Temu விற்பனைச் சேனலை அமைப்பது
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து Temu இல் விற்பனை செய்யத் தொடங்க, Temu விற்பனைச் சேனலை நிறுவி, உங்கள் Temu Seller Center கணக்கை இணைக்கலாம்.
உங்களிடம் ஏற்கெனவே Temu Seller Center கணக்கு இல்லை எனில், நீங்கள் புதிய விற்பனையாளர் கணக்கை உருவாக்க வேண்டும். புதிதாகப் பதிவுசெய்யப்பட்ட Temu Seller Center கணக்குகள் மதிப்பாய்வு செய்யப்பட்டு, ஒப்புதல் அளிக்கப்பட 1 முதல் 3 வணிக நாள்கள் ஆகலாம்.
இந்தப் பக்கத்தில்
- Shopify மூலம் Temu இல் விற்பனை செய்வதற்கான தேவைகள்
- Shopify மூலம் Temu இல் விற்பனை செய்யும்முன் கவனத்தில் கொள்ள வேண்டியவை
- Temu விற்பனைச் சேனலை நிறுவுதல்
- உங்கள் Temu கணக்கை Shopify உடன் இணைத்தல்
- Shopify இலிருந்து உங்கள் Temu கணக்கின் இணைப்பைத் துண்டித்தல்
- Shopify மூலம் Temu இல் விற்பனை செய்வதற்கான ஆதரவைப் பெறுதல்
Shopify மூலம் Temu இல் விற்பனை செய்வதற்கான தேவைகள்
Shopify இல் Temu விற்பனைச் சேனலைப் பயன்படுத்த, பின்வரும் தேவைகளை நீங்கள் பூர்த்திசெய்ய வேண்டும்:
- Shopify உடன் நீங்கள் இணைக்கும் Temu Seller Center கணக்குக்கு உங்களுக்கு முதன்மை அணுகல் இருக்க வேண்டும்.
- உங்கள் Temu Seller Center கணக்கு செயலில் இருக்க வேண்டும். மேலும் அது இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கவோ விடுமுறைப் பயன்முறையிலோ இருக்கக் கூடாது.
- உங்களின் Temu பேஅவுட் முறை சரியானதாகவும் புதுப்பித்த நிலையிலும் இருக்க வேண்டும்.
Shopify மூலம் Temu இல் விற்பனை செய்யும்முன் கவனத்தில் கொள்ள வேண்டியவை
நீங்கள் Temu விற்பனைச் சேனலை அமைக்கும்முன், உங்கள் Temu Seller Center இல் உள்ள Temu விற்பனையாளர் விதிமுறைகளையும் Temu விற்பனையாளர் தனியுரிமைக் கொள்கையையும் படித்துப்பார்க்கவும். அத்துடன் Shopify மூலம் Temu இல் விற்பனை செய்ய கவனத்தில் கொள்ள வேண்டிய பின்வரும் அம்சங்களை மதிப்பாய்வு செய்யவும்:
- நீங்கள் தானியங்கு ஒத்திசைவைச் செயல்படுத்தியிருந்தால், Shopify இல் உங்கள் தயாரிப்பு விவரங்களில் நீங்கள் செய்யும் விலை மாற்றங்கள் உள்ளிட்ட புதுப்பிப்புகள் அனைத்தும் Temu இல் உள்ள அதே தயாரிப்புக்குத் தானாகவே ஒத்திசைக்கப்படும்.
- உங்கள் Shopify ஆன்லைன் ஸ்டோரில் உள்ள தயாரிப்பின் விலையை மாற்றாமலேயே Temu விற்பனைச் சேனலில் Temu-க்கான பிரத்யேக விலையை நீங்கள் அமைக்கலாம். அல்லது தானியங்கு விலை ஒத்திசைவை நீங்கள் செயல்படுத்தலாம், இதன்மூலம் உங்கள் Shopify நிர்வாகியில் நீங்கள் ஏதேனும் தயாரிப்பு விலைகளை மாற்றும்போது உங்களின் Temu தயாரிப்புகளும் புதுப்பிக்கப்படும்.
- Temu இலிருந்து நீங்கள் ஒரு தயாரிப்பைப் பட்டியல் நீக்கிவிட்டுப் பிறகு மீண்டும் பட்டியலிட்டால், அதை மீண்டும் வெளியிட மதிப்பாய்வும் ஒப்புதலும் தேவை.
- உங்கள் Temu Seller Center கணக்கில் நீங்கள் ஏற்கெனவே ஷிப்பிங் விவரங்களை அமைத்திருந்தால், உங்கள் ஷிப்பிங் அமைப்புகள் Temu விற்பனைச் சேனலுடன் ஒத்திசைக்கப்படும். உங்கள் Temu Seller Center கணக்கில் நீங்கள் ஷிப்பிங் அமைப்புகளை அமைக்கவில்லை எனில், Temu Seller Center இல் அமைப்புகளை நீங்கள் திருத்தும் வரை Temu இன் இயல்புநிலை ஷிப்பிங் அமைப்புகள் Temu விற்பனைச் சேனலில் பயன்படுத்தப்படும்.
- நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு Temu ஆர்டருக்கும் Temu ஆதரிக்கும் ஷிப்பிங் கேரியரிடமிருந்து தடமறிவதற்கான எண் பெற்றிருக்க வேண்டும்.
- Temu ஆர்டரில் பல உருப்படிகள் இருக்கும்போது, நீங்கள் அவற்றை ஒற்றைப் பேக்கேஜாகவோ பல பேக்கேஜ்களாகவோ அனுப்பலாம்.
Temu விற்பனைச் சேனலை நிறுவுதல்
- Shopify App Store இல் உள்ள Temu செயலிப் பக்கத்திற்குச் செல்லவும்.
- நீங்கள் ஏற்கனவே உங்கள் Shopify கணக்கில் உள்நுழைந்திருந்தால், நிறுவு என்பதைக் கிளிக் செய்யவும். இல்லையெனில், நிறுவ, உள்நுழையவும் என்பதைக் கிளிக் செய்து, உங்கள் Shopify கணக்கில் உள்நுழைய பிராம்ட்களைப் பின்பற்றவும்.
- செயலியை நிறுவு பக்கத்தில், நிறுவு என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்கள் Temu கணக்கை Shopify உடன் இணையுங்கள்
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, விற்பனைச் சேனல்கள் > Temu என்பதற்குச் செல்லவும்.
Temu கணக்கை இணை என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்கள் Temu Seller Center கணக்கு விவரங்களைப் பயன்படுத்தி உள்நுழைந்து, Shopify க்கான Temu கனெக்டர் அணுகலுக்கு அங்கீகாரம் அளித்து, சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும்.
Shopify இலிருந்து உங்கள் Temu கணக்கைத் துண்டிக்கவும்
நீங்கள் எப்போது வேண்டுமானாலும் Shopify இல் உள்ள Temu விற்பனைச் சேனலிலிருந்து உங்கள் Temu Seller Center கணக்கைத் துண்டிக்கலாம்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, விற்பனைச் சேனல்கள் > Temu என்பதற்குச் செல்லவும்.
உங்கள் Temu Shop கணக்கை இணையுங்கள் பிரிவில்,
ஐகானைக் கிளிக் செய்யவும்.
உங்கள் கணக்கைத் துண்டி என்பதைக் கிளிக் செய்து, பிறகு உறுதிசெய்து தொடர்க என்பதைக் கிளிக் செய்யவும்.
Shopify மூலம் Temu இல் விற்பனை செய்வதற்கான ஆதரவைப் பெறுதல்
உங்களுக்கு Shopify இல் உள்ள Temu விற்பனைச் சேனல் தொடர்பான உதவியோ உங்கள் Temu Seller Center கணக்கு தொடர்பான உதவியோ தேவைப்பட்டால், நீங்கள் Temu-ஐத் தொடர்புகொள்ளலாம்.
உங்கள் Shopify நிர்வாகியிலுள்ள Temu விற்பனைச் சேனலில், ஆதரவைப் பெறு என்பதைக் கிளிக் செய்து, உங்கள் செய்தியை உள்ளிட்டு அனுப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.