Shop-இல் வாங்கிய பிறகான சந்தைப்படுத்தல் தானியக்கமாக்கல்கள்

நீங்கள் Shop சேனலில் நேரடி விற்பனையைச் செயலாக்கியிருந்தால், மீண்டும் வரும் வாடிக்கையாளர்களுக்கு உங்கள் ஸ்டோரில் அவர்கள் பயன்படுத்தக்கூடிய செயலிக்குள்ளான தள்ளுபடியை வழங்குகின்ற, வாங்கிய பிறகான சலுகையை நீங்கள் உருவாக்கலாம். உங்களால் ஒரு நேரத்தில் 1 வாங்கிய பிறகான சலுகையை மட்டுமே செயலில் வைத்திருக்க முடியும்.

பின்வரும் நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்று நடக்கும் வரை தள்ளுபடிச் சலுகையானது Shop செயலியில் காட்டப்படும்:

  • ஒரு வாடிக்கையாளருக்கு 1 பயன்பாட்டு வரம்பு போன்ற தள்ளுபடிக் குறியீட்டு நிபந்தனைகள் அனைத்தும் நிறைவேறுதல்.
  • தள்ளுபடிக் குறியீடு காலாவதியாதல் அல்லது நீக்கப்படுதல்.
  • வாங்கிய பிறகான தானியக்கமாக்கல் முடக்கப்படுதல் அல்லது நீக்கப்படுதல்.

உங்கள் தள்ளுபடிக்கான நிபந்தனைகளை உருவாக்கும்போது, குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு, வாடிக்கையாளர்களின் குழுக்களுக்கு, சேகரிப்புகளுக்கு அல்லது தயாரிப்புகளுக்கு மட்டுமே பொருந்துமாறு தள்ளுபடிக் குறியீட்டைக் கட்டுப்படுத்த முடியாது.

Shop வாடிக்கையாளர்களுக்குப் பின்வரும் செயலிக்குள்ளான தள்ளுபடி வகைகளை நீங்கள் வழங்கலாம்:

  • இலவச ஷிப்பிங்
  • நிலையான தொகை
  • சதவீதம்

வாங்கிய பிறகான சலுகைத் தானியக்கமாக்கலை உருவாக்குதல்

வாங்கிய பிறகான சலுகைத் தானியக்கமாக்கலை உருவாக்க, நீங்கள் ஒரு தள்ளுபடிக் குறியீட்டைக் கொண்டு அந்தத் தானியக்கமாக்கலைச் செயலாக்க வேண்டும். துல்லியமாகக் கண்காணிப்பதற்கு, அந்த வாங்கிய பிறகான சலுகைத் தானியக்கமாக்கலுக்கு மட்டுமே பயன்படுத்துகின்ற ஒரு தள்ளுபடிக் குறியீட்டை உருவாக்கவும். தானியக்கமாக்கல் செயலில் இருக்கும் வரை, எந்த நேரத்திலும் நீங்கள் தள்ளுபடிக் குறியீட்டை மாற்றிக்கொள்ளலாம்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, விற்பனைச் சேனல்கள் > Shop என்பதற்குச் செல்லவும்.

  2. சந்தைப்படுத்தல் பிரிவில், சலுகையை உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. விருப்பத்தேர்வு: நீங்கள் தள்ளுபடியை அமைக்கவில்லை எனில், தள்ளுபடிக் குறியீட்டை உருவாக்கு என்பதைக் கிளிக் செய்து, நீங்கள் வழங்க விரும்பும் தள்ளுபடிக் குறியீட்டை உள்ளமைக்கவும்.

  4. செயல்பாட்டு விவரங்கள் பிரிவில், செயல்பாட்டுப் பெயர் ஒன்றை உள்ளிடவும்.

  5. இது எப்படிச் செயல்படுகிறது பிரிவில், பின்வரும் கூறுகளை உள்ளமைக்கவும்:

    • தள்ளுபடியைத் தேர்ந்தெடுக்க, தள்ளுபடி தேடல் பட்டியைப் பயன்படுத்தவும் அல்லது உலாவு என்பதைக் கிளிக் செய்யவும். நீங்கள் பயன்படுத்த விரும்பும் தள்ளுபடியைத் தேர்ந்தெடுத்து, சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
    • விருப்பத்தேர்வு: பின்னணிப் படத்தைப் பதிவேற்ற, படத்தைத் தேர்ந்தெடு என்பதைக் கிளிக் செய்யவும். படம் செதுக்கப்படுவதைத் தவிர்க்க, 933 x 480 பிக்சல்கள் அளவிலான படத்தைப் பயன்படுத்தவும்.
    • விருப்பத்தேர்வு: செய்தி புலத்தில், உங்கள் சலுகையில் வாடிக்கையாளர்களுக்குக் காட்டப்படும் செய்தி ஒன்றை உள்ளிடவும்.
    • விருப்பத்தேர்வு: புஷ் அறிவிப்பு புலத்தில், உங்கள் சலுகைக்கான புஷ் அறிவிப்புகளில் வாடிக்கையாளர்களுக்குக் காட்டப்படும் உரை ஒன்றை உள்ளிடவும்.
  6. செயல்பாட்டின் மாதிரிக்காட்சியை மதிப்பாய்வு செய்துவிட்டு, செயல்பாட்டை வெளியிடு என்பதைக் கிளிக் செய்யவும்.

ஏற்கெனவே இருக்கும் வாங்கிய பிறகான சலுகையைத் திருத்துதல், இடைநிறுத்துதல் அல்லது நீக்குதல்

வாங்கிய பிறகான சலுகைத் தானியக்கமாக்கலை உருவாக்கிய பிறகு, நீங்கள் அந்தத் தானியக்கமாக்கலைத் திருத்தலாம், இடைநிறுத்தலாம் அல்லது நீக்கலாம். ஒரு சலுகையை இடைநிறுத்திய பிறகு, அதை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் மீண்டும் தொடரலாம்.

வாங்கிய பிறகான சலுகையைத் திருத்துவதற்கு, இடைநிறுத்துவதற்கு அல்லது நீக்குவதற்கு முன்பு பின்வரும் கருத்துகளை மதிப்பாய்வு செய்யவும்:

  • ஒரு நேரத்தில் உங்களால் 1 சலுகையை மட்டுமே செயலில் வைத்திருக்க முடியும். உங்கள் சலுகையை மாற்ற, நீங்கள் அந்தச் சலுகையைத் திருத்தலாம் அல்லது அதை நீக்கிவிட்டு புதிய சலுகையை உருவாக்கலாம்.
  • வாடிக்கையாளர் ஒருவரால் பயன்படுத்தப்படாத செயலில் உள்ள தள்ளுபடிக் குறியீடு இருக்கும்போது, நீங்கள் வாங்கிய பிறகான சலுகைத் தானியக்கமாக்கலை இடைநிறுத்தினால் அல்லது நீக்கினால், உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து நீங்கள் தள்ளுபடிக் குறியீட்டை நீக்கும் வரை வாடிக்கையாளர் அந்தத் தள்ளுபடிக் குறியீட்டைப் பயன்படுத்த முடியும்.
  • வாடிக்கையாளர் ஒருவரிடம் வாங்கிய பிறகான சலுகையிலிருந்து கிடைக்கப்பெற்ற, அவர்கள் பயன்படுத்தாத செயலில் உள்ள ஒரு தள்ளுபடிக் குறியீடு இருந்தால், நீங்கள் அதைத் திருத்தினாலும் அவர்களது சலுகை புதுப்பிக்கப்படாது, அத்துடன் வாங்கிய பிறகான புதிய சலுகைகளும் அவர்களுக்குக் கிடைக்காது.
  • ஒரு தானியக்கமாக்கலை நீக்குவது, வாங்கிய பிறகான உங்கள் அனைத்துச் சலுகைத் தானியக்கமாக்கல்களுக்குமான செயல்திறன் அளவீடுகளை மீட்டமைத்துவிடும்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, விற்பனைச் சேனல்கள் > Shop என்பதற்குச் செல்லவும்.

  2. சந்தைப்படுத்தல் பிரிவில், சலுகையை நிர்வகி என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. வாங்கிய பிறகான சலுகைத் தானியக்கமாக்கல் பக்கத்தில், பின்வரும் செயல்களில் ஏதேனும் ஒன்றைச் செய்யவும்:

    • சலுகையைத் திருத்த, தானியக்கமாக்கலில் உள்ள ஏதேனும் புலங்களைத் திருத்திவிட்டு, சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
    • சலுகையைத் தற்காலிகமாக இடைநிறுத்த, செயல்பாட்டை இடைநிறுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
    • முன்பு இடைநிறுத்தப்பட்ட சலுகையைத் தொடர, செயல்பாட்டைத் தொடரு என்பதைக் கிளிக் செய்யவும்.
    • சலுகையை நிரந்தரமாக நீக்க, செயல்பாட்டை நீக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

தானாகவே இடைநிறுத்தப்படும் வாங்குதலுக்குப் பிந்தைய சலுகைகள்

பின்வருவனவற்றில் ஏதேனும் நிகழும்போது, வாங்குதலுக்குப் பிந்தைய சலுகைத் தானியக்கமாக்கல் தானாகவே இடைநிறுத்தப்படும்:

  • தள்ளுபடிக் குறியீடு நீக்கப்படும்.
  • தள்ளுபடிக் குறியீடு காலாவதியாகும்.
  • ஆதரிக்கப்படாத தள்ளுபடி வகை தேர்ந்தெடுக்கப்படும்.
  • நீங்கள் Shop வணிகர் தேவைகளைப் பூர்த்தி செய்யவில்லை.

உங்கள் வாங்குதலுக்குப் பிந்தைய சலுகைப் பிரச்சாரம் இடைநிறுத்தப்பட்டால், Shop சேனலில் உள்ள தானியக்கமாக்கலில் சேர்க்கப் புதிய தள்ளுபடிக் குறியீட்டை உருவாக்குமாறு கேட்கும் மின்னஞ்சல் உங்களுக்கு அனுப்பப்படும்.

வாங்குதலுக்குப் பிந்தைய சலுகைகளுக்கான பகுப்பாய்வைப் பார்த்தல்

தானியக்கமாக்கலை உருவாக்கிய பிறகு, செயல்திறன் அளவீடுகளை மதிப்பாய்வு செய்ய நீங்கள் Shop சேனலைப் பயன்படுத்தலாம். 30 நாள் சுழற்சி அடிப்படையில் இந்த அளவீடுகளை நீங்கள் அணுகலாம். இவற்றில் பின்வரும் தகவல்கள் அடங்கும்:

  • எந்தெந்த வாடிக்கையாளர்கள் சலுகையைப் பெற்றார்கள்.
  • தள்ளுபடிக் குறியீட்டைப் பயன்படுத்திச் செய்யப்பட்ட ஆர்டர்களின் எண்ணிக்கை.
  • சலுகையுடன் தொடர்புடைய விற்பனைகளின் எண்ணிக்கை.

உங்கள் Shopify நிர்வாகியின் சந்தைப்படுத்தல் பக்கத்திலிருந்து இந்த அளவீடுகளை உங்களால் அணுக முடியாது.