DoorDash விற்பனைச் சேனலை அமைத்தல்
Shopify மூலம் DoorDash இல் விற்பனை செய்வதற்கான தேவைகள் மற்றும் பரிசீலனைகள், DoorDash விற்பனைச் சேனலை நிறுவும் விதம் மற்றும் உங்கள் ஸ்டோரை DoorDash உடன் இணைக்கும் விதம் குறித்து இந்தப் பக்கத்தில் நீங்கள் அறிந்துகொள்ளலாம்.
இந்தப் பக்கத்தில் உள்ளவை
- Shopify மூலம் DoorDash இல் விற்பனை செய்வதற்கான தேவைகள்
- Shopify மூலம் DoorDash இல் விற்பனை செய்வதற்கான பரிசீலனைகள்
- DoorDash விற்பனைச் சேனலை நிறுவுதல்
- உங்கள் ஸ்டோரை DoorDash உடன் இணைத்தல்
- கூடுதல் கடை இருப்பிடங்களை இணைத்தல்
- உங்கள் DoorDash ஸ்டோர்களை முடக்குதல் அல்லது துண்டித்தல்
- Shopify மூலம் DoorDash இல் விற்பனை செய்வதற்கான ஆதரவைப் பெறுதல்
Shopify மூலம் DoorDash இல் விற்பனை செய்வதற்கான தேவைகள்
Shopify இல் DoorDash விற்பனைச் சேனலைப் பயன்படுத்தப் பின்வரும் தேவைகளைச் சரிபார்க்கவும்:
- உங்களிடம் செயலில் உள்ள Shopify கணக்கு இருக்க வேண்டும்.
- உங்கள் ஸ்டோர் அமெரிக்காவில் இருக்க வேண்டும்.
- ஆர்டர்களைப் பெறுவதற்கு, டஷர் (Dasher) நேரடியாக வந்து செல்லும் வகையிலான சில்லறை விற்பனை ஸ்டோர்ஃபிரண்ட் ஒன்று உங்களிடம் இருக்க வேண்டும்.
- உங்களுக்கு DoorDash வணிகர் கணக்கு தேவை. நீங்கள் இன்னும் DoorDash இல் விற்பனை செய்யவில்லை எனில், அமைவின்போது கணக்கை உருவாக்கிக்கொள்ளலாம்.
- புதுப்பிக்கப்பட்ட சரக்கு இருப்பைக் கொண்ட, DoorDash விற்பனைச் சேனலில் வெளியிடப்பட்ட குறைந்தபட்சம் 20 செயலில் உள்ள தயாரிப்புகள் உங்களிடம் இருக்க வேண்டும்.
- உங்கள் தயாரிப்புகளில் உயர்தரப் படங்கள் இருக்க வேண்டும். படங்கள் இல்லாத தயாரிப்புகள் DoorDash இல் காட்டப்படமாட்டாது.
- உங்கள் தயாரிப்புகளில் தெளிவான, விரிவான விளக்கங்கள் மற்றும் துல்லியமான விலைகள் இருக்க வேண்டும்.
- DoorDash தற்போது ஆதரிக்காத உருப்படிகளை உங்கள் தயாரிப்புகள் முதன்மையாகக் கொண்டிருக்கக்கூடாது.
DoorDash விற்பனைச் சேனலைப் பயன்படுத்த உங்களுக்குக் குறிப்பிட்ட Shopify திட்டம் தேவையில்லை. உங்கள் வணிகத்தின் அளவைப் பொறுத்து DoorDash விற்பனைச் சேனல் நிறுவலைக் கட்டுப்படுத்தாது.
தகுதியான வணிகப் பகுப்புகள்
DoorDash விற்பனைச் சேனலானது பின்வரும் வணிகப் பகுப்புகளில் உள்ள தகுதியான நேரடிச் சில்லறை வணிகர்களுக்குக் கிடைக்கிறது:
- கலை மற்றும் கைவினைப்பொருட்கள்
- குழந்தைகளுக்கான பொருட்கள்
- அழகுசாதனப் பொருட்கள்
- புத்தகங்கள்
- மின்னணுவியல்
- ஃபேஷன்
- வீட்டு உபயோகப் பொருட்கள்
- வீட்டை மேம்படுத்துவதற்கான பொருட்கள்
- அலுவலகப் பொருட்கள்
- பாலியல் நலப் பொருட்கள்
- விளையாட்டுப் பொருட்கள்
- எழுதுபொருட்கள்
தற்போது ஆதரிக்கப்படவில்லை
பின்வரும் வணிகங்கள் மற்றும் உருப்படிகள் தற்போது DoorDash இல் ஆதரிக்கப்படவில்லை:
- மது அல்லது மதுபானங்கள்
- மிதிவண்டிகள் மற்றும் மின்சார மிதிவண்டிகள்
- 60 பவுண்டுக்கு (lb) மேலான பெரிய மற்றும் கனமான உருப்படிகள்
- சணல் அல்லது கஞ்சா சார்ந்த வணிகங்கள்
- வழங்குவதற்கு எந்தப் பருப்பொருள் தயாரிப்புகளும் இல்லாத சேவை சார்ந்த வணிகங்கள்
- புகையிலை அல்லது நிக்கோடின் தயாரிப்புகள்
- துப்பாக்கிகள், கத்திகள் அல்லது ஏர்சாஃப்ட் (airsoft) தயாரிப்புகள் போன்ற ஆயுதங்கள்
- மொத்தமாக மட்டுமே விற்கும் பிரத்தியேக மொத்த வணிகங்கள்
Shopify மூலம் DoorDash இல் விற்பனை செய்வதற்கான பரிசீலனைகள்
DoorDash விற்பனைச் சேனலை அமைக்கும் முன், பின்வரும் பரிசீலனைகளை மதிப்பாய்வு செய்யவும்:
- DoorDash விற்பனைச் சேனலை இலவசமாக நிறுவலாம். அமைவுக் கட்டணங்கள், மாதாந்திர மென்பொருள் செலவுகள் அல்லது ஒரு ஆர்டருக்கான ஒருங்கிணைப்புக் கட்டணங்கள் ஏதுமில்லை.
- உங்கள் ஆர்டர்களுக்கு DoorDash கமிஷன் வசூலிக்கிறது, அமைவின்போது நீங்கள் தேர்ந்தெடுக்கும் DoorDash திட்டத்தைப் பொறுத்து இந்த விகிதம் அமையும்.
- உங்களின் Shopify நிர்வாகியிலிருந்து உங்கள் DoorDash தயாரிப்பு அட்டவணையை நிர்வகிக்கலாம். DoorDash உங்கள் தயாரிப்புத் தரவை நேரடியாகத் திருத்த முடியாது என்பதால், உங்கள் தயாரிப்புகளில் செய்ய வேண்டிய மாற்றங்களை Shopify இல் செய்ய வேண்டும்.
- Shopify இல் நீங்கள் செய்யும் சரக்கு இருப்பு மற்றும் அட்டவணை மாற்றங்கள் உங்கள் DoorDash மெனுவில் காட்டப்படுவதற்குச் சில வினாடிகள் முதல் சில நிமிடங்கள் வரை ஆகலாம்.
DoorDash விற்பனைச் சேனலை நிறுவுங்கள்
- Shopify App Store இல் உள்ள DoorDash செயலிப் பக்கத்திற்குச் செல்லவும்.
- நீங்கள் ஏற்கனவே உங்கள் Shopify கணக்கில் உள்நுழைந்திருந்தால், நிறுவு என்பதைக் கிளிக் செய்யவும். இல்லையெனில், நிறுவ உள்நுழைக என்பதைக் கிளிக் செய்து, உங்கள் Shopify கணக்கில் உள்நுழைவதற்கான பிராம்ட்களைப் பின்பற்றவும்.
- செயலியை நிறுவு பக்கத்தில், நிறுவு என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து Shopify App Store இல் DoorDash Sales Channel எனத் தேடுவதன் மூலமும் நீங்கள் செயலியைச் கண்டறியலாம்.
உங்கள் ஸ்டோரை DoorDash உடன் இணையுங்கள்
நீங்கள் விற்பனைச் சேனலை நிறுவிய பிறகு, கடை இருப்பிடத்தை DoorDash உடன் இணைக்க வேண்டும். நீங்கள் ஏற்கனவே DoorDash இல் விற்பனை செய்தாலும் செய்யாவிட்டாலும் ஓர் இருப்பிடத்தை இணைக்க முடியும்.
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, விற்பனைச் சேனல்கள் > DoorDash என்பதற்குச் செல்லவும்.
தொடங்குக என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்டோரை இணை என்பதைக் கிளிக் செய்யவும்.
கேட்கப்படும்போது நிபந்தனைகளை மதிப்பாய்வு செய்து ஏற்கவும்.
உங்கள் DoorDash வணிகத்திற்குத் தேவையான விவரங்களை உள்ளிடவும்.
நீங்கள் இணைக்க விரும்பும் கடை இருப்பிடத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
DoorDash Marketplace இல் உங்கள் தயாரிப்புப் பட்டியல்கள் எப்படிக் காட்டப்படுகின்றன என்பதை மதிப்பாய்வு செய்து, பிறகு அந்தத் தகவலை உறுதிப்படுத்தவும்.
உங்கள் DoorDash கணக்கை இணையுங்கள்:
- நீங்கள் ஏற்கனவே DoorDash இல் விற்பனை செய்பவராக இருந்தால், உங்கள் DoorDash Merchant கணக்கில் உள்நுழையவும். கேட்கப்படும்போது, நீங்கள் தேர்ந்தெடுத்த Shopify கடை இருப்பிடத்தைச் தொடர்புடைய DoorDash ஸ்டோருடன் பொருத்தி, அதன் பிறகு ஸ்டோர் இணைப்பை உறுதிப்படுத்தவும்.
- நீங்கள் DoorDashக்குப் புதியவர் என்றால், DoorDash Merchant கணக்கிற்குப் பதிவுசெய்யவும். உங்களுக்குப் பணம் கிடைப்பதற்காக உங்கள் வணிக விவரங்களை வழங்கவும், தொலைபேசி எண்ணைச் சரிபார்க்கவும், வணிக நேரங்களை அமைக்கவும், DoorDash திட்டத்தைத் தேர்வுசெய்யவும், வங்கிக் கணக்குத் தகவலைச் சேர்க்கவும் வேண்டும்.
உங்கள் இணைப்பு விவரங்களை மதிப்பாய்வு செய்து, பழக்கப்படுத்துதலைத் தொடங்க பிராம்ட்களைப் பின்பற்றவும்.
நீங்கள் இணைத்த பிறகு, DoorDash உங்கள் ஸ்டோரைப் பழக்கப்படுத்தத் தொடங்கும். DoorDash Merchant Portal இல் உள்ள Activation Tracker மூலம் இதன் முன்னேற்றத்தை நீங்கள் தடமறியலாம்.
உங்கள் பழக்கப்படுத்துதல் இடைநிறுத்தப்பட்டாலோ அல்லது தடைபட்டாலோ, பின்வரும் படிகளை நிறைவுசெய்யவும்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, விற்பனைச் சேனல்கள் > DoorDash என்பதற்குச் செல்லவும்.
DoorDash இணைப்பைத் தொடர்க என்பதைக் கிளிக் செய்யவும்.
பழக்கப்படுத்துதலை நிறைவுசெய்ய, பிராம்ட்களைப் பின்பற்றவும்.
கூடுதல் கடை இருப்பிடங்களை இணையுங்கள்
உங்களிடம் ஒன்றுக்கு மேற்பட்ட கடை இருப்பிடங்கள் இருந்தால், ஒவ்வொன்றையும் DoorDash உடன் இணைக்கலாம். ஏற்கனவே இணைக்கப்பட்ட இருப்பிடத்தை நீங்கள் தேர்ந்தெடுக்க முடியாது, இணைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு இருப்பிடமும் அதற்கெனத் தனி நிலையைக் கொண்டிருக்கும்.
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, விற்பனைச் சேனல்கள் > DoorDash என்பதற்குச் செல்லவும்.
ஸ்டோரை இணை என்பதைக் கிளிக் செய்யவும்.
நீங்கள் இணைக்க விரும்பும் கடை இருப்பிடத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
இணைப்பை நிறைவுசெய்ய, பிராம்ட்களைப் பின்பற்றவும்.
உங்கள் DoorDash ஸ்டோர்களை முடக்குங்கள் அல்லது துண்டியுங்கள்
உங்கள் DoorDash ஸ்டோர்களை நீங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தலாம் அல்லது ஒரு ஸ்டோரையோ அனைத்து ஸ்டோர்களையோ DoorDash இலிருந்து நிரந்தரமாகத் துண்டிக்கலாம்.
உங்கள் DoorDash ஸ்டோர்களைத் தற்காலிகமாக முடக்குங்கள்
DoorDash இல் உங்கள் ஸ்டோர்கள் ஆர்டர் செய்யக்கூடியதாக இருப்பதை நீங்கள் விரும்பாதபோது, இணைக்கப்பட்ட உங்கள் DoorDash ஸ்டோர்களைத் தற்காலிகமாக இடைநிறுத்தலாம். உங்கள் ஸ்டோர்களை முடக்குவது அட்டவணை மற்றும் சரக்கு இருப்பு ஒத்திசைவை நிறுத்துகிறது, மேலும் ஆர்டர்கள் Shopify உடன் ஒத்திசைக்கப்படாது.
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, விற்பனைச் சேனல்கள் > DoorDash என்பதற்குச் செல்லவும்.
அனைத்து ஸ்டோர்களையும் முடக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்கள் ஸ்டோர்களை மீண்டும் செயல்படுத்த, அனைத்து ஸ்டோர்களையும் செயல்படுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்கள் DoorDash இணைப்பைத் துண்டியுங்கள்
ஸ்டோரைத் துண்டிப்பது நிரந்தரமானதாகும். ஒரு ஸ்டோரையோ அல்லது அனைத்து ஸ்டோர்களையோ நீங்கள் துண்டித்த பிறகு, செயலியை மீண்டும் இணைப்பதன் மூலம் முந்தைய ஸ்டோரையோ DoorDash இல் உள்ள கணக்கையோ மீட்டெடுக்க முடியாது. துண்டித்த பிறகு மீண்டும் DoorDash இல் விற்பனை செய்ய, புதிய அமைவை நீங்கள் நிறைவுசெய்ய வேண்டும். அதற்குப் பதிலாக உங்கள் DoorDash ஸ்டோர்களைத் தற்காலிகமாக இடைநிறுத்த, அனைத்து ஸ்டோர்களையும் முடக்கு என்பதைப் பயன்படுத்தவும்.
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, விற்பனைச் சேனல்கள் > DoorDash என்பதற்குச் செல்லவும்.
பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:
- இணைக்கப்பட்டுள்ள ஒரு கடை இருப்பிடத்தை நிரந்தரமாக மூட, ஸ்டோரைத் துண்டி என்பதைக் கிளிக் செய்யவும்.
- இணைக்கப்பட்டுள்ள அனைத்து இருப்பிடங்களையும் அல்லது உங்கள் DoorDash கணக்கையும் நிரந்தரமாக மூட, அனைத்து ஸ்டோர்களையும் துண்டி என்பதைக் கிளிக் செய்யவும்.
Shopify மூலம் DoorDash இல் விற்பனை செய்வதற்கான ஆதரவைப் பெறுங்கள்
Shopify இல் உள்ள DoorDash விற்பனைச் சேனல், உங்களின் DoorDash Merchant கணக்கு, DoorDash Marketplace பட்டியல்கள் அல்லது DoorDash ஆர்டர்கள் தொடர்பான உதவிக்கு, DoorDash ஆதரவைத் தொடர்புகொள்ளவும்.
DoorDash Merchant Portal-லிருந்து DoorDash Support-ஐத் தொடர்புகொள்ள, பின்வரும் படிகளை நிறைவுசெய்யவும்:
- DoorDash Merchant Portal இல் உள்நுழையவும்.
- Help என்பதைக் கிளிக் செய்யவும்.
- Submit a request என்பதைக் கிளிக் செய்யவும்.
- பேமெண்ட்டுகள், கணக்கு, மெனுக்கள் அல்லது நேரலை ஆர்டர்கள் போன்ற உங்களின் சிக்கலுக்குப் பொருத்தமான வகையைத் தேர்ந்தெடுக்கவும்.
- உங்கள் கோரிக்கையைச் சமர்ப்பிக்க பிராம்ட்களைப் பின்பற்றவும்.
நேரலை ஆர்டர் சிக்கல்களுக்கு, DoorDash Support-ஐ 855-222-8111 என்ற எண்ணில் அழைக்கவும். உங்களிடம் ஒரு Merchant Experience Partner இருந்தால், அவர்களுக்கும் நீங்கள் நேரடியாக மெசேஜ் அனுப்பலாம்.
பின்வரும் சிக்கல்கள் தொடர்பான உதவிக்கு DoorDash Support-ஐத் தொடர்புகொள்ளவும்:
- DoorDash செயலி நிறுவல் மற்றும் பழக்கப்படுத்துதல் அமைவு
- DoorDash அட்டவணை ஒத்திசைவுச் சிக்கல்கள் அல்லது விடுபட்ட தயாரிப்புகள்
- DoorDash ஆர்டர் மேலாண்மை, ரத்துசெய்தல்கள் மற்றும் பணத்தைத் திரும்பப்பெறுதல்கள்
- DoorDash Marketplace பட்டியல் மற்றும் தெரிவுநிலை
- DoorDash கட்டணங்கள், கமிஷன்கள், வருவாய்கள் மற்றும் பேஅவுட்டுகள்
- DoorDash விற்பனைச் சேனலுக்கான பல-இருப்பிட அமைவு
- சிக்கியுள்ள அல்லது முடங்கியுள்ள DoorDash பழக்கப்படுத்துதல்
- DoorDash-இல் ஸ்டோர் நேரங்களின் உள்ளமைவு
பொதுவான Shopify பிளாட்ஃபார்ம், கணக்கு, பில்லிங் அல்லது Shopify App Store சிக்கல்களுக்கு, Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளவும்.