Shop Campaigns-க்குப் பணம் செலுத்துதல்
ஒரு Shop Campaign காரணமாக ஆர்டர் செய்யப்படும் ஒவ்வொரு முறையும், அது Shop Campaigns-க்குக் கணக்கிடப்படும், மேலும் உங்களுக்கு அதற்கேற்ப பில் செய்யப்படும். Shop Campaigns பில்லிங் குறித்து மேலும் அறிய, இந்தப் பக்கத்தைப் பயன்படுத்தவும்.
இந்தப் பக்கத்தில்
Shop Campaigns ஆர்டர் கணக்கீடு
Shop Campaigns-க்கு ஆர்டர் கணக்கிடப்பட்ட பிறகு, வாடிக்கையாளர் மற்றும் ஆர்டர் ஆகிய இரண்டிற்கும் Shop Cash offers acquired டேக் பயன்படுத்தப்படும்.
பின்வரும் சந்தர்ப்பங்களில், Shop Campaigns-க்கு ஆர்டர் கணக்கிடப்படும்:
- உங்கள் பிரச்சாரத்தின் இலக்குப்பார்வையாளர் அளவுகோல்களைப் பூர்த்திசெய்யும் வாடிக்கையாளர், Shop அல்லது shop.com இல் உங்கள் ஸ்டோரிலிருந்து பொருட்கள் வாங்க ஒரு சலுகையை மீட்டுகிறார்.
- உங்கள் பிரச்சாரத்தின் இலக்குப்பார்வையாளர் அளவுகோல்களைப் பூர்த்திசெய்யும் வாடிக்கையாளர், உங்களின் சலுகை, ஸ்டோர் அல்லது தயாரிப்புகளுக்கான விளம்பரத்தைப் பார்த்த பிறகு, Shop அல்லது shop.com இல் உங்கள் ஸ்டோரிலிருந்து பொருட்களை வாங்குகிறார்.
வாடிக்கையாளர் கிளிக் செய்த 7 நாட்களுக்குள் செய்யப்படும் ஆர்டர்கள் ஒரு பிரச்சாரத்திற்குக் கணக்கிடப்படும். இதன் பொருள், நீங்கள் ஒரு பிரச்சாரத்தை இடைநிறுத்திய அல்லது முடித்த பிறகு 7 நாட்கள் வரை கணக்கீட்டுக் கட்டணங்கள் உங்களுக்கு விதிக்கப்படக்கூடும்.
Shop Campaigns விளம்பரத்திற்குச் சொந்தமான ஆர்டரில் Shop Cash offers acquired டேக் காட்டப்பட 8 மணிநேரம் வரை ஆகலாம்.
சந்தைப்படுத்தல் அறிக்கைகளுக்கான கணக்கீடும் Shop Campaigns கட்டணக் கணக்கீடும் தனித்தனியாக நடைபெறுவதால், உங்கள் சந்தைப்படுத்தல் அறிக்கைகளில் உள்ள Shop Campaigns ஆர்டர்களின் எண்ணிக்கை, உங்களிடம் கட்டணம் வசூலிக்கப்படும் ஆர்டர்களின் எண்ணிக்கையிலிருந்து மாறுபடலாம்.
Shop Campaigns பில்லிங்
ஒவ்வொரு முறையும் ஒரு ஆர்டர் Shop Campaigns கணக்கில் சேர்க்கப்படும் போது, அதற்கான கட்டணங்கள் உங்கள் Shopify பில்லில் சேர்க்கப்படும். இந்தக் கட்டணங்கள் உங்கள் பில்லில் Shop Campaigns கட்டணங்களாகப் பட்டியலிடப்படும். கணக்கில் சேர்க்கப்பட்ட ஒரு ஆர்டர் ரத்துசெய்யப்பட்டாலோ ரீஃபண்ட் செய்யப்பட்டாலோ, உங்கள் வாடிக்கையாளர் கையகப்படுத்தல் செலவுகள் ரீஃபண்ட் செய்யப்படாது.
கணக்கில் சேர்க்கப்பட்ட ஒவ்வொரு ஆர்டருக்கும் உங்களிடம் வசூலிக்கப்படும் தொகையானது மாறுபடும். தனிப்பட்ட கட்டணங்கள் நீங்கள் அமைத்த வாடிக்கையாளர் கையகப்படுத்தல் செலவைவிட அதிகமாகவோ குறைவாகவோ இருக்கலாம், மேலும் உங்கள் பிரச்சாரக் காலத்தில் சராசரியாக அந்தத் தொகையை எட்டும் போக்கைக் கொண்டிருக்கும்.
கிரெடிட்கள் மற்றும் முன்பணம் செலுத்துதல்
ஒரு Shop Campaign-ஐ உருவாக்க முன்பணம் எதுவும் தேவையில்லை. Shopify Credit மூலமாகவோ விளம்பரச் சலுகையாகவோ Shop Campaigns கிரெடிட்டைப் பெற்றால், அந்த கிரெடிட் உங்கள் பிரச்சார பட்ஜெட்டில் பயன்படுத்தப்படும். உங்கள் பிரச்சாரத்திற்கான மீதமுள்ள கட்டணங்கள் ஏதேனும் இருந்தால் அவை உங்கள் பில்லில் சேர்க்கப்படும். உங்களின் பில்களில் ஒன்றுக்கு கிரெடிட் நோட்டு வழங்கப்பட்டிருந்தால், அந்த பில்லிலிருந்து கிரெடிட் நோட்டைப் பதிவிறக்கலாம். கிரெடிட் நோட்டுகள் மற்றும் பில்லிங் கிரெடிட்டுகளை நிர்வகிப்பது குறித்து மேலும் அறிக.
Shop Campaigns கட்டணங்கள் மீதான வரிகள்
உங்கள் ஸ்டோரின் இடத்தைப் பொறுத்து, Shop Campaigns கட்டணங்களுக்கு வரிகள் விதிக்கப்படலாம். மேலும் அறிய, Shopify பில்லிங் மற்றும் வரிப் பொறுப்புகள் என்பதைப் பார்க்கவும்.
உங்கள் Shop Campaigns கட்டணங்களைப் பார்த்தல்
உங்கள் Shopify நிர்வாகியில் உள்ள பில்லிங் பக்கத்தில் உங்களின் Shop Campaigns கட்டணங்களைப் பார்க்கலாம்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > பில்லிங் என்பதற்குச் செல்லவும்.
பில்கள் பிரிவில், நீங்கள் மதிப்பாய்வு செய்ய விரும்பும் பில்லிக் கிளிக் செய்யவும்.
உங்கள் Shop Campaigns கட்டணங்கள் குறித்த கூடுதல் விவரங்களைக் காட்ட கட்டணங்களைப் பார்க்க என்பதைக் கிளிக் செய்யவும்.
ஒவ்வொரு கட்டணக் குழுவிலும் ஒரே Shop Campaign மூலமாகப் பெறப்பட்ட பல ஆர்டர்கள் இருக்கலாம்.
உங்கள் ஸ்டோர் ஒரு நிறுவனத்தின் பகுதியாக இருந்தால், செலவு அறிக்கையை உருவாக்குவதன் மூலமாகவும் உங்கள் Shop Campaigns செலவுகளை மதிப்பாய்வு செய்யலாம். ஸ்டோர், கட்டணப் பகுப்பு மற்றும் தேதி வரம்பு ஆகியவற்றின் அடிப்படையில் அறிக்கையை நீங்கள் வடிகட்டலாம்.