சந்தைகளில் தள்ளுபடிகள் மற்றும் கிஃப்ட் கார்டுகள்

தள்ளுபடிகள் மற்றும் கிஃப்ட் கார்டுகள் அனைத்துச் சந்தைகளிலும் செயல்படுகின்றன, ஆனால் உங்கள் ஸ்டோர் பல நாணயங்களில் விற்கும்போது சில முக்கியமான கருத்தில்கொள்ள வேண்டியவை உள்ளன. தள்ளுபடி மதிப்புகள் மற்றும் கிஃப்ட் கார்டு இருப்புகள் எவ்வாறு மாற்றப்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்வது, உங்கள் வாடிக்கையாளர்களுக்கு எதிர்பாராத விலை நிர்ணயத்தைத் தவிர்க்க உதவுகிறது.

தள்ளுபடிகள்

சந்தைகள் முழுவதும் தள்ளுபடியின் செயல்பாடானது, தள்ளுபடி மதிப்பு சதவீதமா அல்லது நிலையான தொகையா என்பதைப் பொறுத்தது. வாடிக்கையாளரின் உள்ளூர் விலைக்கு எந்தவொரு நாணய மாற்றமும் தேவையில்லாமல் சதவீதத் தள்ளுபடிகள் பொருந்தும். நிலையான தொகைத் தள்ளுபடிகள் உங்கள் ஸ்டோரின் இயல்புநிலை நாணயத்தில் உருவாக்கப்பட்டு, செக்அவுட்டின்போது மாற்றப்படும்.

சதவீதத் தள்ளுபடிகள்

சதவீதத் தள்ளுபடிகள் ஒவ்வொரு சந்தையிலும் நாணயத்திலும் ஒரே மாதிரியாகவே செயல்படும். வாடிக்கையாளர் எந்த நாணயத்தில் பணம் செலுத்தினாலும், 20% தள்ளுபடியானது தயாரிப்பு விலையில் இருந்து 20% ஐக் குறைக்கும்.

சதவீதத் தள்ளுபடிகளுக்கு எந்தவொரு நாணய மாற்றமும் தேவையில்லை. வாடிக்கையாளருக்கு அவர்களின் உள்ளூர் நாணயத்தில் காட்டப்படும் விலையில் அவை பயன்படுத்தப்படுகின்றன.

நிலையான தொகைத் தள்ளுபடிகள்

நிலையான தொகைத் தள்ளுபடிகள் உங்கள் ஸ்டோரின் இயல்புநிலை நாணயத்தில் உருவாக்கப்படுகின்றன. வேறு சந்தையில் உள்ள ஒரு வாடிக்கையாளர் தள்ளுபடியைப் பயன்படுத்தும்போது, செக்அவுட்டின்போது தற்போதைய மாற்று விகிதத்தைப் பயன்படுத்தி அந்தத் தொகை அவர்களின் உள்ளூர் நாணயத்திற்கு மாற்றப்படும்.

எடுத்துக்காட்டாக, உங்கள் ஸ்டோரின் இயல்புநிலை நாணயம் USD ஆக இருந்து, நீங்கள் $10.00 USD தள்ளுபடியை உருவாக்குகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். EUR ஐப் பயன்படுத்தும் சந்தையில் உள்ள ஒரு வாடிக்கையாளர், செக்அவுட்டின்போது தள்ளுபடியைப் பயன்படுத்துகிறார். செக்அவுட்டின்போது USD மற்றும் EUR ஆகியவற்றுக்கு இடையேயான மாற்று விகிதம் 0.92 ஆக உள்ளது. எனவே வாடிக்கையாளர் தமது ஆர்டரில் €9.20 EUR தள்ளுபடியைப் பெறுகிறார்.

இலவச ஷிப்பிங் தள்ளுபடிகள்

இலவச ஷிப்பிங் தள்ளுபடிகள் அனைத்துச் சந்தைகளிலும் செயல்படும். இலவச ஷிப்பிங் தள்ளுபடிக்கான குறைந்தபட்சக் கொள்முதல் தொகையை நீங்கள் அமைத்தால், அந்தத் தொகை உங்கள் ஸ்டோரின் இயல்புநிலை நாணயத்தில் இருக்கும், மேலும் அது செக்அவுட்டின்போது வாடிக்கையாளரின் உள்ளூர் நாணயத்திற்கு மாற்றப்படும்.

எடுத்துக்காட்டாக, $75.00 USD குறைந்தபட்சக் கொள்முதல் கொண்ட இலவச ஷிப்பிங் தள்ளுபடியை உருவாக்குகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். GBP ஐப் பயன்படுத்தும் சந்தையில் உள்ள ஒரு வாடிக்கையாளர், இலவச ஷிப்பிங்கைப் பெறுவதற்குத் தங்களது உள்ளூர் நாணயத்தில் $75.00 USD மதிப்பிற்குச் சமமான (தற்போதைய மாற்று விகிதத்தின் அடிப்படையில்) தொகையை எட்ட வேண்டும்.

X ஐ வாங்கி Y ஐப் பெறுங்கள் தள்ளுபடிகள்

X ஐ வாங்கி Y ஐப் பெறுங்கள் தள்ளுபடிகள் அனைத்துச் சந்தைகளிலும் செயல்படும். தள்ளுபடியில் வரையறுக்கப்பட்டுள்ள தயாரிப்புகளும் அளவுகளும், அந்தத் தயாரிப்புகள் கிடைக்கும் அனைத்துச் சந்தைகளிலும் பொருந்தும். தள்ளுபடியில் நிலையான தொகை மதிப்பு இருந்தால் (எடுத்துக்காட்டாக, 2 ஐ வாங்கி 1-க்கு $5.00 USD தள்ளுபடியைப் பெறுங்கள்), நிலையான தொகை செக்அவுட்டின்போது வாடிக்கையாளரின் நாணயத்திற்கு மாற்றப்படும்.

தானியங்கு தள்ளுபடிகள்

இயல்புநிலையாக அனைத்துச் சந்தைகளிலும் உள்ள தகுதிபெறும் வாடிக்கையாளர்கள் அனைவருக்குமே தானியங்கு தள்ளுபடிகள் பொருந்தும். என்றாலும், குறியீடு சார்ந்த தள்ளுபடிகளைப் போலவே அவற்றைக் குறிப்பிட்ட சந்தைகளுக்கு ஒதுக்க முடியும். தானியங்கு தள்ளுபடியானது நிலையான தொகையாக இருந்தால், செக்அவுட்டின்போது அது வாடிக்கையாளரின் நாணயத்திற்கு மாற்றப்படும்.

சந்தை வாரியாகத் தள்ளுபடிக்கான தகுதிநிலை

ஒரு தள்ளுபடி எந்தெந்த வாடிக்கையாளர்களுக்குப் பொருந்தும் என்பதை நீங்கள் இரண்டு வழிகளில் கட்டுப்படுத்தலாம்:

  • குறிப்பிட்ட சந்தைகளுக்குத் தள்ளுபடிகளை ஒதுக்குதல்: ஒரு தள்ளுபடியை உருவாக்கும்போது அல்லது திருத்தும்போது, அது எந்தெந்தச் சந்தைகளுக்குப் பொருந்தும் என்பதை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். அந்தச் சந்தைகளில் உள்ள வாடிக்கையாளர்கள் மட்டுமே தள்ளுபடியைப் பயன்படுத்த முடியும்.
  • வாடிக்கையாளர் தகுதிநிலை விதிகள்: ஒரு தள்ளுபடியை உருவாக்கும்போது, அதைக் குறிப்பிட்ட வாடிக்கையாளர் பிரிவுகளுக்கு மட்டும் பொருந்தும்படிக் கட்டுப்படுத்தலாம். வாடிக்கையாளர் தகுதிபெறும் அனைத்துச் சந்தைகளிலும் இந்த விதிகள் பொருந்தும்.

குறிப்பிட்ட B2B, நாடு அல்லது பிராந்தியம் மற்றும் சில்லறை விற்பனைச் சந்தைகளுக்குத் தள்ளுபடிகளை ஒதுக்கலாம், ஆனால் குறிப்பிட்ட சேனல் சந்தைகளுக்குத் தள்ளுபடிகளை ஒதுக்க முடியாது.

இயல்புநிலையாக, தள்ளுபடிக் குறியீடுகள் அனைத்துச் சந்தைகளிலும் செயல்படும். வாடிக்கையாளர் ஒரு தள்ளுபடிக் குறியீட்டை உள்ளிடும்போது, தள்ளுபடி விதிகள், சந்தை ஒதுக்கீடுகள் மற்றும் வாடிக்கையாளர் தகுதிநிலை ஆகியவற்றின் அடிப்படையில் அது பயன்படுத்தப்படும்.

கிஃப்ட் கார்டுகள்

உங்கள் ஸ்டோரின் இயல்புநிலை நாணயத்திலோ நீங்கள் விற்பனை செய்யும் வேறு நாணயத்திலோ கிஃப்ட் கார்டுகளை உருவாக்கலாம். கிஃப்ட் கார்டின் நாணயமானது, அதன் இருப்பு எவ்வாறு வைக்கப்பட்டுள்ளது என்பதையும் வாடிக்கையாளர்கள் அதை எங்கு மீட்டுக்கொள்ளலாம் என்பதையும் பாதிக்கும். கிஃப்ட் கார்டு நாணயங்கள் பற்றி மேலும் அறிக.

ஸ்டோர் நாணய கிஃப்ட் கார்டுகள்

ஸ்டோர் நாணய கிஃப்ட் கார்டுகள், அவற்றின் மதிப்பையும் இருப்பையும் உங்கள் ஸ்டோரின் இயல்புநிலை நாணயத்தில் அமைத்திருக்கும். வாடிக்கையாளர்கள் அவற்றை எந்த நாணயத்திலும் மீட்டுக்கொள்ளலாம்.

உங்கள் ஸ்டோரின் இயல்புநிலை நாணயத்தைத் தவிர்த்து வேறு நாணயத்தைப் பயன்படுத்தும் சந்தையில் வாடிக்கையாளர் ஒரு ஸ்டோர் நாணய கிஃப்ட் கார்டை மீட்டுக்கொள்ளும்போது, மீட்டுக்கொள்ளும் நேரத்தில் உள்ள மாற்று விகிதத்திற்கு ஏற்ப கிஃப்ட் கார்டு இருப்பு மாற்றப்படும்.

எடுத்துக்காட்டாக, வாடிக்கையாளர் ஒருவரிடம் $50.00 USD இருப்பு கொண்ட கிஃப்ட் கார்டு உள்ளது. CAD ஐப் பயன்படுத்தும் சந்தையில் அவர் ஒரு கொள்முதலைச் செய்கிறார். செக்அவுட்டின்போது மாற்று விகிதம் 1.36 ஆக உள்ளது. அந்தக் கிஃப்ட் கார்டானது ஆர்டரின் $68.00 CAD மதிப்பிலான தொகையை ஈடுசெய்கிறது.

கிஃப்ட் கார்டின் மீதமுள்ள இருப்பு உங்கள் ஸ்டோரின் இயல்புநிலை நாணயத்திலேயே (USD) கண்காணிக்கப்படும். கார்டானது வெளிநாட்டு நாணயத்தில் ஒவ்வொரு முறை பயன்படுத்தப்படும்போதும், இருப்பிலிருந்து கழிக்கப்படும் தொகையானது தற்போதைய மாற்று விகிதத்தில் மீண்டும் USD ஆக மாற்றப்படும்.

உள்ளூர் நாணய கிஃப்ட் கார்டுகள்

உள்ளூர் நாணய கிஃப்ட் கார்டுகள் அவற்றின் மதிப்பை, உங்கள் ஸ்டோரின் இயல்புநிலை நாணயத்தைத் தவிர்த்த வேறு நாணயத்தில் வைத்திருக்கும். எடுத்துக்காட்டாக, உங்கள் ஸ்டோரின் இயல்புநிலை நாணயம் USD ஆக இருந்தால், உங்கள் ஐரோப்பியச் சந்தையில் உள்ள வாடிக்கையாளர்களுக்காக EUR கிஃப்ட் கார்டு தயாரிப்பை நீங்கள் உருவாக்கலாம். அந்தத் தயாரிப்பிலிருந்து விற்கப்படும் ஒவ்வொரு கிஃப்ட் கார்டின் இருப்பும் EUR இல் இருக்கும்.

குறைந்தது 1 செயலில் உள்ள சந்தை அட்டவணையால் பயன்படுத்தப்படும் நாணயத்தில் மட்டுமே உள்ளூர் நாணய கிஃப்ட் கார்டு தயாரிப்பை உங்களால் உருவாக்க முடியும். உள்ளூர் நாணய கிஃப்ட் கார்டு தயாரிப்புகளுக்கான சந்தை மற்றும் அட்டவணைத் தேவைகள் பற்றி மேலும் அறிக. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து கிஃப்ட் கார்டை உருவாக்கும்போது, சந்தைகள் உள்ளமைவில் செயல்படுத்தப்பட்ட எந்த நாணயத்தையும் தேர்ந்தெடுக்கலாம்.

இயல்புநிலையாக, செக்அவுட் நாணயமானது கிஃப்ட் கார்டு நாணயத்துடன் பொருந்தும்போது மட்டுமே உள்ளூர் நாணய கிஃப்ட் கார்டை மீட்டுக்கொள்ள முடியும். நீங்கள் கிஃப்ட் கார்டு அல்லது கிஃப்ட் கார்டு தயாரிப்பை உருவாக்கும்போது கிராஸ்-கரன்சி மீட்பை இயக்கினால், வாடிக்கையாளர்கள் கிஃப்ட் கார்டை வேறு நாணயங்களில் பயன்படுத்திக்கொள்ளலாம், அது மீட்டுக்கொள்ளப்படும் நேரத்தில் உள்ள மாற்று விகிதத்திற்கு ஏற்ப மாற்றப்படும். கிஃப்ட் கார்டை உருவாக்கிய பிறகு இந்த அமைப்பை மாற்ற முடியாது.

கிஃப்ட் கார்டு குறித்துக் கருத்தில்கொள்ள வேண்டியவை

சந்தைகளுடன் கிஃப்ட் கார்டுகளைப் பயன்படுத்துவது குறித்துக் கருத்தில்கொள்ள வேண்டியவற்றைக் கீழே மதிப்பாய்வு செய்யவும்:

  • கிஃப்ட் கார்டு இருப்புப் பக்கத்தில் வாடிக்கையாளருக்குக் காட்டப்படும் இருப்பானது, கிஃப்ட் கார்டின் நாணயத்தில் இருக்கும்.
  • மாற்று விகிதங்கள் மாறுபடுவதால், வேறு நாணயத்தில் மீட்டுக்கொள்ளப்படும் கிஃப்ட் கார்டின் உண்மையான மதிப்பானது அது வாங்கப்பட்ட நேரத்திற்கும் மீட்டுக்கொள்ளப்பட்ட நேரத்திற்கும் இடையில் மாறக்கூடும். இது ஸ்டோர் நாணய கிஃப்ட் கார்டுகளுக்கும், கிராஸ்-கரன்சி மீட்பு இயக்கப்பட்ட உள்ளூர் நாணய கிஃப்ட் கார்டுகளுக்கும் பொருந்தும்.
  • ஸ்டோர் நாணய கிஃப்ட் கார்டு தயாரிப்புகளுக்கான விலை வாடிக்கையாளரின் உள்ளூர் நாணயத்தில் நிர்ணயிக்கப்படும், ஆனால் கிஃப்ட் கார்டு இருப்பானது உங்கள் ஸ்டோரின் இயல்புநிலை நாணயத்தில் உருவாக்கப்படும். எடுத்துக்காட்டாக, உங்கள் EUR சந்தையில் உள்ள ஒரு வாடிக்கையாளர் EUR இல் செலுத்துவார், ஆனால் கிஃப்ட் கார்டு இருப்பு USD இல் உருவாக்கப்படும். உங்கள் அட்டவணைகளில் ஸ்டோர் நாணய கிஃப்ட் கார்டுகளுக்கு நிலையான விலைகளை அமைக்க வேண்டாம்.
  • உள்ளூர் நாணய கிஃப்ட் கார்டு தயாரிப்புகள் இயல்புநிலையாக அட்டவணைகளில் வெளியிடப்படுவதில்லை. வாடிக்கையாளர்களுக்கு ஒன்றைக் கிடைக்கச் செய்ய, அதன் நாணயத்தைப் பயன்படுத்தும் அட்டவணைகளில் அதை வெளியிடவும்.