ஏற்கனவே உள்ள சந்தைப் பட்டியல்களை Shopify தயாரிப்புகளுடன் இணைக்கவும்

உங்களின் இணைக்கப்பட்ட சந்தைகளில் ஏற்கனவே பட்டியல்கள் இருந்தால், ஏற்கனவே உள்ள பட்டியலைத் தொடர்புடைய Shopify தயாரிப்புடன் இணைக்க Marketplace Connect என்பதைப் பயன்படுத்தலாம்.

ஏற்கனவே உள்ள பட்டியல்களுடன் ஒரு சந்தையை நீங்கள் இணைத்திருக்கும்போது, தயாரிப்பு SKU, UPC (யுனிவர்சல் புரொடக்ட் கோட்) அல்லது தலைப்பின் அடிப்படையில் பொருந்தக்கூடிய தயாரிப்பைப் பரிந்துரைக்க Marketplace Connect உங்களின் Shopify ஸ்டோரைத் தேடும். செயலியால் பொருத்தமான ஒன்றைக் கண்டறிய முடியவில்லை என்றால், கீழ்தோன்றும் மெனுவிலிருந்து உங்கள் சொந்தப் பொருத்தத்தை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.

உங்கள் தயாரிப்புகளுடன் சந்தைகளின் பட்டியல்களை இணைத்த பிறகு, உங்களின் இணைக்கப்பட்ட பட்டியல்களுக்கான ஆர்டர்கள் மற்றும் சரக்கு இருப்பை Marketplace Connect ஒத்திசைக்கத் தொடங்கும். உங்கள் தயாரிப்புப் பட்டியல்களை இணைத்த பிறகு அவற்றை எவ்வாறு திருத்துவது என்பதை அறிக.

  1. உங்கள் Shopify நிர்வாகியில், செயலிகள் > Marketplace Connect என்பதற்குச் செல்லவும்.

  2. பட்டியல்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. சந்தைகள் கீழ்தோன்றும் மெனுவைக் கிளிக் செய்து, நீங்கள் தயாரிப்புகளை நிர்வகிக்க விரும்பும் சந்தையைத் தேர்ந்தெடுக்கவும்.

  4. பட்டியல்களை இணை என்பதைக் கிளிக் செய்து, பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

    • Marketplace Connect பொருத்தம் கண்டறிந்த சந்தைப் பட்டியல்களை இணைக்க, பட்டியலிடத் தயார் பேட்ஜுக்கு அடுத்துள்ள இணைப்பைக் கிளிக் செய்யவும். பரிந்துரைக்கப்பட்ட தயாரிப்புகளுடன் நீங்கள் இணைக்க விரும்பும் பட்டியல்களைத் தேர்ந்தெடுத்து, அனைத்தையும் அங்கீகரி என்பதைக் கிளிக் செய்யவும்.
    • Marketplace Connect நெருக்கமான பொருத்தம் கண்டறிந்த சந்தைப் பட்டியல்களை இணைக்க, நெருக்கமான பொருத்தம் பேட்ஜுக்கு அடுத்துள்ள இணைப்பைக் கிளிக் செய்து, பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:
      • பரிந்துரைக்கப்பட்ட தயாரிப்புகளுடன் நீங்கள் இணைக்க விரும்பும் பட்டியல்களைத் தேர்ந்தெடுத்து, அனைத்தையும் அங்கீகரி என்பதைக் கிளிக் செய்யவும்.
      • ஒரு பட்டியல் பொருத்தத்தை வேறொரு Shopify தயாரிப்புடன் மாற்ற, இணைப்பதற்கு Shopify SKU கீழ்தோன்றும் மெனுவிலிருந்து ஒரு தயாரிப்பைத் தேர்வுசெய்து, பொருத்தத்தை உறுதிப்படுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
    • Marketplace Connect பொருத்தம் கண்டறியாத சந்தைப் பட்டியல்களை இணைக்க, பொருத்தம் இல்லை பேட்ஜுக்கு அடுத்துள்ள இணைப்பைக் கிளிக் செய்யவும்.
      • சந்தைப் பட்டியல் நெடுவரிசையை மதிப்பாய்வு செய்து, இணைப்பதற்கு Shopify தயாரிப்பு நெடுவரிசையிலுள்ள Shopify SKU கீழ்தோன்றும் மெனுவிலிருந்து ஒரு தயாரிப்பைத் தேர்வுசெய்து, பொருத்தத்தை உறுதிப்படுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. பொருத்தங்களை மதிப்பாய்வு செய் என்பதைக் கிளிக் செய்யவும்.

  6. நீங்கள் இணைக்க விரும்பும் பொருத்தங்களை மதிப்பாய்வு செய்து, பட்டியல்களை இணை என்பதைக் கிளிக் செய்யவும்.

ஏற்கனவே உள்ள eBay பட்டியல்களை ஒரு தயாரிப்புடன் நீங்கள் இணைத்தால், eBay பட்டியல் விதிகளைத் தேர்ந்தெடுக்க உங்களிடம் கேட்கப்படும்.

eBay பட்டியல் விதிகளைத் தேர்ந்தெடுக்கவும்

Shopify உடன் நீங்கள் இணைக்க விரும்பும் eBay பட்டியல்களைத் தேர்வுசெய்த பிறகு, பின்வரும் பட்டியல் விதிகளைத் தேர்ந்தெடுக்குமாறு உங்களிடம் கேட்கப்படும்:

  • ஷிப்பிங் விதிகள்
  • திருப்பியளிப்புக் கொள்கை
  • eBay தலைப்பு
  • விளக்கம்
  • விலை மற்றும் வரிகள்

ஒவ்வொரு பட்டியல் விதிக்கும் பின்வருவனவற்றில் ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்:

  • தயாரிப்புப் பட்டியலுக்கு eBay இல் உள்ள தற்போதைய அமைப்புகளைப் பயன்படுத்த, eBay அமைப்புகளைப் பயன்படுத்து என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  • eBay இல் நீங்கள் உள்ளமைத்துள்ள அமைப்புகளை மேலெழுத, Marketplace Connect அமைப்புகள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும். Marketplace Connect அமைப்புகளைப் பயன்படுத்து என்பதை நீங்கள் தேர்ந்தெடுத்தால், eBay பட்டியலுக்கான அசல் அமைப்புகளை மீட்டெடுக்க முடியாது.

தலைப்பு, விளக்கம் அல்லது விலைக்கான eBay அமைப்புகளை நீங்கள் தேர்ந்தெடுத்து, பின்னர் அவற்றை Shopify இல் உள்ள தயாரிப்பு அமைப்புகளுடன் ஒத்திசைக்க விரும்பினால், மொத்தத் திருத்தியைப் பயன்படுத்தி எந்த நேரத்திலும் இந்த அமைப்புகளை நீங்கள் மாற்றலாம்.