந்தைய முதல் இடத்தில் 9 என்பதற்கு முன் 1 வருவதால், A-9 என்பதற்கு முன் A-10 வரும்.

இது எண் வரிசையிலிருந்து வேறுபட்டதாகும். சரியாக வரிசைப்படுத்த, A-1 என்பதற்குப் பதிலாக A-01 என்பதைப் பயன்படுத்தவும், A-9 என்பதற்குப் பதிலாக A-09 என்பதைப் பயன்படுத்தவும்.

ஆர்டர்களைச் சேகரிக்கும்போது நீங்கள் எதிர்பார்க்கும் தர்க்கரீதியான வரிசையில் உங்கள் பின்கள் காட்டப்படுவதை இது உறுதிசெய்கிறது.

CSV கோப்புகளைப் பயன்படுத்திப் பின் இருப்பிடங்களைச் சேர்த்தல் மற்றும் நிர்வகித்தல்

CSV கோப்புகளைப் பயன்படுத்தி உங்கள் தயாரிப்புகளுக்குப் பின் இருப்பிடங்களைச் சேர்க்கலாம். பின் இருப்பிடங்களைத் திருத்தவும், தயாரிப்புகளிலிருந்து பின் இருப்பிடங்களை அகற்றவும் உங்களால் முடியும்.

பின் இருப்பிடங்களுக்காக உங்கள் CSV கோப்பை வடிவமைத்தல்

உங்கள் CSV கோப்பில் பின்வரும் நெடுவரிசைகள் இருக்க வேண்டும்:

  • ஹேண்டில்: தயாரிப்பு மாறுபாட்டின் ஹேண்டில்.
  • இடம்: உங்களின் தற்போதைய Shopify இடத்தின் பெயர்.
  • பின் பெயர்: A-01 அல்லது Aisle5-Rack3 போன்ற பின் இருப்பிடத்தின் பெயர்.
  • கையிருப்பு (தற்போதைய): CSV கோப்பை ஏற்றுமதி செய்தபோது ஒரு இடத்தில் உங்களிடம் இருந்த சரக்கு இருப்பு அளவு. இந்த நெடுவரிசை ஏற்றுமதி செய்யும் நேரத்தில் உங்களின் சரக்கு இருப்பு நிலைகளின் ஸ்னாப்ஷாட்டை வழங்குகிறது மற்றும் இறக்குமதி செய்யும் போது பாதுகாப்பு சரிபார்ப்பை உறுதி செய்கிறது.
  • கையிருப்பு (புதிய): நீங்கள் அமைக்க விரும்பும் புதிய சரக்கு இருப்பு அளவு. சரக்கு இருப்பு அளவுகளை மாற்ற விரும்பவில்லை எனில் இதை காலியாக விடவும்.

பின் இருப்பிடங்களுக்கான பின்வரும் மாதிரி CSV வடிவமைப்பை மதிப்பாய்வு செய்யவும்.

ஹேண்டில், இடம், பின் பெயர் மற்றும் கையிருப்பு அளவு நெடுவரிசைகளைக் காட்டும், பின் இருப்பிடங்களுக்கான மாதிரி CSV வடிவமைப்பு.
ஹேண்டில்இடம்பின் பெயர்கையிருப்பு (தற்போதைய)கையிருப்பு (புதிய)
tshirt-small-blueசான் டியாகோ கிடங்குA-0110
pants-medium-blackசான் டியாகோ கிடங்குB-0325
hat-onesize-redசான் டியாகோ கிடங்குA-0115

CSV கோப்பைப் பயன்படுத்தித் தயாரிப்புகளில் பின் இருப்பிடத்தைச் சேர்த்தல்

உங்கள் தயாரிப்புகளில் பின் இருப்பிடங்களைச் சேர்க்கலாம். உங்களின் சரக்கு இருப்பை CSV கோப்பிற்கு ஏற்றுமதி செய்து, அந்த CSV கோப்பில் பின் இருப்பிடங்களைச் சேர்த்து, பின்னர் மீண்டும் CSV கோப்பை உங்கள் Shopify நிர்வாகியில் இறக்குமதி செய்ய வேண்டும்.

ஏற்றுமதி செய்யப்பட்ட CSV கோப்பில் பின் பெயர் நெடுவரிசை ஏற்கனவே இருக்கும்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, தயாரிப்புகள் > சரக்கு இருப்பு என்பதற்குச் செல்லவும்.

  2. ஏற்றுமதி செய் என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. நீங்கள் ஏற்றுமதி செய்ய விரும்பும் இடங்களைத் தேர்ந்தெடுக்கவும்.

  4. மாறுபாடுகளை ஏற்றுமதி செய் என்பதைக் கிளிக் செய்யவும்.

  5. CSV கோப்பில், ஒவ்வொரு தயாரிப்புக்கும் பின் பெயர் நெடுவரிசையில் பின் இருப்பிடங்களைச் சேர்த்து, பின்னர் CSV கோப்பைச் சேமிக்கவும்.

  6. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, தயாரிப்புகள் > சரக்கு இருப்பு என்பதற்குச் செல்லவும்.

  7. இறக்குமதி செய் என்பதைக் கிளிக் செய்யவும்.

CSV கோப்பைப் பயன்படுத்தி ஒரு தயாரிப்புக்கான பின் இருப்பிடத்தை மாற்றுதல்

ஒரு தயாரிப்பை ஒரு பின் இருப்பிடத்திலிருந்து மற்றொரு பின் இருப்பிடத்திற்கு மாற்றலாம். உங்களின் சரக்கு இருப்பை CSV கோப்பிற்கு ஏற்றுமதி செய்து, CSV கோப்பில் உங்கள் தயாரிப்புக்கான பின் இருப்பிடத்தை மாற்றி, பின்னர் மீண்டும் CSV கோப்பை உங்கள் Shopify நிர்வாகியில் இறக்குமதி செய்ய வேண்டும்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, தயாரிப்புகள் > சரக்கு இருப்பு என்பதற்குச் செல்லவும்.

  2. ஏற்றுமதி செய் என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. நீங்கள் ஏற்றுமதி செய்ய விரும்பும் இடங்களைத் தேர்ந்தெடுக்கவும்.

  4. மாறுபாடுகளை ஏற்றுமதி செய் என்பதைக் கிளிக் செய்யவும்.

  5. உங்கள் CSV கோப்பில் உள்ள பின் பெயர் நெடுவரிசையில், ஒரு தயாரிப்புக்கான பின் பெயரை மாற்றவும்.

  6. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, தயாரிப்புகள் > சரக்கு இருப்பு என்பதற்குச் செல்லவும்.

  7. இறக்குமதி செய் என்பதைக் கிளிக் செய்யவும்.

CSV கோப்பைப் பயன்படுத்தி தயாரிப்பிலிருந்து ஒரு பின் இருப்பிடத்தை அகற்றுதல்

ஒரு தயாரிப்பிலிருந்து பின் இருப்பிடத்தை நீங்கள் அகற்றலாம். உங்களின் சரக்கு இருப்பை CSV கோப்பிற்கு ஏற்றுமதி செய்து, அந்த CSV கோப்பிலுள்ள உங்கள் தயாரிப்பிலிருந்து பின் இருப்பிடத்தை அகற்றி, பின்னர் மீண்டும் CSV கோப்பை உங்கள் Shopify நிர்வாகியில் இறக்குமதி செய்ய வேண்டும்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, தயாரிப்புகள் > சரக்கு இருப்பு என்பதற்குச் செல்லவும்.

  2. ஏற்றுமதி செய் என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. நீங்கள் ஏற்றுமதி செய்ய விரும்பும் இடங்களைத் தேர்ந்தெடுக்கவும்.

  4. மாறுபாடுகளை ஏற்றுமதி செய் என்பதைக் கிளிக் செய்யவும்.

  5. உங்கள் CSV கோப்பில் உள்ள பின் பெயர் நெடுவரிசையில், ஒரு தயாரிப்புக்கான பின் பெயரை அழிக்கவும்.

  6. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, தயாரிப்புகள் > சரக்கு இருப்பு என்பதற்குச் செல்லவும்.

  7. இறக்குமதி செய் என்பதைக் கிளிக் செய்யவும்.

மொத்தத் திருத்தியைப் பயன்படுத்திப் பின் இருப்பிடங்களை நிர்வகித்தல்

உங்கள் பின் இருப்பிடங்களுடன் கூடிய CSV கோப்பை உங்களின் Shopify நிர்வாகியில் இறக்குமதி செய்த பிறகு, மொத்தத் திருத்தியைப் பயன்படுத்தி உங்களின் பின் இருப்பிடங்களைப் பார்க்கலாம் மற்றும் மாற்றலாம்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, தயாரிப்புகள் > சரக்கு இருப்பு என்பதற்குச் செல்லவும்.

  2. நீங்கள் பின் இருப்பிடங்களை நிர்வகிக்க விரும்பும் தயாரிப்புகளைத் தேர்ந்தெடுக்கவும்.

  3. மொத்தமாகத் திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. நெடுவரிசைகள் என்பதைக் கிளிக் செய்யவும்.

  5. விரும்பினால்: இடம் வாரியாக அளவுகள் பிரிவில், நீங்கள் பின் இருப்பிடங்களை நிர்வகிக்க விரும்பும் இடங்களைத் தேர்ந்தெடுக்கவும்.

  6. இடம் வாரியாகப் பின் பெயர்கள் பிரிவில், அனைத்து பின் பெயர்களையும் காட்டு விருப்பத்தைச் செயல்படுத்தவும்.

  7. ஒரு குறிப்பிட்ட இடத்துக்கான பின் பெயர் நெடுவரிசையில், உங்கள் தயாரிப்புகளிலிருந்து பின் இருப்பிடங்களை மாற்றலாம் அல்லது அகற்றலாம்.

  8. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.