Newegg Marketplace விற்பனைச் சேனலை அமைத்தல்

Newegg-இல் விற்பனை செய்யத் தொடங்க, Newegg Marketplace விற்பனைச் சேனலை நிறுவி உங்கள் Newegg கணக்கை Shopify உடன் இணைக்க வேண்டும், மேலும் Newegg-க்கு ஒத்திசைப்பதற்கான தயாரிப்புகளையும் அமைக்க வேண்டும்.

Newegg Marketplace விற்பனைச் சேனலை நிறுவவும்

  1. Shopify App Store-இல் உள்ள Newegg Marketplace செயலிப் பக்கத்திற்குச் செல்லவும்.
  2. உங்கள் Shopify கணக்கில் ஏற்கனவே உள்நுழைந்திருந்தால், நிறுவு என்பதைக் கிளிக் செய்யவும். இல்லையெனில், நிறுவ உள்நுழைக என்பதைக் கிளிக் செய்து, உங்கள் Shopify கணக்கில் உள்நுழைவதற்குத் திரையில் தோன்றும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும்.
  3. செயலியை நிறுவு பக்கத்தில், நிறுவு என்பதைக் கிளிக் செய்யவும்.

உங்கள் Newegg கணக்கை Shopify உடன் இணைக்கவும்

  1. உங்கள் Shopify நிர்வாகியில், விற்பனைச் சேனல்கள் > Newegg Marketplace என்பதற்குச் செல்லவும்.

  2. சேவை விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கை ஆகியவற்றுக்கான தேர்வுப்பெட்டியைத் தேர்ந்தெடுக்கவும்.

  3. Newegg Marketplace கணக்கை இணை என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. உங்கள் Newegg கணக்கை Shopify உடன் இணைக்க, உங்கள் Newegg கணக்கு விவரங்களைப் பயன்படுத்தி உள்நுழையவும், பின்னர் இணைப்பிற்கு அங்கீகாரம் வழங்க உறுதிசெய் என்பதைக் கிளிக் செய்யவும்.

Newegg-க்கு உங்கள் தயாரிப்புகளை ஒத்திசைத்தல்

Newegg Marketplace விற்பனைச் சேனலை நிறுவி, உங்கள் Newegg கணக்கை Shopify உடன் இணைத்த பிறகு, Newegg-இல் விற்க விரும்பாத உங்களின் Shopify தயாரிப்புகள் ஏதேனும் இருப்பின், அவை விற்பனைச் சேனலில் இருந்து விலக்கிவைக்கப்பட்டுள்ளதை உறுதிசெய்துகொள்ளவும்.

உங்கள் தயாரிப்புகளை Newegg-க்கு ஒத்திசைத்து, விற்பனைக்காக வெளியிடுவதற்கு முன்பு, நீங்கள் வகை மேப்பிங், பிராண்டு மேப்பிங் மற்றும் விலை விதிகளின் அமைப்புகள் ஆகியவற்றை நிறைவுசெய்ய வேண்டும். உங்கள் Shopify ஸ்டோரில் நீங்கள் சேர்க்கும் புதிய தயாரிப்பு வகைகளுக்கும் நீங்கள் விற்கும் எந்தவொரு புதிய பிராண்டுகளுக்கும் இந்தப் படிகளைப் பின்பற்ற வேண்டும்.

உங்கள் தயாரிப்பு வகைகளுக்கு வகை மேப்பிங்கைச் சேர்க்கவும்

உங்களின் Shopify தயாரிப்பு வகைகளைத் தேர்ந்தெடுத்து அவற்றை Newegg தயாரிப்பு வகைகளுடன் பொருத்திப் பார்க்க வேண்டும்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியில், விற்பனைச் சேனல்கள் > Newegg Marketplace என்பதற்குச் செல்லவும்.

  2. வெளியிடுதல் பிரிவில், வகை மேப்பிங்கைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. வகை மேப்பிங் பிரிவில், சேர் என்பதைக் கிளிக் செய்யவும், அதன் பிறகு வகை மேப்பிங்கைச் சேர் எனும் உரையாடல் பெட்டியில் பின்வருவனவற்றைச் செய்யவும்:

    1. Shopify பிரிவில், தயாரிப்பு வகை புலத்தைக் கிளிக் செய்து, உங்களின் Shopify தயாரிப்பு வகைகளில் ஒன்றையோ அதற்கு மேற்பட்டவற்றையோ தேர்ந்தெடுக்கவும்.
    2. Newegg பிரிவில், வகை கீழ்தோன்றும் மெனுவைக் கிளிக் செய்து உங்களின் Shopify தயாரிப்பு வகைக்குப் பொருத்தமான தயாரிப்பு வகையைத் தேர்ந்தெடுக்கவும்.
    3. துணை வகை கீழ்தோன்றும் மெனுவைக் கிளிக் செய்து, உங்களின் Shopify தயாரிப்பு வகைக்குப் பொருத்தமான தயாரிப்புத் துணை வகையைத் தேர்ந்தெடுக்கவும்.
    4. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. விருப்பத்திற்குரியது: நீங்கள் வகை மேப்பிங்கைச் சேர்க்க வேண்டிய அனைத்து Shopify தயாரிப்பு வகைகளுக்கும் படி 3-ஐ மீண்டும் செய்யவும்.

உங்கள் தயாரிப்பு விற்பனையாளர்களுக்கான பிராண்டு மேப்பிங்கைச் சேர்க்கவும்

பின்வரும் வழிகளில் Shopify-இல் உள்ள உங்கள் தயாரிப்பு விற்பனையாளர்களை, Newegg-இல் ஏற்கனவே உள்ள பிராண்டுகளுடன் நீங்கள் பொருத்தலாம்:

  • இந்தப் பிரிவிலுள்ள பிராண்டு மேப்பிங் படிகளை நிறைவுசெய்யவும்.
  • நீங்கள் தயாரிப்புகளை ஒத்திசைக்கும்போது, விற்பனையாளர் மற்றும் பிராண்டிற்கு இடையேயான பொருத்தத்தை Newegg Marketplace விற்பனைச் சேனலைத் தானாகவே கண்டறிய அனுமதிக்கவும்.

நீங்கள் ஒரு Newegg பிராண்டைப் பல Shopify விற்பனையாளர்களுடன் பொருத்தலாம், ஆனால் ஒரு Shopify விற்பனையாளரை ஒரேயொரு Newegg பிராண்டுடன் மட்டுமே பொருத்த முடியும். உதாரணமாக, Shopify-இல் உங்களிடம் Lenovo US மற்றும் Lenovo UK விற்பனையாளர்கள் இருந்தால், நீங்கள் அவர்கள் இருவரையும் Newegg-இல் உள்ள ஒற்றை Lenovo பிராண்டுடன் மேப் செய்ய முடியும்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியில், விற்பனைச் சேனல்கள் > Newegg Marketplace என்பதற்குச் செல்லவும்.

  2. வெளியிடுதல் பிரிவில், பிராண்டு மேப்பிங்கைச் சேர் என்பதைக் கிளிக் செய்து, பிறகு சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. பிராண்டு மேப்பிங்கைச் சேர் எனும் உரையாடல் பெட்டியில் பின்வருவனவற்றைச் செய்யவும்:

    1. Shopify பிரிவில், விற்பனையாளர் புலத்தைக் கிளிக் செய்து, உங்களின் Shopify தயாரிப்பு விற்பனையாளர்களில் ஒருவரையோ அதற்கு மேற்பட்டவர்களையோ தேர்ந்தெடுக்கவும்.
    2. Newegg பிரிவில், பிராண்டு புலத்தில், ஒரு பிராண்டின் பெயரை உள்ளிடத் தொடங்கவும், பிறகு உங்கள் விற்பனையாளர் அல்லது விற்பனையாளர்களுடன் நீங்கள் பொருத்த விரும்பும் Newegg பிராண்டைத் தேர்ந்தெடுக்கவும்.
    3. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. விருப்பத்திற்குரியது: நீங்கள் பிராண்டு மேப்பிங்கைச் சேர்க்க வேண்டிய அனைத்து Shopify தயாரிப்பு விற்பனையாளர்களுக்கும் படி 3-ஐ மீண்டும் செய்யவும்.

அனைத்துத் தயாரிப்புகளுக்கும் அல்லது தனிப்பட்ட தயாரிப்பு வகைகளுக்கும் விலை விதிகளை அமைக்கவும்

நீங்கள் Newegg-இல் விற்கும்போது உங்கள் தயாரிப்புகளின் இயல்புநிலை Shopify விலையையே வைத்திருக்கலாம், அல்லது உங்களின் அனைத்துத் தயாரிப்புகள் மீதான உங்களின் Newegg பட்டியல்களுக்கு அல்லது உங்களின் ஒவ்வொரு தனிப்பட்ட தயாரிப்பு வகைகளுக்குமான விலை மாற்றங்களை நீங்கள் அமைக்கலாம்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியில், விற்பனைச் சேனல்கள் > Newegg Marketplace என்பதற்குச் செல்லவும்.

  2. அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. விலை விதிகளின் அமைப்புகள் பிரிவில், விலை நிர்ணய அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்:

    1. இயல்புநிலை Shopify விலையிலிருந்து உங்களின் அனைத்து Newegg பட்டியல்களின் விலையையும் அதிகரிக்கவோ குறைக்கவோ, கணக்கு விலை விதி பிரிவில்:
      1. மாற்றத்தின் வகை கீழ்தோன்றும் மெனுவில், சதவீத மாற்றம் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
      2. Newegg விற்பனை விலை புலத்தில், சதவீத அளவிலான விலை மார்க்கப் அல்லது விலை குறைப்பை அமைக்கவும்.
    2. தனிப்பட்ட தயாரிப்பு வகைகளுக்கான விலையை அதிகரிக்கவோ குறைக்கவோ, ஒவ்வொரு தயாரிப்பு வகைக்குமான விலை விதிகள் பிரிவில்:
      1. மாற்றத்தின் வகை கீழ்தோன்றும் மெனுவில், சதவீத மாற்றம் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
      2. Newegg விற்பனை விலை புலத்தில், சதவீத அளவிலான விலை மார்க்கப் அல்லது விலை குறைப்பை அமைக்கவும்.
    3. நீங்கள் Newegg-இல் விற்பனை செய்யும்போது உங்களின் இயல்புநிலை Shopify விலைகளையே வைத்திருக்க, கணக்கு விலை விதி மற்றும் ஒவ்வொரு தயாரிப்பு வகைக்குமான விலை விதிகள் ஆகிய இரு பிரிவுகளிலும் இயல்புநிலை Shopify விலை என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

தனிப்பட்ட தயாரிப்புகளுக்கு மொத்தமாக விலை விதிகளை அமைக்கவும்

நீங்கள் தனிப்பட்ட தயாரிப்பு அளவிலும் விருப்பப்படி விலை மாற்றங்களை அமைக்கலாம்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியில், விற்பனைச் சேனல்கள் > Newegg Marketplace என்பதற்குச் செல்லவும்.

  2. தயாரிப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. எந்தெந்தத் தயாரிப்புகளுக்கு விலை விதிகளை அமைக்க விரும்புகிறீர்களோ அவற்றைத் தேர்ந்தெடுக்க, தேர்வுப்பெட்டிகளைப் பயன்படுத்தவும்.

  4. மொத்த விலை விதிகள் என்பதைக் கிளிக் செய்யவும்.

  5. ஒவ்வொரு தயாரிப்பிற்கும், மாற்ற வகையைத் தேர்ந்தெடு கீழ்தோன்றும் மெனுவைக் கிளிக் செய்து, பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்யவும்:

    1. தனிப்பட்ட தயாரிப்பின் விலையை ஒரு குறிப்பிட்ட சதவீதம் கூட்டவோ அல்லது குறைக்கவோ, சதவீத மாற்றம் என்பதைத் தேர்ந்தெடுத்து, அதன்பின் சதவீத விலை மார்க்கப் அல்லது விலை குறைப்பை அமைக்கவும்.
    2. தனிப்பட்ட தயாரிப்பின் விலையை நிலையான தொகை அளவிற்குக் கூட்டவோ அல்லது குறைக்கவோ, நிலையான தொகை மாற்றம் என்பதைத் தேர்ந்தெடுத்து, அதன்பின் ஒரு நிலையான தொகை விலை மார்க்கப் அல்லது விலை குறைப்பை அமைக்கவும்.
    3. தனிப்பட்ட தயாரிப்பின் இயல்புநிலை Shopify விலையை வைத்திருக்க, இயல்புநிலை Shopify விலை என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  6. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

தானியங்கித் தயாரிப்பு ஒத்திசைவை அமை

வகை மேப்பிங், பிராண்ட் மேப்பிங் மற்றும் விலை விதிகளுக்கான படிகளை நிறைவுசெய்த பிறகு, உங்கள் தயாரிப்புகளை ஒத்திசைத்து Newegg இல் உங்கள் பட்டியல்களை வெளியிடலாம்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியில், விற்பனைச் சேனல்கள் > Newegg Marketplace என்பதற்குச் செல்லவும்.

  2. அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. தானியங்கித் தயாரிப்பு ஒத்திசைவுப் பிரிவில், தேர்வுப்பெட்டியைத் தேர்ந்தெடுக்கவும்.

அதன் பிறகு உங்கள் தயாரிப்புகளை உங்கள் Newegg Marketplace விற்பனைச் சேனலின் தயாரிப்புகள் பிரிவிலும் Newegg Seller Portal-இலும் பார்க்கலாம்.

Shopify-இலிருந்து உங்கள் Newegg கணக்கைத் துண்டிக்கவும்

எப்போது வேண்டுமானாலும் Shopify-இல் உள்ள Newegg Marketplace விற்பனைச் சேனலிலிருந்து உங்கள் Newegg கணக்கைத் துண்டிக்கலாம்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியில், விற்பனைச் சேனல்கள் > Newegg Marketplace என்பதற்குச் செல்லவும்.

  2. அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. Newegg Marketplace ஸ்டோர் கணக்குப் பிரிவில், துண்டி என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. உரையாடல் பெட்டியில், உறுதிசெய் என்பதைக் கிளிக் செய்யவும்.

Shopify மூலம் Newegg இல் விற்பனை செய்வதற்கு ஆதரவு பெறுதல்

Shopify-இல் உள்ள உங்கள் Newegg Marketplace விற்பனைச் சேனல் அல்லது உங்கள் Newegg Seller Portal தொடர்பான உதவி தேவைப்பட்டால், நீங்கள் Newegg-ஐத் தொடர்புகொள்ளலாம்.

Shopify App Store இல் உள்ள Newegg Marketplace பட்டியலுக்குச்</ சென்று, ஆதரவைப் பெறு பொத்தானைக் கிளிக் செய்யவும்.