Squarespace-இல் இருந்து இடமாற்றுதல்
Squarespace-இல் இருந்து Shopify-க்கு உங்கள் ஸ்டோரை எவ்வாறு இடமாற்றுவது என்பதை இந்த வழிகாட்டி விவரிக்கிறது. இதைத் தொடக்கப் புள்ளியாகவும், முக்கியமான அமைவுப் பணிகள் எதையும் நீங்கள் மறக்கவில்லை என்பதை உறுதிசெய்யும் குறிப்பீடாகவும் பயன்படுத்தலாம்.
இந்தப் பக்கத்தில்
- படி 1: உங்கள் Squarespace ஸ்டோரின் உள்ளடக்கம் மற்றும் தரவை Shopify-க்கு எப்படி இடமாற்றுவது என முடிவு செய்தல்
- படி 2: Squarespace-இல் இருந்து உங்கள் தயாரிப்புத் தரவை ஏற்றுமதி செய்தல்
- படி 3: உங்கள் தயாரிப்பு ஏற்றுமதித் தரவைத் திருத்துதல்
- படி 4: உங்கள் தயாரிப்புத் தரவை இறக்குமதி செய்தல்
- படி 5: இறக்குமதிக்குப் பிறகு, உங்கள் தயாரிப்புகளைச் சரிபார்த்து ஒழுங்கமைத்தல்
- படி 6: (விரும்பினால்) Squarespace-இல் இருந்து உங்கள் வாடிக்கையாளர் தரவை ஏற்றுமதி செய்தல்
- படி 7: (விரும்பினால்) Squarespace-இல் இருந்து உங்கள் வாடிக்கையாளர் தரவைத் திருத்துதல்
- படி 8: (விரும்பினால்) Squarespace-இல் இருந்து உங்கள் வாடிக்கையாளர் தரவை இறக்குமதி செய்தல்
- படி 9: (விரும்பினால்) Shopify-க்கு உங்கள் மதிப்பாய்வுகளை இறக்குமதி செய்தல்
- படி 10: (விரும்பினால்) Squarespace-இல் இருந்து உங்கள் ஆர்டர் வரலாற்றை ஏற்றுமதி செய்தல்
- படி 11: (விரும்பினால்) Shopify-க்கு உங்கள் ஆர்டர் வரலாற்றை இறக்குமதி செய்தல்
- படி 12: உங்கள் இணையதளத்தின் தோற்றத்தைச் சிறப்பாக்குதல்
- படி 13: உங்கள் ஷிப்பிங்கை அமைத்தல்
- படி 14: உங்கள் வரிகளை உள்ளமைத்தல்
- படி 15: கட்டண வழங்குநரை அமைத்தல்
- படி 16: சில சோதனை ஆர்டர்களைச் செய்தல்
- படி 17: உங்கள் ஸ்டோரில் பணியாளர்களைச் சேர்த்தல்
- படி 18: உங்கள் டொமைனை அமைத்தல்
படி 1: உங்கள் Squarespace ஸ்டோரின் உள்ளடக்கம் மற்றும் தரவை Shopify-க்கு எப்படி இடமாற்றுவது என முடிவு செய்தல்
Shopify-இல் உங்கள் ஸ்டோரை உருவாக்கிய பிறகு, உங்களின் தற்போதைய Squarespace ஸ்டோரை மதிப்பாய்வு செய்து, எந்தத் தரவையும் உள்ளடக்கத்தையும் Shopify-க்கு நகர்த்த வேண்டும் என்பதை முடிவு செய்யவும். இடமாற்றம் என்பது பழைய, குறைவான செயல்திறன் கொண்ட உள்ளடக்கத்தை அகற்றுவதற்கும், உங்கள் தளத்திற்கும் வணிகத்திற்கும் புதிய தோற்றத்தைக் கொடுப்பதற்குமான சிறந்த நேரமாக இருக்கலாம். Squarespace-இல் இருந்து பின்வரும் தரவை நீங்கள் இடமாற்ற விரும்பலாம்:
- தயாரிப்புகள்
- வாடிக்கையாளர்கள்
- முந்தைய ஆர்டர்கள், அதாவது ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட ஆர்டர்கள்
- மதிப்பாய்வுகள்
- வலைப்பதிவு இடுகைகள் மற்றும் பக்கங்கள்
Squarespace உங்களின் அனைத்துத் தரவையும் ஏற்றுமதி செய்யாது. வாடிக்கையாளர் மதிப்பாய்வுகளை ஏற்றுமதி செய்ய முடியாது. வலைப்பதிவு இடுகைகள் மற்றும் பக்கங்களை WordPress .xml கோப்பாக மட்டுமே ஏற்றுமதி செய்ய முடியும், மேலும் அந்த ஏற்றுமதியில் ஒரே ஒரு வலைப்பதிவுப் பக்கம் மட்டுமே சேர்க்கப்பட்டிருக்கும். இந்தக் கோப்பை உங்களால் Shopify இல் இறக்குமதி செய்ய முடியாது, எனவே உங்கள் வலைப்பதிவு இடுகைகள் மற்றும் பக்கங்களை உங்கள் Shopify ஸ்டோரில் மேனுவலாக நகலெடுக்கத் திட்டமிடுங்கள். Squarespace ஆவணத்தில் Squarespace எவற்றை ஏற்றுமதி செய்கிறது என்பது குறித்து மேலும் அறிக.
அடுத்து, ஒவ்வொரு வகையான உள்ளடக்கத்தையும் இடமாற்றுவதற்கான ஒரு முறையைத் தேர்ந்தெடுக்கவும். குறைந்த தொழில்நுட்பச் சிக்கலிலிருந்து அதிக தொழில்நுட்பச் சிக்கல் வரையிலான பின்வரும் விருப்பங்களை மதிப்பாய்வு செய்யவும்:
| இடமாற்ற முறை | விளக்கம் |
|---|---|
| மேனுவலாகத் தரவை நகலெடுத்து ஒட்டுதல் | உங்கள் தற்போதைய Squarespace ஸ்டோரிலிருந்து உள்ளடக்கத்தை நகலெடுத்து, உங்களின் புதிய Shopify ஸ்டோரில் ஒட்டவும். |
| CSV இறக்குமதி | உங்கள் தரவை CSV கோப்புகளாக ஏற்றுமதி செய்து, அவற்றை உங்கள் புதிய Shopify ஸ்டோரில் இறக்குமதி செய்யவும் (சில தரவுகளை இந்த வழியில் இடமாற்ற முடியாது). |
| மூன்றாம் தரப்பு இடமாற்றச் செயலிகள் | Shopify App Store இல் உள்ள மூன்றாம் தரப்பு இடமாற்றச் செயலிகளைப் பயன்படுத்தவும். |
| இடமாற்ற நிபுணர் | உங்கள் இடமாற்றத்தை நிர்வகித்து முடிக்க, Shopify பார்ட்னர் ஒருவரைப் பணியமர்த்தவும். |
இந்த வழிகாட்டி, சாத்தியமுள்ள இடங்களில் CSV கோப்புகளைப் பயன்படுத்தப் பரிந்துரைக்கிறது, ஆனால் CSV சாத்தியமில்லாத போது பிற விருப்பங்களையும் குறிப்பிடுகிறது.
படி 2: Squarespace இலிருந்து உங்கள் தயாரிப்புத் தரவை ஏற்றுமதி செய்தல்
- உங்கள் Squarespace கணக்கிலிருந்து, Products & Services (தயாரிப்புகள் & சேவைகள்) பேனலைத் திறந்து, பின்னர் Products (தயாரிப்புகள்) என்பதைக் கிளிக் செய்யவும்.
- உங்களுக்கு வேண்டிய தயாரிப்புகளை ஏற்றுமதி செய்யவும்:
- உங்கள் எல்லாத் தயாரிப்புகளையும் ஏற்றுமதி செய்ய, Export all (அனைத்தையும் ஏற்றுமதி செய்) என்பதைக் கிளிக் செய்யவும்.
- உங்களின் சில தயாரிப்புகளை மட்டும் ஏற்றுமதி செய்ய, தயாரிப்புகள் பேனலில் தயாரிப்புகளைத் தேர்ந்தெடுத்து, ஏற்றுமதி செய் என்பதைக் கிளிக் செய்யவும்.
- கோப்பிற்கு
SquarespaceProductDownload.csvஎனப் பெயரிட்டு, பின்னர் உங்கள் கணினியில் கோப்பைச் சேமிக்கவும்.
Squarespace 10,000 பௌதீக மற்றும் சேவைத் தயாரிப்புகள் வரை ஏற்றுமதி செய்யும். சிறப்புப் படங்கள், மாறுபாட்டுப் படங்கள், பட மாற்று உரை மற்றும் வாடிக்கையாளர் மதிப்பாய்வுகள் ஏற்றுமதியில் சேர்க்கப்படாது, எனவே நீங்கள் இறக்குமதி செய்த பிறகு அவற்றை Shopify இல் உள்ள உங்கள் தயாரிப்புகளில் சேர்க்க வேண்டும். Squarespace ஆவணத்தில் Squarespace இலிருந்து தயாரிப்புகளை ஏற்றுமதி செய்வது குறித்து மேலும் அறிக.
படி 3: உங்கள் தயாரிப்பு ஏற்றுமதித் தரவைத் திருத்துதல்
உங்கள் CSV கோப்பை Shopify இல் இறக்குமதி செய்வதற்கு முன் அதைத் திருத்த வேண்டும்.
நீங்கள் தயாரிப்பு CSV வார்ப்புருவைப் பதிவிறக்கிப் பார்க்கலாம், பின்னர் அந்த வடிவமைப்புடன் பொருந்தும்படி உங்கள் SquarespaceProductDownload.csv கோப்பைத் திருத்தலாம். உங்கள் CSV கோப்பின் மற்றொரு தாவலில் நீங்கள் வேலை செய்ய விரும்பலாம். மற்ற தாவலில், நீங்கள் நெடுவரிசைத் தலைப்புகளை நகலெடுக்கலாம், பின்னர் உங்கள் Squarespace இறக்குமதித் தரவை Shopify தயாரிப்பு CSV வார்ப்புருவில் நகலெடுத்து ஒட்டலாம். அதை இறக்குமதி செய்வதற்கு முன், உங்கள் CSV கோப்பில் உங்கள் ஸ்டோரின் Shopify தயாரிப்பு CSV வார்ப்புருத் தரவு மட்டுமே இருப்பதை உறுதிசெய்யவும்.
நீங்கள் மாதிரிக் கோப்பைப் பயன்படுத்தினால், பின்வரும் விவரங்களை மதிப்பாய்வு செய்வதை உறுதிசெய்யவும்:
- மாதிரிக் கோப்பில் மூன்று எடுத்துக்காட்டுத் தயாரிப்புகள் உள்ளன, அவற்றில் இரண்டு சில மாறுபாடுகளைக் கொண்டுள்ளன. உங்கள் இறக்குமதிக் கோப்பில் அநேகமாக அதிக தயாரிப்புகளும் மாறுபாடுகளும் இருக்கலாம். உங்களின் சொந்த இறக்குமதிக் கோப்பை உருவாக்க மாதிரிக் கோப்பைப் பயன்படுத்தினால், அனைத்து எடுத்துக்காட்டுத் தயாரிப்புகளையும் அகற்றுவதை உறுதிசெய்யவும்.
- மாதிரிக் கோப்பில் Inventory quantity நெடுவரிசை உள்ளது, இது ஒற்றை இடத்தைக் கொண்டுள்ள ஸ்டோர்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும். நீங்கள் பல இடங்களைப் பயன்படுத்தி, சரக்கு இருப்பு அளவுகளை இறக்குமதி அல்லது ஏற்றுமதி செய்ய விரும்பினால், சரக்கு இருப்பு CSV கோப்பைப் பயன்படுத்தவும்.
- மாதிரிக் கோப்பில் சர்வதேச CSV நெடுவரிசைகள் உள்ளன, ஆனால் சர்வதேச அளவில் விற்கப்படும்போது எடுத்துக்காட்டுத் தயாரிப்புகளுக்குத் தனித்துவமான விலை நிர்ணயம் ஏதும் இல்லாததால் அவை காலியாக விடப்பட்டுள்ளன.
உங்கள் CSV கோப்புகளின் வடிவமைக்கப்பட்ட பதிப்பைத் திருத்த, நீங்கள் Google Sheets ஐப் பயன்படுத்தலாம். Microsoft Excel அல்லது Numbers போன்ற பிற பிரபலமான விரிதாள் செயலிகளைப் பயன்படுத்தியும் நீங்கள் கோப்பைத் திருத்தலாம்.
Squarespace இன் தரவு வகையிலிருந்து Shopify இன் தரவு வகைக்கு மேப் செய்யும் நெடுவரிசைகளுக்குப் பின்வரும் அட்டவணையை மதிப்பாய்வு செய்யவும். அட்டவணையில் குறிப்பிடப்படாத வேறு ஏதேனும் நெடுவரிசைகள் இருந்தால் அவற்றை உங்கள் Squarespace ஏற்றுமதியிலிருந்து அகற்றவும். உங்கள் Squarespace தயாரிப்பு ஏற்றுமதியில் இல்லாத சில நெடுவரிசைகள் Shopify இன் தயாரிப்பு CSV இல் கிடைக்கின்றன. அந்த நெடுவரிசைகள் கீழே பட்டியலிடப்படவில்லை, ஆனால் அவற்றையும் மதிப்பாய்வு செய்ய வேண்டியிருக்கலாம். தயாரிப்பு CSV கோப்பில் ஒவ்வொரு நெடுவரிசைக்கும் என்ன தேவை என்பது குறித்து மேலும் அறிக.
| Squarespace தரவு வகை | Shopify தரவு வகை | செயல் |
|---|---|---|
| Product URL | URL handle | Shopify தரவு வகைக்கு நெடுவரிசையின் பெயரை மாற்றவும். URL handle என்பதில் எழுத்துகள், கோடுகள் மற்றும் எண்கள் இருக்கலாம், ஆனால் இடைவெளிகள், உச்சரிப்புகள் அல்லது முற்றுப்புள்ளிகள் உள்ளிட்ட பிற எழுத்துருக்கள் இருக்கக்கூடாது. URL handles என்பவை ஒவ்வொரு தயாரிப்புக்குமான URL இல் பயன்படுத்தப்படும். மாறுபாடுகள் உள்ள தயாரிப்பின் முதல் வரிசையில் மட்டுமே தயாரிப்பு URL ஐ Squarespace சேர்க்கும். Shopify அந்த வரிசைகளை ஒரே தயாரிப்பாக இறக்குமதி செய்யும் வகையில், அந்தத் தயாரிப்பின் ஒவ்வொரு மாறுபாட்டு வரிசையிலும் மதிப்பை நகலெடுக்கவும். |
| Title | Title | எந்தச் செயலும் தேவையில்லை. |
| Description | Description | எந்தச் செயலும் தேவையில்லை. |
| Default Vendor Name | Vendor | நெடுவரிசையின் பெயரை Shopify இன் தரவு வகைக்கு மாற்றவும். |
| Categories | Type | Shopify தரவு வகைக்கு நெடுவரிசையின் பெயரை மாற்றவும். Squarespace வகைகளை /clothing/blousesஎன்பது போன்ற URL பாதைகளாக ஏற்றுமதி செய்கிறது. ஒவ்வொரு பாதையையும் Blousesஎன்பது போன்ற ஒரு தயாரிப்பு வகையைக் கொண்டு மாற்றவும். Squarespace இல் இருந்த வகைகளைப்போல் உங்கள் தயாரிப்புகளைக் குழுவாக்க, உங்கள் தயாரிப்புகளை இறக்குமதி செய்த பிறகு சேகரிப்புகளை உருவாக்கவும். |
| Tags | Tags | எந்தச் செயலும் தேவையில்லை. |
| Option Name 1 | Option1 name | நெடுவரிசையின் பெயரை Shopify இன் தரவு வகைக்கு மாற்றவும். |
| Option Value 1 | Option1 value | நெடுவரிசையின் பெயரை Shopify இன் தரவு வகைக்கு மாற்றவும். |
| Option Name 2 | Option2 name | நெடுவரிசையின் பெயரை Shopify இன் தரவு வகைக்கு மாற்றவும். |
| Option Value 2 | Option2 value | நெடுவரிசையின் பெயரை Shopify இன் தரவு வகைக்கு மாற்றவும். |
| Option Name 3 | Option3 name | நெடுவரிசையின் பெயரை Shopify இன் தரவு வகைக்கு மாற்றவும். |
| Option Value 3 | Option3 value | நெடுவரிசையின் பெயரை Shopify இன் தரவு வகைக்கு மாற்றவும். |
| SKU | SKU | எந்தச் செயலும் தேவையில்லை. |
| Weight | Weight value (grams) | Shopify தரவு வகைக்கு நெடுவரிசையின் பெயரை மாற்றவும். Squarespace உங்கள் ஸ்டோரின் அளவீட்டு அலகில் எடையை ஏற்றுமதி செய்யும். உங்கள் Squarespace ஸ்டோர் பவுண்டுகளைப் பயன்படுத்தினால், மதிப்புகளை 453.6 ஆல் பெருக்கவும். உங்கள் Squarespace ஸ்டோர் கிலோகிராம்களைப் பயன்படுத்தினால், மதிப்புகளை 1,000 ஆல் பெருக்கவும். |
| Price | Price | தயாரிப்பு விற்பனையில் இருந்தால் ஒழிய, எந்தச் செயலும் தேவையில்லை. |
| Sale Price மற்றும் On Sale | Compare-at price | எந்தெந்த வரிசைகளில் On Sale ஆனது Yesஆக உள்ளதோ, அங்கெல்லாம் Price மதிப்பை Compare-at priceஎன்பதற்கும், பின்னர் Sale Price மதிப்பை Priceஎன்பதையும் நகர்த்தவும். அதன் பிறகு Sale Price மற்றும் On Sale நெடுவரிசைகளை அகற்றவும். |
| Stock | Inventory quantity | நெடுவரிசையின் பெயரை Shopify இன் தரவு வகைக்கு மாற்றவும். எண் அல்லாத எழுத்துகள் ஏதேனும் இருந்தால் அவற்றை அகற்றவும். |
| Visible | Published on online store | Shopify தரவு வகைக்கு நெடுவரிசையின் பெயரை மாற்றவும். Yes என்பதை trueஎன்பதைக் கொண்டு மாற்றவும், மேலும் No என்பதை false. |
| Hosted Image URLs | Product image URL | Shopify தரவு வகைக்கு நெடுவரிசையின் பெயரை மாற்றவும். ஒவ்வொரு வரிசையிலும் ஒரு பட URL இருக்கலாம். ஒரு தயாரிப்பு ஒன்றுக்கு மேற்பட்ட படங்களைக் கொண்டிருந்தால், ஒவ்வொரு கூடுதல் படத்திற்கும் ஒரு வரிசையைச் சேர்க்கவும். |
படி 4: உங்கள் தயாரிப்புத் தரவை இறக்குமதி செய்தல்
உங்களின் SquarespaceProductDownload.csv கோப்பைப் பெற்ற பிறகும், தேவையான திருத்தங்களை முடித்த பிறகும், உங்களின் Squarespace தயாரிப்புகளை Shopify இல் இறக்குமதி செய்யலாம்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, தயாரிப்புகள் என்பதற்குச் செல்லவும்.
இறக்குமதி என்பதைக் கிளிக் செய்யவும்.
கோப்பைச் சேர் என்பதைக் கிளிக் செய்து,
SquarespaceProductDownload.csvஎன்பதைத் தேர்ந்தெடுக்கவும்.அனைத்து விற்பனைச் சேனல்களிலும் புதிய தயாரிப்புகளை வெளியிடு என்பதைத் தேர்வுநீக்கிவிட்டு, பதிவேற்றி முன்பார்வையிடு என்பதைக் கிளிக் செய்யவும்.
இறக்குமதி பற்றிய விவரங்களை மதிப்பாய்வு செய்து, பின்னர் தயாரிப்புகளை இறக்குமதி செய் என்பதைக் கிளிக் செய்யவும். உங்கள் CSV கோப்பு பதிவேற்றப்பட்டதும், உங்களின் Shopify ஸ்டோரை அமைக்கப் பயன்படுத்திய மின்னஞ்சல் கணக்கிற்கு Shopify-யிலிருந்து உறுதிப்படுத்தல் மின்னஞ்சலைப் பெறுவீர்கள். பொதுவான சிக்கல்களுக்கான சில தீர்வுகள் அல்லது CSV கோப்பைப் பயன்படுத்தி தயாரிப்புகளை இறக்குமதி செய்வது பற்றிய பொதுவான கூடுதல் தகவல்களைப் படிக்கவும்.
படி 5: இறக்குமதிக்குப் பிறகு உங்கள் தயாரிப்புகளைச் சரிபார்த்து ஒழுங்கமைக்கவும்
Shopify-க்கு உங்கள் தயாரிப்புகளை இறக்குமதி செய்த பிறகு, உங்கள் தகவல்கள் அனைத்தும் சரியாக இறக்குமதி செய்யப்பட்டுள்ளனவா என்பதைச் சரிபார்க்கவும். விலை, எடை மற்றும் சரக்கு இருப்பு போன்ற விவரங்கள் சரியாக இறக்குமதி செய்யப்படாவிட்டால், அவை உங்கள் வணிகத்தைப் பாதிக்கலாம்.
பொதுவான இறக்குமதிப் பிழைகள் உள்ளதா என மதிப்பாய்வு செய்யவும்
| சிக்கல் | தீர்வு |
|---|---|
| தயாரிப்புகள் வெற்றிகரமாக இறக்குமதி செய்யப்பட்டன, ஆனால் வெளியிடப்படவில்லை. | நீங்கள் இறக்குமதி செய்யும் தயாரிப்புகள் மறைக்கப்பட்டவை எனக் குறிக்கப்பட்டிருந்தால், உங்கள் விற்பனைச் சேனல்களுக்கு அவற்றைக் கிடைக்கும்படி செய்யும் வரை அவை வெளியிடப்படமாட்டா. |
| இறக்குமதி செய்யப்பட்ட தயாரிப்புகளில் விவரங்கள் விடுபட்டுள்ளன. | தயாரிப்புப் பக்கத்தில் உள்ள தயாரிப்பு விளக்கத்தை மதிப்பாய்வு செய்து, விடுபட்ட தகவல்களை நிரப்பவும். |
| தயாரிப்பு மாறுபாடுகளை இறக்குமதி செய்வது தோல்வியடைந்தது. | ஒரு தயாரிப்பில் ஒரு மாறுபாடு விருப்பம் விடுபட்டிருந்தால், அது வெற்றிகரமாக இறக்குமதி செய்யப்படாது. அதற்குப் பதிலாக நீங்கள் உங்கள் Shopify ஸ்டோரில் தயாரிப்பைக் கைமுறையாகச் சேர்க்கலாம். |
உங்கள் தயாரிப்புகளை மதிப்பாய்வு செய்து ஒழுங்கமைக்கவும்
- தயாரிப்பு விளக்கம், படங்கள், மாறுபாடுகள், விலை மற்றும் மெட்டா விளக்கம் உட்பட உங்கள் தயாரிப்பு விவரங்களை மதிப்பாய்வு செய்யவும்.
- உங்கள் தயாரிப்புகளை வகைகளாக ஒழுங்கமைக்க தயாரிப்புச் சேகரிப்புகளை உருவாக்கவும், இது Shopify நிர்வாகி மற்றும் உங்கள் வெளிப்புற இணையதளம் ஆகிய இரண்டிலும் உங்கள் தயாரிப்புகளைக் குழுவாக்க உதவுகிறது.
- உங்கள் வணிகத்தில் உள்ள சரக்கு இருப்பைத் தடமறிய, தயாரிப்புச் சரக்கு இருப்பு மற்றும் இடமாற்றங்கள் பற்றிப் புரிந்துகொள்ளுங்கள். உங்கள் வணிகத்திற்கு ஏதேனும் தேவைப்படுமா என்பதைத் தீர்மானிக்க, கிடைக்கக்கூடிய சரக்கு இருப்புச் செயலிகளை மதிப்பாய்வு செய்யவும்.
படி 6: (விருப்பத்திற்குரியது) Squarespace-இலிருந்து உங்கள் வாடிக்கையாளர் தரவை ஏற்றுமதி செய்யுங்கள்
- உங்கள் Squarespace கணக்கிலிருந்து, தொடர்புகள் என்பதற்குச் செல்லவும்.
> அனைத்துத் தொடர்புகளையும் ஏற்றுமதி செய் என்பதைக் கிளிக் செய்யவும்.
- உறுதிப்படுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
- கோப்பிற்கு
SquarespaceCustomerDownload.csvஎன்று பெயரிட்டு, பிறகு அதை உங்கள் கணினியில் சேமிக்கவும்.
வாடிக்கையாளரின் மிகச் சமீபத்திய பௌதீகத் தயாரிப்பு ஆர்டரின் முகவரியைத் தவிர, தொடர்பு குறிப்புகள் அல்லது சேமிக்கப்பட்ட முகவரிகள் இந்த ஏற்றுமதியில் சேர்க்கப்படாது. Squarespace ஆவணத்தில் Squarespace இலிருந்து தொடர்புகளை ஏற்றுமதி செய்வது குறித்து மேலும் அறிக.
படி 7: (விருப்பத்திற்குரியது) Squarespace-இலிருந்து உங்கள் வாடிக்கையாளர் தரவைத் திருத்தவும்
முதலில் CSV-யைத் திருத்தாமல், உங்கள் SquarespaceCustomerDownload.csv ஏற்றுமதியை Shopify-க்குள் இறக்குமதி செய்ய முடியாது. வாடிக்கையாளர் CSV வார்ப்புருவைப் பதிவிறக்கிப் பார்த்து, அதன் பிறகு அந்த CSV வடிவத்திற்குப் பொருந்துமாறு உங்கள் SquarespaceCustomerDownload.csv கோப்பைத் திருத்தவும். உங்கள் CSV கோப்பின் வேறொரு தாவலில் நீங்கள் பணிபுரிய விரும்பலாம். அந்த மற்றொரு தாவலில், நீங்கள் நெடுவரிசைத் தலைப்புகளை நகலெடுக்கலாம், பின்னர் உங்கள் Squarespace இறக்குமதித் தரவை Shopify வாடிக்கையாளர் CSV வார்ப்புருவில் நகலெடுத்து ஒட்டலாம். உங்கள் CSV கோப்பை இறக்குமதி செய்வதற்கு முன், அது உங்கள் ஸ்டோரின் Shopify வாடிக்கையாளர் CSV வார்ப்புருத் தரவை மட்டுமே கொண்டிருப்பதை உறுதிசெய்துகொள்ளவும்.
Microsoft Excel அல்லது Numbers போன்ற பிற பிரபலமான பல விரிதாள் பயன்பாடுகளும் வேலை செய்யக்கூடும் என்றாலும், உங்கள் CSV கோப்புகளின் வடிவமைக்கப்பட்ட பதிப்பைத் திருத்த Google Sheets பரிந்துரைக்கப்படுகிறது.
Shopify-இன் தரவு வகைக்குப் பொருந்தக்கூடிய நெடுவரிசைகளுக்கு உங்கள் ஏற்றுமதியை மதிப்பாய்வு செய்யவும். Shopify-இன் வாடிக்கையாளர் CSV-இல் கிடைக்கும் சில நெடுவரிசைகள் உங்கள் Squarespace வாடிக்கையாளர் ஏற்றுமதியில் இருக்காது. வாடிக்கையாளர் CSV கோப்பிற்கு ஒவ்வொரு நெடுவரிசையிலும் என்ன தேவை என்பது குறித்து மேலும் அறிக.
| Squarespace தரவு வகை | Shopify தரவு வகை | செயல் |
|---|---|---|
| First Name | First Name | எந்தச் செயலும் தேவையில்லை. |
| Last Name | Last Name | எந்தச் செயலும் தேவையில்லை. |
| எந்தச் செயலும் தேவையில்லை. | ||
| Accepts Marketing | Accepts Email Marketing | நெடுவரிசையின் பெயரை Shopify-இன் தரவு வகையாக மாற்றவும். நெடுவரிசையைப் புதுப்பிக்க, பின்வரும் மதிப்புகளைப் பயன்படுத்தவும்: yes அல்லது no. |
| Shipping Address 1 | Default Address Address1 | நெடுவரிசையின் பெயரை Shopify இன் தரவு வகைக்கு மாற்றவும். |
| Shipping Address 2 | Default Address Address2 | நெடுவரிசையின் பெயரை Shopify இன் தரவு வகைக்கு மாற்றவும். |
| Shipping City | Default Address City | நெடுவரிசையின் பெயரை Shopify இன் தரவு வகைக்கு மாற்றவும். |
| Shipping Province/State | Default Address Province Code | நெடுவரிசையின் பெயரை Shopify-இன் தரவு வகையாக மாற்றவும். இந்த நெடுவரிசையானது, வாடிக்கையாளரின் இயல்புநிலை முகவரியுடன் தொடர்புடைய மாகாணம் அல்லது மாநிலத்தின் ISO குறியீட்டைக் கொண்டிருக்க வேண்டும். |
| Shipping Country | Default Address Country Code | இந்த நெடுவரிசை உங்கள் Squarespace பதிவிறக்கத்தில் கிடைக்காது, ஆனால் உங்கள் Shopify இறக்குமதிக்கு இந்தத் தகவல் தேவைப்படும். இந்த நெடுவரிசையானது, வாடிக்கையாளரின் இயல்புநிலை முகவரியுடன் தொடர்புடைய நாட்டின் ISO குறியீட்டைக் கொண்டிருக்க வேண்டும். |
| Shipping Zip | Default Address Zip | நெடுவரிசையின் பெயரை Shopify இன் தரவு வகைக்கு மாற்றவும். |
| Shipping Phone Number | Default Address Phone | நெடுவரிசையின் பெயரை Shopify இன் தரவு வகைக்கு மாற்றவும். |
| Tags | Tags | எந்தச் செயலும் தேவையில்லை. |
படி 8: (விருப்பத்திற்குரியது) Squarespace-இலிருந்து உங்கள் வாடிக்கையாளர் தரவை இறக்குமதி செய்யுங்கள்
உங்களிடம் உங்கள் SquarespaceCustomerDownload.csv கோப்பு கிடைத்ததும், தேவையான ஏதேனும் திருத்தங்களைச் செய்து முடித்த பிறகு, உங்கள் Squarespace வாடிக்கையாளர்களை Shopify-க்குள் இறக்குமதி செய்யலாம்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, வாடிக்கையாளர்கள் என்பதற்குச் செல்லவும்.
இறக்குமதி என்பதைக் கிளிக் செய்யவும்.
கோப்பைச் சேர் என்பதைக் கிளிக் செய்து,
SquarespaceCustomerDownload.csvகோப்பைத் தேர்ந்தெடுக்கவும்.வாடிக்கையாளர்களை இறக்குமதி செய் என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 9: (விரும்பினால்) உங்கள் மதிப்பாய்வுகளை Shopify-க்கு இறக்குமதி செய்யவும்
வாடிக்கையாளர் மதிப்பாய்வுகளை ஒரு கோப்பில் ஏற்றுமதி செய்யவோ, வேறு தளத்திற்கு நகர்த்தவோ Squarespace உங்களை அனுமதிக்காது. உங்கள் Shopify ஸ்டோரில் மதிப்பாய்வுகளைக் காட்ட, புதிய மதிப்பாய்வுகளைச் சேகரிப்பதற்காக Shopify App Store இல் உள்ள தயாரிப்பு மதிப்பாய்வுச் செயலிகளில் ஒன்றைப் பயன்படுத்தவும். நீங்கள் உருவாக்கும் CSV கோப்பிலிருந்து மதிப்பாய்வுகளை இறக்குமதி செய்ய, சில மதிப்பாய்வுச் செயலிகள் உங்களை அனுமதிக்கின்றன. மதிப்பாய்வுகளைச் சேகரிக்கவும் இறக்குமதி செய்யவும் பின்வரும் செயலிகள் உதவும்:
படி 10: (விரும்பினால்) Squarespace-இல் இருந்து உங்கள் ஆர்டர் வரலாற்றை ஏற்றுமதி செய்யவும்
- உங்கள் Squarespace கணக்கிலிருந்து, தயாரிப்புகள் & சேவைகள் பேனலைத் திறந்து, ஆர்டர்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
- தரவை ஏற்றுமதி செய் என்பதைக் கிளிக் செய்து, CSV ஐப் பதிவிறக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
- ஏற்றுமதியில் சேர்க்க வேண்டிய ஆர்டர் நிலைகளைத் தேர்ந்தெடுக்கவும். முந்தைய ஆர்டர்களை மட்டும் ஏற்றுமதி செய்ய, நிறைவேற்றப்பட்ட ஆர்டர்களை மட்டும் தேர்ந்தெடுக்கவும்.
- நீங்கள் ஏற்றுமதி செய்ய விரும்பும் அனைத்து ஆர்டர்களையும் உள்ளடக்கிய தேதிக்கான வரம்பைத் தேர்ந்தெடுக்கவும். தேதிக்கான வரம்பு என்பது, ஆர்டர்கள் எப்போது நிறைவேற்றப்பட்டன என்பதன் அடிப்படையில் அல்லாமல் எப்போது உருவாக்கப்பட்டன என்பதன் அடிப்படையில் இருக்கும்.
- அனைத்துத் தயாரிப்புகளும் என்பதைத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையிலேயே விட்டுவிட்டு, பதிவிறக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
- கோப்பிற்கு
SquarespaceOrderDownload.csvஎனப் பெயரிட்டு, அந்தக் கோப்பை உங்கள் கணினியில் சேமிக்கவும்.
Squarespace ஆவணத்தில் Squarespace இலிருந்து ஆர்டர்களை ஏற்றுமதி செய்வது குறித்து மேலும் அறிக.
படி 11: (விரும்பினால்) உங்கள் ஆர்டர் வரலாற்றை Shopify-க்கு இறக்குமதி செய்யவும்
உங்களின் ஆர்டர் வரலாற்றை Squarespace இலிருந்து Shopify-க்கு இடமாற்ற, Shopify App Store இலிருந்து மூன்றாம் தரப்பு Squarespace இடமாற்றச் செயலிகளைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, EZ Importer செயலி மூலம் CSV கோப்பிலிருந்து ஆர்டர்களை இறக்குமதி செய்யலாம்.
படி 12: உங்கள் இணையதளத்தின் தோற்றத்தைச் சிறப்பாக்குங்கள்
நீங்கள் தொடங்குவதற்கு உதவியாக, Shopify கணக்கைத் திறக்கும்போதே உங்கள் நிர்வாகியின் தீம்கள் பக்கத்தில் ஓர் இயல்புநிலை தீம் அமைக்கப்பட்டிருக்கும். உங்கள் இணையதளம் நீங்கள் விரும்பியபடி தோற்றமளிக்க, உங்கள் தீமைத் தனிப்பயனாக்க வேண்டும். உங்களின் ஆன்லைன் ஸ்டோருக்கு வேறு தீமைத் தனிப்பயனாக்க விரும்பினால், Shopify நிர்வாகி வழியாகச் சேர்க்கலாம்.
உங்கள் ஆன்லைன் ஸ்டோருக்கு ஒரு தீமைச் சேர்க்க, பின்வரும் விருப்பங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்:
- நிர்வாகிப் பகுதியிலிருந்து ஒரு இலவச தீமைச் சேர்க்கவும்.
- Shopify Theme Store-இல் இருந்து கட்டண தீமை வாங்கவும். உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் வெளியிடுவதற்கு முன்பு கட்டண தீம்களை நீங்கள் வாங்க வேண்டியிருந்தாலும், வாங்குவதற்கு முன்பு கட்டண தீமைச் சோதித்துப் பார்க்கலாம்.
நிர்வாகியிலிருந்து இலவச தீமைச் சேர்க்கவும்
இலவச தீம்கள் Shopify ஆல் உருவாக்கப்படுகின்றன. இலவச தீம்களுக்கான தனிப்பயனாக்கங்களுக்குரிய உதவியை Shopify வழங்குகிறது.
படிகள்:
டெஸ்க்டாப்
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து ஆன்லைன் ஸ்டோர் பகுதிக்குச் செல்லவும்.
பக்கத்தின் கீழே உள்ள தீம்களைக் கண்டறிக பிரிவில், ஏதேனும் தீமின் அம்சங்களைப் படிக்கவும் கிடைக்கக்கூடிய தீம் பாணிகளை முன்பார்வை பார்க்கவும் அதைக் கிளிக் செய்யவும்.
பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்யவும்:
- பக்கத்தில் நீங்கள் சேர்க்க விரும்பும் தீம் இருந்தால், அந்தத் தீமுக்கு அடுத்துள்ள சேர் என்பதைக் கிளிக் செய்யவும். தீம் உங்கள் நிர்வாகியின் தீம்கள் பக்கத்தில் சேர்க்கப்படும்.
- நீங்கள் இன்னும் பல இலவச தீம்களை மதிப்பாய்வு செய்ய விரும்பினால், Theme Store-க்குச் செல் என்பதைக் கிளிக் செய்து, அதன்பிறகு Theme Store-இல் இருந்து தீமைச் சேர்ப்பதற்கான படிகளைப் பின்பற்றவும்.
மொபைல்
Shopify செயலியிலிருந்து,
ஐகானைத் தட்டவும்.
விற்பனைச் சேனல்கள் பிரிவில், ஆன்லைன் ஸ்டோர் என்பதைத் தட்டவும்.
அனைத்துத் தீம்களையும் நிர்வகி என்பதைத் தட்டவும்.
பக்கத்தின் கீழே உள்ள தீம்களைக் கண்டறிக பிரிவில், ஏதேனும் தீமின் அம்சங்களைப் படிக்கவும் கிடைக்கக்கூடிய தீம் பாணிகளை முன்பார்வை பார்க்கவும் அந்தத் தீமைத் தட்டவும்.
பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்யவும்:
- பக்கத்தில் நீங்கள் சேர்க்க விரும்பும் தீம் இருந்தால், அந்தத் தீமுக்கு அடுத்துள்ள சேர் என்பதைத் தட்டவும். தீம் உங்கள் நிர்வாகியின் தீம்கள் பக்கத்தில் சேர்க்கப்படும்.
- நீங்கள் இன்னும் பல இலவச தீம்களை மதிப்பாய்வு செய்ய விரும்பினால், Theme Store-க்குச் செல் என்பதைத் தட்டி, அதன்பிறகு Theme Store-இல் இருந்து தீமைச் சேர்ப்பதற்கான படிகளைப் பின்பற்றவும்.
Theme Store-இல் இருந்து ஒரு தீமைச் சேர்க்கவும்
கட்டண தீம்கள் மூன்றாம் தரப்பு வடிவமைப்பாளர்களால் உருவாக்கப்படுகின்றன. மூன்றாம் தரப்புத் தீம்களுக்கான தனிப்பயனாக்கங்களுக்குரிய உதவியைத் தீம் வடிவமைப்பாளர் வழங்குவார்.
படிகள்:
- Shopify Theme Store-க்குச் சென்று ஒரு தீமைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் இன்னும் இலவச சோதனைக் காலத்தில் இருந்தால், எந்தக் கட்டணமும் செலுத்துவதைத் தவிர்க்க இலவச தீம் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
- நீங்கள் இலவச தீமைத் தேர்ந்தெடுத்திருந்தால், தீமைச் சேர் அல்லது இந்தத் தீமுடன் தொடங்கு என்பதைக் கிளிக் செய்யவும். நீங்கள் கட்டண தீமைத் தேர்ந்தெடுத்திருந்தால், அந்தத் தீமை வாங்க வாங்கு என்பதைக் கிளிக் செய்யவும். கட்டண தீம்களைத் திரும்பப் பெற முடியாது. அது உங்கள் தேவைகளுக்குப் பொருந்துகிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள, நீங்கள் வாங்குவதற்கு முன்பு கட்டண தீமைச் சோதித்துப் பார்க்கலாம்.
- கட்டண தீம்களுக்கு, பேமெண்ட்டுக்கு ஒப்புதலளிக்க ஒப்புதலளி என்பதைக் கிளிக் செய்யவும். உங்கள் நிர்வாகியின் தீம்கள் பக்கத்தில் தீம் சேர்க்கப்படும்.
உங்கள் ஸ்டோரில் கட்டண தீமைச் சோதித்துப் பாருங்கள்
கட்டண தீமை வாங்குவதற்கு முன், உங்கள் தயாரிப்புகள், பிராண்ட் நிறங்கள் மற்றும் பாணியுடன் அந்தத் தீம் எப்படித் தோற்றமளிக்கிறது என்பதை முன்பார்வை பார்க்க நீங்கள் அதைச் சோதித்துப் பார்க்கலாம். நீங்கள் ஒரு தீமை முன்பார்வை பார்க்கும் போது, தீம் எடிட்டரைப் பயன்படுத்தித் தனிப்பயனாக்கங்களைச் செய்யலாம். நீங்கள் செய்யும் எந்த மாற்றங்களும், தீமை வாங்கும் போது சேமிக்கப்படும். நீங்கள் 19 கட்டண தீம்கள் வரை முன்பார்வை பார்க்கலாம், இதன் மூலம் வாங்குவதற்கு முன் வெவ்வேறு தீம்களை நீங்கள் ஒப்பிட்டுப் பார்க்க முடியும்.
படிகள்:
- Shopify Theme Store-க்குச் சென்று ஒரு கட்டண தீமைத் தேர்ந்தெடுக்கவும்.
- தீமைச் சோதித்துப் பார் என்பதைக் கிளிக் செய்யவும். உங்கள் ஆன்லைன் ஸ்டோருக்கான தீமின் முன்பார்வை ஏற்றப்படும்.
- பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்யவும்:
- தீமை முன்பார்வை பார்ப்பதை நிறுத்த, முன்பார்வையை மூடு என்பதைக் கிளிக் செய்யவும்.
- தீமை வாங்க, வாங்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
- தீம் எடிட்டரைப் பயன்படுத்தித் தீம் அமைப்புகளை மாற்றியமைக்க, தீமைத் திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
நீங்கள் தீமை வாங்க வேண்டாம் என முடிவு செய்தாலும், அந்தக் கட்டண தீம் உங்கள் நிர்வாகியின் தீம்கள் பக்கத்தில் சேர்க்கப்படும். நீங்கள் சோதித்துப் பார்க்கும் கட்டண தீம்களில் தீம் சோதனை என்ற லேபிள் இருக்கும்.
படி 13: உங்கள் ஷிப்பிங்கை அமைக்கவும்
அறிமுகப்படுத்துவதற்கு முன் ஷிப்பிங் கட்டணங்கள் மற்றும் ஷிப்பிங் முறைகளை நீங்கள் சரியாக அமைத்திருக்க வேண்டும் — அதிகமாக வசூலித்ததற்காக வாடிக்கையாளர்களுக்குப் பணத்தைத் திரும்ப வழங்க வேண்டிய நிலையோ, அல்லது ஆர்டருக்கான ஷிப்பிங் கட்டணத்தை ஈடுகட்டப் போதுமான அளவு வசூலிக்காததால், மேலும் பணம் செலுத்துமாறு கேட்டு வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சல் அனுப்ப வேண்டிய நிலையோ உங்களுக்கு ஏற்படக் கூடாது.
ஆர்டர் ஷிப்பிங் மற்றும் நிறைவேற்றம் குறித்த கூடுதல் தகவலுக்கு, இங்கே கிளிக் செய்யவும்.
படிகள்:
- உங்கள் இருப்பிடத்தின் அடிப்படையில் துல்லியமான ஷிப்பிங் கட்டணங்களைப் பெற, உங்கள் ஸ்டோர் முகவரியைச் சரிபார்க்கவும். நீங்கள் பிற இடங்களிலிருந்து ஷிப் செய்தால், அவற்றை இடங்களாகச் சேர்க்கவும்.
- பல்வேறு பிராந்தியங்கள், மாநிலங்கள் மற்றும் நாடுகளுக்கு ஷிப்பிங் செய்ய அனுமதிக்க, ஷிப்பிங் மண்டலங்களை உருவாக்கவும்.
- கேரியர் கணக்கிடும் ஷிப்பிங் கட்டணங்களை நீங்கள் பயன்படுத்தினால், உங்கள் ஷிப்மென்ட் பரிமாணங்களை உள்ளமைக்கவும். பல கேரியர்கள் ஷிப்பிங் கட்டணங்களைக் கணக்கிட பேக்கேஜின் கன அளவு எடையைப் (உயரம், எடை மற்றும் ஆழம்) பயன்படுத்துகின்றன.
- நீங்கள் உருவாக்கும் ஷிப்பிங் மண்டலங்களுக்கு ஷிப்பிங் கட்டணங்களை அமைக்கவும்.
- உங்கள் வணிகத்திற்கு ஏற்ற ஷிப்பிங் உத்தியைத் தேர்ந்தெடுக்கவும். முடிவெடுப்பதற்கு முன், உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வது எது என்பதைக் கண்டறிய சில விருப்பங்களைப் பார்ப்பது உதவியாக இருக்கும்.
- உங்கள் ஆர்டர்களை எவ்வாறு நிறைவேற்ற விரும்புகிறீர்கள் என்பதை முடிவு செய்யவும். ஆர்டர்களை நீங்களே நிறைவேற்றி அனுப்பலாம் அல்லது உங்களுக்காக ஆர்டர்களை அனுப்பும் நிறைவேற்றச் சேவையைப் பயன்படுத்தலாம்.
படி 14: உங்கள் வரிகளை உள்ளமைக்கவும்
விற்பனை வரியை வசூலிப்பது உங்கள் வணிகத்தை நடத்துவதில் ஒரு முக்கியமான பகுதியாகும். உங்கள் இருப்பிடத்தைப் பொறுத்து, உங்கள் தயாரிப்புகளுக்குப் பொருந்தக்கூடிய விற்பனை வரி குறித்த பல்வேறு விதிகளும் விதிமுறைகளும் உள்ளன. உங்கள் ஸ்டோர் அந்த விதிகளைப் பூர்த்தி செய்வதை உறுதிசெய்ய, Shopify இன் வரி அமைவு செயல்முறையைப் புரிந்துகொள்ளச் சிறிது நேரம் ஒதுக்கவும்.
உங்கள் ஷிப்பிங் இலக்குகளின் அடிப்படையில் வரிகளை வசூலித்தல்
நீங்கள் உங்கள் ஷிப்பிங்கை அமைக்கும்போது, வாடிக்கையாளரின் மாகாண, மாநில அல்லது பிராந்திய வரி விதிமுறைகளின் அடிப்படையில் உங்கள் தயாரிப்புகளுக்கு ஷிப்பிங் வரிகளைப் பயன்படுத்தலாம். இவை Shopify மூலம் தானாகவே கணக்கிடப்படுகின்றன.
தனித்துவமான வரிக் கட்டுப்பாடுகளைக் கொண்ட ஒரு பிராந்தியத்தின் அடிப்படையிலோ அல்லது ஒரு குறிப்பிட்ட தயாரிப்புகளின் சேகரிப்பின் அடிப்படையிலோ நீங்கள் வரிகளைப் பிரத்தியேகமாகச் சரிசெய்ய வேண்டியிருந்தால், வரி ஓவர்ரைடு மூலம் அதைச் செய்யலாம்.
உங்கள் வரிகளைத் தடமறிதல்
உங்கள் தயாரிப்புகளுக்கான வரி அமைப்புகளை நீங்கள் உள்ளமைக்கும்போது, ஆண்டு முழுவதும் உங்கள் வரிகளை எவ்வாறு தடம் அறிவது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
உங்கள் வரிகளைத் தடமறிய எந்த அமைப்பைப் பயன்படுத்துவது என்று உங்களுக்குத் தெரியவில்லை எனில், Shopify App Store இல் சில கணக்கியல் செயலிகளைப் பார்வையிடலாம்.
படி 15: கட்டண வழங்குநரை அமைத்தல்
வாடிக்கையாளர்கள் உங்களுக்குப் பணம் செலுத்துவதை உறுதிசெய்ய, நீங்கள் ஒரு கட்டண வழங்குநரை அமைக்க வேண்டும். பாதுகாப்பான முறையில் கிரெடிட் கார்டு பேமெண்ட்டுகளை ஏற்க கட்டண வழங்குநர் உங்களை அனுமதிக்கிறார். Shopify Payments சேவையானது குறிப்பிட்ட நாடுகளில் கிடைக்கிறது, மேலும் பல்வேறு வகையான ஆதரிக்கப்படும் மூன்றாம் தரப்புக் கட்டண வழங்குநர்களும் கிடைக்கின்றனர்.
கட்டண வழங்குநரை அமைக்கவும்
- Shopify-இலிருந்து அல்லது ஆதரிக்கப்படும் மூன்றாம் தரப்பிலிருந்து ஒரு கட்டண வழங்குநரைத் தேர்ந்தெடுக்கவும்.
- உங்கள் Shopify நிர்வாகியில் Shopify Payments-ஐ அல்லது மூன்றாம் தரப்புக் கட்டண வழங்குநரைச் செயல்படுத்துங்கள்.
- வாடிக்கையாளர்கள் உங்கள் ஸ்டோரிலிருந்து எதையாவது வாங்கும்போது பேமெண்ட்டுகளை எவ்வாறு கைப்பற்றி அங்கீகரிக்க வேண்டும் என்பதைத் தேர்வுசெய்யவும்.
உங்கள் கட்டண வழங்குநர்களை அமைத்த பிறகு, வாடிக்கையாளர்களின் ஆர்டர்களைச் செயல்படுத்துவதற்கு வசதியாக உங்கள் செக்அவுட் பக்கத்தை உள்ளமைக்க வேண்டும்.
உங்கள் செக்அவுட்டை அமைக்கவும்
- உங்கள் ஆர்டர் நிறைவேற்றத்தையும் உங்கள் கட்டண அங்கீகாரத்தையும் அமைக்கவும்.
- செக்அவுட்டை முடிப்பதற்கு முன்பு வாடிக்கையாளர்கள் உங்கள் கொள்கைகளைப் பார்க்க, உங்கள் ஸ்டோரின் கொள்கைகளைச் சேர்க்கவும்.
- உங்கள் செக்அவுட்டின் வாடிக்கையாளர் தகவல் அமைப்புகளைத் திருத்தி, நிகழ்வுகள் மற்றும் விளம்பரங்கள் குறித்து வாடிக்கையாளர்களுக்குப் புதுப்பிக்க, நீங்கள் மின்னஞ்சல் முகவரிகளைச் சேகரிக்க விரும்புகிறீர்களா என்பதை முடிவுசெய்யவும்.
படி 16: சில சோதனை ஆர்டர்களை வழங்கவும்
இப்போது நீங்கள் உங்கள் கட்டண அமைப்புகளை உள்ளமைத்துள்ளதால், எல்லாம் சரியாகச் செயல்படுகிறதா என்பதை உறுதிசெய்ய சில பரிவர்த்தனைகளைச் செய்து பார்க்க வேண்டும். சோதனை ஆர்டரை இயக்குவது, வாடிக்கையாளர்கள் உங்கள் தயாரிப்புகளை வாங்கும்போது அவர்கள் கடந்துசெல்லும் செயல்முறையைப் புரிந்துகொள்ள உங்களுக்கு உதவும். வாடிக்கையாளர்கள் வழங்கும் அனைத்து ஆர்டர்களையும் உங்கள் Shopify நிர்வாகியில் உள்ள ஆர்டர்கள் பக்கத்திலிருந்து நீங்கள் அணுகலாம்.
சில வெவ்வேறு வகையான பரிவர்த்தனைகளுக்கு நீங்கள் சோதனை ஆர்டர்களை இயக்கலாம்:
- வெற்றிகரமான மற்றும் தோல்வியடைந்த பரிவர்த்தனையை முடித்தல்
- ஆர்டருக்கான பணத்தைத் திரும்பப்பெறுதல் மற்றும் அதை ரத்துசெய்தல்
- ஆர்டரை முழுமையாக அல்லது பகுதியளவு நிறைவேற்றுதல்
- வெற்றிகரமான ஆர்டரைக் காப்பகப்படுத்துதல்
நீங்கள் ஆர்டர்களை உருவாக்கும்போது, பணத்தைத் திரும்பப்பெறும்போது மற்றும் நிறைவேற்றும்போது, ஒவ்வொரு செயலுக்கும் உங்கள் வாடிக்கையாளர்கள் பெறும் மின்னஞ்சல்களைக் காண்பீர்கள். உங்கள் Shopify நிர்வாகியில் உள்ள அறிவிப்புகள் பக்கத்திலிருந்து இந்த மின்னஞ்சல்களுக்கான வார்ப்புருக்களை நீங்கள் திருத்தலாம்.
படி 17: உங்கள் ஸ்டோரில் பணியாளர்களைச் சேர்த்தல்
உங்கள் ஸ்டோரை நிர்வகிக்கவும் நடத்தவும் உதவும் பணியாளர்கள் உங்களிடம் இருந்தால், நீங்கள் உங்கள் Shopify ஸ்டோரில் பணியாளர்களைச் சேர்க்கலாம். ஒவ்வொரு பணியாளருக்கும் தனிப்பட்ட உள்நுழைவுச் சான்றுகள் உள்ளன. உங்கள் ஸ்டோரின் குறிப்பிட்ட பகுதிகளுக்கான அணுகலைக் கட்டுப்படுத்தவும், முக்கியமான தகவல்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும் ஒவ்வொரு பணியாளருக்கும் நீங்கள் அனுமதிகளை அமைக்கலாம்.
பணியாளர்களை நிர்வகிப்பது குறித்து மேலும் அறிக.
படி 18: உங்கள் டொமைனை அமைத்தல்
உங்கள் டொமைன் Squarespace உடன் பதிவுசெய்யப்பட்டிருந்தால், உங்கள் Squarespace டொமைனை Shopify உடன் இணைக்கலாம் அல்லது இடமாற்றலாம். Google Domains மூலம் பதிவுசெய்யப்பட்ட டொமைன்களை இப்போது Squarespace நிர்வகிக்கிறது. நீங்கள் டொமைனைப் பதிவுசெய்த பிறகு அல்லது அதன் தொடர்பு விவரங்களை மாற்றிய பிறகு Squarespace அதை 60 நாட்களுக்கு லாக் செய்யக்கூடும், அந்த லாக் முடியும் வரை உங்களால் லாக் செய்யப்பட்ட டொமைனை இடமாற்ற முடியாது. Squarespace ஆவணத்தில் Squarespace இலிருந்து டொமைனை இடமாற்றுவது குறித்து மேலும் அறிக.
உங்கள் Shopify ஸ்டோரை அமைக்கும்போது, நீங்கள் புதிய டொமைனை வாங்கலாம் அல்லது உங்களின் தற்போதைய ஸ்டோருடன் தொடர்புடைய டொமைனை உங்களின் புதிய Shopify கணக்கிற்கு மாற்றலாம்.
புதிய டொமைனைப் பெறுக
நீங்கள் நேரடியாக Shopify-இலிருந்தே புதிய டொமைனை வாங்கலாம்.
படிகள்:
- Shopify மூலமாக உங்கள் டொமைனை வாங்குங்கள்.
- உங்கள் Shopify டொமைனை முதன்மை டொமைனாக அமைக்கவும், இதன்மூலம் வாடிக்கையாளர்களின் உலாவி, தேடல் முடிவுகள் மற்றும் சமூக ஊடகங்களில் அந்த டொமைனைக் காண்பிக்கலாம்.
- உங்கள் தனிப்பயன் டொமைன் மின்னஞ்சல் முகவரிக்கு வாடிக்கையாளர்கள் அனுப்பும் மின்னஞ்சல் செய்திகளை உங்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்குத் திசைதிருப்பும் வகையில் மின்னஞ்சல் பகிர்தலை அமைக்கவும்.
ஏற்கனவே உள்ள டொமைனை Shopify-உடன் இணைக்கவும் அல்லது இடமாற்றவும்
உங்களிடம் ஏற்கனவே ஒரு டொமைன் இருந்தால், உங்கள் டொமைனை உங்கள் Shopify ஸ்டோருக்குக் குறிக்க இந்த படிகளைப் பின்பற்றவும்.
நீங்கள் ஏற்கனவே உள்ள டொமைனைப் பயன்படுத்தலாம், ஆனால் தனிப்பட்ட பக்கங்களுக்கான Shopify-இன் இணைப்பு அமைப்பு உங்களின் முந்தைய சேவையிலிருந்து வேறுபட்டிருக்கலாம், அதாவது குறிப்பிட்ட பக்கங்களுக்கான பழைய இணைப்புகள் வாடிக்கையாளர்களுக்கு ஏற்றப்படாமல் போகலாம். எடுத்துக்காட்டாக, உங்கள் ஷிப்பிங் கொள்கை குறித்த உங்களின் பழைய பக்கத்தின் URL example.com/policies/shipping-policy என்பதாக இருந்திருக்கலாம், ஆனால் Shopify-இல் அந்தப் பக்கம் இப்போது example.com/pages/shipping-policy என்பதாக இருக்கலாம்.
வாடிக்கையாளர்கள் பிழைப் பக்கங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க, உங்கள் டொமைனை இடமாற்றுவதற்கு முன், வாடிக்கையாளர்கள் புக்மார்க் செய்திருக்கக்கூடிய எந்தப் பக்கங்களுக்கும் அல்லது மூன்றாம் தரப்பு ஆதாரங்களில் உள்ள இணைப்புகளுக்கும் நீங்கள் முன்பே URL திசைதிருப்பல்களை அமைக்கலாம். இதன்மூலம், டொமைனை இடமாற்றிய பிறகு அவர்கள் பழைய இணைப்பைப் பார்வையிட்டால், பிழைப் பக்கத்தைப் பெறுவதற்குப் பதிலாக புதிய இணைப்பிற்கு அவர்கள் திசைதிருப்பப்படுவார்கள்.