StockX
StockX என்பது ஸ்னீக்கர்கள், ஸ்ட்ரீட்வேர்கள் மற்றும் சேகரிப்புப் பொருட்களுக்கான ஒரு பிரத்யேக சந்தையாகும். StockX கேட்டலாக்குடன் உங்கள் Shopify தயாரிப்புகளைப் பொருத்த, நீங்கள் Shopify App Store-இலிருந்து StockX விற்பனைச் சேனலை நிறுவலாம்.
பொருத்தப்பட்ட தயாரிப்புகளை வெளியிடும்போது, StockX தளத்தில் ஏற்கெனவே உள்ள தயாரிப்புப் பட்டியல்களின் ஒரு பகுதியாக விற்கப்படும் சரக்கு இருப்பை StockX தளத்திற்கு வழங்குகிறீர்கள்.
உங்கள் Shopify நிர்வாகியில் StockX ஆர்டர்களைப் பெறுவீர்கள், மேலும் நீங்கள் விற்பனை செய்யும்போது உங்கள் தயாரிப்புச் சரக்கு இருப்பு தானாகவே புதுப்பிக்கப்படும்.
StockX என்பது விற்பனையாளர் விவரங்களை வெளிப்படுத்தாத சந்தை என்பதால், நீங்களும் உங்கள் வாடிக்கையாளர்களும் நேரடியாகத் தொடர்புகொள்ள மாட்டீர்கள். திருப்பியளிக்கப்படும் பொருட்கள் மற்றும் வாடிக்கையாளர் சேவை அனைத்தையும் StockX நிர்வகிக்கிறது.
StockX தளத்தில் உங்களின் விற்பனையானது பின்வரும் வழிகளில் செயலாக்கப்படும்:
- வாடிக்கையாளர் ஒருவர் StockX தளத்தில் உங்கள் தயாரிப்பை வாங்குவார்.
- தயாரிப்புச் சரிபார்ப்புக்காக நீங்கள் அந்த உருப்படியை StockX-க்கு அனுப்புவீர்கள்.
- StockX வாடிக்கையாளருடன் தொடர்புகொண்டு தயாரிப்பை அனுப்பும்.
- உங்கள் StockX பேஅவுட் முறையின் மூலம் நீங்கள் பணத்தைப் பெறுவீர்கள்.
- பொருளைத் திருப்பியளிக்கும் பட்சத்தில், வாடிக்கையாளர் தயாரிப்பை StockX-க்கே மீண்டும் அனுப்புவார்.
- StockX அந்தத் தயாரிப்பைத் தக்கவைத்துக்கொள்ளும், இதன் பொருள் பணத்தைத் திரும்பப்பெறுதல்களுக்கு நீங்கள் பொறுப்பல்ல, அத்துடன் உங்கள் விற்பனை மற்றும் பேமெண்ட்டுக்கு உத்தரவாதமளிக்கப்படுகிறது.
எந்தவொரு Shopify திட்டத்திலும் உள்ள அனைத்து Shopify வியாபாரிகளுக்கும் StockX விற்பனைச் சேனலைப் பயன்படுத்த கட்டணமில்லை, ஆனால் Shopify மூலம் StockX இல் விற்பனை செய்வதற்கான தேவைகளை நீங்கள் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.