ஏஜென்டிக் ஸ்டோர்ஃபிரண்டுகளை நிர்வகித்தல்

உங்கள் Shopify நிர்வாகியில் உள்ள விற்பனைச் சேனல்கள் > ஏஜென்டிக் என்பதிலிருந்து ஏஜென்டிக் ஸ்டோர்ஃபிரண்டுகளின் அமைப்பை நீங்கள் நிர்வகிக்கலாம்.

இயல்பாகவே, கிடைக்கும் அனைத்துச் சேனல்களும் Shopify Catalog மூலமாகவோ Google AI Mode மற்றும் Gemini-க்கான Google & YouTube விற்பனைச் சேனல் அல்லது Google Merchant Center மூலமாகவோ உங்கள் தயாரிப்புகளை அணுக முடியும்.

ஆதரிக்கப்படும் இடங்களில் AI சேனல்களில் நேரடிச் செக்அவுட் செயலில் இருக்கும். எனக்காக நிர்வகிக்க Shopify-ஐ அனுமதி என்ற அமைப்பின் மூலம் நீங்கள் இயல்புநிலைச் செயல்பாட்டைத் தொடரலாம். அதாவது எதிர்கால ஏஜென்டிக் ஸ்டோர்ஃபிரண்டுகள் அனைத்திலும் நீங்கள் தானாகவே பதிவுசெய்யப்படுவீர்கள் என்று அர்த்தமாகும். மாற்றாக, தொடர்புடைய இடங்களில் Shopify Catalog அணுகல் மற்றும் செக்அவுட் செயல்பாடு உட்பட, தனிப்பட்ட சேனல்களுக்கான உங்கள் அமைப்புகளை மேனுவலாக நிர்வகிக்க இந்த அமைப்பை நீங்கள் முடக்கலாம்.

உங்கள் Shopify நிர்வாகியில் ஏஜென்டிக் பிரிவைப் பயன்படுத்துதல்

உங்கள் Shopify நிர்வாகியில் உள்ள விற்பனைச் சேனல்கள் > Agentic பிரிவை அணுக, நீங்கள் கடையின் உரிமையாளராக இருக்க வேண்டும் அல்லது செயலி உருவாக்கம் > பணியாளர்கள் மற்றும் கூட்டுப்பணியாளர்களால் உருவாக்கப்பட்ட செயலிகளைப் பார்த்தல் அனுமதி அல்லது செயலி மற்றும் விற்பனைச் சேனல் > Agentic அனுமதி உள்ள பணியாளராக இருக்க வேண்டும். Agentic பிரிவில் நீங்கள் பின்வரும் பணிகளை முடிக்கலாம் மற்றும் பின்வரும் தகவல்களைப் பார்க்கலாம்:

உங்கள் ஏஜென்டிக் ஸ்டோர்ஃபிரண்ட்களின் அமைப்புகளைப் புரிந்துகொள்ளுதல்

எனக்காக நிர்வகிக்க Shopify-ஐ அனுமதி என்பது Shopify-இன் ஏஜென்டிக் ஸ்டோர்ஃபிரண்டுகளுக்கான இயல்புநிலைச் செயல்பாடாகும். இதன் பொருள் அனைத்து சேனல்களும் செயலில் உள்ளன மற்றும் Shopify உங்களை தானாகவே ஏஜென்டிக் ஸ்டோர்ஃபிரண்டுகளில் பதிவுசெய்கிறது என்பதாகும்.

உங்களின் ஏஜென்டிக் ஸ்டோர்ஃபிரண்ட்ஸ் அமைப்புகளில் மாற்றங்களைச் செய்யும்போது, ஒவ்வொரு விருப்பமும் எதைக் குறிக்கிறது என்பது பற்றிய பின்வரும் விவரங்களை மதிப்பாய்வு செய்யவும்.

ஏஜென்டிக் ஸ்டோர்ஃபிரண்ட்ஸ் சேனல் நிர்வாக அமைப்புகள் மற்றும் அவற்றின் விளக்கங்கள்.
அமைப்பின் பெயர்விளக்கம்
Allow Shopify to manage for meஇந்த அமைப்பு இயக்கப்பட்டிருக்கும்போது:
  • ஏஜென்டிக் ஸ்டோர்ஃபிரண்டுகள், Shopify Catalog மூலம் உங்கள் தயாரிப்புகளை அணுகலாம்.
  • தொடர்புடைய சேனல்களுக்கு நேரடி செக்அவுட் இயக்கப்படும்.
  • புதிய ஏஜென்டிக் ஸ்டோர்ஃபிரண்டுகளில் நீங்கள் தானாகவே பதிவுசெய்யப்படுவீர்கள்.
இந்த அமைப்பு முடக்கப்பட்டிருக்கும்போது, Shopify Catalog அணுகல் மற்றும் புதிய ஸ்டோர்ஃபிரண்ட் பதிவுக்கான உலகளாவிய அமைப்புகளையும், தனிப்பட்ட சேனல் அமைப்புகளையும் உங்களால் மேனுவலாக நிர்வகிக்க முடியும்.

ஒருவேளை Allow Shopify to manage for me என்பது முடக்கப்பட்டிருந்தால், அதை மீண்டும் இயக்குவது நேரடி செக்அவுட் உட்பட அனைத்து ஏஜென்டிக் ஸ்டோர்ஃபிரண்ட்ஸ் அமைப்புகளையும் தானாகவே இயக்கும்.
Shopify Catalog access ('Manage for me' முடக்கப்பட்டிருக்கும்போது அணுகலாம்)இந்த அமைப்பை இயக்கும்போது, நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஏஜென்டிக் ஸ்டோர்ஃபிரண்டுகள் Shopify Catalog மூலம் உங்கள் தயாரிப்புகளை அணுக நீங்கள் அனுமதிக்கிறீர்கள். சில AI சேனல்களை அணுக அனுமதிக்கவும் மற்றவற்றை அனுமதிக்காமல் இருக்கவும் நீங்கள் தனிப்பட்ட சேனல் கட்டுப்பாடுகளைப் பயன்படுத்தலாம்.

இந்த அமைப்பை முடக்கும்போது, அந்த நேரத்திலிருந்து மூன்றாம் தரப்பு ஏஜென்டிக் ஸ்டோர்ஃபிரண்டுகளால் Shopify Catalog மூலம் உங்கள் தயாரிப்புகளை அணுக முடியாது. உங்கள் தயாரிப்புத் தரவு Shopify Catalog மூலம் பகிரப்படுவது நிறுத்தப்பட 7 நாட்கள் வரை ஆகலாம். அணுகல் முடக்கப்படும்போது, வலை கிராலிங் மற்றும் இன்டெக்சிங் மூலம் உங்கள் தயாரிப்புகளைத் தொடர்ந்து கண்டறிய முடியும். Shopify Catalog அணுகல் முடக்கப்படும்போது, நேரடிச் செக்அவுட்டும் முடக்கப்படும்.

Shopify Catalog அணுகலை முடக்குவதால், Shop-இல் உங்கள் தயாரிப்புகள் காட்டப்படுவது நிறுத்தப்படாது. மேலும் தகவலுக்கு, Shop-ஐ ஏஜென்டிக் ஸ்டோர்ஃபிரண்டாகப் புரிந்துகொள்ளுதல் என்பதைப் பார்க்கவும்.
Auto enroll new storefronts ('Manage for me' முடக்கப்பட்டிருக்கும்போது அணுகலாம்)இந்த அமைப்பு இயக்கப்படும்போது, நீங்கள் புதிய ஏஜென்டிக் ஸ்டோர்ஃபிரண்டுகளில் தானாகவே பதிவுசெய்யப்படுவீர்கள். இதில் Shopify Catalog அணுகல் மற்றும் நேரடிச் செக்அவுட் ஆகிய இரண்டும் அடங்கும்.

இந்த அமைப்பை முடக்கும்போது, புதிய ஏஜென்டிக் ஸ்டோர்ஃபிரண்டுகள் எதிலும் நீங்கள் தானாகவே பதிவுசெய்யப்படமாட்டீர்கள். இது முடக்கப்பட்டிருக்கும்போது நீங்கள் புதிய சேனல்கள் எதிலும் மேனுவலாகப் பதிவுசெய்யலாம்.
Direct checkout ('Manage for me' முடக்கப்பட்டிருக்கும்போது அணுகலாம்)தொடர்புடைய சேனல்களுக்கு இந்த அமைப்பு இயக்கப்பட்டிருக்கும்போது, AI சேனல் ஒன்றின் உரையாடலிலேயே வாடிக்கையாளர்கள் உங்களின் தயாரிப்புகளை நேரடியாக வாங்க முடியும்.

இந்த அமைப்பு முடக்கப்பட்டிருக்கும்போது, வாடிக்கையாளர்கள் தங்கள் கொள்முதலை நிறைவுசெய்ய உங்களின் ஆன்லைன் ஸ்டோருக்குத் திசைதிருப்பப்படுவார்கள்.

Allow Shopify to manage for me என்பதை நீங்கள் முடக்கினால், சிறிய மற்றும் வளர்ந்து வரும் AI ஏஜெண்டுகளுக்கான குழு விருப்பத்தைத் தனித்தனியாக நிர்வகிக்கலாம். Other channels என்பதைக் கிளிக் செய்து, பின்வரும் வகையான AI பிளாட்ஃபார்ம்களை உள்ளடக்கிய குழுவில் உங்கள் தயாரிப்புகளைச் சேர்க்க அல்லது அதிலிருந்து விலக்க Shopify Catalog access என்பதை இயக்கவும் அல்லது முடக்கவும்:

  • பிரத்தியேகமான அல்லது பரிசோதனை அளவிலான ஷாப்பிங் ஏஜெண்டுகளை உருவாக்கும் சுயாதீன டெவலப்பர்கள் மற்றும் ஸ்டார்ட்அப்கள்.
  • பரிசோதனைக்காகச் சமீபத்தில் Shopify Catalog-ஐ அணுகும் வசதியைப் பெற்ற புதிய மூன்றாம் தரப்புக் கூட்டாளர்கள்.

உங்களின் ஏஜென்டிக் ஸ்டோர்ஃபிரண்ட்ஸ் அமைப்புகளை உள்ளமைக்கவும்

எந்தவொரு மூன்றாம் தரப்பு ஏஜென்டிக் ஸ்டோர்ஃபிரண்டுகளிலிருந்தும் Shopify Catalog-இல் உள்ள உங்கள் தயாரிப்புகளுக்கான அணுகலை நீங்கள் அகற்றலாம். புதிய சேனல்களில் நீங்கள் தானாகவே பதிவுசெய்யப்பட வேண்டுமா என்பதையும் நீங்கள் தேர்வுசெய்யலாம்.

படிகள்:

  1. உங்களின் Shopify நிர்வாகி பக்கத்தில், விற்பனைச் சேனல்கள் > Agentic என்பதற்குச் செல்லவும்.

  2. Allow Shopify to manage for me என்பதை முடக்கவும்.

  3. உங்களின் ஏஜென்டிக் ஸ்டோர்ஃபிரண்ட்ஸ் அமைப்புகளை மாற்றவும்:

    • மூன்றாம் தரப்புச் சேனல்களுக்கான தற்போதைய மற்றும் எதிர்கால Shopify Catalog அணுகலை முழுவதுமாக அகற்ற, Shopify Catalog access என்பதை முடக்கவும். இது உங்கள் தயாரிப்புகள் Shop இல் காட்சிப்படுத்தப்படுவதை அகற்றாது.
    • ஏஜென்டிக் ஸ்டோர்ஃபிரண்ட்களுக்கான Shopify Catalog அணுகலைத் தக்கவைத்துக்கொள்ள, ஆனால் புதிய சேனல்களில் தானாகவே சேர்க்கப்படும் வசதியிலிருந்து விலக, Auto enroll new storefronts என்பதை முடக்கவும்.
    • தனிப்பட்ட ஏஜென்டிக் ஸ்டோர்ஃபிரண்டுகளுக்கான Shopify Catalog அணுகலை அகற்ற, ChatGPT, Microsoft Copilot மற்றும் Meta ஆகியவற்றுக்கான வழிமுறைகளைப் பார்க்கவும்.
    • நேரடி செக்அவுட் வசதியை வழங்கும் AI சேனல்களில் வாடிக்கையாளர்கள் அதைப் பயன்படுத்த முடியுமா என்பதை நிர்வகிக்க, Google AI Mode and Gemini, Microsoft Copilot மற்றும் Meta ஆகியவற்றிற்கான வழிமுறைகளைப் பார்க்கவும்.
  4. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

Shop-ஐ ஏஜென்டிக் ஸ்டோர்ஃபிரண்டாகப் புரிந்துகொள்ளுதல்

Shop ஒரு ஏஜென்டிக் ஸ்டோர்ஃபிரண்டாகச் செயல்படுகிறது, இது உங்கள் Shopify நிர்வாகியில் கிடைக்கும் பிற சேனல்களுடன் பட்டியலிடப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் Shop செயலியைப் பயன்படுத்தும்போது, அவர்கள் ஒரு AI ஏஜென்ட்டுடன் தொடர்புகொள்வார்கள், இது Shopify Catalog மூலம் கிடைக்கும் தயாரிப்புகளைக் கண்டறியவும் வாங்கவும் அவர்களுக்கு உதவுகிறது. உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் நீங்கள் வெளியிட்ட அனைத்துத் தயாரிப்புகளையும் Shopify Catalog மூலம் Shop-இல் கண்டறியலாம்.

Shop செயலியிலிருந்து கிடைக்கும் உங்களின் அமர்வுகள், பரிந்துரைகள் மற்றும் விற்பனை ஆகிய அனைத்தும் உங்களின் ஏஜென்டிக் ஸ்டோர்ஃபிரண்ட்கள் செயல்திறன் அறிக்கையிடலில் சேர்க்கப்பட்டுள்ளன.

Shop மற்றும் பிற ஏஜென்டிக் ஸ்டோர்ஃபிரண்டுகள்

வாடிக்கையாளர்கள் AI ஏஜென்ட் மூலம் தயாரிப்புகளைக் கண்டறிய உதவும் வகையில் Shopify Catalog-ஐப் பயன்படுத்துவதால், Shop ஆனது ChatGPT மற்றும் Microsoft Copilot போன்ற பிற ஏஜென்டிக் ஸ்டோர்ஃபிரண்டுகளைப் போலவே உள்ளது.

Shop மற்றும் பிற சேனல்களுக்கு இடையிலான முக்கிய வேறுபாடு என்னவென்றால், Shop என்பது Shopify-க்குச் சொந்தமான சேனலாகும். Shop செயலியில் எந்தெந்தத் தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்படுகின்றன என்பதை உங்களின் Shopify நிர்வாகி பக்கத்திலுள்ள Shop விற்பனைச் சேனல் அமைப்புகளிலிருந்து நீங்கள் நிர்வகிக்கலாம். இருப்பினும், உங்களின் Shopify நிர்வாகி பக்கத்தில் உள்ள விற்பனைச் சேனல்கள் > Agentic என்பதில் Shopify Catalog அணுகலை முடக்குவதற்கான விருப்பம் Shop இல் இல்லை.

உங்களின் Shop விற்பனைச் சேனலின் விற்பனை முறை பிரிவில் Shop செக்அவுட் செயல்பாட்டை உங்களால் கட்டுப்படுத்த முடியும். கூடுதல் தகவலுக்கு, Shop இல் தயாரிப்புகளைக் காட்சிப்படுத்துதல் மற்றும் விற்பனை செய்தல் என்பதைப் பார்க்கவும்.

Shop உட்பட அனைத்து ஏஜென்டிக் ஸ்டோர்ஃபிரண்டுகளிலிருந்தும் உங்கள் தயாரிப்புகளை மறைக்க விரும்பினால், நீங்கள் பட்டியலிடப்படாதது என்ற தயாரிப்பு நிலையை அல்லது seo.hidden மெட்டாஃபீல்டைப் பயன்படுத்தலாம். அதாவது உங்கள் தயாரிப்பு Shop-இலோ Shopify Catalog மூலம் மூன்றாம் தரப்பு ஏஜென்டிக் ஸ்டோர்ஃபிரண்டுகளிலோ காட்டப்படாது, அத்துடன் இது Google போன்ற தேடுபொறிகளிலும் காட்டப்படாது.

ஏஜென்டிக் ஸ்டோர்ஃபிரண்ட்ஸ் செயல்திறன் தரவு

நீங்கள் விற்பனை செய்யும் ஒவ்வொரு தனிப்பட்ட AI சேனலுக்கும் பின்வரும் வகையான செயல்திறன் தரவுகளுக்கான அறிக்கைகளை நீங்கள் அணுகலாம்:

  • விற்பனை: குறிப்பிட்ட காலகட்டத்தில் நீங்கள் செய்த மொத்த விற்பனைகளின் எண்ணிக்கை.
  • ஆர்டர்கள்: குறிப்பிட்ட காலகட்டத்தில் நீங்கள் பெற்ற மொத்த ஆர்டர்களின் எண்ணிக்கை.
  • ஆன்லைன் ஸ்டோர் அமர்வுகள்: குறிப்பிட்ட காலகட்டத்தில் AI சேனலில் இருந்து உங்கள் ஆன்லைன் ஸ்டோருக்கு வந்த மொத்தப் பார்வைகளின் எண்ணிக்கை.
  • ஆன்லைன் ஸ்டோர் மாற்றம்: விற்பனையில் முடிவடைந்த ஆன்லைன் ஸ்டோர் பார்வைகளின் சதவீதம், இது செக்அவுட்டை முடித்த அமர்வுகள் / அமர்வுகள் எனக் கணக்கிடப்படுகிறது.

குறிப்பிட்ட AI சேனலுக்கான உங்கள் செயல்திறன் தரவைக் காணுங்கள்

  1. உங்களின் Shopify நிர்வாகி பக்கத்தில், விற்பனைச் சேனல்கள் > Agentic என்பதற்குச் செல்லவும்.

  2. முக்கியப் பகுப்பாய்வுப் பிரிவில், கீழ்தோன்றும் மெனுவில் இயல்புநிலை விற்பனை விருப்பத்தை வைத்திருக்கவும் அல்லது மெனுவைக் கிளிக் செய்து, ஆர்டர்கள், ஆன்லைன் ஸ்டோர் அமர்வுகள் அல்லது ஆன்லைன் ஸ்டோர் மாற்றங்கள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

  3. விருப்பத்தேர்வு: கடந்த 30 நாட்கள் கீழ்தோன்றும் மெனுவைக் கிளிக் செய்து, உங்கள் சொந்த தேதிக் வரம்பை அமைத்து, பயன்படுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. நீங்கள் எந்த AI சேனலுக்குத் தொடர்புடைய அறிக்கையைக் காண விரும்புகிறீர்களோ, அதன் பெயரைக் கிளிக் செய்யவும்.

ஏஜென்டிக் ஸ்டோர்ஃபிரண்ட்கள் மூலம் உங்கள் மொத்த விற்பனைச் செயல்திறனைக் காணுங்கள்

நீங்கள் விற்பனை செய்யும் அனைத்து AI சேனல்களிலும் உள்ள உங்கள் ஏஜென்டிக் ஸ்டோர்ஃபிரண்ட்களின் விற்பனைக்கான மொத்த விற்பனை அறிக்கையையும் நீங்கள் பார்க்கலாம்.

படிகள்:

  1. உங்களின் Shopify நிர்வாகி பக்கத்தில், விற்பனைச் சேனல்கள் > Agentic என்பதற்குச் செல்லவும்.

  2. உலாவு பிரிவில் உள்ள ஏஜென்டிக் சேனல்களில் உங்கள் செயல்திறனைப் புரிந்துகொள்ளுங்கள் பேனலில் மதிப்பாய்வு செய் என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. அறிக்கை விவரங்களைப் பார்க்கவும், விருப்பப்பட்டால் வினவல் அல்லது காட்சிப்படுத்தலில் நீங்கள் விரும்பும் ஏதேனும் கூடுதல் மாற்றங்களைச் செய்யவும். மேலும் தகவலுக்கு, விற்பனை அறிக்கைகள் மற்றும் தரவைப் புரிந்துகொள்ளுதல் மற்றும் உங்கள் விற்பனை அறிக்கைகளைத் தனிப்பயனாக்குதல் ஆகியவற்றைப் பார்க்கவும்.

உங்கள் தயாரிப்புகளின் கண்டறியும் திறன் மற்றும் தரவரிசையை மதிப்பாய்வு செய்தல்

விற்பனைச் சேனல்கள் > ஏஜென்டிக் என்பதில் உள்ள தேடல் மாதிரிக்காட்சிக் கருவியானது, ஏஜென்டிக் ஸ்டோர்ஃபிரண்டுகளில் உங்கள் தயாரிப்புகளின் தரவரிசை எவ்வாறிருக்கலாம் என்பதை மதிப்பாய்வு செய்ய தேடல் வினவல்களை ரன் செய்ய உங்களை அனுமதிக்கிறது. எந்தத் தயாரிப்புகள் சிறப்பாகச் செயல்படுகின்றன, எந்தத் தயாரிப்புகள் தரவரிசையில் இடம்பெறவில்லை, அவற்றின் தெரிவுநிலையை மேம்படுத்த நீங்கள் என்ன செய்யலாம் என்பதைப் புரிந்துகொள்ள உங்களுக்கு உதவும் வகையில், Shopify Catalog தேடலின் அசல் அவுட்புட்டுகளை இது காட்டுகிறது.

தேடல் வினவலை இயக்குதல்

  1. உங்களின் Shopify நிர்வாகி பக்கத்தில், விற்பனைச் சேனல்கள் > Agentic என்பதற்குச் செல்லவும்.

  2. பின்வரும் முறைகளில் ஒன்றைப் பயன்படுத்தித் தேடலை இயக்கவும்:

    • நீங்கள் எவ்வாறு தரவரிசைப்படுத்தப்படலாம் என்பதைப் பார்க்க, தேடல் வினவலை உள்ளிடுக என்ற புலத்தில், தயாரிப்பின் பெயர் அல்லது முக்கியச் சொல்லை உள்ளிட்டு, Enter ஐ அழுத்தவும்.
    • சிறந்த தேடல் வினவல்கள் அல்லது உங்கள் தயாரிப்புகள் தோன்றிய வினவல்கள் ஆகிய பிரிவுகளில், பரிந்துரைக்கப்பட்ட வினவலைக் கிளிக் செய்யவும்.
  3. விருப்பத்தேர்வு: தளத்தின் AI அரட்டை இன்டர்ஃபேஸில் வினவல் எப்படிக் காட்டப்படலாம் என்பதைப் பார்க்க, இந்தத் தேடலை முன்னோட்டமிடு பிரிவில் சேனலின் பெயரைக் கிளிக் செய்யவும்.

உங்கள் சிறந்த தரவரிசைத் தயாரிப்புகளை மதிப்பாய்வு செய்தல்

உங்கள் தேடல் வினவலுக்கான உலகளாவிய சிறந்த முடிவுகளில் உங்களின் ஏதேனும் தயாரிப்புகள் இடம் பெற்றால், "உங்கள் தயாரிப்புகளில் 10 சிறந்த தரவரிசைத் தேடலில் உள்ளன" என்பது போன்ற உறுதிப்படுத்தல் செய்தி காட்டப்படும். உங்கள் தேடல் வினவலுக்கான மற்ற அனைத்து Shopify Catalog தயாரிப்புகளுக்கும் போட்டியாக உங்கள் ஸ்டோரில் இருந்து இடம்பெற்ற தயாரிப்புகள் இவையே.

இந்த வினவலுக்கான தரவரிசையில் இடம்பெறக்கூடிய உங்கள் தயாரிப்புகள் பிரிவில், ஒவ்வொரு சிறந்த தரவரிசைத் தயாரிப்பும் அதன் பட்டியல் தரம் காட்டி மற்றும் பட்டியல் நுண்ணறிவுகளுடன் காட்டப்படும்.

பட்டியல் தரக் காட்டிகளைப் புரிந்துகொள்ளுதல்

பட்டியல் தரம் காட்டியானது ஒவ்வொரு தயாரிப்புக்கும் ஒரு வண்ணப் பட்டை மீட்டராகக் காண்பிக்கப்படும். கண்டறியும் திறனுக்காக உங்கள் தயாரிப்புப் பட்டியல் எவ்வளவு முழுமையாகவும் போட்டித்தன்மையுடனும் உள்ளது என்பதற்கான காட்சிச் சமிக்கையை வழங்குவதே இதன் நோக்கமாகும். சிறந்த பட்டியல் தரக் குறியீடு இருந்தால், பொதுவாக உங்கள் தயாரிப்பானது AI சேனல்கள் அதைத் துல்லியமாகத் தரவரிசைப்படுத்துவதற்கும் வெளிப்படுத்துவதற்குமான அவசியத் தரவுகளைக் கொண்டிருக்கிறது என்று பொருளாகும்.

பட்டியல் நுண்ணறிவுகளைக் காண, எந்தவொரு தயாரிப்பிலும் உள்ள கீழ்நோக்கிய அம்புக்குறி ஐகானைக் கிளிக் செய்யலாம். இந்த நுண்ணறிவுகள் பட்டியல் தர மதிப்பெண்ணைப் பின்வரும் குறிப்பிட்ட சமிக்கைகளாகப் பிரித்துக் காட்டும்:

  • விளக்கத்தின் முழுமைத்தன்மை: உங்கள் தயாரிப்பு விளக்கத்தின் சொல் எண்ணிக்கையை அளவிடும். AI சேனல்களில் உள்ள வாடிக்கையாளர்களின் இயல்பான-மொழி வினவல்களுடன் தயாரிப்புகளைப் பொருத்துவதற்கு, AI சேனல்கள் விளக்கங்களையே நம்பியுள்ளன. எனவே, விரிவான விளக்கங்கள் நீங்கள் தரவரிசையில் இடம்பெறுவதற்கான வாய்ப்புகளை மேம்படுத்தலாம். உங்கள் தயாரிப்பு விளக்கம் குறித்து மேலும் விரிவான நுண்ணறிவுகளைப் பெற, நீங்கள் Sidekick என்பதைப் பயன்படுத்தலாம்.
  • படத்தின் வீச்சு: தயாரிப்புப் படங்களின் எண்ணிக்கையை அளவிடும். அதிகமான படங்களை வைத்திருப்பது, வெவ்வேறு சூழல்கள் மற்றும் வாடிக்கையாளர் அனுபவங்கள் முழுவதிலும் AI சேனல்கள் உங்கள் தயாரிப்பைக் காட்சிப்படுத்த உதவலாம்.
  • தயாரிப்பு மதிப்பாய்வுகள்: உங்களின் சராசரித் தயாரிப்பு மதிப்பீடு மற்றும் மதிப்பாய்வு எண்ணிக்கையை அளவிடும். தயாரிப்பு மதிப்பாய்வுகள் நம்பகத்தன்மை மற்றும் பிரபலத்தின் அறிகுறியாகச் செயல்படும். இது AI சேனல்கள் உங்கள் தயாரிப்புகளை எப்படித் தரவரிசைப்படுத்துகின்றன என்பதில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். நம்பகமான ஆதாரங்களால் சரிபார்க்கப்படும் மதிப்பாய்வுகளில் இருந்து மட்டுமே இந்த அளவீடு கணக்கிடப்படுகிறது.
  • மாறுபாடு மற்றும் விருப்பத்தின் முழுமைத்தன்மை: மாறுபாடுகள், விருப்பங்கள் மற்றும் அவை இருப்பில் கிடைக்கும்தன்மை ஆகியவற்றை அளவிடும். முழுமையான மாறுபாட்டுத் தரவானது குறிப்பிட்ட அளவு, நிறம் அல்லது ஸ்டைல் போன்ற வாடிக்கையாளரின் வாங்கும் நோக்கத்துடன் பொருந்துவதற்கு AI சேனல்களுக்கு உதவலாம். ஏஜென்ட்கள் புரிந்துகொள்வதற்கோ பரிந்துரைப்பதற்கோ கடினமான சுருக்கப்பெயர்கள் அல்லது எண்கள் உங்கள் மாறுபாடு அல்லது விருப்பத்தின் பெயர்களில் உள்ளனவா என்பதையும் இந்த அளவீடு சரிபார்க்கிறது.
  • கடைப் பாலிசியின் முழுமைத்தன்மை: உங்களின் ஷிப்பிங், ரிட்டர்ன்கள், பணத்தைத் திரும்பப்பெறுதல் மற்றும் பிற ஸ்டோர் பாலிசிகள் உள்ளனவா என்பதை அளவிடும். பாலிசிகள் ஒரு ஸ்டோர் முறையானது என்பதைக் குறிப்பதுடன், உங்கள் தயாரிப்புகளைத் தயக்கமின்றிப் பரிந்துரைக்க AI சேனல்களுக்கு உதவலாம்.

தரவரிசையில் இடம்பெறாத உங்கள் தயாரிப்புகளை மதிப்பாய்வு செய்தல்

Shopify Catalog இன் சிறந்த 10 தரவரிசைகளில் உங்கள் தயாரிப்புகள் இடம்பெறவில்லை என்றால், உங்கள் தேடல் வினவலுக்கு மிகவும் பொருத்தமான தயாரிப்புகளை உங்கள் ஸ்டோரில் மதிப்பாய்வு செய்யலாம். சிறந்த முடிவுகளில் சேர்க்கப்படும் அளவுக்குப் போதுமான போட்டித்தன்மையற்ற தயாரிப்புகளே இவையாகும்.

மேம்படுத்த வேண்டிய பகுதிகளைக் கண்டறிய, இந்தத் தயாரிப்புகளுக்கான பட்டியல் தரக் காட்டிகளையும் பட்டியல் நுண்ணறிவுகளையும் நீங்கள் மதிப்பாய்வு செய்யலாம். விடுபட்ட தயாரிப்பு விளக்கங்கள், போதுமான தொடர்புடைய படங்கள் இல்லாமை அல்லது முழுமையற்ற மாறுபாட்டுத் தரவு ஆகியவை இதில் அடங்கலாம். உங்கள் பட்டியலை மேம்படுத்துங்கள் பிரிவில் பரிந்துரைக்கப்பட்ட செயல்களை நீங்கள் மேற்கொண்டால், காலப்போக்கில் உங்கள் தயாரிப்புகளைக் கண்டறியும் திறன் மேலும் அதிகரிக்கலாம்.