Shop தயாரிப்பு மதிப்பாய்வுகளின் மதிப்பீடுகள் மற்றும் அளவீடுகள்

உங்கள் சராசரித் தயாரிப்பு மதிப்பாய்வு மதிப்பீட்டையும், உங்கள் Shopify நிர்வாகியில் காட்டப்படும் அளவீடுகளையும் Shop எப்படிக் கணக்கிடுகிறது என்பதைப் பற்றி இந்தப் பக்கத்தில் அறிந்துகொள்ளலாம்.

Shop சராசரி மதிப்பீடுகள்

உங்கள் சராசரி தயாரிப்பு மதிப்பாய்வு மதிப்பீடு Shop இல் ஒன்று முதல் ஐந்து நட்சத்திரங்கள் வரையிலான நட்சத்திர மதிப்பீடாகக் காட்டப்படும். காட்டப்படும் சராசரி மதிப்பீடு பின்வரும் தகவலைப் பயன்படுத்திக் கணக்கிடப்படுகிறது:

  • Shop இல் உரையுடன் காட்டப்படும் Shop தயாரிப்பு மதிப்பாய்வுகள்.
  • Shop இல் காட்டப்படாத, குறைந்த உரையைக் கொண்ட அல்லது உரையற்ற Shop தயாரிப்பு மதிப்பாய்வுகள்.
  • Shop இல் காட்டப்படும் மற்றும் Shop இல் காட்டப்படாத மதிப்பாய்வுகள் உட்பட Shop இன் மதிப்பீடு மற்றும் சரிபார்ப்புத் தரநிலைகளைப் பூர்த்தி செய்யும் கூட்டாளர் செயலிகளிலிருந்து பெறப்படும் மதிப்பாய்வுகள்.

சராசரி மதிப்பீட்டுக் கணக்கீட்டில் சேர்க்கப்பட்ட மதிப்பாய்வுகள், Shop இன் சரிபார்ப்பு மற்றும் மதிப்பீட்டுத் தரநிலைகளுக்கு உட்பட்டிருக்கலாம். புகாரளிக்கப்பட்ட, மேலும் Shop இன் தயாரிப்பு மதிப்பாய்வுக் கொள்கைகளை மீறுவதாகக் கருதப்படும் எந்தவொரு மதிப்பாய்வும் கணக்கீட்டில் சேர்க்கப்படாது.

Shop தயாரிப்பு மதிப்பாய்வுகளின் அளவீடுகள்

உங்கள் Shop தயாரிப்பு மதிப்பாய்வுகள் பற்றிய அளவீடுகளை Shop சேனலின் மதிப்பாய்வுகள் பக்கத்தில் பார்க்கலாம்.

Shop தயாரிப்பு மதிப்பாய்வுகளின் அளவீடுகள்
அளவீடுவிளக்கம்
சேகரிக்கப்பட்ட மதிப்பாய்வுகள்Shop செயலி மற்றும் ஏதேனும் ஆதரிக்கப்படும் கூட்டாளர் செயலி என இரண்டிலிருந்தும், நீங்கள் தேர்ந்தெடுக்கும் தேதிக்காலத்தில் சேகரிக்கப்பட்ட மதிப்பாய்வுகளின் எண்ணிக்கை.
மாற்று வீதம்Shop செயலியில் ஒரு தயாரிப்பை மதிப்பாய்வு செய்யுமாறு வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட பிறகு, அவர்கள் உங்கள் தயாரிப்புகளுக்கு வழங்கிய மதிப்பாய்வுகளின் சதவீதம்.
சராசரி மதிப்பீடுShop இல் மதிப்பாய்வு செய்யப்பட்ட உங்களின் அனைத்துத் தயாரிப்புகளுக்குமான சராசரி மதிப்பீடு. இந்த மதிப்பீட்டில் Shop செயலியில் சேகரிக்கப்பட்ட மதிப்பாய்வுகளும், நீங்கள் பயன்படுத்தும் கூட்டாளர் செயலிகளிலிருந்து சேகரிக்கப்பட்ட மதிப்பாய்வுகளை Shop இல் காண்பித்தால் அந்த மதிப்பாய்வுகள் அனைத்தும் சேர்க்கப்படும்.
கூட்டாளர் செயலி மதிப்பாய்வுகள்ஆதரிக்கப்படும் கூட்டாளர் செயலியை நீங்கள் நிறுவியிருந்தால், உங்கள் கூட்டாளர் செயலி மூலம் சேகரிக்கப்பட்டு Shop இல் காட்டப்படும் மதிப்பாய்வுகளின் எண்ணிக்கையை இந்த அளவீடு காட்டும்.