Shop இல் தயாரிப்புகளைக் காட்சிப்படுத்துவதற்கும் விற்பதற்குமான தேவைகள்
Shop இல் இருவகையான தேவைகள் உள்ளன. உங்கள் தயாரிப்புகளை வாடிக்கையாளர்களுக்குக் காட்சிப்படுத்த மட்டும் முடியுமா அல்லது நேரடியாக விற்கவும் முடியுமா என்பதை இவை தீர்மானிக்கின்றன:
- Shop இல் காட்சிப்படுத்துவதற்கான தேவைகளைப் பூர்த்தி செய்தால், உங்கள் ஸ்டோரும் தயாரிப்புகளும் Shop இல் காட்சிப்படுத்தப்படும்.
- Shop இல் நேரடியாக விற்பதற்கான தேவைகளைப் பூர்த்தி செய்தால், வாடிக்கையாளர்கள் Shop இலிருந்து வெளியேறாமல் உங்கள் தயாரிப்புகளை வாங்கலாம்.
உங்கள் ஸ்டோர் Shop இல் காட்சிப்படுத்துவதற்கான தேவைகளைப் பூர்த்தி செய்தும், Shop இல் நேரடியாக விற்பதற்கான தேவைகளைப் பூர்த்தி செய்யவில்லை என்றால், உங்கள் தயாரிப்புகள் Shop இல் தொடர்ந்து தெரியும். ஆனால், வாடிக்கையாளர்கள் கொள்முதலை முடிக்க உங்கள் ஆன்லைன் ஸ்டோருக்கு அனுப்பப்படுவார்கள். உங்கள் ஸ்டோர் இருவகைத் தேவைகளையும் பூர்த்தி செய்தால், வாடிக்கையாளர்கள் Shop இலிருந்து வெளியேறாமல் உங்கள் தயாரிப்புகளை வாங்கலாம். Shop இல் தயாரிப்புகளைக் காட்சிப்படுத்துதல் மற்றும் விற்பனை செய்தல் குறித்து மேலும் அறிக.
தகுதியுள்ள ஸ்டோர்கள் தானாகவே Shop இல் சேர்க்கப்படும். தகுதி பெற Shop சேனலை நிறுவியிருக்க வேண்டியதில்லை. இருப்பினும், சேனலை நிறுவினால் கூடுதல் அம்சங்களையும் அமைப்புகளையும் அணுகலாம். உங்கள் ஸ்டோர் Shop இல் நேரடியாக விற்பதற்குத் தகுதியுடையதாக இருந்தால், Shop சேனலை நிறுவாவிட்டாலும் Shop மூலம் ஆர்டர்களைப் பெறக்கூடும்.
இந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்ய உங்கள் ஸ்டோரில் மாற்றங்களைச் செய்தால், அவை நடைமுறைக்கு வந்து உங்கள் ஒப்புதல் நிலை புதுப்பிக்கப்பட 48 மணிநேரம் வரை ஆகலாம்.
இந்தப் பக்கத்தில்
Shop இல் உங்கள் ஸ்டோரையும் தயாரிப்புகளையும் காட்சிப்படுத்துவதற்கான தேவைகள்
உங்கள் ஸ்டோர் பின்வரும் தேவைகளைப் பூர்த்தி செய்தால், வாடிக்கையாளர்கள் Shop இல் உங்கள் தயாரிப்புகளைப் பார்வையிடலாம். கொள்முதலை முடிக்க அவர்கள் உங்கள் ஆன்லைன் ஸ்டோருக்கு அனுப்பப்படுவார்கள்:
- சேவை விதிமுறைகள் மற்றும் ஏற்கத்தக்க பயன்பாட்டுக் கொள்கைக்கு இணங்குதல்: உங்கள் ஸ்டோர் Shopify இன் சேவை விதிமுறைகள் மற்றும் ஏற்கத்தக்க பயன்பாட்டுக் கொள்கை ஆகியவற்றுக்கு இணங்குகிறது.
- செயலில் உள்ள Shopify திட்டம்: உங்கள் ஸ்டோர் செயலில் உள்ள Shopify திட்டத்தைப் பயன்படுத்துகிறது. உங்கள் தற்போதைய திட்டத்தைச் சரிபார்ப்பது அல்லது மேம்படுத்துவது குறித்து மேலும் அறிக.
- வணிக விவரங்கள்: வணிக விவரங்கள் உங்கள் ஸ்டோரில் சேர்க்கப்பட்டுள்ளன.
- நிறைவேற்றப்பட்ட ஆர்டர்கள்: உங்கள் ஸ்டோர் குறைந்தது ஒரு ஆர்டரையாவது நிறைவேற்றியுள்ளது.
- ஆன்லைன் ஸ்டோர் விற்பனைச் சேனல்: உங்கள் ஸ்டோரில் ஆன்லைன் ஸ்டோர் விற்பனைச் சேனல் உள்ளது. ஸ்டோர் தனிப்பட்ட பயன்முறையில் அமைக்கப்படவில்லை. உங்கள் ஆன்லைன் ஸ்டோரின் தனிப்பட்ட பயன்முறை குறித்து மேலும் அறிக.
- வாடிக்கையாளர் அணுகல்: உங்கள் ஆன்லைன் ஸ்டோர் B2B வாடிக்கையாளர்களுக்கு மட்டுமெனக் கட்டுப்படுத்தப்படவில்லை.
- செயலி இணக்கத்தன்மை: Advanced Registration, B2B Login Access Management, Login to View Price மற்றும் MagicPass Wholesale போன்ற கடவுச்சொல் கட்டுப்பாடு அல்லது வயது சரிபார்ப்புச் செயலிகள் எதையும் நீங்கள் பயன்படுத்தவில்லை.
- கடவுச்சொல் கட்டுப்பாட்டுச் செயலியான Locksmith இதற்கு விதிவிலக்கு. இது Shop உடன் இணக்கமாகச் செயல்படும். Locksmith மூலம் சில தயாரிப்புகளைப் பூட்டினாலும், உங்கள் ஸ்டோர் Shop இல் தொடர்ந்து காட்சிப்படுத்தப்படும். பூட்டப்பட்ட தயாரிப்புகள் உங்கள் Shop ஸ்டோரில் தொடர்ந்து மறைக்கப்பட்டிருக்கும்.
Shop இல் நேரடியாக விற்பதற்கான தேவைகள்
உங்கள் ஸ்டோர் பின்வரும் தேவைகளைப் பூர்த்தி செய்தால், வாடிக்கையாளர்கள் Shop இலிருந்து வெளியேறாமல் உங்கள் தயாரிப்புகளைப் பார்வையிட்டு வாங்கலாம். நீங்களும் Shop Campaigns மூலம் பிரச்சாரங்களை நடத்தலாம்:
- சேவை விதிமுறைகள் மற்றும் ஏற்கத்தக்க பயன்பாட்டுக் கொள்கைக்கு இணங்குதல்: உங்கள் ஸ்டோர் Shopify இன் சேவை விதிமுறைகள் மற்றும் ஏற்கத்தக்க பயன்பாட்டுக் கொள்கை ஆகியவற்றுக்கு இணங்குகிறது.
- செயலில் உள்ள Shopify திட்டம்: உங்கள் ஸ்டோர் செயலில் உள்ள Shopify திட்டத்தைப் பயன்படுத்துகிறது. உங்கள் தற்போதைய திட்டத்தைச் சரிபார்ப்பது அல்லது மேம்படுத்துவது குறித்து மேலும் அறிக.
- Shopify Payments செயல்படுத்துதல்: உங்கள் ஸ்டோரில் Shopify Payments செயல்படுத்தப்பட்டுள்ளது. Shopify Payments தேவைகள் குறித்து மேலும் அறிக.
- சார்ஜ்பேக் வீதம்: கடந்த 90 நாட்களில் உங்கள் ஸ்டோரின் சார்ஜ்பேக் வீதம் 5% க்கும் குறைவாக இருந்துள்ளது. Shopify Payments மூலம் செயலாக்கப்படும் பரிவர்த்தனைகளில் கோரப்படும் சார்ஜ்பேக்குகள் அனைத்தும் உங்கள் சார்ஜ்பேக் வீதத்தில் கணக்கிடப்படும்.
- தயாரிப்புத் தகுதி: உங்கள் தயாரிப்புகளில் குறைந்தது ஒன்றாவது Shop இன் தயாரிப்புத் தகுதித் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது. தடைசெய்யப்பட்ட தயாரிப்புகளுடன் ஒப்புதல் பெற்ற தயாரிப்புகளையும் விற்றால், ஒப்புதல் பெற்ற தயாரிப்புகள் மட்டுமே Shop இல் கிடைக்கும். தயாரிப்புத் தகுதி தொடர்பான சிக்கல்களைத் தீர்ப்பது குறித்து மேலும் அறிக.