Newegg Marketplace

Newegg icon
Shopify App Store இலிருந்து Newegg Marketplace விற்பனைச் சேனலை நிறுவவும்.

Newegg என்பது மின்னணுவியல், வீட்டுத் தொழில்நுட்பம், கம்ப்யூட்டிங் மற்றும் கேமிங் போன்றவற்றில் சிறந்து விளங்கும் ஓர் ஆன்லைன் ஸ்டோர் ஆகும்.

Shopify இலிருந்து Newegg க்கு உங்கள் தயாரிப்புகளை ஒத்திசைப்பதற்கு, Shopify App Store இலிருந்து Newegg Marketplace விற்பனைச் சேனலை நீங்கள் நிறுவலாம், பின்னர் உங்கள் Newegg Seller Portal மூலம் விற்பனைக்குத் தயாரிப்புகளைப் பட்டியலிடலாம்.

Newegg இல் உங்களுக்கென உள்ள விற்பனையாளர் ஸ்டோரிலும், உங்கள் தயாரிப்புகளுக்கான பொருத்தமான வகைப் பக்கங்கள் மற்றும் தேடல் முடிவுப் பக்கங்களிலும் உங்கள் தயாரிப்புகள் காட்டப்படும்.

நீங்கள் Newegg-இல் விற்பனை செய்யும்போது உங்கள் Shopify நிர்வாகியில் உள்ள தயாரிப்பின் சரக்கு இருப்பு நிலைகள் தானாகவே புதுப்பிக்கப்படும். ஷிப்பிங் நிலை மற்றும் டெலிவரியைத் தடமறிவதற்கான எண்களுடன் உங்கள் ஆர்டர்களும் இந்த இரண்டு பிளாட்ஃபார்ம்களுக்கும் இடையே தானாகவே ஒத்திசைக்கப்படும்.

எந்தவொரு Shopify திட்டத்திலும் உள்ள அனைத்து Shopify வணிகர்களும் Newegg Marketplace விற்பனைச் சேனலை இலவசமாகப் பயன்படுத்தலாம்.

இந்தப் பிரிவில்