Shopify Collective செயலியில் தயாரிப்புகளை நிர்வகித்தல்
நீங்கள் சப்ளையருடன் இணைந்த பிறகு, சப்ளையரின் தயாரிப்புகளை உங்கள் ஸ்டோருக்கு இறக்குமதி செய்யலாம்.
உங்கள் தயாரிப்பு இறக்குமதி மற்றும் தயாரிப்பு விவரங்கள் ஒத்திசைவைத் தானியங்குபடுத்த விரும்பினால், Shopify Collective தயாரிப்புக் கொள்கைகளைப் பயன்படுத்துவதைப் பரிசீலிக்கவும். எடுத்துக்காட்டாக, சப்ளையரிடமிருந்து சமீபத்திய தயாரிப்புப் படங்களைப் பெறுவது போன்று மேலும் பல தயாரிப்பு விவரங்களைத் தொடர்ச்சியாக ஒத்திசைக்க நீங்கள் விரும்பலாம்.
நீங்கள் சப்ளையர் தயாரிப்புகளை மேனுவலாக இறக்குமதி செய்து, தயாரிப்பு விவரங்களைத் திருத்தி, உங்களின் ஆன்லைன் ஸ்டோரில் தயாரிப்புகளை வெளியிடலாம். மேலும் சப்ளையரின் தயாரிப்பு விலை நிர்ணய விவரங்கள், ஷிப்பிங் செலவுகளையும் பார்க்கலாம்.
சில சப்ளையர்கள் பொதுவான விலைப்பட்டியல்களை உருவாக்கலாம், அதிலிருந்து நீங்கள் சப்ளையருடன் இணைக்காமலோ சப்ளையரால் அங்கீகரிக்கப்படாமலோ உங்கள் ஸ்டோருக்குத் தயாரிப்புகளை உடனடியாக இறக்குமதி செய்யலாம்.
இந்தப் பக்கத்தில்
- Shopify Collective-இல் தயாரிப்புகளை இறக்குமதி செய்து நிர்வகிப்பதற்கான கருத்தில்கொள்ள வேண்டியவை
- தயாரிப்பு விலை நிர்ணய விவரங்கள்
- உங்கள் ஸ்டோருக்குத் தயாரிப்புகளை இறக்குமதி செய்தல்
- தயாரிப்பு விவரங்களைத் திருத்துதல்
- உங்கள் ஸ்டோரில் தயாரிப்புகளைக் கிடைக்கச் செய்தல்
- உங்கள் ஸ்டோரிலிருந்து தயாரிப்புகளை நீக்குதல்
- சரக்கு இருப்பு ஒத்திசைவுச் சிக்கல்களைத் தீர்த்தல்
Shopify Collective-இல் தயாரிப்புகளை இறக்குமதி செய்து நிர்வகிப்பதற்கான கருத்தில்கொள்ள வேண்டியவை
Shopify Collective-இல் தயாரிப்புகளை இறக்குமதி செய்வதற்கு அல்லது நிர்வகிப்பதற்கு முன், கருத்தில்கொள்ள வேண்டிய பின்வரும் விஷயங்களை மதிப்பாய்வு செய்யவும்.
இறக்குமதி செய்யப்பட்ட தயாரிப்பு விவரங்கள் மற்றும் தள்ளுபடிகள்
- தொகுப்புகள், டேக்குகள், மெட்டாஃபீல்டுகள், தள்ளுபடிக் குறியீடுகள் ஆகியவை சப்ளையரின் ஸ்டோரிலிருந்து உங்கள் ஸ்டோருக்கு இறக்குமதி செய்யப்படாது.
- சப்ளையர்களிடமிருந்து நீங்கள் இறக்குமதி செய்யும் தயாரிப்புகளுக்கு 20% வரவேற்புச் சலுகை போன்ற தள்ளுபடிக் குறியீடுகளைப் பயன்படுத்துவதற்கான விருப்பத்தேர்வு உங்களுக்கு உள்ளது. இது உங்கள் லாப வரம்புகளைப் பாதிக்கும், ஆனால் சப்ளையருக்குச் செலுத்தப்படும் தொகையில் எவ்வித மாற்றமும் இருக்காது. Collective தயாரிப்புகள் தள்ளுபடிக் குறியீடுகளில் சேர்க்கப்படுவதைத் தடுக்க, விலக்கு அம்சங்களை வழங்கும் மூன்றாம் தரப்புத் தள்ளுபடிச் செயலிகளை நீங்கள் பயன்படுத்தலாம்.
மாறுபாடுகள், சரக்கு இருப்பு மற்றும் SKU-கள்
- உங்களிடம் 100 தயாரிப்பு மாறுபாடுகள் வரை இருக்கலாம். தயாரிப்பு இந்த மாறுபாட்டு வரம்பை மீறினால், தயாரிப்புச் சரக்கு இருப்பு மற்றும் விலை நிர்ணயத் தகவல் ஒத்திசைக்கப்படாமல் போகலாம்.
- இறக்குமதி செய்யப்பட்ட Collective தயாரிப்புகளுக்கான சரக்கு இருப்பு அளவுகள் சப்ளையரால் நிர்வகிக்கப்படும், மேலும் அவை உங்கள் ஸ்டோர் நிர்வாகியில் படிக்க மட்டும் என்று இருக்கும்.
- உங்களால் தயாரிப்பு மாறுபாடுகளைத் திருத்தவோ, எந்தத் தயாரிப்பு மாறுபாடுகளை வெளியிட வேண்டும் என்று தேர்வுசெய்யவோ முடியாது.
- சப்ளையரின் ஸ்டோரிலிருந்து உங்கள் ஸ்டோருக்கு POS சரக்கு இருப்பு நிலைகள் ஒத்திசைக்கப்படாது. விற்பனைக்குக் கிடைக்கும் அளவாக ஆன்லைன் சரக்கு இருப்பு நிலைகள் மட்டுமே உங்கள் ஸ்டோரில் காட்டப்படும்.
- Shopify Collective மூலம் விற்கப்படும் அனைத்துத் தயாரிப்புகளுக்கும் ஸ்டாக் கீப்பிங் யூனிட் (SKU) தேவை. ஒரு தயாரிப்பின் SKU-ஐ நீங்கள் எந்த நேரத்திலும் திருத்தலாம். இதற்குப் பின்வரும் சூழல்கள் பொருந்தக்கூடும்:
- சப்ளையரின் தயாரிப்பில் முன்பே SKU இருந்தால், நீங்கள் தயாரிப்பை இறக்குமதி செய்யும்போது சப்ளையரின் SKU உங்கள் ஸ்டோரில் சேர்க்கப்படும்.
- சப்ளையரின் தயாரிப்புக்கு SKU இல்லை என்றால், Shopify Collective உருவாக்கும் எண்ணுடன் உங்கள் ஸ்டோரில் தானாகவே ஒரு SKU உருவாக்கப்படும்.
- Claude அல்லது ChatGPT போன்ற AI கருவிகள் மூலம் நீங்கள் இறக்குமதி செய்யும் தயாரிப்புகளும் சப்ளையர்களிடமிருந்து நேரடியாக இறக்குமதி செய்யப்படும் தயாரிப்புகளைப் போலவே செயல்படுகின்றன. அவை சப்ளையரால் நிர்வகிக்கப்படுகின்றன. மற்ற Collective தயாரிப்புகளைப் போலவே, அவற்றுக்கும் அதே இறக்குமதி, சரக்கு இருப்பு மற்றும் விலை நிர்ணயச் செயல்முறைகள் பொருந்தும்.
தயாரிப்பு நகலாக்கம், விலை நிர்ணயம் மற்றும் வரிகள்
- இறக்குமதி செய்யப்பட்ட Shopify Collective தயாரிப்புகளை நகலெடுக்க முடியாது. ஒரு தயாரிப்பை நகலெடுத்தால், அந்தத் தயாரிப்புக்கும் உங்கள் சப்ளையருக்கும் இடையிலான இணைப்பு துண்டிக்கப்படும். அந்த நகலை Shopify Collective உடன் மீண்டும் இணைக்கவோ சரிசெய்யவோ முடியாது. ஏற்கெனவே ஒரு தயாரிப்பை நகலெடுத்திருந்தால், அந்த நகலை நீக்கவும்.
- சப்ளையர் தமது ஸ்டோரில் தயாரிப்பு விலைகளில் வரியைச் சேர்க்க அமைத்திருந்தால், உங்கள் Shopify Collective செயலியில் காட்டப்படும் தயாரிப்பு விலைகளில் வரி சேர்க்கப்பட்டிருக்கும் அல்லது சப்ளையர் வரியைச் சேர்க்கவில்லை எனில், தயாரிப்பு விலைகளில் வரி சேர்க்கப்பட்டிருக்காது. சப்ளையர் உங்களிடமிருந்து வசூலிக்கும் விற்பனை வரி குறித்து மேலும் அறிக.
Shopify Collective செயலியை நிறுவல் நீக்குதல்
- நீங்கள் Shopify Collective செயலியை நிறுவல் நீக்கினால், உங்கள் சப்ளையர் இணைப்புகள் அனைத்தும் அகற்றப்படும், அத்துடன் Collective மூலம் நீங்கள் இறக்குமதி செய்த தயாரிப்புகள் அனைத்தின் சரக்கு இருப்பும் 0 என அமைக்கப்பட்டு, Collective-இலிருந்து அவை துண்டிக்கப்படும். தயாரிப்புகள் உங்கள் ஸ்டோரிலேயே இருக்கும், ஆனால் குறிப்பிட்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் Shopify Collective செயலியை நிறுவினால், Collective மூலம் நீங்கள் தயாரிப்புகளை மீண்டும் இறக்குமதி செய்ய வேண்டும்.
தயாரிப்பு விலை நிர்ணய விவரங்கள்
Shopify Collective-இல் உள்ள தயாரிப்பு விலை நிர்ணய விவரங்கள் குறித்து மேலும் அறிய, பின்வரும் அட்டவணையை மதிப்பாய்வு செய்யவும்.
| விலை நிர்ணய விவரம் | விளக்கம் |
|---|---|
| சில்லறை விலை | நீங்களாகவே ஒரு சில்லறை விலையை அமைக்கத் தேர்வுசெய்யலாம் அல்லது சப்ளையரின் சில்லறை விலையை உங்கள் ஸ்டோருடன் தானாகவே ஒத்திசைக்கலாம். ஒரு தயாரிப்பின் சில்லறை விலையை நீங்கள் அதிகரிக்க அல்லது குறைக்க விரும்பினால், தயாரிப்பு விலை நிர்ணயம் குறித்து விவாதிக்க முதலில் சப்ளையரைத் தொடர்புகொள்ளப் பரிசீலிக்கவும். |
| அடக்க விலை | அடக்க விலை என்பது ஒரு தயாரிப்பின் சில்லறை விலையில், தங்களின் விலைப்பட்டியலில் சப்ளையர் அமைத்த சில்லறை விற்பனையாளருக்கான வரம்பு சதவீதத்தைக் கழித்து வருவது ஆகும். இது சப்ளையரின் தயாரிப்பை நீங்கள் விற்கும்போது அவருக்கு நீங்கள் செலுத்த வேண்டிய தொகையாகும். தயாரிப்பின் அடக்க விலையை உங்களால் திருத்த முடியாது. சப்ளையர் தயாரிப்பின் அடக்க விலையை மாற்றினால், அது உங்கள் ஸ்டோரில் தானாகவே புதுப்பிக்கப்படும். |
| வரம்பு | உங்களுக்கான அடக்க விலையைத் தீர்மானிக்க, தயாரிப்பின் சில்லறை விலையிலிருந்து சப்ளையர் கழிக்கும் சதவீதமே வரம்பு ஆகும். |
| லாபம் | ஒரு தயாரிப்பை விற்கும்போது நீங்கள் ஈட்டும் பணத்தின் அளவை லாபம் குறிக்கிறது. ஒரு தயாரிப்பின் சில்லறை விலையிலிருந்து அடக்க விலையைக் கழித்து வருவதே உங்கள் லாபம் ஆகும். |
Shopify Collective மூலம் இறக்குமதி செய்யப்படும் தயாரிப்புகளுக்கு உங்கள் வாடிக்கையாளர்கள் தள்ளுபடிக் குறியீடுகளைப் பயன்படுத்தலாம், ஆனால் ஒவ்வொரு தயாரிப்பு விற்பனைக்கும் சப்ளையர்களுக்கு நீங்கள் செலுத்தும் செலவு விலையில் மாற்றம் இருக்காது.
எடுத்துக்காட்டாக, சில்லறை விலை $100 USD மற்றும் செலவு விலை $70 USD உள்ள ஒரு தயாரிப்பை சப்ளையரிடமிருந்து இறக்குமதி செய்கிறீர்கள் எனில், உங்கள் வாடிக்கையாளர் $20 USD மதிப்பிலான தள்ளுபடிக் குறியீட்டைப் பயன்படுத்தினாலும், நீங்கள் சப்ளையருக்கு $70 USD செலுத்த வேண்டும். மேலும் வாடிக்கையாளர் தள்ளுபடி இல்லாதபோது கிடைக்கும் $30 USD-க்குப் பதிலாக $10 USD மட்டுமே உங்களுக்கு லாபமாகக் கிடைக்கும்.
உங்கள் ஸ்டோரில் தயாரிப்புகளை இறக்குமதி செய்தல்
சப்ளையரின் தயாரிப்புகளை உங்கள் ஸ்டோரில் இறக்குமதி செய்யலாம்.
Shopify Collective தயாரிப்புகளைத் தானாக இறக்குமதி செய்ய விரும்பினால், தயாரிப்புக் கொள்கைகளைப் பயன்படுத்தலாம். மாற்றாக, ஆதரிக்கப்படும் AI கருவிகளைப் பயன்படுத்தி Collective தயாரிப்புகளை இறக்குமதி செய்யலாம்.
உங்கள் ஸ்டோரில் தயாரிப்புகளை இறக்குமதி செய்த பிறகு, உங்கள் சப்ளையர் தயாரிப்புப் பட்டியல்களிலுள்ள கிடைக்கக்கூடியவை (Available) தாவலில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை (Imported) தாவலுக்கு அவை நகர்த்தப்படும்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியில், செயலிகள் > Collective என்பதற்குச் செல்லவும்.
சப்ளையர்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
நீங்கள் தயாரிப்புகளை இறக்குமதி செய்ய விரும்பும் சப்ளையரைக் கிளிக் செய்யவும்.
Available (கிடைப்பவை) தாவலில் உங்கள் ஸ்டோருக்கு இறக்குமதி செய்ய விரும்பும் தயாரிப்புகளைத் தேர்ந்தெடுக்கவும்.
விருப்பத்தேர்வு: சப்ளையரின் தனிப்பட்ட விலைப்பட்டியலை அணுகும் அனுமதி உங்களுக்கு இருந்து, அவரிடம் கிடைக்கும் தயாரிப்புகள் பல பக்கங்களில் இருந்தால், ஒரு தயாரிப்பைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர், அவரிடம் கிடைக்கும் தயாரிப்புகள் அனைத்தையும் தேர்ந்தெடுக்க Select all (அனைத்தையும் தேர்ந்தெடு) என்பதைக் கிளிக் செய்யவும்.
தயாரிப்புகளை இறக்குமதி செய் என்பதைக் கிளிக் செய்யவும்.
தயாரிப்பு விவரங்களைத் திருத்துதல்
பின்வரும் தயாரிப்பு விவரங்களை நீங்கள் மாற்றலாம்:
- தயாரிப்பு விலை
- தயாரிப்புத் தலைப்பு
- விளக்கம்
- மீடியா
தயாரிப்பு விலை நிர்ணயத்திற்கு, சொந்த ஸ்டோரில் நீங்கள் தயாரிப்புகளை விற்கும்போது சப்ளையரின் சில்லறை விலையை அதிகரிக்கலாம் அல்லது குறைக்கலாம்.
சில்லறை விலை ஒத்திசைவு இயல்புநிலையாக முடக்கப்பட்டிருக்கும், அதாவது உங்கள் சொந்த ஸ்டோரில் சப்ளையரின் தயாரிப்புச் சில்லறை விலையை நீங்கள் சரிசெய்யலாம். எப்போதும் உங்கள் ஸ்டோரில் சப்ளையரின் தயாரிப்புச் சில்லறை விலை இருப்பதற்காகத் தயாரிப்புக் கொள்கைகளுடன் தானியங்கு சில்லறை விலை ஒத்திசைவைச் செயல்படுத்த நீங்கள் தேர்வுசெய்யலாம். நீங்கள் ஒத்திசைவை இயக்கி, உங்கள் ஸ்டோரில் ஒரு தயாரிப்பின் சில்லறை விலையை மாற்றினால், அந்த விலையானது சப்ளையரின் சில்லறை விலைக்கு மாறாது; சப்ளையர் தாமாகவே விலையைப் புதுப்பித்தால் மட்டுமே அது புதுப்பிக்கப்படும்.
சப்ளையரின் தயாரிப்புச் சில்லறை விலை உங்களின் தயாரிப்பு விலை நிர்ணய உத்திக்குப் பொருந்தவில்லை என்றாலோ, சில்லறை விலையை அதிகரிக்கவோ குறைக்கவோ நீங்கள் விரும்பினாலோ, தயாரிப்பு விலை நிர்ணயம் குறித்து விவாதிக்க முதலில் சப்ளையரைத் தொடர்புகொள்வதைக் கருத்தில் கொள்ளவும். சில்லறை விலையைத் திருத்துவதற்கு முன், சில்லறை விலை ஒத்திசைவு முடக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.
Shopify Collective ஐப் பயன்படுத்தி நீங்கள் இறக்குமதி செய்து விற்கும் தயாரிப்புகளில் சில விவரங்களைத் திருத்தக் கூடாது. பின்வரும் தயாரிப்பு விவரங்களில் நீங்கள் செய்யும் மாற்றங்கள் எவையும் சப்ளையர் தனது அசல் தயாரிப்பைப் புதுப்பிக்கும்போது மேலெழுதப்பட்டுவிடும்:
- கண்காணிக்கப்படும் சரக்கு இருப்பு
- ஷிப்பிங் – பருப்பொருள் தயாரிப்பு (Physical product) அமைப்பு செயல்படுத்தப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தவும்
- மாறுபாடுகள் – மாறுபாடு விருப்பங்களை உங்களால் மாற்றவோ மறுவரிசைப்படுத்தவோ அல்லது சேர்க்கவோ முடியாது
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியில், தயாரிப்புகள் என்பதற்குச் செல்லவும்.
நீங்கள் மாற்ற விரும்பும் தயாரிப்பின் பெயரைக் கிளிக் செய்யவும்.
தயாரிப்பு விலை, தயாரிப்புத் தலைப்பு, விளக்கம் அல்லது மீடியாவைத் திருத்தவும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்கள் ஸ்டோரில் தயாரிப்புகளைக் கிடைக்கச் செய்தல்
நீங்கள் இறக்குமதி செய்த தயாரிப்புகளை உங்கள் வாடிக்கையாளர்கள் வாங்க முடியும் என்பதை உறுதிப்படுத்த, பின்வரும் விவரங்களை நீங்கள் உறுதிசெய்ய வேண்டும்:
- தயாரிப்பு செயலில் உள்ளது (Active) நிலைக்கு அமைக்கப்பட்டுள்ளது
- தயாரிப்பு உங்கள் விற்பனைச் சேனல்களில் வெளியிடப்பட்டுள்ளது
நீங்கள் இயல்புநிலைத் தயாரிப்புக் கொள்கை அல்லது தனிப்பயன் தயாரிப்புக் கொள்கையைத் திருத்தலாம் மற்றும் அந்தத் தயாரிப்புக் கொள்கைக்குரிய அனைத்து சப்ளையர் தயாரிப்புகளையும் தானாகவே செயலில் உள்ளதாக இறக்குமதி செய்யும்படி அமைக்கலாம்.
இறக்குமதி செய்யப்பட்ட தயாரிப்புகளின் வெளியீட்டு நிலையை மதிப்பாய்வு செய்தல்
உங்கள் Shopify நிர்வாகியில், செயலிகள் > Collective என்பதற்குச் செல்லவும்.
சப்ளையர்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
நீங்கள் எந்த சப்ளையருக்கான தயாரிப்புகளை மதிப்பாய்வு செய்ய விரும்புகிறீர்களோ, அந்த சப்ளையரின் பெயரைக் கிளிக் செய்யவும்.
சப்ளையர் விவரங்கள் பக்கத்தின் தயாரிப்புகள் பிரிவில், இறக்குமதி செய்யப்பட்டவை என்பதைக் கிளிக் செய்யவும்.
நிலை நெடுவரிசையில், தயாரிப்பு நிலையை மதிப்பாய்வு செய்யவும்.
சேனல்கள் நெடுவரிசையில், பின்வரும் விவரங்களைப் பார்க்கவும்:
- 0 ஐ விடப் பெரிய எண் காட்டப்பட்டால், தயாரிப்பு வெளியிடப்பட்டுள்ள விற்பனைச் சேனல்களைக் காண அந்த எண்ணைக் கிளிக் செய்யவும்.
- 0 எனக் காட்டப்பட்டால், தயாரிப்பு வரைவு நிலையில் உள்ளது என்று அர்த்தம், தயாரிப்பை வாங்குவதற்குக் கிடைக்கச் செய்ய அதனை செயலில் உள்ளது நிலைக்கு அமைக்க வேண்டும்.
- வெளியிடப்படவில்லை எனக் காட்டப்பட்டால், அம்புக்குறியைக் கிளிக் செய்து, பிறகு உங்கள் Shopify நிர்வாகியில் தயாரிப்பைத் திறக்க, தயாரிப்பை நிர்வகி என்பதைக் கிளிக் செய்யவும். வாடிக்கையாளர்கள் வாங்குவதற்குத் தயாரிப்பைக் கிடைக்கச் செய்ய விரும்பினால், உங்கள் விற்பனைச் சேனல்களில் தயாரிப்பை வெளியிடவும்.
இறக்குமதி செய்யப்பட்ட ஒரு தயாரிப்பின் நிலையை 'செயலில் உள்ளது' என அமைத்தல்
உங்கள் Shopify நிர்வாகியில், தயாரிப்புகள் என்பதற்குச் செல்லவும்.
நீங்கள் செயலில் உள்ளது நிலைக்கு அமைக்க விரும்பும் தயாரிப்பைக் கிளிக் செய்யவும்.
நிலை பிரிவில், கீழ்தோன்றும் மெனுவைக் கிளிக் செய்து, செயலில் உள்ளது என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
இறக்குமதி செய்யப்பட்ட ஒரு தயாரிப்பை உங்கள் விற்பனைச் சேனல்களில் வெளியிடுதல்
உங்கள் Shopify நிர்வாகியில், தயாரிப்புகள் என்பதற்குச் செல்லவும்.
நீங்கள் உங்கள் விற்பனைச் சேனல்களில் வெளியிட விரும்பும் தயாரிப்பைக் கிளிக் செய்யவும்.
வெளியிடுதல் பிரிவில்,
ஐகானைக் கிளிக் செய்யவும்.
தயாரிப்பை நீங்கள் வெளியிட விரும்பும் விற்பனைச் சேனல்களைச் செயல்படுத்தவும் அல்லது அனைத்திலும் வெளியிடு என்பதைக் கிளிக் செய்யவும்.
முடிந்தது என்பதைக் கிளிக் செய்யவும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்கள் ஸ்டோரிலிருந்து தயாரிப்புகளை நீக்குதல்
சப்ளையர் தயாரிப்புகளை உங்கள் ஸ்டோரிலிருந்து நீக்கலாம். தயாரிப்புகளை உங்கள் ஸ்டோரிலிருந்து நீக்கியதும், அவை இறக்குமதி செய்யப்பட்டவை தாவலிலிருந்து கிடைக்கக்கூடியவை தாவலுக்கு நகர்த்தப்படும்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியில், செயலிகள் > Collective என்பதற்குச் செல்லவும்.
சப்ளையர்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
நீங்கள் எந்த சப்ளையரிடமிருந்து தயாரிப்புகளை நீக்க விரும்புகிறீர்களோ, அந்த சப்ளையரைக் கிளிக் செய்யவும்.
இறக்குமதி செய்யப்பட்டவை தாவலுக்குச் சென்று, உங்கள் ஸ்டோரிலிருந்து நீங்கள் நீக்க விரும்பும் தயாரிப்புகளைத் தேர்ந்தெடுக்கவும்.
தயாரிப்புகளை நீக்கு என்பதைக் கிளிக் செய்துவிட்டு, நீக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
சரக்கு இருப்பு ஒத்திசைவுச் சிக்கல்களைத் தீர்த்தல்
தயாரிப்புச் சரக்கு இருப்பு உங்களுக்கும் உங்கள் சப்ளையருக்கும் இடையே சரியாக ஒத்திசைக்கப்படவில்லை எனில், பின்வரும் சிக்கல் தீர்க்கும் படிகளை மதிப்பாய்வு செய்யவும்.
தவறான சரக்கு இருப்பு இடத்தின் சிக்கலைத் தீர்த்தல்
Shopify Collective மூலம் இறக்குமதி செய்யப்படும் தயாரிப்புகள், செயலியால் உருவாக்கப்பட்ட "Shopify Collective வழியான சப்ளையர் பெயர்" என்ற இடத்துடன் இணைக்கப்படும். இறக்குமதி செய்யப்பட்ட தயாரிப்புகளுக்கான சரக்கு இருப்பு இடத்தை மாற்ற வேண்டாம், ஏனெனில் இது ஆர்டர் ஒத்திசைவுச் செயல்முறையைப் பாதிப்பதோடு நிறைவேற்றச் சிக்கல்களையும் ஏற்படுத்தக்கூடும்.
படிகள்:
- உங்கள் Shopify நிர்வாகியில், தயாரிப்புகள் என்பதற்குச் செல்லவும்.
- ஒத்திசைவுச் சிக்கல் உள்ள தயாரிப்பைக் கிளிக் செய்யவும்.
- சரக்கு இருப்பு பிரிவில், இடமானது "Shopify Collective வழியான சப்ளையர் பெயர்" என அமைக்கப்பட்டுள்ளதைச் சரிபார்க்கவும்.
- அது வேறு இடத்திற்கு அமைக்கப்பட்டிருந்தால், அதை மீண்டும் Shopify Collective இடத்திற்குப் புதுப்பிக்கவும்.
நிர்வாகியில் சரக்கு இருப்பு இருந்தும், ஸ்டோர்ஃபிரண்ட்டில் தயாரிப்பு கையிருப்பில் இல்லை எனக் காட்டப்படுவதைத் தீர்த்தல்
சரியான இடத்தில் சரக்கு இருப்பு இருப்பதாக உங்கள் நிர்வாகி காட்டினாலும், உங்கள் ஸ்டோர்ஃபிரண்ட்டில் தயாரிப்பானது "கையிருப்பில் இல்லை" எனக் காட்டப்பட்டால், உங்கள் தீம் அல்லது செயலியில் சிக்கல் இருக்கலாம். சரக்கு மேலாண்மைச் செயலிகள் போன்று உங்கள் ஸ்டோர்ஃபிரண்ட்டில் சரக்கு இருப்பின் நிலையை நிர்வகிக்கும் எந்தவொரு செயலியையும் மதிப்பாய்வு செய்யவும். சிக்கலைக் கண்டறிய உங்கள் தீமில் உள்ள பிழையை நீங்கள் திருத்த வேண்டியிருக்கலாம்.
சப்ளையர் தயாரிப்பைப் பகிராததைத் தீர்த்தல்
உங்கள் ஸ்டோரில் சரக்கு இருப்பு பூஜ்ஜியமாகக் காட்டப்பட்டாலும், சப்ளையரிடம் சரக்கு இருப்பு இருந்தால், அணுகக்கூடிய விலைப்பட்டியலிலிருந்து அதை அகற்றுவதன் மூலமாகவோ வரைவு நிலைக்கு அமைப்பதன் மூலமாகவோ தயாரிப்பைப் பகிர்வதைச் சப்ளையர் ரத்துசெய்திருக்கலாம்.
பொருந்தக்கூடிய சப்ளையருக்கான இறக்குமதி செய்யப்பட்டவை தாவலின் கீழ் Shopify Collective செயலியில் எந்தவொரு தயாரிப்புப் பிழைகளையும் நீங்கள் மதிப்பாய்வு செய்யலாம். "சப்ளையர் தயாரிப்பு அணுகலை அகற்றிவிட்டார்" என்ற மஞ்சள் நிறப் பிழை ஐகான் உள்ள தயாரிப்புகள் பகிரப்படவில்லை என அர்த்தம்.
தயாரிப்புப் பகிரப்படவில்லை என்றால், அதை மீண்டும் பகிரச் சொல்ல உங்கள் சப்ளையரைத் தொடர்புகொள்ளவும்.
என்ன நடந்தது என்பதைச் சரிபார்க்க, உங்கள் சரக்கு இருப்பு வரலாற்றை நீங்கள் மதிப்பாய்வு செய்யலாம்.
படிகள்:
- உங்கள் Shopify நிர்வாகியில், தயாரிப்புக்குச் செல்லவும்.
- சரக்கு இருப்பு என்பதைக் கிளிக் செய்து, வரலாறு என்பதை மதிப்பாய்வு செய்யவும்.
- சரிசெய்தல் வகையை மதிப்பாய்வு செய்யவும்:
- "Inventory correction Collective (Retailer)" என்றால், சப்ளையர் சரக்கு இருப்பைப் பூஜ்ஜியமாக அமைத்துள்ளார், ஆனால் தயாரிப்பு இன்னும் பகிரப்படுகிறது என்று அர்த்தம்.
- "Other Collective (Retailer)" என்றால், சப்ளையர் தயாரிப்பைப் பகிரவில்லை என்று அர்த்தம்.
Shopify Collective ஷிப்பிங் சுயவிவரத்தில் விடுபட்டதைத் தீர்த்தல்
Shopify Collective-க்கு உங்களிடம் ஒரு ஷிப்பிங் சுயவிவரம் இருப்பதையும், Collective மூலம் விற்கப்படும் அனைத்துத் தயாரிப்புகளும் அதில் சேர்க்கப்பட்டிருப்பதையும் சரிபார்க்கவும். ஷிப்பிங் சுயவிவரத்தில் தயாரிப்புகள் விடுபட்டிருந்தால், ஒத்திசைவு தோல்வியடையக்கூடும்.