வாங்கு பொத்தான், உட்பொதிக்கப்பட்ட சேகரிப்பு அல்லது உட்பொதிக்கப்பட்ட கார்டைத் தனிப்பயனாக்குதல் அல்லது அகற்றுதல்

உங்கள் இணையப்பக்க மூல HTML இல் உள்ள உட்பொதி குறியீட்டைத் திருத்துவதன் மூலம் வாங்கு பொத்தான், உட்பொதிக்கப்பட்ட சேகரிப்பு அல்லது உட்பொதிக்கப்பட்ட கார்டின் தோற்றம் அல்லது செயல்பாட்டை நீங்கள் மாற்றலாம். உங்கள் இணையப்பக்கத்திலிருந்து குறியீட்டை அகற்றுவதன் மூலம் ஒரு உட்பொதிவையும் உங்களால் நீக்க முடியும்.

வாங்கு பொத்தான் ஆனது கொள்முதல் பொத்தானுடன் சேர்த்து ஒரு தயாரிப்பைக் காட்டும். ஒரு உட்பொதிக்கப்பட்ட சேகரிப்பு பல தயாரிப்புகளைக் காட்டும். வாடிக்கையாளர்கள் பல பக்கங்களில் பயன்படுத்தக்கூடிய ஒரு பிரத்யேக கார்டை உட்பொதிக்கப்பட்ட கார்ட் காட்டும்.

உட்பொதி குறியீடு என்பது நீங்கள் வாங்கு பொத்தான் அல்லது கார்டை உருவாக்கியபோது உங்கள் Shopify நிர்வாகியில் இருந்து நகலெடுத்து உங்கள் இணையப்பக்கத்தின் HTML இல் ஒட்டிய குறியீட்டுத் துணுக்காகும். இணையப்பக்கங்களில் ஊடாடும் அம்சங்களைச் சேர்க்கப் பயன்படும் நிரலாக்க மொழியான JavaScript இல் உட்பொதி குறியீடு எழுதப்பட்டுள்ளது.

வாங்கு பொத்தான் உட்பொதி குறியீட்டைப் புரிந்துகொள்ளுதல்

ஒவ்வொரு வாங்கு பொத்தானும் components (கூறுகள்) எனப்படும் தனித்தனிப் பகுதிகளால் உருவாக்கப்பட்டுள்ளது. கூறு என்பது வாங்கு பொத்தான் அனுபவத்தின் ஒரு பகுதியைக் கட்டுப்படுத்தும் உட்பொதி குறியீட்டின் பெயரிடப்பட்டப் பிரிவாகும். எடுத்துக்காட்டாக, உங்கள் இணையப்பக்கத்தில் ஒரு கார்டுடன் தயாரிப்பைச் சேர்க்கும்போது, உட்பொதி குறியீடு பின்வரும் கூறுகளை உருவாக்குகிறது:

  • தயாரிப்புத் தகவலையும் வாங்குவதற்கான பொத்தானையும் காண்பிக்கும் ஒரு product கூறு
  • கார்ட்டின் உள்ளடக்கங்களைக் காண்பிக்கும் ஒரு cart கூறு
  • கார்ட்டைத் திறக்கும் ஐகானைக் காண்பிக்கும் கார்ட் toggle கூறு

உங்கள் தயாரிப்புக் கூறு ஒரு தயாரிப்பு விவரங்கள் அடங்கிய பாப்-அப் சாளரத்தைத் திறந்தால், உட்பொதி குறியீடு இரண்டு கூடுதல் கூறுகளை உருவாக்குகிறது: பாப்-அப்பிற்கான ஒரு modal கூறு மற்றும் பாப்-அப்பிற்குள் உள்ள தயாரிப்புத் தகவலுக்கான ஒரு modalProduct கூறு.

பின்வரும் குறியீட்டுத் துணுக்கில், product மற்றும் cart ஆகியவற்றுக்குத் தனித்தனி கூறுகள் உள்ளன:

ShopifyBuy.UI.onReady(client).then(function (ui) {
  ui.createComponent('product', {
    id: 12345,
    options: {
      product: {
        buttonDestination: 'cart',
        contents: {
          description: true
        },
        text: {
          button: 'Add to Cart'
        },
        styles: {
          button: {
            'background-color': 'blue'
          }
        }
      },
      cart: {
        styles: {
          button: {
            'background-color': 'orange'
          }
        }
      }
    }
  });
});

உட்பொதி குறியீட்டில் உள்ள ஒரு configuration object (உள்ளமைவு ஆப்ஜெக்ட்) மூலம் ஒவ்வொரு கூறும் கட்டமைக்கப்படுகிறது. ஆப்ஜெக்ட் என்பது அமைப்புகளின் கட்டமைக்கப்பட்ட குழுவாகும், இது திறவுகோல்-மதிப்பு இணைகளின் பட்டியலாக வடிவமைக்கப்பட்டுள்ளது:

  • key (திறவுகோல்) என்பது buttonDestination போன்ற ஒரு அமைப்பின் பெயராகும்.
  • value (மதிப்பு) என்பது 'cart' போன்ற அமைப்பிற்காக அமைக்கப்பட்டதாகும்.

ஒரு ஆப்ஜெக்ட் ஆனது விரிதாளைப் போன்றது: ஒவ்வொரு திறவுகோலும் ஒரு நெடுவரிசையின் பெயருக்குச் சமமானதாகும், ஒவ்வொரு மதிப்பும் செல்லில் உள்ள உள்ளடக்கங்களுக்குச் சமமானதாகும். உங்கள் வாங்கு பொத்தான்களின் தோற்றம் அல்லது செயல்பாட்டை மாற்ற, உள்ளமைவு ஆப்ஜெக்ட்டுகளுக்குள் உள்ள திறவுகோல்களையும் மதிப்புகளையும் திருத்தவும்.

ஒவ்வொரு கூறிலும் திருத்தக்கூடிய பல திறவுகோல்கள் உள்ளன. திருத்தக்கூடிய திறவுகோல்களின் முழுப் பட்டியலுக்கு, டெவலப்பர் ஆவணங்களைப் பார்க்கவும். உங்கள் உட்பொதி குறியீட்டில் இல்லாத ஒரு திறவுகோலை உள்ளமைக்க, அந்தத் திறவுகோலைப் பொருத்தமான ஆப்ஜெக்ட்டில் சேர்க்கவும். எடுத்துக்காட்டிற்கு, தயாரிப்பு உட்பொதிவின் தளவமைப்பை மாற்றுதல் என்பதைப் பார்க்கவும்.

கூறு ஸ்டைல்களைத் தனிப்பயனாக்குதல்

ஒவ்வொரு கூறும் நெஸ்ட் செய்யப்பட்ட styles உள்ளமைவு ஆப்ஜெக்ட்டைக் கொண்டுள்ளது, அது கூறின் தோற்றத்தைக் கட்டுப்படுத்துகிறது. nested object என்பது மற்றொரு ஆப்ஜெக்ட்டிற்குள் வைக்கப்பட்டுள்ள ஆப்ஜெக்ட்டாகும்.

styles ஆப்ஜெக்ட் CSS-ஐப் பயன்படுத்துகிறது, இது இணையப்பக்கக் கூறுகள் எவ்வாறு பார்வைக்கு ஸ்டைலாக வழங்கப்படுகின்றன என்பதை விவரிக்கப் பயன்படும் மொழியாகும். styles ஆப்ஜெக்ட்டில் உள்ள ஒவ்வொரு மேல்-நிலை திறவுகோலும், தலைப்பு அல்லது பொத்தான் போன்ற கூறில் உள்ள ஒரு எலிமெண்ட்டைக் குறிக்கிறது. அந்தத் திறவுகோலிற்குள் நெஸ்ட் செய்யப்பட்ட ஒவ்வொரு திறவுகோலும் ஒரு CSS பிராப்பர்ட்டியாகும் (எடுத்துக்காட்டாக, background-color அல்லது border) மற்றும் மதிப்பானது ஒரு CSS மதிப்பாகும்.

options: {
  product: {
    styles: {
      button: {
        'background-color': 'red',
        'border-radius': '5px'
      }
    }
  }
}

செல்லுபடியாகும் எந்தவொரு CSS பிராப்பர்ட்டியையும் styles என்பதில் சேர்க்கலாம். சிறுகோடுகள் உள்ள பிராப்பர்ட்டி பெயர்கள் மேற்கோள் குறிகளில் இருப்பதை உறுதிசெய்யவும்.

CSS தனிப்பயனாக்கம் பற்றிய கூடுதல் தகவலுக்கு, டெவலப்பர் ஆவணங்களைப் பார்க்கவும்.

உட்பொதிக்கப்பட்ட சேகரிப்புக் கூறுகள்

உட்பொதிக்கப்பட்ட சேகரிப்புகள், வாங்கு பொத்தான்களைப் போன்ற அதே உள்ளமைவு ஆப்ஜெக்ட்டுகளைப் பயன்படுத்துகின்றன. சேகரிப்பிற்குள் உள்ள தயாரிப்புகளின் தளவமைப்பு அல்லது பிற பிராப்பர்ட்டிகளைத் திருத்த, product உள்ளமைவு ஆப்ஜெக்ட்டைக் கண்டறிந்து, தயாரிப்பு உட்பொதிவைத் திருத்துவது போலவே அதையும் திருத்தவும். Next page (அடுத்தப் பக்கம்) பொத்தானின் உரை போன்ற சேகரிப்பின் பிராப்பர்ட்டிகளைத் திருத்துவதற்குப் பதிலாக productSet உள்ளமைவு ஆப்ஜெக்ட்டைத் திருத்தவும்.

கூறின் உரை போன்ற சில திறவுகோல்கள், நெஸ்ட் செய்யப்பட்ட ஆப்ஜெக்ட்டுகள் வழியாக உள்ளமைக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, Next page பொத்தானுக்கான உரை, productSet கூறின் text ஆப்ஜெக்ட்டிற்குள் உள்ளது:

options: {
  productSet: {
    text: {
      nextPageButton: 'Continue'
    }
  }
}

தயாரிப்பு விவர மாடல் என்பது தயாரிப்புத் தகவலைக் காண்பிக்கும் ஒரு பாப்-அப் சாளரமாகும். கார்ட்டிற்குப் பதிலாக தயாரிப்பு விவர மாடலுக்கு உங்கள் வாடிக்கையாளரை வழிநடத்த, உங்கள் இணையப்பக்கத்தின் மூல HTML-இல் உங்களின் வாங்கு பொத்தான் உட்பொதி குறியீட்டைத் திருத்தவும்.

படிகள்:

  1. நீங்கள் மாற்ற விரும்பும் தயாரிப்பு உட்பொதிவைக் கொண்ட பக்கத்தின் HTML-ஐத் திறக்கவும்.
  2. product உள்ளமைவு ஆப்ஜெக்ட்டைக் கண்டறியவும்.
  3. ஆப்ஜெக்ட்டில் buttonDestination திறவுகோலைக் கண்டறியவும்:
options: {
      product: {
        buttonDestination: 'cart'
      }
}
  1. மேற்கோள் குறிகள் உட்பட, அந்தத் திறவுகோலின் மதிப்பை 'modal' என மாற்றவும்:
options: {
      product: {
        buttonDestination: 'modal'
      }
}
  1. உங்கள் மாற்றங்களைச் சேமிக்கவும்.

தயாரிப்பு உட்பொதிவின் தளவமைப்பை மாற்றுதல்

கிடைமட்டத் தயாரிப்பு உட்பொதிவுத் தளவமைப்பானது, படத்தைத் தயாரிப்பு விவரங்களுக்கு மேலே வைக்காமல் அவற்றின் அருகில் வைக்கும். இந்தத் தளவமைப்பிற்கு மாற, உங்கள் இணையப்பக்கத்தின் மூல HTML-இல் உங்கள் வாங்கு பொத்தான் உட்பொதி குறியீட்டைத் திருத்தவும்.

படிகள்:

  1. நீங்கள் மாற்ற விரும்பும் தயாரிப்பு உட்பொதிவைக் கொண்ட பக்கத்தின் HTML-ஐத் திறக்கவும்.
  2. product உள்ளமைவு ஆப்ஜெக்ட்டைக் கண்டறியவும்.
  3. layout திறவுகோலைச் சேர்த்து, பின்னர் மதிப்பை 'horizontal' என அமைக்கவும். மதிப்பு மேற்கோள் குறிகளுடன் இருப்பதையும், முந்தைய வரி காற்புள்ளியுடன் முடிவதையும் உறுதிசெய்யவும்:
options: {
      product: {
        buttonDestination: 'modal',
        layout: 'horizontal'
      }
}
  1. உங்கள் மாற்றங்களைச் சேமிக்கவும்.

கார்ட் உட்பொதிவின் தோற்றம் மற்றும் செயல்பாட்டை மாற்றுதல்

கார்ட்டின் தோற்றம் அல்லது செயல்பாட்டை மாற்ற, உங்கள் உட்பொதி குறியீட்டில் உள்ள cart உள்ளமைவு ஆப்ஜெக்ட்டைத் திருத்தவும்.

படிகள்:

  1. நீங்கள் திருத்த விரும்பும் கார்ட்டைக் கொண்ட பக்கத்தின் HTML-ஐத் திறக்கவும்.
  2. உங்கள் உட்பொதி குறியீட்டில் cart உள்ளமைவு ஆப்ஜெக்ட்டைக் கண்டறியவும்:
options: {
      cart: {
        startOpen: false
      }
}
  1. கார்ட்டின் தோற்றம் அல்லது செயல்பாட்டை மாற்ற, ஏற்கனவே உள்ள திறவுகோலைத் திருத்தவும் அல்லது புதிய ஒன்றைச் சேர்க்கவும். உள்ளமைக்கக்கூடிய திறவுகோல்களின் முழுப் பட்டியலுக்கு, டெவலப்பர் ஆவணங்களைப் பார்க்கவும்.
  2. உங்கள் மாற்றங்களைச் சேமிக்கவும்.

வாங்கு பொத்தான், உட்பொதிக்கப்பட்ட சேகரிப்பு அல்லது உட்பொதிக்கப்பட்ட கார்ட்டை அழித்தல்

உங்கள் இணையப்பக்கத்திலிருந்து வாங்கு பொத்தான், உட்பொதிக்கப்பட்ட சேகரிப்பு அல்லது உட்பொதிக்கப்பட்ட கார்ட்டை அகற்ற, மூல HTML-இல் இருந்து அதன் உட்பொதி குறியீட்டை அழிக்கவும்.

படிகள்:

  1. வாங்கு பொத்தான், உட்பொதிக்கப்பட்ட சேகரிப்பு அல்லது உட்பொதிக்கப்பட்ட கார்ட்டைக் கொண்ட இணையப்பக்கத்தின் மூல HTML-ஐத் திறக்கவும்.
  2. மூல HTML-இல் இருந்து, <script data-shopify-buy-ui> என்பதில் தொடங்கி </script> என்பதில் முடிவடையும் முழு உட்பொதி குறியீட்டையும் அழிக்கவும். வாங்கு பொத்தான் உட்பொதி குறியீட்டிற்குப் பின்வருவது ஒரு எடுத்துக்காட்டாகும்:
<script data-shopify-buy-ui>
   var scriptURL = "https://cndurl.com/buy-button-storefront.js";
    if (window.ShopifyBuy && window.ShopifyBuy.UI) {
      ShopifyBuyInit();
    } else {
      var script = document.createElement('script');
      script.async = true;
      script.src = scriptURL;
      (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(script);
      script.onload = ShopifyBuyInit;
    }

    function ShopifyBuyInit() {
      var client = ShopifyBuy.buildClient({
        apiKey: 'your-api-key',
        domain: 'your-store.myshopify.com',
        appId: '6'
      });

      ShopifyBuy.UI.onReady(client).then(function (ui) {
        ui.createComponent('product', {
          id: 12345,
          options: {
            product: {
              buttonDestination: 'cart',
              contents: {
                description: true
              },
              text: {
                button: 'Add to Cart'
              },
              styles: {
                button: {
                  'background-color': 'blue'
                }
              }
            },
            cart: {
              styles: {
                button: {
                  'background-color': 'orange'
                }
              }
            }
          }
        });
      });
    }
</script>
  1. உங்கள் மாற்றங்களைச் சேமிக்கவும்.