eBay-இலிருந்து இடமாற்றவும்

eBay-இலிருந்து Shopify-க்கு உங்கள் ஸ்டோரை எவ்வாறு இடமாற்றுவது என்பதை இந்த வழிகாட்டி விவரிக்கிறது. எந்தவொரு முக்கிய அமைவுப் பணிகளையும் மறக்காமல் இருப்பதை உறுதிசெய்ய, இந்த வழிகாட்டியைத் தொடக்கப் புள்ளியாகவும் குறிப்பாகவும் பயன்படுத்தலாம்.

இந்தப் பக்கத்தில்

படி 1: உங்கள் eBay ஸ்டோரின் உள்ளடக்கத்தையும் தரவையும் Shopify-க்கு எப்படி இடமாற்றுவது என முடிவு செய்யவும்

Shopify இல் உங்கள் ஸ்டோரை உருவாக்கிய பிறகு, உங்களின் தற்போதைய eBay ஸ்டோரை மதிப்பாய்வு செய்து, எந்தெந்தத் தரவு மற்றும் உள்ளடக்கத்தை Shopify-க்கு இடமாற்ற வேண்டும் என்பதை முடிவு செய்யுங்கள். பழைய, குறைவான செயல்திறன் கொண்ட உள்ளடக்கத்தை நீக்கவும், உங்கள் தளம் மற்றும் வணிகத்திற்குப் புதிய தோற்றத்தை அளிக்கவும் இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையலாம். eBay-லிருந்து பின்வரும் தரவை இடமாற்றுவதைக் கருத்தில் கொள்ளவும்:

  • தயாரிப்புகள்
  • ஏற்கெனவே நிறைவேற்றப்பட்ட பழைய ஆர்டர்கள்
  • மதிப்புரைகள்

வாடிக்கையாளர் பட்டியல் ஏற்றுமதியை eBay வழங்குவதில்லை. மேலும், விற்பனையாளர்கள் தங்கள் eBay ஆர்டர்களில் உள்ள வாடிக்கையாளர் தகவல்களைப் பயன்படுத்துவதற்கும் இது வரம்புகளை விதிக்கிறது. eBay ஆர்டர்களில் இருந்து வாடிக்கையாளர் விவரங்களை இறக்குமதி செய்வதற்கு அல்லது உங்கள் eBay வாடிக்கையாளர்களைத் தொடர்புகொள்வதற்கு முன், eBay பயனர் தனியுரிமை அறிவிப்பை மதிப்பாய்வு செய்யவும்.

ஒவ்வொரு வகையான உள்ளடக்கத்தையும் எப்படி இடமாற்ற வேண்டும் என்பதையும் நீங்கள் முடிவு செய்ய வேண்டும். பின்வரும் இடமாற்ற முறைகளை மதிப்பாய்வு செய்யவும்:

உங்கள் eBay தரவை Shopify-க்கு இடமாற்றுவதற்கான முறைகள் மற்றும் ஒவ்வொரு முறையையும் எப்போது கருத்தில் கொள்ள வேண்டும்
இடமாற்ற முறைவிளக்கம்
தரவை மேனுவலாக நகலெடுத்து ஒட்டுதல்உங்களின் தற்போதைய eBay ஸ்டோரில் உள்ள உள்ளடக்கத்தை மேனுவலாக நகலெடுத்து உங்கள் புதிய Shopify ஸ்டோரில் ஒட்டவும். இது எளிமையான மற்றும் கட்டணமில்லா இடமாற்ற முறையாகும், ஆனால் இதற்கு மேனுவலாக உள்ளிடுவது அவசியமாகலாம். நீங்கள் இடமாற்றும் தரவின் அளவைப் பொறுத்து இதற்கு அதிக நேரமும் ஆகலாம். சிறிய அளவிலான தரவுத்தொகுப்பை இடமாற்ற வேண்டியிருக்கும்போது இந்த முறையைப் பயன்படுத்தலாம்.
CSV இறக்குமதிஉங்கள் தரவை CSV கோப்புகளாக ஏற்றுமதி செய்து, பின்னர் உங்கள் புதிய Shopify ஸ்டோரில் இறக்குமதி செய்யவும். இது ஓர் இலவச இடமாற்ற முறையாகும், ஆனால் உங்கள் CSV கோப்புகளைத் திருத்த வேண்டும். எளிமையான தயாரிப்பு அட்டவணைகளுக்கு இந்த முறை சிறப்பாக வேலை செய்யும்.
Shopify Store Migration செயலிஇலவச Store Migration செயலிக்கு ஒரு CSV கோப்பைப் பதிவேற்றுவதன் மூலம், உங்கள் eBay தயாரிப்புகளை Shopify-க்கு இறக்குமதி செய்யுங்கள். முதலில் CSV கோப்பைத் திருத்தாமல் உங்கள் பட்டியல்களை இறக்குமதி செய்ய விரும்பும் போது, இந்த முறையைக் கருத்தில் கொள்ளவும்.
மூன்றாம் தரப்பு இடமாற்றச் செயலிகள்CSV இறக்குமதியில் ஃபீல்டுகளை மேப் செய்வதில் உள்ள யூகங்களைத் தவிர்க்க, Shopify App Store-இல் உள்ள மூன்றாம் தரப்பு இடமாற்றச் செயலிகளைப் பயன்படுத்தவும். இந்த முறைக்கான செலவு மாறுபடும் மற்றும் உங்கள் தரவுத்தொகுப்பின் சிக்கல்தன்மை, அளவு ஆகியவற்றைப் பொறுத்தது. பெரிய அளவிலான தரவுத்தொகுப்பை இடமாற்ற வேண்டியிருக்கும்போது இந்த முறையைப் பயன்படுத்தலாம்.
இடமாற்ற வல்லுநர்உங்கள் இடமாற்றத்தை நிர்வகித்து நிறைவுசெய்ய Shopify பார்ட்னர் ஒருவரைப் பணியமர்த்தவும். இந்த முறைக்கான செலவு மாறுபடும் மற்றும் உங்கள் தரவுத்தொகுப்பின் சிக்கல்தன்மை, அளவு ஆகியவற்றைப் பொறுத்தது. பெரிய மற்றும் சிக்கலான தரவுத்தொகுப்பை இடமாற்ற வேண்டியிருக்கும்போது இந்த முறையைப் பயன்படுத்தலாம்.

Shopify-க்கு மாறிய பிறகும் eBay இல் தொடர்ந்து விற்பனை செய்ய, Shopify Marketplace Connect செயலியைப் பயன்படுத்தி உங்கள் தற்போதைய eBay பட்டியல்களை உங்கள் Shopify தயாரிப்புகளுடன் இணைத்துக்கொள்ளலாம். அதோடு, eBay மற்றும் Shopify இடையே ஆர்டர்கள் மற்றும் சரக்கு இருப்பு ஆகியவற்றை ஒத்திசைக்கலாம்.

Shopify Store Migration செயலி

Store Migration app icon
Shopify App Store இலிருந்து Store Migration செயலியை நிறுவவும்.

Shopify Store Migration செயலியானது eBay உட்பட பிற பிளாட்ஃபார்ம்களில் இருந்து தயாரிப்புகளை இறக்குமதி செய்யும் ஓர் இலவசச் செயலியாகும். eBay இலிருந்து இறக்குமதி செய்ய, eBay Seller Hub இலிருந்து நீங்கள் ஏற்றுமதி செய்த CSV கோப்பைப் பதிவேற்ற வேண்டும்.

Store Migration செயலியைப் பயன்படுத்துவதற்கு முன், பின்வரும் விஷயங்களை மதிப்பாய்வு செய்யவும்:

  • Shopify இல் உள்ள ஒரு தயாரிப்புக்கு 3 விருப்பங்கள் வரை இருக்கலாம். ஒரு eBay பட்டியலில் 4 அல்லது அதற்கும் அதிகமான மாறுபாடு விருப்பங்கள் அல்லது 101 அல்லது அதற்கும் அதிகமான மாறுபாடுகள் இருந்தால், அது மாறுபாடுகள் இல்லாத ஒற்றைத் தயாரிப்பாக இறக்குமதி செய்யப்படும். மெட்டாஃபீல்டுகள் அல்லது மூன்றாம் தரப்புச் செயலியைப் பயன்படுத்தி கூடுதல் விருப்பங்களைச் சேர்க்கலாம்.
  • இறக்குமதி செய்யப்பட்ட தயாரிப்புகள் உங்கள் ஸ்டோரில் வரைவுகளாகச் சேர்க்கப்படும். அத்துடன் அவற்றின் சரக்கு இருப்பு அளவுகள் உங்கள் ஸ்டோரின் இயல்புநிலை இடத்தில் சேர்க்கப்படும்.
  • eBay இன் CSV அறிக்கைகளில் தயாரிப்பு விளக்கங்களோ படங்களோ சேர்க்கப்படவில்லை. இறக்குமதிக்குப் பிறகு, உங்கள் தயாரிப்புகளை மதிப்பாய்வு செய்து விடுபட்ட விவரங்களைச் சேர்க்கவும்.

படிகள்:

  1. Shopify App Store இலிருந்து Store Migration செயலியை நிறுவவும்.
  2. ஒரு CSV கோப்பிற்கு eBay இலிருந்து உங்கள் தயாரிப்புத் தரவை ஏற்றுமதி செய்யவும்.
  3. Store Migration செயலியல், உங்கள் eBay CSV கோப்பைப் பதிவேற்றி, பின்னர் இறக்குமதியைத் தொடங்கவும். கோப்பைப் பதிவேற்றுவதற்கு முன் அதைத் திருத்த வேண்டிய அவசியமில்லை.
  4. இறக்குமதி முடிந்ததும், இறக்குமதி அறிக்கையை மதிப்பாய்வு செய்யவும். இந்த அறிக்கை எத்தனை உருப்படிகள் இறக்குமதி செய்யப்பட்டன என்பதைப் பட்டியலிடும், மேலும் இறக்குமதி செய்யப்படாத உருப்படிகளில் உள்ள சிக்கல்களை விவரிக்கும்.

இந்த வழிகாட்டியின் மீதமுள்ள பகுதிகள், கிடைக்கும்போது CSV கோப்புகளைப் பயன்படுத்தப் பரிந்துரைக்கின்றன, ஆனால் CSV சாத்தியமில்லாதபோது பிற விருப்பங்களையும் குறிப்பிடுகின்றன.

படி 2: eBay-இலிருந்து உங்கள் தயாரிப்புத் தரவை ஏற்றுமதி செய்யவும்

eBay Seller Hub இல் உள்ள Reports தாவலில் இருந்து, உங்கள் செயலில் உள்ள eBay பட்டியல்களை CSV கோப்பிற்கு ஏற்றுமதி செய்யலாம். மேலும் விவரங்களுக்கு, eBay உதவி மையத்தில் உள்ள Seller Hub Reports என்பதைப் பார்க்கவும்.

eBay பட்டியல்கள் அறிக்கையில் ஒவ்வொரு பட்டியலின் தலைப்பு, அளவு, விலை, வகை, நிலை போன்ற விவரங்கள் அடங்கும். இதில் தயாரிப்பு விளக்கங்கள், படங்கள், உருப்படியின் சிறப்பம்சங்கள் அல்லது ஷிப்பிங் விவரங்கள் போன்றவை சேர்க்கப்படவில்லை. உங்கள் தயாரிப்புகளை இறக்குமதி செய்த பிறகு, இந்த விவரங்களை Shopify-இல் சேர்க்கவும் அல்லது மூன்றாம் தரப்பு இடமாற்றச் செயலி அவற்றை உங்களுக்காக இறக்குமதி செய்ய முடியுமா எனச் சரிபார்க்கவும்.

படிகள்:

  1. eBay Seller Hub-இல் Reports என்பதைக் கிளிக் செய்து, பின்னர் Downloads என்பதைக் கிளிக் செய்யவும்.
  2. Download report என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. Source என்பதற்கு, Listings என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. Type என்பதற்கு, All active listings என்பதைத் தேர்ந்தெடுக்கவும். விற்கப்படாமல் முடிவடைந்த பட்டியல்களை ஏற்றுமதி செய்ய, விற்கப்படாத பட்டியல்களுக்கான இரண்டாவது அறிக்கையைப் பதிவிறக்கவும். வரைவுப் பட்டியல்களை நீங்கள் ஏற்றுமதி செய்ய முடியாது.
  5. Download என்பதைக் கிளிக் செய்யவும்.
  6. உங்கள் கணினியில் கோப்பை eBayProductDownload.csv எனச் சேமிக்கவும்.

படி 3: Shopify-க்கு இறக்குமதி செய்யும் முன் உங்கள் தயாரிப்பு CSV கோப்பைத் திருத்தவும்

உங்கள் CSV கோப்பை Shopify-க்கு இறக்குமதி செய்வதற்கு முன், நீங்கள் அதைத் திருத்த வேண்டும்.

நீங்கள் தயாரிப்பு CSV வார்ப்புருவைப் பதிவிறக்கிப் பார்த்துவிட்டு, பின்னர் அந்த வடிவத்திற்குப் பொருந்தும் வகையில் உங்கள் eBayProductDownload.csv கோப்பைத் திருத்தலாம். நீங்கள் உங்கள் CSV கோப்பின் மற்றொரு தாவலில் பணிபுரிய விரும்பலாம். மற்ற தாவலில், நீங்கள் நெடுவரிசைத் தலைப்புகளை நகலெடுக்கலாம், பின்னர் உங்கள் eBay இறக்குமதித் தரவை Shopify தயாரிப்பு CSV வார்ப்புருவில் நகலெடுத்து ஒட்டலாம். உங்கள் CSV கோப்பை இறக்குமதி செய்யும் முன், அதில் உங்கள் ஸ்டோரின் Shopify தயாரிப்பு CSV வார்ப்புருத் தரவு மட்டுமே உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

நீங்கள் மாதிரி கோப்பைப் பயன்படுத்தினால், பின்வரும் விவரங்களை மதிப்பாய்வு செய்வதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்:

  • மாதிரிக் கோப்பில் மூன்று எடுத்துக்காட்டுத் தயாரிப்புகள் உள்ளன, அவற்றில் இரண்டு தயாரிப்புகளுக்குச் சில மாறுபாடுகள் உள்ளன. உங்கள் இறக்குமதிக் கோப்பில் பெரும்பாலும் அதிகத் தயாரிப்புகளும் மாறுபாடுகளும் இருக்கலாம். உங்களுக்கான சொந்த இறக்குமதிக் கோப்பை உருவாக்க மாதிரிக் கோப்பைப் பயன்படுத்தினால், அனைத்து எடுத்துக்காட்டுத் தயாரிப்புகளையும் நீக்கிவிட்டீர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
  • மாதிரிக் கோப்பில் Inventory quantity நெடுவரிசையும் உள்ளது, அது ஒற்றை இடத்தைக் கொண்ட ஸ்டோர்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும். நீங்கள் பல இடங்களைப் பயன்படுத்தி, சரக்கு இருப்பு அளவுகளை இறக்குமதி அல்லது ஏற்றுமதி செய்ய விரும்பினால், சரக்கு இருப்பு CSV கோப்பைப் பயன்படுத்தவும்.
  • மாதிரிக் கோப்பில் சர்வதேச CSV நெடுவரிசைகள் உள்ளன, ஆனால் எடுத்துக்காட்டுத் தயாரிப்புகளைச் சர்வதேச அளவில் விற்கும்போது அவற்றுக்கெனத் தனித்துவமான விலைகள் ஏதும் இல்லாததால் அவை காலியாக விடப்பட்டுள்ளன.

உங்கள் CSV கோப்புகளின் வடிவமைக்கப்பட்ட பதிப்பைத் திருத்த நீங்கள் Google Sheets-ஐப் பயன்படுத்தலாம். Microsoft Excel அல்லது Numbers போன்ற பிற பிரபலமான விரிதாள் செயலிகளைப் பயன்படுத்தியும் நீங்கள் கோப்பைத் திருத்தலாம்.

உங்களின் eBay ஏற்றுமதியில் இருந்து, பின்வரும் அட்டவணையில் இல்லாத நெடுவரிசைகளை அகற்றவும். Shopify தயாரிப்பு CSV கோப்பில் உள்ள சில நெடுவரிசைகள் உங்களின் eBay ஏற்றுமதியில் இல்லை. அந்த நெடுவரிசைகள் அட்டவணையில் பட்டியலிடப்படவில்லை, ஆனால் அவற்றையும் நீங்கள் மதிப்பாய்வு செய்ய வேண்டியிருக்கலாம். தயாரிப்பு CSV கோப்பில் உள்ள ஒவ்வொரு நெடுவரிசைக்கும் என்ன தேவை என்பதைப் பற்றி மேலும் அறிக.

உங்களின் eBay பட்டியல்கள் அறிக்கையில் உள்ள நெடுவரிசைகளை Shopify தயாரிப்பு CSV கோப்பில் உள்ள நெடுவரிசைகளுடன் இணைக்கும் பின்வரும் அட்டவணையை மதிப்பாய்வு செய்யவும்:

eBay பட்டியல்கள் அறிக்கையில் உள்ள நெடுவரிசைகள் Shopify தயாரிப்பு CSV கோப்பில் உள்ள நெடுவரிசைகளுடன் எவ்வாறு இணைக்கப்பட்டுள்ளன
eBay நெடுவரிசைShopify நெடுவரிசைசெயல்
TitleTitleநெடுவரிசையின் பெயரை அப்படியே வைத்திருக்கவும்.
eBay category 1 nameTypeநெடுவரிசையின் பெயரை மாற்றவும். ஒவ்வொரு தயாரிப்பிற்கும் ஒரு நிலையான தயாரிப்பு வகையை நீங்கள் அமைக்கலாம்.
Custom label (SKU)SKUநெடுவரிசையின் பெயரை மாற்றவும்.
Available quantityInventory quantityநெடுவரிசையின் பெயரை மாற்றவும்.
Current pricePriceநெடுவரிசையின் பெயரை மாற்றவும். ஏல முறையிலான பட்டியல்களுக்கு, இந்த நெடுவரிசையில் நடப்பு ஏலத்தொகை இருக்கும், எனவே அவற்றை இறக்குமதி செய்வதற்கு முன் இந்த விலைகளைச் சரிபார்க்கவும்.
Variation detailsOption1 name மற்றும் Option1 valueமற்றும் அதைப் பொருத்தும் Option2 name, Option2 value, Option3 name, மற்றும் Option3 value நெடுவரிசைகள்ஒவ்வொரு மாறுபாட்டையும் விருப்பப் பெயர்களாகவும் மதிப்புகளாகவும் பிரிக்கவும். உதாரணமாக, ஒரு சிறிய கருப்புச் சட்டைக்கான மாறுபாடு என்பது Size-இன் Option1 name -ஆகவும், அதற்கான Option1 value Small-ஆகவும் மாறுகிறது. அதேபோல், Color-இன் Option2 name -ஆகவும், அதற்கான Option2 value Black-ஆகவும் மாறுகிறது. ஒவ்வொரு மாறுபாட்டிற்கும் எனத் தனித்தனி வரிசை தேவை, அதன் தயாரிப்பைப் போன்றே URL handle நெடுவரிசையிலும் அதே மதிப்பு இருக்க வேண்டும்.
P:UPC (Universal Product Code), P:EAN (European Article Number), and P:ISBN (International Standard Book Number)Barcodesமதிப்புகளை Barcodes நெடுவரிசைக்கு நகர்த்தவும். ஒரு தயாரிப்பிற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பார்கோடு இருந்தால், பார்கோடுகளை அரைப்புள்ளி (;) மூலம் பிரிக்கவும்.
ConditionGoogle Shopping / Conditionநெடுவரிசையின் பெயரை மாற்றவும். தயாரிப்புகளை Google Merchant Center உடன் ஒத்திசைக்கும் செயலிகள் மட்டுமே இந்த நெடுவரிசையைப் பயன்படுத்துகின்றன. Google & YouTube சேனல் இதைப் பயன்படுத்தாது.

படி 4: Shopify-க்கு உங்கள் தயாரிப்புத் தரவை இறக்குமதி செய்தல்

eBayProductDownload.csv கோப்பைப் பெற்று, தேவையான மாற்றங்களைச் செய்து முடித்த பிறகு, உங்கள் eBay தயாரிப்புகளை Shopify-க்கு இறக்குமதி செய்யலாம்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியில், தயாரிப்புகள் பகுதிக்குச் செல்லவும்.

  2. Import என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. Add file என்பதைக் கிளிக் செய்து, பின்னர் eBayProductDownload.csv கோப்பைத் தேர்ந்தெடுக்கவும்.

  4. Publish new products to all sales channels என்பதைத் தேர்வுநீக்கி, பின்னர் Upload and preview என்பதைக் கிளிக் செய்யவும்.

  5. இறக்குமதி பற்றிய விவரங்களை மதிப்பாய்வு செய்து, பின்னர் Import products என்பதைக் கிளிக் செய்யவும்.

உங்கள் CSV கோப்பு பதிவேற்றப்பட்டதும், உங்கள் Shopify ஸ்டோரை அமைக்கப் பயன்படுத்திய மின்னஞ்சல் கணக்கிற்கு Shopify-இலிருந்து உறுதிப்படுத்தல் மின்னஞ்சலைப் பெறுவீர்கள். பொதுவான சிக்கல்களுக்கான தீர்வுகளையோ CSV கோப்பு மூலம் தயாரிப்புகளை இறக்குமதி செய்வது குறித்த மேலும் பல பொதுவான தகவல்களையோ படிக்கவும்.

படி 5: இறக்குமதிக்குப் பிறகு உங்கள் தயாரிப்புகளைச் சரிபார்த்து ஒழுங்கமைத்தல்

உங்கள் தயாரிப்புகளை Shopify-க்கு இறக்குமதி செய்த பிறகு, உங்கள் தகவல்கள் அனைத்தும் சரியாக இறக்குமதி செய்யப்பட்டுள்ளனவா என்பதைச் சரிபார்க்கவும். விலை, எடை, சரக்கு இருப்பு போன்ற விவரங்கள் சரியாக இறக்குமதி செய்யப்படாவிட்டால், அவை உங்கள் பிசினஸைப் பாதிக்கலாம்.

பொதுவான இறக்குமதிப் பிழைகளைச் சரிபார்த்தல்

Shopify-க்கு நீங்கள் தயாரிப்புகளை இறக்குமதி செய்யும்போது ஏற்படக்கூடிய பிழைகளின் வகைகள் மற்றும் அந்தப் பிழைகளை எவ்வாறு நீங்கள் தீர்க்கலாம் என்பது பற்றியது.
சிக்கல்தீர்வு
தயாரிப்புகள் வெற்றிகரமாக இறக்குமதி செய்யப்பட்டன, ஆனால் வெளியிடப்படவில்லை.நீங்கள் இறக்குமதி செய்யும் தயாரிப்புகள் மறைக்கப்பட்டவை எனக் குறிக்கப்பட்டிருந்தால், நீங்கள் அவற்றை உங்கள் விற்பனைச் சேனல்களுக்குக் கிடைக்கச் செய்யும்வரை அவை வெளியிடப்படாது.
இறக்குமதி செய்யப்பட்ட தயாரிப்புகளிலிருந்து விவரங்கள் விடுபட்டுள்ளன.தயாரிப்புப் பக்கத்தில் தயாரிப்பு விளக்கத்தைச் சரிபார்த்து, விடுபட்ட தகவல்களை நிரப்பவும்.
தயாரிப்பு மாறுபாடுகளை இறக்குமதி செய்ய முடியவில்லை.தயாரிப்பில் மாறுபாடு விருப்பம் விடுபட்டிருந்தால், அதை வெற்றிகரமாக இறக்குமதி செய்ய முடியாது. அதற்குப் பதிலாக நீங்கள் தயாரிப்பை கைமுறையாக உங்கள் Shopify ஸ்டோரில் சேர்க்கலாம்.

உங்கள் தயாரிப்புகளைச் சரிபார்த்து ஒழுங்கமைத்தல்

  1. தயாரிப்பு விளக்கம், படங்கள், மாறுபாடுகள், விலை, மெட்டா விளக்கம் உட்பட உங்கள் தயாரிப்பு விவரங்களைச் சரிபார்க்கவும்.
  2. உங்கள் தயாரிப்புகளை வகைகளாக ஒழுங்கமைக்க, தயாரிப்புச் சேகரிப்புகளை உருவாக்கவும், இது Shopify நிர்வாகியிலும் உங்கள் வெளிப்புற இணையதளத்திலும் உங்கள் தயாரிப்புகளைக் குழுவாக்க உதவுகிறது.
  3. உங்கள் பிசினஸில் சரக்கு இருப்பைக் கண்காணிக்க, தயாரிப்பின் சரக்கு இருப்பு மற்றும் இடமாற்றங்களைப் புரிந்துகொள்ளுங்கள். உங்கள் பிசினஸுக்கு ஏதேனும் செயலிகள் தேவையா என்பதைத் தீர்மானிக்க, கிடைக்கும் சரக்கு இருப்புச் செயலிகளைச் சரிபார்க்கவும்.

படி 6: (விருப்பத்திற்குரியது) உங்கள் மதிப்பாய்வுகளை Shopify-க்கு இறக்குமதி செய்தல்

eBay அதன் Seller Hub அறிக்கைகளில் உங்கள் கருத்துகளைச் சேர்ப்பதில்லை, எனவே அவற்றை ஒரு கோப்பாக ஏற்றுமதி செய்ய முடியாது. உங்கள் eBay கருத்துகளை உங்கள் Shopify ஸ்டோரில் சேர்க்க, eBay மதிப்புரைகளை இறக்குமதி செய்யும் மூன்றாம் தரப்புச் செயலியைப் பயன்படுத்தலாம். Shopify App Store இல் eBay மதிப்புரைகளை இறக்குமதி செய்வதற்கான செயலிகளை உலாவவும்.

ஒவ்வொரு பரிவர்த்தனைக்குப் பிறகும் விற்பனையாளரான உங்களுக்கு eBay கருத்து வழங்கப்படுகிறது. ஒரு செயலியை நிறுவுவதற்கு முன், இறக்குமதி செய்யப்பட்ட கருத்தை அது ஸ்டோர் மதிப்பாய்வுகளாகச் சேர்க்கிறதா அல்லது குறிப்பிட்ட தயாரிப்புகளுடன் பொருத்துகிறதா எனச் சரிபார்க்கவும்.

படி 7: (விருப்பத்திற்குரியது) eBay-லிருந்து உங்கள் ஆர்டர் வரலாற்றை ஏற்றுமதி செய்தல்

உங்கள் சமீபத்திய eBay ஆர்டர்களை CSV கோப்பிற்கு ஏற்றுமதி செய்யலாம். eBay Seller Hub அறிக்கைகளில் கடந்த 90 நாட்களின் ஆர்டர்கள் மட்டுமே இருக்கும். முந்தைய ஆர்டர் வரலாற்றைப் பெற, உங்கள் eBay தரவின் நகலைக் கோரவும்.

படிகள்:

  1. eBay Seller Hub-இல் Reports என்பதைக் கிளிக் செய்து, பின்னர் Downloads என்பதைக் கிளிக் செய்யவும்.
  2. Download report என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. Source என்பதற்கு, Orders என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. Type என்பதற்கு, Paid and shipped என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  5. 90 நாட்கள் வரையிலான தேதி வரம்பைத் தேர்ந்தெடுக்கவும்.
  6. Download என்பதைக் கிளிக் செய்யவும்.
  7. உங்கள் கணினியில் கோப்பை eBayOrdersDownload.csv எனச் சேமிக்கவும்.

படி 8: (விருப்பத்திற்குரியது) உங்கள் ஆர்டர் வரலாற்றை Shopify-க்கு இறக்குமதி செய்தல்

உங்கள் eBay ஆர்டர் வரலாற்றை Shopify-க்கு இறக்குமதி செய்ய, மூன்றாம் தரப்பு இடமாற்றச் செயலியைப் பயன்படுத்தலாம். Shopify App Store-இல் உங்கள் eBay ஸ்டோரை நகர்த்துவதற்கான செயலிகளை உலாவுக. பல eBay செயலிகள் eBay மற்றும் Shopify இடையே புதிய ஆர்டர்களை மட்டுமே ஒத்திசைக்கின்றன, எனவே ஒரு செயலியை நிறுவும் முன், அது முந்தைய ஆர்டர்களை இறக்குமதி செய்கிறதா எனச் சரிபார்க்கவும்.

படி 9: உங்கள் இணையதளத்தின் தோற்றத்தைச் சிறப்பாக்குதல்

நீங்கள் தொடங்குவதற்கு உதவும் வகையில், நீங்கள் Shopify-இல் கணக்கைத் திறக்கும்போதே உங்கள் நிர்வாகியின் தீம்கள் பக்கத்தில் ஒரு இயல்புநிலைத் தீம் அமைக்கப்பட்டிருக்கும். உங்கள் இணையதளம் நீங்கள் விரும்பியவாறு தோற்றமளிக்க, உங்கள் தீமைத் தனிப்பயனாக்க வேண்டும். உங்கள் ஆன்லைன் ஸ்டோருக்கு வேறொரு தீமைத் தனிப்பயனாக்க நீங்கள் விரும்பினால், அதை Shopify நிர்வாகியின் மூலம் நீங்கள் சேர்க்கலாம்.

உங்கள் ஆன்லைன் ஸ்டோருக்கு ஒரு தீமைச் சேர்க்க, பின்வரும் விருப்பங்களில் ஒன்றைத் தேர்வுசெய்யவும்:

நிர்வாகியிலிருந்து ஒரு இலவச தீமைச் சேர்த்தல்

இலவசத் தீம்கள் Shopify ஆல் உருவாக்கப்படுபவை. இலவசத் தீம்களுக்கான தனிப்பயனாக்கங்களுக்கு Shopify ஆதரவளிக்கிறது.

படிகள்:

டெஸ்க்டாப்
  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து ஆன்லைன் ஸ்டோர் என்பதற்குச் செல்லவும்.

  2. பக்கத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள தீம்களைக் கண்டறி பிரிவில், ஏதேனும் ஒரு தீமைக் கிளிக் செய்து அதன் அம்சங்களைப் பற்றிப் படிக்கவும் மற்றும் கிடைக்கும் தீம் பாணிகளைப் பிரிவியூ செய்யவும்.

  3. பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்யவும்:

  • பக்கத்தில் உள்ள ஒரு தீமைச் சேர்க்க விரும்பினால், அந்தத் தீமிற்கு அடுத்துள்ள சேர் என்பதைக் கிளிக் செய்யவும். உங்கள் நிர்வாகியின் தீம்கள் பக்கத்தில் அந்தத் தீம் சேர்க்கப்படும்.
  • நீங்கள் மேலும் இலவசத் தீம்களை மதிப்பாய்வு செய்ய விரும்பினால், Theme Store-க்குச் செல் என்பதைக் கிளிக் செய்து, பின்னர் Theme Store-லிருந்து தீமைச் சேர்ப்பதற்கான படிகளைப் பின்பற்றவும்.
மொபைல்
  1. Shopify செயலியில், Menu ஐகானைத் தட்டவும்.

  2. விற்பனைச் சேனல்கள் பிரிவில், ஆன்லைன் ஸ்டோர் என்பதைத் தட்டவும்.

  3. அனைத்து தீம்களையும் நிர்வகி என்பதைத் தட்டவும்.

  4. பக்கத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள தீம்களைக் கண்டறி பிரிவில், ஏதேனும் ஒரு தீமைத் தட்டி அதன் அம்சங்களைப் பற்றிப் படிக்கவும் மற்றும் கிடைக்கும் தீம் பாணிகளைப் பிரிவியூ செய்யவும்.

  5. பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்யவும்:

  • பக்கத்தில் உள்ள ஒரு தீமைச் சேர்க்க விரும்பினால், அந்தத் தீமிற்கு அடுத்துள்ள சேர் என்பதைத் தட்டவும். உங்கள் நிர்வாகியின் தீம்கள் பக்கத்தில் அந்தத் தீம் சேர்க்கப்படும்.
  • நீங்கள் மேலும் இலவசத் தீம்களை மதிப்பாய்வு செய்ய விரும்பினால், Theme Store-க்குச் செல் என்பதைத் தட்டி, பின்னர் Theme Store-லிருந்து தீமைச் சேர்ப்பதற்கான படிகளைப் பின்பற்றவும்.

Theme Store-லிருந்து ஒரு தீமைச் சேர்

கட்டணத் தீம்கள் மூன்றாம் தரப்பு வடிவமைப்பாளர்களால் உருவாக்கப்படுபவை. மூன்றாம் தரப்புத் தீம்களுக்கான தனிப்பயனாக்கங்களுக்கு அந்தத் தீமின் வடிவமைப்பாளர் ஆதரவளிக்கிறார்.

படிகள்:

  1. Shopify Theme Store-க்குச் சென்று ஒரு தீமைத் தேர்வுசெய்யவும். நீங்கள் இன்னமும் இலவசச் சோதனைக் காலத்தில்தான் இருக்கிறீர்கள் எனில், கட்டணங்களைத் தவிர்ப்பதற்கு இலவசத் தீமைத் தேர்வுசெய்யவும்.
  2. இலவசத் தீமைத் தேர்வுசெய்திருந்தால், தீமைச் சேர் அல்லது இந்தத் தீமிலிருந்து தொடங்கு என்பதைக் கிளிக் செய்யவும். கட்டணத் தீமைத் தேர்வுசெய்திருந்தால், அதை வாங்குவதற்கு வாங்கு என்பதைக் கிளிக் செய்யவும். கட்டணத் தீம்களுக்கான பணத்தைத் திரும்பப் பெற முடியாது. உங்கள் தேவைகளுக்கு அது பொருந்துகிறதா என்பதை உறுதிப்படுத்த, கட்டணத் தீமை வாங்குவதற்கு முன் அதை நீங்கள் சோதித்துப் பார்க்கலாம்.
  3. கட்டணத் தீம்களுக்கு, பேமெண்ட்டுக்கு ஒப்புதலளிக்க ஒப்புதலளி என்பதைக் கிளிக் செய்யவும். உங்கள் நிர்வாகியின் தீம்கள் பக்கத்தில் அந்தத் தீம் சேர்க்கப்படும்.

உங்கள் ஸ்டோரில் கட்டணத் தீமைச் சோதித்துப் பாருங்கள்

தீமை வாங்க முடிவு செய்யும் முன்பாக, உங்களின் தயாரிப்புகள், பிராண்டு நிறங்கள் மற்றும் பாணியோடு அது எப்படித் தோற்றமளிக்கிறது என்பதைப் பிரிவியூ செய்ய ஒரு கட்டணத் தீமை நீங்கள் சோதித்துப் பார்க்கலாம். நீங்கள் தீமைப் பிரிவியூ செய்யும்போது, தீம் எடிட்டரைப் பயன்படுத்தித் தனிப்பயனாக்கங்களைச் செய்ய முடியும். நீங்கள் வாங்கும் போது, செய்த அனைத்து மாற்றங்களும் சேமிக்கப்படும். வாங்குவதற்கு முன், 19 கட்டணத் தீம்கள் வரை பிரிவியூ செய்து வெவ்வேறு தீம்களை ஒப்பிட்டுப் பார்க்க இது அனுமதிக்கிறது.

படிகள்:

  1. Shopify Theme Store-க்குச் சென்று ஒரு கட்டணத் தீமைத் தேர்வுசெய்யவும்.
  2. தீமைச் சோதித்துப் பார் என்பதைக் கிளிக் செய்யவும். உங்களின் ஆன்லைன் ஸ்டோருக்கான தீமின் பிரிவியூ ஏற்றப்படும்.
  3. பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்யவும்:
    • தீமைப் பிரிவியூ செய்வதை நிறுத்த, பிரிவியூவை மூடு என்பதைக் கிளிக் செய்யவும்.
    • தீமை வாங்க, வாங்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
    • தீம் எடிட்டரைப் பயன்படுத்தித் தீம் அமைப்புகளை மாற்றியமைக்க, தீமைத் திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.

நீங்கள் தீமை வாங்க வேண்டாம் எனத் தேர்வுசெய்தாலும், கட்டணத் தீம் இன்னமும் உங்கள் நிர்வாகியின் தீம்கள் பக்கத்திலேயே சேர்க்கப்பட்டிருக்கும். நீங்கள் சோதித்துப் பார்க்கும் கட்டணத் தீம்களில் தீம் சோதனை என்ற லேபிள் இருக்கும்.

படி 10: உங்கள் ஷிப்பிங்கை அமைத்தல்

உங்கள் ஸ்டோரை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு, ஷிப்பிங் கட்டணங்கள் மற்றும் ஷிப்பிங் முறைகளைச் சரியாக அமைக்க வேண்டும் — அதிகக் கட்டணம் விதித்ததற்காக வாடிக்கையாளர்களுக்குப் பணத்தைத் திரும்பப்பெறுதல் செய்யவோ, அல்லது அவர்களின் ஆர்டரை ஷிப்பிங் செய்யப் போதுமான கட்டணம் வசூலிக்காததால் கூடுதலாகப் பணம் செலுத்தும்படி வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவோ நீங்கள் விரும்ப மாட்டீர்கள்.

ஆர்டர் ஷிப்பிங் மற்றும் நிறைவேற்றம் குறித்த கூடுதல் தகவல்களுக்கு, இங்கே கிளிக் செய்யவும்.

படிகள்:

  1. உங்கள் இருப்பிடத்தின் அடிப்படையில் துல்லியமான ஷிப்பிங் கட்டணங்களைப் பெற, உங்களின் ஸ்டோர் முகவரியை மதிப்பாய்வு செய்யவும். வேறு இடங்களிலிருந்து நீங்கள் ஷிப்பிங் செய்தால், அவற்றை இடங்களாகச் சேர்க்கவும்.
  2. பல்வேறு பிராந்தியங்கள், மாநிலங்கள் மற்றும் நாடுகளுக்கு ஷிப்பிங் செய்ய அனுமதிக்க, ஷிப்பிங் மண்டலங்களை உருவாக்கவும்.
  3. நீங்கள் கேரியர் கணக்கிடும் ஷிப்பிங் கட்டணங்களைப் பயன்படுத்தினால், உங்கள் ஷிப்மென்ட் பரிமாணங்களை உள்ளமைக்கவும். பல கேரியர்கள், ஷிப்பிங் கட்டணங்களைக் கணக்கிடுவதற்கு அளவீட்டு எடையைப் (ஒரு பேக்கேஜின் உயரம், எடை மற்றும் ஆழம்) பயன்படுத்துகின்றனர்.
  4. நீங்கள் உருவாக்கும் ஷிப்பிங் மண்டலங்களுக்கு ஷிப்பிங் கட்டணங்களை அமைக்கவும்.
  5. உங்கள் வணிகத்திற்கு ஏற்ற ஒரு ஷிப்பிங் உத்தியைத் தேர்வுசெய்யவும். ஒரு முடிவை எடுப்பதற்கு முன், உங்கள் தேவைகளுக்குப் பொருந்துவதைக் கண்டறிய சில விருப்பங்களை உற்றுநோக்குவது உங்களுக்கு உதவியாக இருக்கலாம்.
  6. உங்கள் ஆர்டர்களை எவ்வாறு நிறைவேற்றுவது என்பதை முடிவுசெய்யவும். ஆர்டர்களை நீங்களே நிறைவேற்றி ஷிப்பிங் செய்யலாம் அல்லது உங்களுக்காக ஆர்டர்களை ஷிப்பிங் செய்கிற ஒரு நிறைவேற்றச் சேவையை நீங்கள் பயன்படுத்தலாம்.

படி 11: உங்கள் வரிகளை உள்ளமைத்தல்

விற்பனை வரி விதிப்பது உங்கள் வணிகத்தை நடத்துவதில் ஒரு முக்கியமான பகுதியாகும். உங்கள் இருப்பிடத்தைப் பொறுத்து, உங்கள் தயாரிப்புகளுக்குப் பொருந்தக்கூடிய விற்பனை வரி குறித்த வெவ்வேறு விதிகளும் விதிமுறைகளும் உள்ளன. உங்கள் ஸ்டோர் அந்த விதிகளைப் பூர்த்திசெய்கிறதா என்பதை உறுதிப்படுத்த, Shopify-இன் வரி அமைவுச் செயல்முறையைப் புரிந்துகொள்ளச் சிறிது நேரம் ஒதுக்குங்கள்.

உங்களின் ஷிப்பிங் இலக்குகளின் அடிப்படையில் வரி விதித்தல்

நீங்கள் உங்களின் ஷிப்பிங்கை அமைக்கும் போது, வாடிக்கையாளரின் மாகாண, மாநில அல்லது பிராந்திய வரி விதிமுறைகளின் அடிப்படையில் உங்கள் தயாரிப்புகளுக்கு ஷிப்பிங் வரிகளைப் பயன்படுத்தலாம். இவை Shopify ஆல் தானாகவே கணக்கிடப்படுகின்றன.

பிரத்தியேகமான வரிக் கட்டுப்பாடுகளைக் கொண்ட ஒரு பிராந்தியத்தின் அடிப்படையிலோ அல்லது தயாரிப்புகளின் ஒரு குறிப்பிட்ட சேகரிப்பின் அடிப்படையிலோ நீங்கள் வரிகளை மேனுவலாகச் சரிசெய்ய வேண்டும் எனில், அதை வரி ஓவர்ரைடு மூலம் நீங்கள் செய்யலாம்.

உங்கள் வரிகளைத் தடமறிதல்

உங்கள் தயாரிப்புகளுக்கான வரி அமைப்புகளை நீங்கள் உள்ளமைக்கும் போது, ஆண்டு முழுவதும் உங்கள் வரிகளை எவ்வாறு தடமறிவது என்பதைப் பரிசீலிக்க வேண்டும்.

உங்கள் வரிகளைத் தடமறிய எந்தச் சிஸ்டத்தைப் பயன்படுத்துவது என்று உங்களுக்கு உறுதியாகத் தெரியவில்லை எனில், Shopify App Store-இல் உள்ள சில கணக்கியல் செயலிகளை மதிப்பாய்வு செய்யலாம்.

படி 12: கட்டண வழங்குநரை அமைத்தல்

வாடிக்கையாளர்கள் உங்களுக்குப் பணம் செலுத்துவதை உறுதிசெய்ய, நீங்கள் ஒரு கட்டண வழங்குநரை அமைக்க வேண்டும். பாதுகாப்பான முறையில் கிரெடிட் கார்டு பேமெண்ட்டுகளை ஏற்க ஒரு கட்டண வழங்குநர் உங்களை அனுமதிக்கிறார். Shopify Payments குறிப்பிட்ட சில நாடுகளில் கிடைக்கிறது, அத்துடன் ஆதரிக்கப்படுகிற பல்வேறு மூன்றாம் தரப்புக் கட்டண வழங்குநர்களும் கிடைக்கின்றனர்.

கட்டண வழங்குநரை அமைக்கவும்

  1. Shopify அல்லது ஆதரிக்கப்படும் மூன்றாம் தரப்பிலிருந்து கட்டண வழங்குநரைத் தேர்ந்தெடுக்கவும்.
  2. உங்கள் Shopify நிர்வாகியில் Shopify Payments-ஐ அல்லது மூன்றாம் தரப்பு கட்டண வழங்குநரைச் செயல்படுத்தவும்.
  3. வாடிக்கையாளர்கள் உங்கள் ஸ்டோரிலிருந்து பொருள்களை வாங்கும்போது, பேமெண்ட்களை எவ்வாறு பெறவும் அங்கீகரிக்கவும் விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்.

கட்டண வழங்குநர்களை அமைத்த பிறகு, வாடிக்கையாளரின் ஆர்டர்களைச் செயலாக்குவதற்கு உங்கள் செக்அவுட் பக்கத்தை உள்ளமைக்க வேண்டும்.

உங்கள் செக்அவுட்டை அமைக்கவும்

  1. உங்கள் ஆர்டர் நிறைவேற்றத்தையும் உங்கள் கட்டண அங்கீகாரத்தையும் அமைக்கவும்.
  2. வாடிக்கையாளர்கள் செக்அவுட்டை முடிப்பதற்கு முன்பாக உங்கள் கொள்கைகளைப் பார்ப்பதற்கு, உங்கள் ஸ்டோரின் கொள்கைகளைச் சேர்க்கவும்.
  3. நிகழ்வுகள் மற்றும் விளம்பரங்கள் குறித்து வாடிக்கையாளர்களுக்குத் தகவலளிக்க மின்னஞ்சல் முகவரிகளைச் சேகரிக்க வேண்டுமா என்பதை முடிவுசெய்ய, உங்கள் செக்அவுட்டின் வாடிக்கையாளர் தகவல் அமைப்புகளைத் திருத்தவும்.

படி 13: சில சோதனை ஆர்டர்களைச் செய்யவும்

கட்டண அமைப்புகளை இப்போது நீங்கள் உள்ளமைத்துவிட்டதால், அனைத்தும் சரியாக வேலை செய்கிறதா என்பதை உறுதிப்படுத்த சில பரிவர்த்தனைகளைச் செய்து பார்க்க வேண்டும். வாடிக்கையாளர்கள் உங்கள் தயாரிப்புகளை வாங்கும்போது, அவர்கள் கடந்து செல்லும் செயல்முறையைப் புரிந்துகொள்ள, சோதனை ஆர்டரைச் செய்வது உதவும். வாடிக்கையாளர்கள் செய்யும் அனைத்து ஆர்டர்களையும் உங்கள் Shopify நிர்வாகியில் உள்ள ஆர்டர்கள் பக்கத்திலிருந்து நீங்கள் அணுகலாம்.

சில வெவ்வேறு வகையான பரிவர்த்தனைகளுக்கு நீங்கள் சோதனை ஆர்டர்களைச் செய்துபார்க்கலாம்:

நீங்கள் ஆர்டர்களை உருவாக்கும்போதும், பணத்தைத் திரும்பப்பெறும்போதும், அவற்றை நிறைவேற்றும்போதும், ஒவ்வொரு செயலுக்கும் வாடிக்கையாளர்கள் பெறும் மின்னஞ்சல்களைக் காண்பீர்கள். உங்கள் Shopify நிர்வாகியில் உள்ள அறிவிப்புகள் பக்கத்திலிருந்து இந்த மின்னஞ்சல்களுக்கான வார்ப்புருக்களைத் திருத்தலாம்.

படி 14: உங்கள் ஸ்டோரில் பணியாளர்களைச் சேர்க்கவும்

ஸ்டோரை நிர்வகிக்கவும் நடத்தவும் உதவும் பணியாளர்கள் உங்களிடம் இருந்தால், உங்கள் Shopify ஸ்டோரில் அவர்களைச் சேர்க்கலாம். ஒவ்வொரு பணியாளருக்கும் தனிப்பட்ட உள்நுழைவுச் சான்றுகள் இருக்கும். உங்கள் ஸ்டோரின் குறிப்பிட்ட பகுதிகளுக்கான அணுகலைக் கட்டுப்படுத்தவும், முக்கியமான தகவல்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும் ஒவ்வொரு பணியாளருக்கும் நீங்கள் அனுமதிகளை அமைக்கலாம்.

பணியாளர்களை நிர்வகிப்பது பற்றி மேலும் அறிக.

படி 15: உங்கள் டொமைனை அமைக்கவும்

உங்கள் Shopify ஸ்டோரை அமைக்கும்போது, புதிய டொமைனை வாங்கலாம் அல்லது ஏற்கனவே உள்ள உங்கள் ஸ்டோருடன் தொடர்புடைய டொமைனைப் புதிய Shopify கணக்கிற்கு இடமாற்றலாம்.

புதிய டொமைனைப் பெறவும்

Shopify-யிலிருந்து நேரடியாகப் புதிய டொமைனை வாங்கலாம்.

படிகள்:

  1. Shopify மூலம் உங்கள் டொமைனை வாங்கவும்.
  2. உலாவி, தேடல் முடிவுகள் மற்றும் சமூக ஊடகங்களில் வாடிக்கையாளர்களுக்குக் காண்பிக்கப்படும் டொமைனாக அதை மாற்ற, உங்கள் Shopify டொமைனை முதன்மை டொமைனாக அமைக்கவும்.
  3. தனிப்பயன் டொமைன் மின்னஞ்சல் முகவரிக்கு வாடிக்கையாளர்கள் அனுப்பும் மின்னஞ்சல் செய்திகளை உங்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்குத் திசைதிருப்ப, மின்னஞ்சல் பகிர்தலை அமைக்கவும்.

ஏற்கனவே உள்ள டொமைனை Shopify உடன் இணைக்கவும் அல்லது இடமாற்றவும்

ஏற்கனவே உங்களிடம் ஒரு டொமைன் இருந்தால், Shopify ஸ்டோருக்கு உங்கள் டொமைனைக் காட்ட இந்தப் படிகளைப் பின்பற்றவும்.

ஏற்கனவே உள்ள உங்கள் டொமைனை நீங்கள் பயன்படுத்தலாம், ஆனால் தனிப்பட்ட பக்கங்களுக்கான Shopify-இன் இணைப்பு அமைப்பு முந்தைய சேவையிலிருந்து வேறுபட்டிருக்கலாம், அதாவது குறிப்பிட்ட பக்கங்களுக்கான பழைய இணைப்புகள் வாடிக்கையாளர்களுக்கு ஏற்றப்படாமல் போகலாம். எடுத்துக்காட்டாக, ஷிப்பிங் கொள்கை குறித்த உங்கள் பழைய பக்கத்தில் example.com/policies/shipping-policy என்ற URL இருந்திருக்கலாம், ஆனால் Shopify-இல் அந்தப் பக்கம் இப்போது example.com/pages/shipping-policy என்பதாக இருக்கலாம்.

பிழைப் பக்கங்களுக்கு வாடிக்கையாளர்கள் செல்வதைத் தவிர்க்க உதவ, உங்கள் டொமைனை இடமாற்றுவதற்கு முன்பு, உங்கள் வாடிக்கையாளர்கள் புக்மார்க் செய்திருக்கக்கூடிய ஏதேனும் பக்கங்களுக்கு அல்லது மூன்றாம் தரப்பு மூலங்களின் இணைப்புகளுக்கு முன்பே URL திசைதிருப்பல்களை அமைக்கலாம். இதன்மூலம், டொமைனை இடமாற்றிய பிறகு பழைய இணைப்பிற்கு அவர்கள் சென்றால், பிழைப் பக்கத்தைப் பெறுவதற்குப் பதிலாகப் புதிய இணைப்பிற்கு அவர்கள் திசைதிருப்பப்படுவார்கள்.