eBay பட்டியல்களை அமைத்தல் மற்றும் நிர்வகித்தல்
eBay பட்டியல் இயல்புநிலைகளை அமைப்பதன் மூலமும் பட ஒத்திசைவை முடக்குவதன் மூலமும் உங்களின் eBay பட்டியல்களைத் தனிப்பயனாக்கலாம். உங்கள் தயாரிப்புகளைப் பட்டியலிடவும் திருத்தவும், Marketplace Connect செயலியின் மூலம் மூன்றாம் தரப்புச் சந்தைகளில் உங்கள் தயாரிப்புகளைப் பட்டியலிடுதல் மற்றும் திருத்துதல் என்பதைப் பார்க்கவும்.
இந்தப் பக்கத்தில்
நிலை வரையறைகள்
நீங்கள் eBay-இல் ஒரு தயாரிப்பைப் பட்டியலிடும்போது, ஒரு நிலை வரையறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நிலை வரையறைகள் பற்றி மேலும் அறிய, உருப்படியின் நிலை ID மற்றும் பெயர் மதிப்புகள் பக்கத்தைப் பார்க்கவும்.
இயல்புநிலை eBay பட்டியல் அமைப்புகளை அமைக்கவும்
எதிர்காலப் பட்டியல்களுக்குப் பயன்படுத்தக்கூடிய வகையில், நீங்கள் இயல்புநிலை eBay பட்டியல் அமைப்புகளை அமைக்கலாம். உங்கள் தற்போதைய பட்டியல்கள், உங்கள் இயல்புநிலைப் பட்டியல் அமைப்புகளால் பாதிக்கப்படாது. பின்வரும் eBay இயல்புநிலைப் பட்டியல் அமைப்புகளை நீங்கள் அமைக்கலாம்:
- விலை மாற்றங்களைத் திருத்து: உங்கள் Shopify அட்டவணை விலைக்கேற்ப நிலையான மதிப்பு, சதவீத அதிகரிப்பு அல்லது குறைப்பு, டாலர் அதிகரிப்பு அல்லது குறைப்பு ஆகியவற்றை அமைக்க இந்த அமைப்பு அனுமதிக்கும். மேலும் விரும்பினால் விலை முழுமையாக்கலையும் இது பயன்படுத்தும்.
- சரக்கு இருப்பு மாற்றங்களைத் திருத்து: eBay பட்டியலில் உள்ள தயாரிப்புச் சரக்கு இருப்பிற்கு, நிலையான சரக்கு இருப்பு மதிப்பு, இடைத்தங்கல் (buffer) அல்லது அதிகபட்ச அளவை அமைக்க இந்த அமைப்பு அனுமதிக்கும்.
- எடுத்துக்காட்டாக, ஒரு தயாரிப்புக்கான உங்கள் ஸ்டோர் சரக்கு இருப்பு
5ஆக இருக்கும்போது நீங்கள்2என ஒரு இடைத்தங்கலை அமைத்தால், அந்த உருப்படியின் இருப்பில்3உள்ளதாகப் பட்டியல் காட்டும். - எடுத்துக்காட்டாக, நீங்கள் அதிகபட்ச அளவாக
5என அமைத்தால், அந்த உருப்படிக்கான உங்கள் ஸ்டோரின் சரக்கு இருப்பு 5-க்குக் கீழே குறையாத வரையில் பட்டியல்களில் எப்போதும்5என்ற அதிகபட்ச அளவே காண்பிக்கப்படும். 5-க்குக் கீழே குறைந்தால் பட்டியல் உண்மையான சரக்கு இருப்பு அளவைக் காண்பிக்கும்.
- எடுத்துக்காட்டாக, ஒரு தயாரிப்புக்கான உங்கள் ஸ்டோர் சரக்கு இருப்பு
- ஷிப்பிங்: eBay-இல் உங்கள் பட்டியல்களுக்காக நீங்கள் வழங்க விரும்பும் ஷிப்பிங் சேவைகளைத் தேர்ந்தெடுக்க இந்த அமைப்பு அனுமதிக்கும்.
- திருப்பியளிப்புக் கொள்கை: பட்டியலில் திருப்பியளிப்புகள் ஏற்கப்படுமா, திருப்பியளிப்பதற்கான கால அவகாசம், பணத்தைத் திரும்பப்பெறும் வகை மற்றும் திருப்பியளிப்பு ஷிப்பிங்கிற்கான கட்டணத்தை நீங்களோ அல்லது வாடிக்கையாளரோ செலுத்துவீர்களா என்பதை அமைக்க இந்த அமைப்பு உங்களை அனுமதிக்கிறது.
- தானியங்கு வகைப்படுத்தல்: உங்கள் தயாரிப்புக்கான eBay வகைகளை நீங்களே கைமுறையாக அமைக்க வேண்டுமா அல்லது Marketplace Connect பட்டியல்களை மிகவும் தொடர்புடைய eBay வகைகளில் தானாகவே வகைப்படுத்த வேண்டுமா என்பதைத் தேர்ந்தெடுக்க இந்த அமைப்பு உங்களை அனுமதிக்கிறது.
- தயாரிப்புகளைத் தானாகப் பட்டியலிடு: நீங்கள் தேர்ந்தெடுத்த இயல்புநிலைகளுடன் eBay இல் உங்கள் தயாரிப்புகளைத் தானாகவே பட்டியலிட வேண்டுமா என்பதைத் தேர்ந்தெடுக்க இந்த அமைப்பு உங்களை அனுமதிக்கிறது.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, செயலிகள் > Marketplace Connect என்பதற்குச் செல்லவும்.
அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
கணக்குகள் பிரிவில், உங்கள் eBay சந்தைக் கணக்கைத் தேர்ந்தெடுக்கவும்.
புதிய பட்டியல்கள் பிரிவில், நிர்வகி என்பதைக் கிளிக் செய்யவும்.
புதிய பட்டியல் உள்ளமைவுகள் பிரிவில், பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்யவும்:
- Marketplace Connect உங்கள் தயாரிப்புகளைத் தானாகவே வகைப்படுத்த வேண்டுமா என்பதைத் தேர்வுசெய்ய, தானியக்கமாக்கல்கள் > தானியங்கு வகைப்படுத்தல் பிரிவில் உள்ள பொத்தானை நிலைமாற்றவும்.
- நீங்கள் தேர்ந்தெடுத்த இயல்புநிலைகளுடன் Marketplace Connect தயாரிப்புகளைத் தானாகவே பட்டியலிட வேண்டுமா என்பதைத் தேர்வுசெய்ய, தானியக்கமாக்கல்கள் > தயாரிப்புகளைத் தானாகப் பட்டியலிடு பிரிவில் உள்ள பொத்தானை நிலைமாற்றவும்.
- உங்கள் அட்டவணை விலையின் அடிப்படையில் எதிர்கால eBay பட்டியல்களுக்கான விலை விதியை அமைக்க, சரிசெய்தல்கள் பிரிவில் விலைக்கான திருத்து பொத்தானைக் கிளிக் செய்து, விலைச் சரிசெய்தல்களைத் திருத்து உரையாடல் பெட்டியில் உங்கள் தேர்வுகளைச் செய்து, சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
- உங்கள் அட்டவணை விலையின் அடிப்படையில் எதிர்கால eBay பட்டியல்களுக்கான சரக்கு இருப்பு விதியை அமைக்க, சரிசெய்தல்கள் பிரிவில் சரக்கு இருப்புக்கான திருத்து பொத்தானைக் கிளிக் செய்து, சரக்கு இருப்புச் சரிசெய்தல்களைத் திருத்து உரையாடல் பெட்டியில் உங்கள் தேர்வுகளைச் செய்து, சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
- எதிர்கால eBay ஆர்டர்களுக்கான ஷிப்பிங் முறையை அமைக்க, ஷிப்பிங் பிரிவில் தேர்வுகளைச் செய்யவும்.
- இயல்புநிலைத் திருப்பியளிப்புச் செயல்முறையை அமைக்க, திருப்பியளிப்புக் கொள்கை பிரிவில் தேர்வுகளைச் செய்யவும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
eBay பட்டியல்களுக்கான பட ஒத்திசைவை முடக்கு
நீங்கள் eBay உடன் இணைக்கப்பட்டிருந்தால், மேலும் Shopify இலிருந்து படங்களை ஒத்திசைப்பதற்குப் பதிலாக, அவற்றை நேரடியாக eBay பட்டியலிலேயே நிர்வகிக்க விரும்பினால், மொத்தத் திருத்தியில் பட ஒத்திசைவை முடக்கலாம்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, செயலிகள் > Marketplace Connect என்பதற்குச் செல்லவும்.
பட்டியல்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
சந்தைகள் கீழ்தோன்றும் மெனுவைக் கிளிக் செய்து, eBay என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
மொத்தமாகத் திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
நெடுவரிசைகள் பொத்தானைக் கிளிக் செய்து, மற்றவை > அட்டவணைப் பட ஒத்திசைவு விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து, முடிந்தது என்பதைக் கிளிக் செய்யவும்.
தயாரிப்புகள் அட்டவணையில், அனைத்துத் தயாரிப்புகளையும் தேர்ந்தெடுப்பதற்கான விருப்பத்தைக் கிளிக் செய்யவும்.
தயாரிப்புகள் அட்டவணையில் உள்ள அட்டவணைப் பட ஒத்திசைவு நெடுவரிசையில், முடக்கு என்பதைக் கிளிக் செய்து, புதுப்பி என்பதைக் கிளிக் செய்யவும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.