Shopify Collective செயலியில் உள்ள பகுப்பாய்வு மற்றும் நுண்ணறிவைப் புரிந்துகொள்ளுதல்
Shopify Collective-இல் உங்கள் ஸ்டோர் பகுப்பாய்வு மற்றும் நுண்ணறிவைப் பார்ப்பதன் மூலம் உங்கள் விற்பனைச் செயல்திறனை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை நீங்கள் எடுக்கலாம்.
இந்தப் பக்கத்தில்
Shopify Collective மூலம் உங்கள் ஸ்டோர் பகுப்பாய்வைப் பார்க்கவும்
பின்வரும் வகையான அறிக்கைகளைக் கொண்டு Shopify Collective-க்கான ஸ்டோர் பகுப்பாய்வை நீங்கள் பார்க்கலாம்:
- நிகர விற்பனை
- ஆர்டர்கள்
- மொத்த லாபம்
- சப்ளையர் வாரியான விற்பனை
- தயாரிப்பு வாரியான ஆர்டர்கள்
- வகை வாரியான ஆர்டர்கள்
மொத்த லாபம் என்பது உங்களின் நிகர விற்பனையிலிருந்து, ரிட்டர்ன்கள் மற்றும் பணத்தைத் திரும்பப்பெறுதல்கள் ஆகியவற்றுக்குப் பிறகு தயாரிப்புச் செலவுகளைக் கழித்து வருவதாகும். இதில் வரிகள் மற்றும் நீங்களோ உங்கள் வாடிக்கையாளரோ செலுத்தும் எந்தவொரு ஷிப்பிங் செலவும் அடங்காது.
உங்கள் Shopify நிர்வாகியிலுள்ள பகுப்பாய்வு > அறிக்கைகள் பிரிவில் முழுமையான அறிக்கையைப் பார்க்க, விற்பனை, ஆர்டர்கள் அல்லது மொத்த லாப இணைப்புகளில் எதையேனும் கிளிக் செய்யலாம்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, செயலிகள் > Collective என்பதற்குச் செல்லவும்.
விருப்பத்தேர்வு: உங்கள் Shopify Collective பகுப்பாய்விற்கான தேதி வரம்பை மாற்ற, கடந்த 30 நாட்கள் கீழ்தோன்றும் மெனுவைக் கிளிக் செய்து, நீங்கள் பார்க்க விரும்பும் தேதி வரம்பைத் தேர்ந்தெடுத்துவிட்டு, பயன்படுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்களுக்கு விருப்பமான ஒரு முழுமையான அறிக்கையைப் பார்க்க, ஏதேனும் விற்பனை, ஆர்டர்கள் அல்லது மொத்த லாப இணைப்பைக் கிளிக் செய்யவும்.
Shopify Collective மூலம் உங்கள் ஸ்டோர் நுண்ணறிவுகளைப் பார்க்கலாம்
நீங்கள் எவ்வளவு காலமாக Shopify Collectiveஐப் பயன்படுத்தினீர்கள், எத்தனை விற்பனை மற்றும் ஆர்டர்களைப் பெற்றீர்கள், உங்கள் வாடிக்கையாளர்கள் விரும்பும் தயாரிப்பு வகைகள் ஆகியவற்றைப் பொறுத்து, பின்வரும் நுண்ணறிவு கார்டுகள் உங்கள் Shopify Collective செயலியில் காட்டப்படலாம்:
- மைல்கற்கள்: இந்தக் கார்டுகள் பின்வரும் சூழ்நிலைகளில் காட்டப்படும்:
- நீங்கள் உங்களின் முதல் Collective விற்பனையைச் செய்து, மற்ற ஒட்டுமொத்த Collective விற்பனை இலக்குகளை அடையும்போது.
- உங்கள் அனைத்து Collective தயாரிப்புகளும் அல்லது குறிப்பிட்ட தயாரிப்புகளும் வாடிக்கையாளர்களால் எத்தனை முறை பார்க்கப்பட்டன என்பதற்கான குறிப்பிட்ட மைல்கற்களை அடையும்போது.
- குறிப்பிட்ட தயாரிப்புகள் குறிப்பிட்ட விற்பனை இலக்குகளை அடையும்போது.
- வாடிக்கையாளர் தேடல்கள்: வாடிக்கையாளர்கள் உங்கள் ஸ்டோரில் குறிப்பிட்ட வகையான தயாரிப்புகளைத் தேடும்போது, அவர்களுக்குத் தொடர்புடைய முடிவுகள் ஏதும் கிடைக்காத நிலையில் இந்தக் கார்டுகள் காட்டப்படும். வாடிக்கையாளர்களின் தேவையைப் பூர்த்தி செய்து விற்பனையை அதிகரிக்க, இந்தத் தயாரிப்புகளைச் சேர்ப்பதைப் பரிசீலிக்கலாம்.
- பிரபலமான/நிரப்புத் தயாரிப்புகள்: உங்கள் வாடிக்கையாளர்களிடம் ஏற்கெனவே பிரபலமாக உள்ள தயாரிப்பு வகைகளில், அதே போன்ற அல்லது நிரப்புத் தயாரிப்புகளைச் சேர்ப்பதற்கான வாய்ப்புகள் இருக்கும்போது இந்தக் கார்டுகள் காட்டப்படும்.
உங்கள் ஸ்டோரில் வாடிக்கையாளர்களின் தேவையை முழுமையாகப் பூர்த்தி செய்யும் ஒரு Shopify Collective தயாரிப்பு அட்டவணையை உருவாக்க உங்களுக்கு உதவ, உங்கள் விற்பனை மற்றும் ஆர்டர் மைல்கற்கள், வாடிக்கையாளர் கொள்முதல் போக்குகள், நிரப்புத் தயாரிப்புகள், தயாரிப்புத் தேடல் இடைவெளிகள் ஆகியவை தொடர்பான தெரிவுநிலையை நுண்ணறிவு கார்டுகள் வழங்குகின்றன.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, செயலிகள் > Collective என்பதற்குச் செல்லவும்.
நுண்ணறிவு பிரிவில், பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்யவும்:
- மைல்கல் கார்டுக்கு:
- அறிக்கையைப் பார் என்பதைக் கிளிக் செய்யவும்.
- உங்கள் Shopify நிர்வாகியின் பகுப்பாய்வு > அறிக்கைகள் பிரிவில் முழு அறிக்கையையும் பார்க்கலாம்.
- தயாரிப்புகள் கார்டுக்கு:
- தயாரிப்புகளைக் கண்டறி என்பதைக் கிளிக் செய்யவும்.
- உங்கள் Shopify Collective செயலியின் டிஸ்கவரி பிரிவில், உங்கள் ஸ்டோரில் விற்க விரும்பும் தயாரிப்புகளைச் சேர்க்கலாம் அல்லது அவற்றுக்கான அணுகலைக் கோரலாம்.
- மைல்கல் கார்டுக்கு: