Shopify மூலம் StockX-இல் விற்பதற்கான தேவைகள் மற்றும் கருத்தில் கொள்ள வேண்டியவை
StockX விற்பனைச் சேனலை அமைப்பதற்கு முன், StockX பயன்பாட்டு விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள், StockX தனியுரிமைக் கொள்கை மற்றும் பின்வரும் தேவைகள், கருத்தில் கொள்ள வேண்டியவற்றைப் படித்துப் பார்க்கலாம். தேவைகளை முன்னதாகவே புரிந்துகொள்வது, உங்கள் தயாரிப்புகளுக்கு StockX தான் சரியான சந்தையா என்பதைத் தீர்மானிக்கவும் அமைவுச் சிக்கல்களைத் தவிர்க்கவும் உதவும்.
இந்தப் பக்கத்தில்
Shopify மூலம் StockX-இல் விற்பதற்கான தேவைகள்
Shopify மூலம் StockX-இல் விற்பதற்கான பின்வரும் தேவைகளைச் சரிபார்க்கவும்:
- Shopify-இல் StockX விற்பனைச் சேனலைப் பயன்படுத்த, உங்களிடம் செயலில் உள்ள Shopify சந்தாத் திட்டம் இருக்க வேண்டும், ஆனால் Shopify ஆன்லைன் ஸ்டோர் இருக்க வேண்டியதில்லை. உங்களின் ஷிப்பிங் மற்றும் கட்டணத் தகவல் முழுமையாக நிரப்பப்பட்ட செயலில் உள்ள StockX கணக்கும் உங்களிடம் இருக்க வேண்டும். StockX இணையதளத்தில் நீங்கள் ஒரு கணக்கை உருவாக்கலாம்.
- பின்வரும் நாணயங்களில் மட்டுமே நீங்கள் StockX-இல் விற்க முடியும்: AUD, CAD, CHF, EUR, GBP, HKD, JPY, KRW, MXN, NZD, SGD, USD.
- உங்கள் Shopify கணக்கு மற்றும் StockX கணக்கு ஆகிய இரண்டும் ஒரே விற்பனை நாணயத்தைப் பயன்படுத்த வேண்டும்.
- StockX-இல் விற்பனை செய்வதற்கு இணக்கமான நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் ஒன்றில் நீங்கள் இருக்க வேண்டும்.
- StockX-இல் ஒரு தயாரிப்பை விற்பனைக்குப் பட்டியலிட, அந்தத் தயாரிப்பு ஏற்கனவே StockX தயாரிப்பு அட்டவணையில் இருக்க வேண்டும்.
- StockX-இல் நீங்கள் விற்பனைக்குப் பட்டியலிடும் தயாரிப்புகள் புதிய நிலையில் இருக்க வேண்டும்.
- Shopify-இலிருந்து StockX-க்கு நீங்கள் ஒத்திசைக்கும் தயாரிப்புகளில் 'க்ளோபல் டிரேடு ஐட்டம் நம்பர்' (GTIN) இருக்க வேண்டும் அல்லது StockX Style ID மற்றும் StockX அளவுச் சார்ட்கள், மதிப்புகளுடன் பொருந்தக்கூடிய மெட்டாஃபீல்டு மதிப்புகள் இருக்க வேண்டும். StockX அட்டவணையுடன் சரக்கு இருப்பைப் பொருத்துவதற்காக உங்கள் தயாரிப்புகளை அமைப்பது பற்றி மேலும் அறிக.
Shopify மூலம் StockX-இல் விற்கும்போது கருத்தில் கொள்ள வேண்டியவை
Shopify மூலம் StockX-இல் விற்பதற்குக் கருத்தில் கொள்ள வேண்டிய பின்வரும் விஷயங்களைச் சரிபார்க்கவும்:
- நீங்கள் விலை மார்க்கப் அல்லது விலை மார்க்டவுன் அமைக்காதவரை, StockX-இல் விற்பனைக்குப் பட்டியலிடப்படும் தயாரிப்புகளுக்கு Shopify-இல் நீங்கள் அமைக்கும் இயல்புநிலை விலையே இருக்கும்.
- StockX, விற்பனையாளர்களிடமிருந்து Sell Now மற்றும் Ask விலைகளுடனும், வாடிக்கையாளர்களுக்கான Buy Now மற்றும் Bid விருப்பங்களுடனும் செயல்படுகிறது. Shopify வணிகர்களைப் பொறுத்தவரை, தயாரிப்பு விலை என்பது எப்போதும் Ask மதிப்பாகவே இருக்கும். StockX-இல் ஒரு தயாரிப்பிற்கான உங்களின் விலை மிகக்குறைந்த Ask மதிப்பாக இருந்து, வாடிக்கையாளரின் ஏலக் கேட்பு (Bid) அந்த விலையைத் தொட்டால், உங்கள் தயாரிப்பு விற்பனையாகும். தயாரிப்புக்கான வாடிக்கையாளரின் மிகக்குறைந்த ஏலக் கேட்பை விட உங்கள் விலை குறைவாக இருந்தால், வாடிக்கையாளரின் மிகக்குறைந்த ஏலக் கேட்பின் மதிப்பிற்கு Sell Now விற்பனை தானாகவே நடக்கும்.
- உங்களிடம் Shopify ஆன்லைன் ஸ்டோர் இல்லையென்றால், Shopify-இலிருந்து StockX-க்கு ஒத்திசைக்கப்படும் தயாரிப்புப் பட்டியல்களுக்காக நீங்கள் புகைப்படம் எடுக்கத் தேவையில்லை. ஏனென்றால், உங்கள் தயாரிப்புகள், ஏற்கனவே தயாரிப்புப் புகைப்படங்களைக் கொண்டுள்ள தற்போதைய StockX பட்டியல்களுடன் பொருத்தப்படும். உங்களுக்கெனச் சொந்தமாகத் தயாரிப்புப் புகைப்படங்களுடன் ஒரு Shopify ஆன்லைன் ஸ்டோர் இருந்தால், அவை StockX-இல் பயன்படுத்தப்படாது.
- StockX-இல் நீங்கள் விற்கும் தயாரிப்புகள் இரண்டு வணிக நாட்களுக்குள் StockX சரிபார்ப்பு மையத்திற்கு அனுப்பப்பட வேண்டும். அவை புதியவை என்பதையும் StockX தரநிலைகளைப் பூர்த்தி செய்கின்றன என்பதையும் உறுதிசெய்யத் தயாரிப்புகள் பரிசோதிக்கப்படும்.
- வாடிக்கையாளர் தொடர்புகள், அறிவிப்புகள் மற்றும் ஷிப்பிங், ரிட்டர்ன்கள் அனைத்தையும் StockX கையாள்கிறது. உங்கள் StockX ஆர்டர்களை ஷிப்பிங் செய்வது குறித்து மேலும் கண்டறியவும்.
- உங்கள் StockX விற்பனைக்கான கட்டணம் Shopify வழியாக வழங்கப்படாது. StockX-இல் ஒரு விற்பனையாளராக உங்களுக்கு எப்படி, எப்போது கட்டணம் வழங்கப்படுகிறது என்பது குறித்தும் நீங்கள் செலுத்தும் விற்பனையாளர் கட்டணங்கள், ஷிப்பிங் செலவுகள் குறித்தும் தெரிந்துகொள்ளுங்கள்.
StockX-இல் விற்பனை செய்தல் மற்றும் StockX தயாரிப்புச் சரிபார்ப்புச் செயல்முறை குறித்து மேலும் தகவல்களைக் கண்டறியவும்.