சில்லறை விற்பனையாளர்களுக்கான Collective சமூக வழிகாட்டுதல்களைப் புரிந்துகொள்ளுதல்
சப்ளையர்களுடன் நீங்கள் வெற்றிகரமான உறவுகளை உருவாக்கிக்கொள்ளும் தளமாக Shopify Collective இருப்பதை உறுதிசெய்ய, பின்வரும் சமூக வழிகாட்டுதல்களையும் சிறந்த நடைமுறைகளையும் மதிப்பாய்வு செய்யுமாறு உங்களை ஊக்குவிக்கிறோம். இணைந்து பணியாற்றுவதற்கான சிறந்த வழிகளை ஒப்புக் கொள்வதற்கு, நீங்கள் கூட்டாளராக உள்ள சப்ளையர்களுடன் தடையின்றிப் பேசலாம்:
- அழைப்பு நெறிமுறை: Collective இல் நீங்கள் உண்மையாகவே இணைந்து விற்க விரும்பும் சப்ளையர்களுக்கு மட்டும் இணைப்பு அழைப்புகளை அனுப்பவும். நீங்கள் பெறும் இணைப்பு அழைப்புகளை ஏற்கிறீர்களோ அல்லது நிராகரிக்கிறீர்களோ, அவற்றுக்கு உடனடியாகப் பதிலளிக்கவும்.
- நேர்மையான விற்பனை: Collective மூலம் நீங்கள் இறக்குமதி செய்யும் சப்ளையர் தயாரிப்புகளை விளம்பரப்படுத்தவும் விற்கவும் உண்மையான முயற்சிகளை மேற்கொள்ளவும். சப்ளையர்களின் தயாரிப்புகளை வேறு ஏதேனும் சந்தைகளில் விற்பதற்கு முன்பு அவர்களிடம் அனுமதி பெறவும்.
- பொறுப்புடன் செயல்படுதல்: அமெரிக்காவில் உள்ள உங்கள் சப்ளையர்களுக்குத் துல்லியமான வரி அடையாள எண்களையும், தகுந்த மறுவிற்பனைச் சான்றிதழ்களையும் வழங்கவும்.
- நம்பிக்கையைப் பேணுதல்: தொடர்புடைய சப்ளையரை ஈடுபடுத்துவதற்கு முன், தொலைந்துபோன பேக்கேஜ்கள் குறித்த வாடிக்கையாளர் புகார்களை உறுதிப்படுத்தப் படிகளை எடுக்கவும்.
- ரிட்டர்ன் விதிகள்: வாடிக்கையாளர் ரிட்டர்ன்கள் உண்மையானவை என்பதையும் ஒப்புக்கொள்ளப்பட்ட ரிட்டர்ன் காலக்கெடுவுக்குள் அவை செய்யப்படுகின்றன என்பதையும் உறுதிசெய்யவும்.
- வாடிக்கையாளர் அனுபவம்: வாடிக்கையாளர் ஆதரவு விசாரணைகளுக்கு 48 மணிநேரத்திற்குள் பதிலளிக்க இலக்கு வைக்கவும். ஏதேனும் வாடிக்கையாளர் சிக்கல்களைத் தீர்க்க உங்கள் சப்ளையர்களுடன் நீங்கள் திறம்படத் தொடர்புகொண்டு வேலை செய்வதை உறுதிசெய்யவும்.
ஒரு குறிப்பிட்ட கூட்டாண்மையில் நீங்கள் அதிருப்தி அடைந்திருந்தால், நேரடியாகச் சப்ளையரிடம் பேசவும். எதிர்பார்ப்புகள் குறித்த தெளிவான தகவல்தொடர்பு மூலம் பெரும்பாலான சிக்கல்களைத் தீர்க்க முடியும்.
நீங்கள் கூட்டாண்மையை முடித்துக்கொள்ள விரும்பினால், உங்கள் Shopify Collective செயலியின் அமைப்புகளில் சப்ளையருடனான இணைப்பைத் துண்டிக்கலாம். மேலும், விருப்பப்பட்டால் சப்ளையரின் மோசடி நடைமுறைகள் அல்லது தவறான நடத்தை குறித்துப் புகாரளிக்கலாம். சப்ளையர்களின் நடத்தையில் உள்ள ஏதேனும் சாத்தியமான வடிவங்களைக் கண்டறிய மட்டுமே இந்த அறிக்கைகளை Shopify மதிப்பாய்வு செய்யும். சப்ளையர் குறித்து நீங்கள் புகாரளித்த பிறகு, உங்கள் கருத்து தொடர்பாக Shopify இல் இருந்து உங்களுக்கு மேற்கொண்டு எந்தவொரு தகவலும் கிடைக்காது.