Shop சேனலை அமைத்தல்

Shop செயலியில் வாடிக்கையாளர்களுக்கு உங்கள் Shop ஸ்டோர் எப்படிக் காட்டப்படும் என்பதை நிர்வகிக்கவும், உங்கள் ஷாப்பிங் அமைப்புகளை நிர்வகிக்கவும் Shop சேனலை அமைக்கவும். Shop சேனலை அமைத்த பிறகு, உங்கள் Shop ஸ்டோர் விவரங்களையும் முகப்புப் பக்கத்தையும் தனிப்பயனாக்கலாம்.

Shopify இல் Shop சேனலைச் சேர்

டெஸ்க்டாப்
  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > விற்பனைச் சேனல்கள் என்பதற்குச் செல்லவும்.

  2. Shopify App Store என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. பொருந்தினால், Shopify App Store க்குத் தொடர உள்நுழையவும்.

  4. Shopify App Store இலிருந்து Shop ஐத் தேடி, Shop என்பதைக் கிளிக் செய்யவும்.

  5. நிறுவு என்பதைக் கிளிக் செய்யவும்.

மொபைல்
  1. Shopify செயலியிலிருந்து, மெனு ஐகானைத் தட்டவும்.

  2. விற்பனைச் சேனல்கள் என்பதைத் தட்டவும்.

  3. விற்பனைச் சேனலைச் சேர் திரையிலிருந்து, Shop என்பதைத் தட்டவும்.

  4. செயலியைச் சேர் என்பதைத் தட்டவும்.

நீங்கள் Shop இல் விற்க விரும்பவில்லை எனில், நீங்கள் Shop மூலம் விற்பனை என்பதிலிருந்து விலகலாம். Shop சேனலை அகற்றுவதற்கு, உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து விற்பனைச் சேனலை அகற்றுதல் என்பதைப் பார்க்கவும்.

Shop இல் தயாரிப்புகளைக் காட்சிப்படுத்துதல் மற்றும் விற்பனை செய்தல்

உங்கள் தயாரிப்புகள் Shop சேனலில் வெளியிடப்பட்டிருந்தாலோ Shopify Catalogஇன் ஒரு பகுதியாக இருந்தாலோ, அத்துடன் உங்கள் ஸ்டோர் Shop வணிகர் வழிகாட்டுதல்களில் உள்ள தகுதித் தேவைகளைப் பூர்த்திசெய்தாலோ, நீங்கள் Shop சேனலை நிறுவியிருந்தாலும் இல்லாவிட்டாலும் உங்களின் தயாரிப்புகள் தானாகவே Shop செயலி, shop.com மற்றும் ChatGPT-க்கான Shop செயலி போன்ற ஏஜெண்டிக் ஷாப்பிங் அனுபவங்கள் வழியாகக் கண்டறியக்கூடியதாகிவிடும்.

Shop இல் உங்கள் தயாரிப்புகளைக் காட்சிப்படுத்துவதற்கும் நேரடியாக விற்பதற்கும் வெவ்வேறு தேவைகள் உள்ளன. Shop இல் உங்கள் தயாரிப்புகளைக் கண்டறிய முடிவதற்கு, உங்கள் ஸ்டோர் Shop இல் காட்சிப்படுத்துவதற்கான தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். வாடிக்கையாளர்கள் Shop இலிருந்து வெளியேறாமல் உங்கள் தயாரிப்புகளை வாங்க, உங்கள் ஸ்டோர் கூடுதலாக Shop இல் நேரடியாக விற்பதற்கான தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும்.

நீங்கள் அவற்றை Shop சேனலில் வெளியிட்டுள்ளீர்களா என்பதைப் பொறுத்து, உங்கள் தயாரிப்புகள் பின்வரும் வழிகளில் எதேனும் ஒன்றின் மூலம் வாங்குவதற்குக் கிடைக்கும்:

  • Shop சேனல்: Shop சேனலில் வெளியிடப்பட்ட தயாரிப்புகளை Shop இல் நேரடியாக வாங்கலாம்.
  • ஆன்லைன் ஸ்டோர் சேனலில் மட்டும்: ஆன்லைன் ஸ்டோர் சேனலில் மட்டும் வெளியிடப்பட்ட Shopify Catalog தயாரிப்புகளை Shop இல் பட்டியல்களாகக் கண்டறியலாம். கொள்முதல் செய்ய வாடிக்கையாளர்கள் உங்கள் ஆன்லைன் ஸ்டோருக்கு அனுப்பப்படுவார்கள்.

இயல்பாக, உங்கள் Shop ஸ்டோரில் உள்ள தயாரிப்புகள் மதிப்பிடப்பட்ட விநியோகத் தேதியைக் காண்பிக்கும். உங்கள் Shop அமைப்புகளில் இந்த அம்சத்தை நீங்கள் முடக்கலாம்.

Shop இல் நேரடி விற்பனையை முடக்குதல்

Shop செயலி மற்றும் shop.com உட்பட Shop மூலம் வாடிக்கையாளர்கள் உங்கள் தயாரிப்புகளை நேரடியாக வாங்குவதை நீங்கள் விரும்பவில்லை என்றால், உங்கள் ஆன்லைன் ஸ்டோருக்கு இணைக்கும் வகையில் விற்பனை முறையை மாற்றலாம். விற்பனை முறையை மாற்றிய பிறகும், உங்கள் தயாரிப்புகளை Shop இல் தொடர்ந்து கண்டறியலாம். ஆனால், கொள்முதல் செய்ய வாடிக்கையாளர்கள் உங்கள் ஆன்லைன் ஸ்டோருக்கு அனுப்பப்படுவார்கள்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, விற்பனைச் சேனல்கள் > Shop என்பதற்குச் செல்லவும்.

  2. அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. Shop மூலம் விற்பனை பிரிவில், ஆன்லைன் ஸ்டோருக்கு இணை என்ற விற்பனை முறையைத் தேர்ந்தெடுக்கவும்.

Shop இல் நேரடி விற்பனையை மீண்டும் செயல்படுத்துதல்

Shop இல் நேரடி விற்பனையை எப்போது வேண்டுமானாலும் மீண்டும் செயல்படுத்தலாம்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, விற்பனைச் சேனல்கள் > Shop என்பதற்குச் செல்லவும்.

  2. அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. Shop மூலம் விற்பனை பிரிவில், Shop இலேயே நேரடியாக விற்பனை செய் என்ற விற்பனை முறையைத் தேர்ந்தெடுக்கவும்.

Shop ஆர்டர்களுக்கான நேரடி ஸ்டோர் திருப்பியளிப்புகளை வழங்கு

நீங்கள் சுய-சேவை திருப்பியளிப்பைப் பயன்படுத்தி, உங்களுக்கு ஒரு சில்லறை விற்பனை இருப்பிடம் இருந்தால், உங்கள் Shop விற்பனைச் சேனல் அமைப்புகளில் ஆர்டர்களை நேரடி ஸ்டோர் இருப்பிடங்களுக்குத் திருப்பியளிக்க வாடிக்கையாளர்களை அனுமதி என்பதைச் செயல்படுத்தலாம். Shop செயலி மூலம் வாங்கும் வாடிக்கையாளர்கள் நேரடி ஸ்டோரில் திருப்பியளிப்பதற்குக் கோரலாம், மேலும் QR குறியீட்டைப் பயன்படுத்தி உங்கள் ஸ்டோரில் திருப்பியளிப்பை முடிக்கலாம்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, விற்பனைச் சேனல்கள் > Shop என்பதற்குச் செல்லவும்.

  2. அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. சுய-சேவை திருப்பியளிப்பு பிரிவில், ஆர்டர்களை நேரடி ஸ்டோர் இருப்பிடங்களுக்குத் திருப்பியளிக்க வாடிக்கையாளர்களை அனுமதி என்பதைச் செயல்படுத்தவும்.

Shop செயலி மற்றும் shop.com ஆகியவற்றில் வாடிக்கையாளர்கள் தொடர்புடைய மற்றும் பயனுள்ள முடிவுகளை விரைவாகக் கண்டறிய உதவ, தரவரிசை அமைப்புகளை Shop தேடல் பயன்படுத்துகிறது. Shop தேடலில் உங்கள் தயாரிப்புகள் காண்பிக்கப்பட, உங்கள் ஸ்டோர் பின்வரும் தேவைகளைப் பூர்த்திசெய்ய வேண்டும்:

  • Shop வணிகர் வழிகாட்டுதல்களில் உள்ள தகுதித் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
  • இணைக்கப்பட்ட ஒரு தனிப்பயன் டொமைனை கொண்டிருக்க வேண்டும்.
  • தனிப்பயன் ஸ்டோர் பெயரைக் கொண்டிருக்க வேண்டும்.
  • Shopify இல் நீண்ட கால விற்பனை வரலாறு, நிலையான அளவிலான ஆர்டர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் நேர்மறையான மதிப்பாய்வுகளைக் கொண்டிருக்க வேண்டும். Shop செயலியில் பரிந்துரைக்கப்படும் தயாரிப்புகள் தரத் தரநிலைகளைப் பூர்த்தி செய்வதை உறுதிசெய்ய இது உதவுகிறது. தரத்தை அளவிடுவதற்கான Shopify இன் முறைகள் தொடர்ந்து மாறிக்கொண்டே இருப்பதால், இந்த குறிப்பிட்ட தரநிலைகள் துல்லியமானவை அல்ல.

உங்கள் Shop தேடல் பார்வைத்திறனை மேம்படுத்து

வாடிக்கையாளருக்கு மிகவும் பொருத்தமான முடிவுகளின் அடிப்படையில் தயாரிப்புகள் தேடல் முடிவுகளில் காட்டப்படும். வாடிக்கையாளர் உங்கள் சரியான ஸ்டோர் பெயரைத் தேடும்போதெல்லாம் உங்கள் ஸ்டோர் Shop தேடல் முடிவுகளில் காட்டப்படும். Shop தேடலில் உங்கள் ஸ்டோரின் பார்வைத்திறனை மேம்படுத்த உதவ, நீங்கள் பின்வரும் செயல்களை மேற்கொள்ளலாம்: