Google & YouTube சேனலின் தேவைகள்
Google & YouTube சேனலைப் பயன்படுத்த, உங்கள் Shopify ஸ்டோர் சில தேவைகளைப் பூர்த்திசெய்ய வேண்டும்.
இந்தப் பக்கத்தில்
ஸ்டோருக்கான தேவைகள்
Google & YouTube சேனலைப் பயன்படுத்த, உங்கள் ஆன்லைன் ஸ்டோர் Google Merchant Center-இன் பின்வரும் தேவைகளைப் பூர்த்திசெய்ய வேண்டும்:
- உங்களுக்கு ஒரு Shopify ஆன்லைன் ஸ்டோர் இருக்க வேண்டும். மேலும் அது தனிப்பட்ட பயன்முறையில் இருக்கக் கூடாது.
- உங்கள் Shopify நிர்வாகியில் செல்லுபடியாகும் கட்டண வழங்குநரைச் சேர்க்க வேண்டும்.
- உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் பணத்தைத் திரும்பப்பெறுதல் கொள்கை மற்றும் சேவை விதிமுறைகளைச் சேர்க்க வேண்டும். Shopify-இன் உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் கொள்கைகளைச் சேர்ப்பது பற்றி மேலும் அறிக. இந்தக் கொள்கைகள் உங்கள் அடிக்குறிப்பு மெனுவில் இருக்க வேண்டும். உங்கள் அடிக்குறிப்பு மெனுவில் ஸ்டோரின் கொள்கைகளை நீங்கள் சேர்க்கவில்லை எனில், அமைவுப் சரிபார்ப்புப் பட்டியலில் உள்ள அடிக்குறிப்பு மெனுவில் பணத்தைத் திரும்பப்பெறுதல் கொள்கை மற்றும் சேவை விதிமுறைகளைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
- உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் உள்ள ஒரு பக்கத்தில் உங்கள் தொடர்பியல் தகவலை நீங்கள் சேர்க்க வேண்டும், அந்தத் தகவல் வாடிக்கையாளர்களுக்குத் தெரியும்படி இருக்க வேண்டும். மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண், அஞ்சல் முகவரி அல்லது தொடர்புப் படிவம் போன்ற ஏதேனும் ஒரு தொடர்பு முறையையாவது நீங்கள் சேர்க்க வேண்டும். தொடர்பியல் தகவலைச் சேர்ப்பது பற்றி மேலும் அறிக.
- ஆதரிக்கப்படும் நாடுகளில் ஒன்றிற்கு நீங்கள் ஷிப்பிங் செய்ய வேண்டும், மேலும் அந்த நாட்டிற்குப் பொருந்தக்கூடிய நாணயத்தில் விற்பனை செய்ய வேண்டும்.
நீங்கள் உங்கள் தயாரிப்புகளை ஷிப்பிங் செய்யும் நாட்டைப் பொறுத்து, Google Merchant Center தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் உங்கள் ஷிப்பிங் கட்டணங்களை அமைக்க வேண்டியிருக்கலாம்.
அமைவின்போது, உங்கள் ஸ்டோர் Google Merchant Center தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக நீங்கள் முடிக்க வேண்டிய பணிகளின் சரிபார்ப்புப் பட்டியலைக் காண முடியும். தொடர்புடைய பணிகளை நீங்கள் முடிக்கக்கூடிய, Shopify நிர்வாகியிலுள்ள பக்கத்திற்குச் செல்ல, தேவையொன்றின் அருகிலுள்ள இணைப்பைக் கிளிக் செய்யலாம்.
உங்கள் தொடர்புத் தகவலைச் சேர்த்தல்
உங்கள் வாடிக்கையாளர்கள் பார்க்கக்கூடிய இணையதளத்தில் உங்களின் தொடர்புத் தகவலைக் காண்பிக்க Google Merchant Center-இல் கண்டிப்பான வழிகாட்டுதல்கள் உள்ளன. உங்கள் வணிகம் குறித்த கீழ்க்காணும் தகவல்களில் குறைந்தது ஒன்றாவது உங்கள் வாடிக்கையாளர்களுக்குத் தெரிவதை உறுதிசெய்யவும்:
- அஞ்சல் முகவரி
- ஃபோன் எண்
- மின்னஞ்சல் முகவரி
- தொடர்புப் படிவம்
இந்தத் தகவல் உங்கள் ஸ்டோரில் உடனடியாகக் கிடைக்கவில்லை என்றாலோ, இதை எங்கு காட்டுவது என உங்களுக்குத் தெரியவில்லை என்றாலோ, உங்கள் ஸ்டோரில் எங்களைப் பற்றி என்ற பக்கத்தை எவ்வாறு சேர்ப்பது என அறிய பக்கங்கள் என்பதைப் பார்க்கவும்.
Google கணக்குத் தேவைகள்
Google & YouTube சேனலை அமைக்க, உங்களிடம் Google கணக்கு இருக்க வேண்டும். தயாரிப்புகளை ஒத்திசைக்க, உங்களுக்கு Google Merchant Center கணக்கும் தேவை. உங்கள் ஸ்டோர் மற்றும் தயாரிப்புத் தரவை Google-இல் பதிவேற்றவும், அவற்றை Google Performance Max பிரச்சாரங்கள் மற்றும் பிற Google சேவைகளுக்குக் கிடைக்கச் செய்யவும் உதவும் ஒரு கருவி, Google Merchant Center ஆகும். Google Merchant Center பற்றி மேலும் அறிக.
உங்களிடம் Google கணக்குகள் இல்லையெனில், Google & YouTube சேனலை அமைக்கும்போது அவற்றை நீங்கள் உருவாக்கலாம்.
உங்கள் Google Merchant Center கணக்கானது, வேறு எந்தக் கணக்குடனும் தொடர்பில்லாத சரிபார்க்கப்பட்ட ஒரு டொமைனுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். Google Merchant Center கணக்கை Google & YouTube சேனலுடன் இணைக்கும்போது, உங்கள் Shopify ஸ்டோரின் டொமைன் வேறு Google கணக்குடன் இணைக்கப்படாத பட்சத்தில் தானாகவே உரிமை கோரப்படும். உங்கள் டொமைன் வேறு Google Merchant Center கணக்குடன் இணைக்கப்பட்டிருந்தால், Shopify-யுடன் நீங்கள் இணைத்துள்ள Google Merchant Center கணக்கிற்கு டொமைன் உரிமை கோரலை இடமாற்றலாம்.
Shopify உடன் ஏற்கெனவே உள்ள Google Merchant Center கணக்கை ஒத்திசைக்கும் முன் கவனிக்க வேண்டியவை
நீங்கள் Google & YouTube சேனலை அமைத்து, ஏற்கெனவே உள்ள Google Merchant Center கணக்கை இணைக்கும்போது, உங்கள் Shopify ஸ்டோரிலிருந்து Google-க்குக் கீழ்க்காணும் தகவல் ஒத்திசைக்கப்படும்:
- உங்கள் ஆன்லைன் ஸ்டோர் டொமைன்
- உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் கிடைக்கும் தயாரிப்புகளுக்கான தயாரிப்புத் தகவல்
- ஷிப்பிங் மற்றும் வரிகள் போன்ற தொடர்புடைய Shopify ஸ்டோர் அமைப்புகள்
Google Merchant Center-இல் உங்கள் அமைப்புகளில் நீங்கள் செய்யும் எந்தவொரு மாற்றமும், உங்கள் கணக்குகளையும் நீங்கள் நடத்தும் ஏதேனும் Google Performance Max பிரச்சாரங்களையும் ஒத்திசைக்கும் Google & YouTube சேனலின் திறனைப் பாதிக்கக்கூடும்.
உங்கள் Merchant Center கணக்கு இணைக்கப்பட்ட பிறகு, Google & YouTube சேனல் உங்கள் தயாரிப்புகளைத் தனிப்படியாக ஒத்திசைக்கும். நீங்கள் ஏற்கெனவே தயாரிப்பு ஊட்டத்தை அமைத்திருந்தால், உங்கள் Shopify ஸ்டோருக்கும் உங்கள் Merchant Center கணக்கிற்கும் இடையிலான முரண்பாடுகளைத் தவிர்க்க அது மேலெழுதப்படும். எந்தெந்தத் தயாரிப்புகள் ஒத்திசைக்கப்படுகின்றன என்பதை நிர்வகிப்பது பற்றிய கூடுதல் தகவலுக்கு, உங்கள் தயாரிப்புகளை ஒத்திசைத்தல் என்பதைப் பார்க்கவும்.
ஷிப்பிங் தேவைகள்
சில நாடுகளில் உள்ள வணிகங்கள் விளம்பரங்கள் மற்றும் இலவசப் பட்டியல்களில் ஷிப்பிங் செலவைச் சேர்க்க வேண்டும். உங்கள் சலுகைகளில் ஷிப்பிங் தகவல் இல்லையெனில், அந்தச் சலுகை நிராகரிக்கப்படும்.
சலுகைகளில் ஷிப்பிங் தகவலைச் சேர்க்க வேண்டிய நாடுகள் பற்றிய கூடுதல் தகவலுக்கு, Google Merchant Center உதவியைப் பார்க்கவும்.
செயலியைப் பயன்படுத்துவதற்கு முன்பு, உங்கள் தயாரிப்புகளை எங்கு ஷிப்பிங் செய்கிறீர்கள் என்பதைப் பொறுத்து, Google & YouTube சேனலின் தேவைகளைப் பூர்த்தி செய்ய உங்கள் ஷிப்பிங் கட்டணங்களை நீங்கள் அமைக்க வேண்டியிருக்கலாம். Google Merchant Center உதவியில், தேவையான ஷிப்பிங் அமைப்புகள் பற்றி மேலும் அறிக.
ஆஸ்திரேலியா, ஜெர்மனி மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் குறிப்பிட்ட ஷிப்பிங் கேரியர்கள் மற்றும் சேவைகளுக்கான கேரியர் கணக்கிடும் ஷிப்பிங் கட்டணங்களை Google & YouTube சேனல் ஆதரிக்கிறது. எந்த ஷிப்பிங் கேரியர்கள் மற்றும் சேவைகளை Google ஆதரிக்கிறது என்பதை Google Merchant உதவி மையத்தில் உறுதிப்படுத்தவும். நீங்கள் ஆதரிக்கப்படாத ஷிப்பிங் கேரியரைப் பயன்படுத்தினால் அல்லது வேறு நாடு அல்லது பிராந்தியத்தில் வசித்தால், நீங்கள் பிரத்தியேக நிலையான ஷிப்பிங் கட்டணங்களைப் பயன்படுத்த வேண்டும்.
உங்கள் இலக்கு நாட்டை Google ஆதரித்தால், மேலும் Google & YouTube சேனலுக்கான ஷிப்பிங் கட்டணங்களை நீங்கள் சேர்க்க வேண்டும் எனில், உங்கள் Shopify ஸ்டோரிலிருந்து ஷிப்பிங் அமைப்புகளைத் தானாகவே இறக்குமதி செய்யத் தேர்வுசெய்யலாம். இல்லையெனில், Google Merchant Center-இல் உங்கள் ஷிப்பிங் கட்டணங்களை நீங்களே நேரடியாக அமைக்கலாம். உங்கள் ஸ்டோரின் ஷிப்பிங் அமைப்புகளை Google & YouTube சேனலுக்கு இறக்குமதி செய்யும் முன் கீழ்க்காணும் கவனிக்க வேண்டிய அம்சங்களைச் சரிபார்க்கவும்:
- Google & YouTube சேனலிலுள்ள இலக்கு நாட்டிற்கு உங்கள் தயாரிப்புகளை ஷிப்பிங் செய்வதற்கான கட்டணங்களை மட்டுமே நீங்கள் இறக்குமதி செய்ய முடியும்.
- நீங்கள் தயாரிப்புகளை ஷிப்பிங் செய்யும் நாட்டிற்கான பொதுவான ஷிப்பிங் சுயவிவரத்தில் ஒரு ஷிப்பிங் மண்டலத்தை நீங்கள் அமைத்திருக்க வேண்டும்.
- உங்கள் தயாரிப்புப் பட்டியல்களில் துல்லியமான உத்தேச விநியோகத் தேதிகள் இருப்பதை உறுதிசெய்ய, கீழ்க்காணும் நிபந்தனைகளின் அடிப்படையில் உங்கள் ஷிப்பிங் கட்டணங்களுக்கான ஷிப்பிங் நேரம் மற்றும் கையாளுதல் நேரத்தை Google கணக்கிடுகிறது:
- உங்கள் ஸ்டோரில் போக்குவரத்து நேரத்துடன் கூடிய பிரத்தியேக நிலையான கட்டணங்கள் இருந்தால், Google Merchant Center-இலுள்ள ஷிப்பிங் நேரமானது உங்கள் ஷிப்பிங் மற்றும் டெலிவரி அமைப்புகளில் அமைக்கப்பட்டுள்ள போக்குவரத்து நேரத்தின் அடிப்படையில் அமையும்.
- போக்குவரத்து நேரத்துடன் கூடிய பிரத்தியேக நிலையான கட்டணங்களை நீங்கள் பயன்படுத்தவில்லை எனில், உங்கள் பிராந்தியத்திலுள்ள வழக்கமான ஷிப்பிங் நேரங்களின் அடிப்படையில் ஷிப்பிங் நேரம் அமையும்.
- இயல்பாகவே, Shopify வணிகர்களுக்கான சராசரியான கையாளுதல் நேரத்தின் அடிப்படையிலேயே உங்கள் கையாளுதல் நேரம் அமையும்.
உங்கள் ஸ்டோரிலிருந்து ஷிப்பிங் அமைப்புகளைத் தானாகவே இறக்குமதி செய்தல்
நீங்கள் தயாரிப்புகளை ஷிப்பிங் செய்யும் நாட்டிற்கான ஷிப்பிங் மண்டலம் அமைக்கப் பட்டிருந்தால், உங்கள் ஸ்டோரிலிருந்து ஷிப்பிங் அமைப்புகளைத் தானாகவே இறக்குமதி செய்யலாம்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, விற்பனைச் சேனல்கள் > Google & YouTube என்பதற்குச் செல்லவும்.
மேலோட்டம் > அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
தயாரிப்பு ஊட்டம் பிரிவில், ஷிப்பிங் அமைப்புகள் என்பதற்கு அருகிலுள்ள தேர்ந்தெடு என்பதைக் கிளிக் செய்யவும்.
ஷிப்பிங் அமைப்புகளை உள்ளமை என்பதன் கீழ், அமைப்புகளைத் தானாக இறக்குமதி செய் என்பதைத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் ஸ்டோரிலிருந்து உங்களின் ஷிப்பிங் அமைப்புகளை இறக்குமதி செய்ய முடியுமா என்பதை Shopify சோதிக்கும்:
- உங்கள் ஸ்டோரின் ஷிப்பிங் அமைப்புகள் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தால், அவை உங்கள் ஸ்டோரிலிருந்து இறக்குமதி செய்யப்படும்.
- உங்கள் ஸ்டோரின் ஷிப்பிங் அமைப்புகள் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யவில்லை எனில், அவற்றை இறக்குமதி செய்ய முடியாது, அத்துடன் Google Merchant Center-இல் உங்கள் ஷிப்பிங் கட்டணங்களை நீங்களே நேரடியாக அமைக்க வேண்டும்.
உங்கள் ஸ்டோரின் ஷிப்பிங் அமைப்புகள் எப்போது புதுப்பிக்கப்பட்டாலும், அதிலுள்ள மாற்றங்கள் தானாகவே Google Merchant Center-க்கு மீண்டும் இறக்குமதி செய்யப்படும்.
தயாரிப்புத் தேவைகள்
உங்கள் தயாரிப்புகளை Google-இல் வெளியிடுவதற்கு முன்பு, அவற்றைப் பற்றிய குறிப்பிட்ட தகவலை Google கோரும். Google & YouTube சேனல் Shopify-யிலிருந்து உங்களின் தற்போதைய தயாரிப்புத் தரவை இறக்குமதி செய்யும், ஆனால் Google Merchant Center உடன் தயாரிப்புகளை ஒத்திசைக்கும் முன்பு சில கூடுதல் தகவல்களை நீங்கள் சேர்க்க வேண்டியிருக்கலாம்.
பெரும்பாலான தயாரிப்புகளுக்கு, கீழ்க்காணும் தகவல் மட்டும் சேர்க்கப்பட்டால் போதுமானது:
பின்வரும் தயாரிப்பு வகைகளுக்கு Google-இல் குறிப்பிட்ட தேவைகளும் உள்ளன:
- ஆடைகள் & அணிகலன்கள்
- மீடியா
- புத்தகங்கள்
Google உடன் ஒத்திசைக்க, மாறுபாடுகள் உட்பட தயாரிப்பு விருப்பங்கள் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும்.
Google தயாரிப்பு வகை
Google-இல் உங்கள் தயாரிப்புகள் துல்லியமாக வகைப்படுத்தப்படுவதை உறுதிசெய்ய, தயாரிப்புகளுடன் ஒரு Google தயாரிப்பு வகையைச் சேர்க்க வேண்டும். நீங்கள் தயாரிப்பு வகையைச் சேர்க்கவில்லை எனில், Google தானாகவே தயாரிப்புக்கு ஒரு வகையை ஒதுக்கும், ஆனால் நீங்கள் பிழைகளைச் சந்திக்கக்கூடும். மேலும் அறிய, தயாரிப்பு வகைகளுக்கான Google-இன் வழிகாட்டியைப் பார்க்கவும்.
தனித்துவமான தயாரிப்பு அடையாளங்காட்டிகள்
உங்களின் ஒவ்வொரு தயாரிப்புக்கும் பிரத்தியேகமான தயாரிப்பு அடையாளங்காட்டி இருக்க வேண்டும் என்று Google கோருகிறது. இந்த அடையாளங்காட்டிகள் மூலம், Google Shopping-இல் உள்ள இதே போன்ற தயாரிப்புகளுடன் உங்கள் தயாரிப்பை Google பொருத்திப் பார்க்கும். இந்த அடையாளங்காட்டிகள் சரியாக இல்லை எனில், Google உங்கள் தயாரிப்புகளை வெளியிடாது, மேலும் உங்கள் கணக்கு இடைநிறுத்தப்படலாம். Google Merchant Center உதவி மையத்திலிருந்து தனித்துவமான தயாரிப்பு அடையாளங்காட்டிகள் பற்றி மேலும் அறியவும்.
ஒரு தயாரிப்புக்கு GTIN (Global Trade Item Number) இருந்தால், அந்தத் தயாரிப்பை வெளியிடுவதற்கு முன் அதைச் சேர்க்க வேண்டும். தயாரிப்பு மாறுபாட்டின் விவரங்களில் GTIN-ஐச் சேர்க்கலாம்.
GTIN இல்லாத தயாரிப்புகளுக்கு, Google & YouTube சேனலில் உள்ள தயாரிப்புத் தரவில் நீங்கள் ஒரு MPN (உற்பத்தியாளர் பகுதி எண்) மற்றும் பிராண்டைச் சேர்க்க வேண்டும்.
குறிப்பிட்ட Google தயாரிப்பு வகைத் தேவைகள்
ஆடைகள் & அணிகலன்கள், மீடியா அல்லது புத்தகங்கள் Google தயாரிப்பு வகைகளில் உள்ள தயாரிப்புகளுக்கு Google சில குறிப்பிட்ட தேவைகளைக் கொண்டுள்ளது. Google & YouTube சேனலில் ஒரு தயாரிப்புக்கான வகையைத் தேர்ந்தெடுக்கும்போது, இந்தக் கூடுதல் தயாரிப்புத் தகவலை நீங்கள் சேர்க்க வேண்டும்.
ஆடைகள் மற்றும் அணிகலன்கள் தயாரிப்புத் தேவைகள்
ஆடைகள் & அணிகலன்கள் பிரிவில் உள்ள தயாரிப்புகள் வெளியிடப்படுவதற்கு முன்பாக, அவற்றுக்குக் குறிப்பிட்ட தயாரிப்புத் தரவு தேவைப்படலாம். நீங்கள் தயாரிப்புத் தரவைச் சேர்க்க வேண்டுமா என்பதைத் தீர்மானிக்க, பின்வரும் பண்புக்கூறுகளுக்கு Google Merchant Center உதவியின் வழிகாட்டுதல்களை மதிப்பாய்வு செய்யவும்:
மீடியா தயாரிப்புத் தேவைகள்
இசை, திரைப்படங்கள் அல்லது வீடியோ கேம்கள் பிரிவுகளில் உள்ள தயாரிப்புகளுக்கு UPC, EAN அல்லது JAN போன்ற தனித்துவமான தயாரிப்பு அடையாளங்காட்டிகள் இருக்க வேண்டும். Google Merchant Center உதவி மையத்திலிருந்து Google-இன் பிரத்தியேகமான தயாரிப்பு அடையாளங்காட்டிகள் பற்றி மேலும் அறியவும்.
புத்தகத் தயாரிப்புத் தேவைகள்
புத்தகங்கள் பிரிவில் உள்ள தயாரிப்புகளுக்கு ISBN ஒரு தனித்துவமான தயாரிப்பு அடையாளங்காட்டியாக இருக்க வேண்டும். Google Merchant Center உதவி மையத்திலிருந்து Google-இன் பிரத்தியேகமான தயாரிப்பு அடையாளங்காட்டிகள் பற்றி மேலும் அறியவும்.
Google விளம்பரங்களில் உங்கள் Shopify தயாரிப்புகள் காட்டப்படும்போது, Google Merchant Center தானாகவே தயாரிப்பு விலையை வாடிக்கையாளரின் உள்ளூர் நாணயத்திற்கு மாற்றும். Google விளம்பரத்தைக் கிளிக் செய்யும் வாடிக்கையாளர்கள், விளம்பரத்துடன் பொருந்துகின்ற வகையில் நாணயத்தையும் விலையையும் காட்டும் தயாரிப்புப் பக்கத்திற்குச் செல்வார்கள். Google Merchant Center உதவி மையத்திலிருந்து Google & YouTube சேனலுக்கான நாணய மாற்றம் பற்றி மேலும் அறியவும்.
Google Merchant Center-இல் உங்கள் ஷிப்பிங் அமைப்புகளை மேனுவலாக அமைக்கவும்
Google Merchant Center-இல் உங்கள் ஷிப்பிங் கட்டணங்களை மேனுவலாக அமைக்க விரும்பினால், உங்கள் Google விற்பனைச் சேனலில் ஷிப்பிங் அமைப்புகளை மேனுவலாக அமைக்க வேண்டும்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, விற்பனைச் சேனல்கள் > Google & YouTube என்பதற்குச் செல்லவும்.
மேலோட்டம் > அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
தயாரிப்பு ஊட்டம் பிரிவில், ஷிப்பிங் அமைப்புகள் என்பதற்கு அருகிலுள்ள தேர்ந்தெடு என்பதைக் கிளிக் செய்யவும்.
ஷிப்பிங் அமைப்புகளை உள்ளமை என்பதன் கீழ், Google Merchant Center-இல் ஷிப்பிங் அமைப்புகளை மேனுவலாக அமை என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
உங்கள் Google & YouTube சேனலில் ஷிப்பிங் அமைப்புகளை மாற்றிய பிறகு, நீங்கள் Google Merchant Center-இல் உங்கள் ஷிப்பிங் கட்டணங்களை மேனுவலாக அமைக்கலாம். Google தயாரிப்புப் பட்டியல்களிலிருந்து உத்தேச விநியோகத் தேதியை அகற்ற விரும்பினால், கையாளுதல் நேரம் புலம் காலியாக இருப்பதை உறுதிசெய்யவும்.
Google தயாரிப்புகள் குறித்த உதவியைப் பெறுதல்
பின்வரும் தலைப்புகள் குறித்த உதவியைப் பெற, Google-ஐத் தொடர்புகொள்ளவும்:
- உங்கள் Google Merchant Center கணக்கு
- Google Ads
- Google Local Inventory
- Google Analytics
- Shopify-ஆல் ஆதரிக்கப்படாத பிற Google தலைப்புகள்
Google & YouTube சேனலைப் பதிவிறக்க அல்லது தயாரிப்புகளை அமைக்க, நீங்கள் Shopify ஆதரவைத் தொடர்புகொண்டு உதவியைப் பெறலாம்.